மறக்காமல் வந்துவிடு என் ம(ர)ணத்திற்கு..
என்னைத் தொலைத்துவிட்டு போன
காதலனே நலமா.. கண்ணீர்
மழையில் உருகிக் கொண்டிருக்கும்
ஒருத்(தீ)யின்
கருமாதிக் கடிதம்..

என்னை
வெட்கமறிய வைத்தாய்..

காயம் பட்ட மனதுக்குள்
காதல் கசியச் செய்தாய்..

தொலைவிலிருந்தாலும் தொடர்ந்து
கேட்கச் செய்தாய்
உன் இதயத் துடிப்பை .. (எனக்கு மட்டும்..)

மனதுக்குள் என்னை
சிறை வைத்தவனே
எனை மறக்க எப்படித் துணிந்தாய்..

நான் கண்ணீர் சிந்தினால்
உதிரம் சிந்தியது போல
சிதறிப் போனவனல்லவா நீ..

என் முகம் சோர்ந்தால்
மூச்சு நின்றது போல
அலறியவனவல்லவா நீ..

இன்னும் புரியவில்லை
நீ என்னை பிரிந்த காரணம்..

நான் தொலைத்து விட்ட
இதயத்துடன்
என்னையும் தொலைத்து விட்டு போனவனே..
மறக்காமல் வந்து விடு என்
ம(ர)ணப் பத்தரிக்கைக்கு
மஞ்சள் தடவிக் கொடுக்க...இது கவிதை இல்லைங்க என் கண்ணில் பட்ட ஒரு பெண்ணின் கதறல் சத்தம்..

22 comments:

ராஜவம்சம் said...

ரணமாக

வெறும்பய said...

ராஜவம்சம் said...

ரணமாக
///

(ம)ரணமாக

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

காதலனை மரணத்திற்கு அழைப்பததைவிட அதையே மாற்றி சேர்ந்து வாழ அழைக்கலாமே . எல்லாம் சாத்தியமே காதலிப்பது உண்மை என்றால் . கவிதை அருமை மெல்ல சோகம் கசிக்கிறது வார்த்தைகளில் . பகிர்வுக்கு நன்றி

எப்பூடி.. said...

நிஜமான வலி

ஜில்தண்ணி said...

மரணத்தில் மஞ்சள் தடவவா
ஒரு பெண்ணின் ஆழ் மனதிலிருந்து வந்தவை போலிருக்கு
என்ன நண்பா???

அஹமது இர்ஷாத் said...

சூப்பர் நண்பா தொடர்ந்து அசத்துங்க..

வால்பையன் said...

எப்படி முடிந்தது பெண்ணின் மனதை படிக்க!

வெறும்பய said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

காதலனை மரணத்திற்கு அழைப்பததைவிட அதையே மாற்றி சேர்ந்து வாழ அழைக்கலாமே . எல்லாம் சாத்தியமே காதலிப்பது உண்மை என்றால் . கவிதை அருமை மெல்ல சோகம் கசிக்கிறது வார்த்தைகளில் . பகிர்வுக்கு நன்றி

///

நன்றி நண்பரே .

காதலிப்பவர்கள் எல்லாம் சேர்ந்து வாழ்ந்தால் தான் பிரச்சனயே இருக்காதே .

காதல்(லி) உண்மை என்றால் இந்த மாதிரி கவிதையும் மன்னிக்கவும் கிறுக்கலும் வந்திருக்காது..

வெறும்பய said...

எப்பூடி.. said...

நிஜமான வலி

///

நினைவில் நிற்கிறது..

வெறும்பய said...

ஜில்தண்ணி said...

மரணத்தில் மஞ்சள் தடவவா
ஒரு பெண்ணின் ஆழ் மனதிலிருந்து வந்தவை போலிருக்கு
என்ன நண்பா???

///

உண்மை தான் தோழா..

வெறும்பய said...

அஹமது இர்ஷாத் said...

சூப்பர் நண்பா தொடர்ந்து அசத்துங்க..
//

நன்றி நண்பரே ..

உங்கள் நல்லாசியுடன்..

வெறும்பய said...

வால்பையன் said...

எப்படி முடிந்தது பெண்ணின் மனதை படிக்க!

///

ரெண்டு வருஷ முயற்சி சகோதரா...

Thanks for ur coming Brother ..

பிரவின்குமார் said...

காதலித்து கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் மனநிலையை யதார்த்தமான கவிதை வரிகளுடன் வலிகளுடன் எடுத்து கூறியிருக்கும் விதம் அருமை..!
உண்மையில் (ம)ரணமான வரிகள்தான்..!

siva said...

very nice keep it up

வெறும்பய said...

நன்றி பிரவின்குமார் ..

நன்றி siva..

"ராஜா" said...

இதே மாதிரி கைவிடப்பட்ட ஆண்களுக்கு ஒரு கவிதை எழுதுங்க பாஸ்

மங்குனி அமைச்சர் said...

டைட்டில் நல்லா இருக்கு , கவிதை அதவிட நல்லாருக்கு

santhanakrishnan said...

மனசை கனக்க வைக்கும் கவிதை.

Ananthi said...

வரிகளில் வலி தெரிகிறது... :-(

வெறும்பய said...

நன்றி மங்குனி அமைச்சர்

நன்றி santhanakrishnan

நன்றி Ananthi

வந்தமைக்கும், கருத்துக்கள் தெரிவித்தமைக்கும்

வெறும்பய said...

ராஜா" said...

இதே மாதிரி கைவிடப்பட்ட ஆண்களுக்கு ஒரு கவிதை எழுதுங்க பாஸ்

///

உங்க பீலிங்ஸ் எனக்கு புரியுது, கவலைப்படாதிங்க பாஸ் எழுதிருவோம்..

எவனோ ஒருவன் said...

:-( என்னிடம் வார்த்தைகள் இல்லை....