உசுரே போகுதே - சி(ரி)று கதை


டாக்டர் சொன்ன நாளுக்கு ரெண்டு நாள் முன்பே வலி எடுத்ததால் அவசர அவசரமாக
ஆஸ்பத்ரிக்கு கொண்டு வந்தார்கள் சுமதியை.

திருமணம் நடந்து ஏழு வருஷம் ஆகியும் குழந்தை இல்லாமல், கோயில் கோயிலாய் சென்று, பெயர் தெரியாத கடவுளையெல்லாம் வேண்டியது கண் முன்னால் வந்து போனது சுமதியின் கணவனுக்கு. பெயர் சொல்ல வாரிசு வரப்போகிறது என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் தன் மனைவி வலியால் துடிப்பதைக்கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் வேதனையுடன் நின்று கொண்டிருந்தார்.

சுமதியின் நிலையை டாக்டர்கள் பார்த்துவிட்டு உடனே எமர்ஜென்ஸி வார்டிற்கு மாற்றினார்கள். சுமதியின் கணவரும் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்த சுமதி திடீரென ஆத்திரத்தில்.......


ஐயோ....

உயிர் போகுதே...

வலி தாங்க முடியலையே...

டேய்... கருணாகரா.....

பொறம்போக்கு....

நாசமாப்போனவனே...

எல்லாம் உன்னால தாண்டா ....

இருடா....உன்ன வீட்டில வந்து பேசிக்கிறேன்... என்று கத்தினாள்.


இதை பார்த்த நர்ஸ் அருகில் நின்றிருந்த சுமதியின் கணவரிடம், "பிரசவ நேரத்தில சில சமயம் வலி தாங்க முடியாம, சில பொம்பளைங்க புருஷனை இப்படித்தான் மரியாதை இல்லாம பெயர் சொல்லி திட்டுவாங்க" என்றாள்

சுமதியின் கணவர் பேயறைந்தது போன்ற முகத்துடம்...

"அதில்லைங்க"... கருணாகரன்ங்கிறது என்னோட பேர் இல்லங்க... எங்க எதிர் வீட்டுக்காரனோட பேரு................ஹெலோ.. ஹெலோ... என்னங்க சீரியஸா பாக்கிற மாதிரி இருக்கு, சத்தியமா காமெடி கதைதாங்க...

17 comments:

Software Engineer said...

ரைட்டு! இதென்ன கதையா போச்சு? அருமை!

எப்பூடி.. said...

இந்த கருணாகரன் முதல் எழு வருசமா என்ன செய்துகொண்டிருந்தான்

●•»【✖ ஜில்லு யோகேஷ் ✖】«•● said...

ரைட்டு
:)
நீ நடத்து ராசா நடத்து

சி. கருணாகரசு said...

இதுக்கு நான் கருத்துரை போடலாமா?.... வேண்டாமா?

(எதிர்வூட்டு காரனுக்கு என் பெயர்தன் கிதைத்ததா)

சி. கருணாகரசு said...

எப்பூடி.. said...

இந்த கருணாகரன் முதல் எழு வருசமா என்ன செய்துகொண்டிருந்தான்//

இது ரொம்ப முக்கியம்?

அஹமது இர்ஷாத் said...

சூப்பர் நண்பா...அசத்துங்க தொடர்ந்து....

வெறும்பய said...

@ நன்றி Software Engineer

@ நன்றி ●•»【✖ ஜில்லு யோகேஷ் ✖】«•●

@ நன்றி அஹமது இர்ஷாத் s

வெறும்பய said...

எப்பூடி.. said...

இந்த கருணாகரன் முதல் எழு வருசமா என்ன செய்துகொண்டிருந்தான்

///

பாஸ் எதுக்கு நமக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்..

வெறும்பய said...

சி. கருணாகரசு said...

இதுக்கு நான் கருத்துரை போடலாமா?.... வேண்டாமா?

(எதிர்வூட்டு காரனுக்கு என் பெயர்தன் கிதைத்ததா)


///

கண்டிப்பா போடணும் சார்..

எல்லாம் இந்த ஜில்லு பண்ணினது தான் சார்.. ஏதாவது ஒரு நல்ல பெயர் சொல்லச் சொன்னா உங்க பெயரப் போய் சொல்லியிருக்கான்.. (மாத்தனுமிண்ணா சொல்லுங்க மாத்திருவோம்)

ஜில்லு மாட்டிவிட்டுட்டோமில்ல ... இனி நீயாச்சு.. அவராச்சு..

வெறும்பய said...

சி. கருணாகரசு said...

எப்பூடி.. said...

இந்த கருணாகரன் முதல் எழு வருசமா என்ன செய்துகொண்டிருந்தான்//

இது ரொம்ப முக்கியம்?

///

ப்ரீயா விடுங்க சார்.. இதுக்கெல்லாம் கோபப்பட்டா எப்படி..

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha...
நடத்துங்க .... நடத்துங்க.....

வால்பையன் said...

ஆனாலும் ஏழு வருசம் பொறுமையா காத்திருந்ததுக்கு பாராட்டனும்!

வெறும்பய said...

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha...
நடத்துங்க .... நடத்துங்க.....

///

Thanks for coming

வெறும்பய said...

வால்பையன் said...

ஆனாலும் ஏழு வருசம் பொறுமையா காத்திருந்ததுக்கு பாராட்டனும்!

///

விழாவே எடுக்கலாம் வாத்தியாரே...

பட்டாபட்டி.. said...

கலக்கல் டிவிஸ்ட்...அருமை

வெறும்பய said...

வருகைக்கு நன்றி பட்டாபட்டி..

arunmaddy said...

ha ha ha......