அறிந்ததும் அறியாததும் 6 - அழிந்த பறவைகள்...


உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் பறவைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. உலகிலுள்ள மொத்தம் பத்தாயிரம் வகையான இனப்பெருக்கப் பறவைகளில் சுமார் 1200 வகை பறவைகள் அழியும் தருவாயில் உள்ளன. இதில்
பறக்க முடியாத பறவைகள் தான் அதிகமாக அழிந்து வருகிறது.


மனிதர்களால் தான் பறவைகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டது. இப்படி மனிதர்களின் உணவுக்காகவும், தேவைகளுக்காகவும் வேட்டையாடி இன்று இல்லாமல் பறவைகள் பற்றிய பதிவு இது.
யானைப் பறவை..


யானைப் பறவை அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும். இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும் ஐநூறு கிலோகிராம் எடை இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீற்றரை விட அதிக சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.***********

பெரிய ஓக்..


75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஓக் எல்லா ஓக்குகளிலும் பெரியதாகும். இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடும்.
மற்ற பறவைகளை போல பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதர்களால் அதிகமாக வேட்டையாடப்பட்டது. 8 ஆம் நூற்றாண்டிலிருந்தாவது இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன.

பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, மற்றும் அயர்லாந்து இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசிச் சோடிகள், 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.


***********

டோடோ பறவை...

டோடோ
அழிந்த பறவையினங்களில் ஒன்று. இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் கொண்டது.கொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கேயர் 1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது.

டோடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது.


***********

பறவைகளின் அழிவு தொடர்ந்தால் இனி வரும் சந்ததியினருக்கு காக்க, குருவியை கூட GOOGLE ல் தான் காட்ட முடியும். ஆகையால் பறவைகளையும் விலங்கினங்களையும் நம்மால் இயன்ற வரை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்.
கோழியும் ஒரு பறவை இனம் தானே.. அதற்காக சிக்கன் கறி சாப்பிடாமல் இருக்க முடியுமா என்று கேட்கலாம். (கண்டிப்பா கேட்ப்பீங்க) .. இதுக்கு பதில் உங்க கையில் தான்.

அறிந்தா அறியாமலோ வந்திட்டீங்க ..
உங்க கருத்துகளை சொல்லிட்டு போகலாமே..

29 comments:

pinkyrose said...

heyyyyyyyyy!
me the first verumpayyya!

ப.செல்வக்குமார் said...

///இவ்வினத்தின் கடைசிச் சோடிகள், 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன////
கடைசி ஜோடி அப்படின்னு தெரிஞ்சும் கொன்னிருக்காணுக பாருங்க ...!!!
///அதற்காக சிக்கன் கறி சாப்பிடாமல் இருக்க முடியுமா என்று கேட்கலாம். (கண்டிப்பா கேட்ப்பீங்க) .. இதுக்கு பதில் உங்க கையில் தான்.
///
இதுக்கு பதில் கோமாளி தான் சொல்லுவான்... சரியா.. சீக்கிரமே ...

ப.செல்வக்குமார் said...

6 - அழிந்த பறவைகள் அப்படின்னு சொல்லிட்டு 3 பறவைய தான் காட்டிருக்கீங்க.. இன்னும் மூணு எங்க ...?

ப.செல்வக்குமார் said...

நல்லா இருக்கு அண்ணா ...!! பயனுள்ள பதிவு ...!!

சௌந்தர் said...

நல்ல விழிப்புணர்வு நண்பா நம் நாட்டில் இன்னும் சில பறவைகள் அழிந்து வருவது வருத்தம் தர கூடிய செய்தி

கே.ஆர்.பி.செந்தில் said...

the world has change...
Good article..

விஜய் said...

மிக அருமையாக ,

வியப்பனாதை ஒன்றாய் கோர்த்திருக்கிறீர்கள் , நல்ல முயற்சி தோழரே , வெறும்பய என்று பெயரை வைத்துக்கொண்டு தெரிஞ்சுக்க வேண்டிய அழகான விசயங்களா சொல்லி இருக்கீங்க நண்பா ..
இன்னும் கொண்டு வந்து சேருங்கள் , காத்து இருக்கிறோம் நாங்கள் ..

வாழ்த்துக்கள்

Chitra said...

நல்ல தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.

You may like to read:

http://en.wikipedia.org/wiki/List_of_extinct_birds

LK said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

பிரசன்னா said...

நல்ல தகவல்கள்..

முனியாண்டி said...

It's more informative. Keep continue.

வினோ said...

ஆமா இந்த விசயங்கள எங்கிருந்து பிடிச்சுட்டு வரீங்க? நல்ல பதிவு.. :)

வெறும்பய said...

pinkyrose said...

heyyyyyyyyy!
me the first verumpayyya!

///


நன்றி தோழி..
கண்டிப்பா வடை உங்களுக்கு தான்..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

இதுக்கு பதில் கோமாளி தான் சொல்லுவான்... சரியா.. சீக்கிரமே ...

///

சீக்கிரம் சொல்லு எனக்கும் தெரிஞ்சுக்கணும்.

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

6 - அழிந்த பறவைகள் அப்படின்னு சொல்லிட்டு 3 பறவைய தான் காட்டிருக்கீங்க.. இன்னும் மூணு எங்க ...?

///

இங்கே கூட மொக்க போடணுமா ராசா..

வெறும்பய said...

நன்றி ப.செல்வக்குமார்

நன்றி சௌந்தர்

நன்றி கே.ஆர்.பி.செந்தில்

நன்றி விஜய்

நன்றி Chitra

நன்றி LK

நன்றி பிரசன்னா

நன்றி முனியாண்டி

நன்றி வினோ

வந்தமைக்கும் வாசித்தமைக்கும்

Ananthi said...

உங்க நட்பிற்கு ஒரு பரிசு (விருது) வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்!

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

Ananthi said...

உண்மை தாங்க.. பறவைகள் இனத்தை ஒன்னும் இல்லாம ஆக்காம இருந்தா சரி தான்..
நல்ல பகிர்வு..

"குருவிய கூட கூகிளில் தான் காட்டணும்........" னு சொன்னது அருமை.. :-))

ஜெகதீஸ்வரன். said...

எனக்கு தெரிந்து மனிதனுக்கு நேரடியாக பயன்படாத மிருகங்களே அழிந்து போகின்றன. குதிரைகளை மனிதன் பயன்படுத்தாமல் போனதால் இன்று அதுவும் அழிந்து வருகின்றன. ஒருவேளை விலங்குகளையும், பறவைகளையும் மனிதன் உணவுக்காகவும், வேறுபயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தாமல் போனாலே அவற்றை அழித்துவிடுவான்.

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com

எப்பூடி.. said...

மனிதன் 2012 இல் அழிந்து விடுவானாமே, அப்படி நடந்தால் இவை பிழைக்க வழியுண்டு.

Geetha6 said...

good

கலாநேசன் said...

நல்ல தொகுப்பு.

//ப.செல்வக்குமார் said...
6 - அழிந்த பறவைகள் அப்படின்னு சொல்லிட்டு 3 பறவைய தான் காட்டிருக்கீங்க.. இன்னும் மூணு எங்க ...?//

தம்பி தலைப்பை முழுசா படி.

கோவை குமரன் said...

நல்ல தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி

வெறும்பய said...

Ananthi said...

உங்க நட்பிற்கு ஒரு பரிசு (விருது) வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்!

///

நன்றி சகோதரி..

தங்கள் விருதுக்கும்.. வாசிக்க வந்தமைக்கும்..

வெறும்பய said...

ஜெகதீஸ்வரன். said...

எனக்கு தெரிந்து மனிதனுக்கு நேரடியாக பயன்படாத மிருகங்களே அழிந்து போகின்றன. குதிரைகளை மனிதன் பயன்படுத்தாமல் போனதால் இன்று அதுவும் அழிந்து வருகின்றன. ஒருவேளை விலங்குகளையும், பறவைகளையும் மனிதன் உணவுக்காகவும், வேறுபயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தாமல் போனாலே அவற்றை அழித்துவிடுவான்.

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com


///


நன்றி சகோதரா ..

தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு..

வெறும்பய said...

எப்பூடி.. said...

மனிதன் 2012 இல் அழிந்து விடுவானாமே, அப்படி நடந்தால் இவை பிழைக்க வழியுண்டு.

////

இதை நான் வழிமொழிகிறேன்..

வெறும்பய said...

Geetha6

கோவை குமரன்

கலாநேசன்

நன்றிகள் பல வந்தமைக்கும் வாசித்தமைக்கும்..

jeba said...

Nandri... Theriyadha pala vishayangalai therindhu konden... Aanal na anupum karuthukaluku ungal reply edhir parkiren... Ippadiku ungal rasigai JJ...

வெறும்பய said...

jeba said...

Nandri... Theriyadha pala vishayangalai therindhu konden... Aanal na anupum karuthukaluku ungal reply edhir parkiren... Ippadiku ungal rasigai JJ...

//

நன்றி தோழி ஜெபா அவர்களே...

நீங்கள் ரசிகையாய் இருப்பதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை.. சொல்லப்போனால் நான் ஒரு ரசிகன் அவ்வளவு தான்...

வருகைக்கு நன்றி..