பெட்ரோல் போராட்டமும் அதற்கான தீர்வுகளும்...செய்தி:

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெறாத கட்சிகள் சார்பில், நேற்று, "பாரத் பந்த்' அறிவிக்கப்பட்டது.இந்த, "பந்த்'தால் நாட்டின் பல பகுதிகளில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ஒரு சராசரி இந்தியனாக எனது பார்வை ...

எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் கடைசியில் பாதிக்கப்படுவது என்னவோ, ஒவ்வொரு மாதமும் இவ்வளவு தான் செலவு என்று பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்களும், அன்றைய தேவைகளை மட்டுமே பூர்த்தியானால் போதும் என்று வாழும் அடித்தட்டு மக்களும் தான்.


நேற்று (05 - 07 - 2010) நடந்த போராட்டத்தினால் இந்திய அரசுக்கு சுமார் 10,௦௦௦ கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டிருக்கிறதாம், எந்த ஒரு அரசியல்வாதியும் இந்த இழப்புக்கு பதில் சொல்லப் போவதில்லை, எப்படியும் விரைவில் இன்னொரு விதத்தில் இந்த பணத்தை வசூலிக்க தான் போகிறார்கள்.இதுவும் அத்யாவசிய பொருட்கள் என்ற பெயரில் வந்து சேரப் போவது நம் தலையில் தான்.


மக்களுக்கான பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் இது வரை ஓன்று சேர்ந்து போராடியதே இல்லை, இவற்றை பார்க்கும் பொது நேற்று நடந்தது விலை உயர்வுக்கான போராட்டமாக தெரியவில்லை, அடுத்த தேர்தலுக்காக முன்கூட்டியே நடந்த ஒரு பிரசாரமாகவே தெரிகிறது.பெட்ரோல் மற்றும் டீஸல் பிரச்சனையை தீர்க்க சில வழிகள்...


1 . விமானங்களுக்கும் பெட்ரோல் உபயோகப்படுத்துவதால் செலவை குறைக்க விமானங்களுக்கு சிறக்குகள் கட்டி விடலாம்.2 . குதிரை பந்தயங்களில் பயன்டுத்தப்பட்ட பழைய குதிரைகளை குறைந்த விலைக்கு வாங்கி வண்டியின் முன்னால் கட்டி இழுக்க வைக்கலாம். (பெட்ரோல் வாங்கும் செலவை விட குதிரைக்கு தீனி போடும் செலவு குறைவாகத் தான் இருக்கும்)


3 . சமீபத்தில் நடந்த விழ ஒன்றில் சமூக சேவகி த்ரிஷா அவர்கள் தெரு நாய்களை தத்து எடுக்க சொல்லியிருந்தார்கள். அதான் படி நாய்களை தத்தெடுத்து வண்டியின் முன்னால் கட்டி இழுக்க வைக்கலாம்.4 . நம்ம வாத்தியார் M G R அவர்கள் நடித்த பழைய படங்களின் நீங்கள் பாய்மர கப்பல் பார்த்திருக்கலாம். அதில் வருவது போன்ற பாய்மரத்தை உங்க காரின் மேல் கட்டி காற்றடிக்கும் பக்கமா ஓட்டலாம். (துணி கிழியாம பத்திரமா பாத்துக்கணும்.)5 . மேல சொன்னது எல்லாமே உங்களுக்கு சிரமமா இருந்தா... இதோ இப்படி கூட பைக் ஓட்டலாம்... அது உங்க விருப்பம்..

Driver
Bajaj Auto launched another fuel saver bike.....

After The SUCCESS of .........

.
.
.
.
.


CT100.......
.
.
.
.
.

PLATINA ............ .

.
.
.
.
.


Presenting.. .........
.
.
.
.
.
.
.
.


COWasaki BAJAJ

verumpaye


அட அப்படியே போன எப்படி சார்..
நம்ம புது வாகனத்தை பற்றி கருத்து சொல்லிட்டு போகலாமே....

32 comments:

எப்பூடி.. said...

ஆரம்பத்தில் சீடியசான தகவலோடு ஆரம்பித்து இறுதியில் வயிறுவலிக்க வைத்து விட்டீர்கள். சிந்தித்தேன், சிரித்தேன் , நன்றி.

ப.செல்வக்குமார் said...

சத்தியமா அற்புதமான வாகனங்கள்...!!! இதெல்லாம் எப்ப விற்பனைக்கு வரப்போகுதுங்க ...?? தயவு செய்து சொல்லுங்க ..

ப.செல்வக்குமார் said...

//நேற்று (05 - 07 - 2010) நடந்த போராட்டத்தினால் இந்திய அரசுக்கு சுமார் 10,௦௦௦கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டிருக்கிறதாம், ///

2000 கோடி இழப்புன்னு கேள்விப்பட்டேன் ...!!!

வெறும்பய said...
This comment has been removed by the author.
அஹமது இர்ஷாத் said...

aaaaaaaa Mudiyala ennappa ithu intha maathuri oru kadi No Chance..

எப்பூடி.. said...

ஆரம்பத்தில் சீடியசாக ஆரம்பித்து இறுதியில் வயிறு வலிக்க வைத்துவிட்டீர்கள், சிந்தித்தேன், சிரித்தேன், நன்றி.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

எனக்கு cowasaki தான் பா
ஹீ ஹீ ஹீ

பிரசன்னா said...

எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் உதவுவார்னு நினைக்கிறேன்.
அவர் பேரு கூட மயில்வாகனம் ஹீ ஹீ

pinkyrose said...

hey! verum payya 1
semayya kalakreenga!
naanum try panran but ungalavu ithink no chance!

ப்ரியமுடன் வசந்த் said...

அட்டகாசமான ஐடியாக்கள்...!

Chitra said...

இதுல எது உங்க வாகனம்?

"ராஜா" said...

பெட்ரோல் வாங்க காசு இல்லாம அனிமல்ஸ துன்புருத்துற உங்களுக்கு கூடிய சீக்கிரம் ப்ளூ கிராஸ்ல இருந்து கண்டம் வரும்னு நெனைக்கிறேன் ..

"ராஜா" said...

மன்னிக்க கண்டனம் வரும்

Ananthi said...

ஆஹா.. எல்லா மாடல் வண்டியிலயும், ஒன்னு என் பேர்ல புக் பண்ணிருங்க..
வண்டி டெலிவரி, கொடுக்கும் போது, செக் வாங்கிக்கோங்க :-)))

வெறும்பய said...

எப்பூடி.. said...

ஆரம்பத்தில் சீடியசான தகவலோடு ஆரம்பித்து இறுதியில் வயிறுவலிக்க வைத்து விட்டீர்கள். சிந்தித்தேன், சிரித்தேன் , நன்றி.

////


நன்றி தலைவா ..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

சத்தியமா அற்புதமான வாகனங்கள்...!!! இதெல்லாம் எப்ப விற்பனைக்கு வரப்போகுதுங்க ...?? தயவு செய்து சொல்லுங்க ..


///


2011 பிப்ரவரி 30 ம் தேதி வெளியிட முடிவு பண்ணியிருகோம்... சீக்கிரம் புக் பண்ணிடுங்க..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

//நேற்று (05 - 07 - 2010) நடந்த போராட்டத்தினால் இந்திய அரசுக்கு சுமார் 10,௦௦௦கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டிருக்கிறதாம், ///

2000 கோடி இழப்புன்னு கேள்விப்பட்டேன் ...!!!

///

நீங்க எந்த பத்திரிகை படிக்கிறீங்க சார்...

வெறும்பய said...

அஹமது இர்ஷாத் said...

aaaaaaaa Mudiyala ennappa ithu intha maathuri oru kadi No Chance..

///

வேற வழியே இல்ல சகிச்சு தான் ஆகணும்..

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

எனக்கு cowasaki தான் பா
ஹீ ஹீ ஹீ

///

உனக்கு இல்லாததா நண்பா.. எடுத்துக்கோ
ஆனா வைகோல், புல், புண்ணாக்கு நீ தான் வாங்கணும்..

வெறும்பய said...

பிரசன்னா said...

எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் உதவுவார்னு நினைக்கிறேன்.
அவர் பேரு கூட மயில்வாகனம் ஹீ ஹீ

///

அட்ரெஸ் குடுங்களேன்...விற்பனைக்கு டீலர் தேவைப்படுறாங்க ...

வெறும்பய said...

Blogger pinkyrose said...

hey! verum payya 1
semayya kalakreenga!
naanum try panran but ungalavu ithink no chance!
//
Blogger ப்ரியமுடன் வசந்த் said...

அட்டகாசமான ஐடியாக்கள்...!

//


வருகைக்கு நன்றிகள்...

வெறும்பய said...

Chitra said...

இதுல எது உங்க வாகனம்?

//

நம்ம வாகனம் எப்பவுமே சைக்கிள் தான்...

வெறும்பய said...

"ராஜா" said...

பெட்ரோல் வாங்க காசு இல்லாம அனிமல்ஸ துன்புருத்துற உங்களுக்கு கூடிய சீக்கிரம் ப்ளூ கிராஸ்ல இருந்து கண்டம் வரும்னு நெனைக்கிறேன் ..
மன்னிக்க கண்டனம் வரும்

//

ஐயையோ இதில இப்படி வேற இருக்கா ....

விடு ஜூட்.... ( வெறும்பய தலைமறைவு..)

வெறும்பய said...

Ananthi said...

ஆஹா.. எல்லா மாடல் வண்டியிலயும், ஒன்னு என் பேர்ல புக் பண்ணிருங்க..
வண்டி டெலிவரி, கொடுக்கும் போது, செக் வாங்கிக்கோங்க :-)))

///

புக்கிங் ஓகே.. செக் வாங்க மாட்டோம்.. ரெடி கேஸ் தான்....

காசோட வாங்க... அள்ளிகிட்டு போங்க ...

ஜெய்லானி said...

என்னிடம் கேட்டா கங்காரு வளருங்க மக்கா..!! அதான் உங்களை தூக்கிட்டு துள்ளி...துள்ளி. போகும் செலவு கம்மி. வளக்கவும் ஈஸி..!! சாமான் வைக்கவும் இடம் இருக்கும் ..


தலைவர்
மாத்தியோசிப்போர் சங்கம்
ஷார்ஜா கிளை
அமீரகம்

வால்பையன் said...

எனக்கு ஒரு வண்டி புக் பண்ணியிருங்க!

மங்குனி அமைச்சர் said...

yenakku oru paarsal please

வெறும்பய said...

வால்பையன் said...

எனக்கு ஒரு வண்டி புக் பண்ணியிருங்க!

மங்குனி அமைச்சர் said...

yenakku oru paarsal please

///


மனிக்கவும் இலவசமாக கொடுப்பதில்லை...

வினோ said...

நமக்கு குதிரை வண்டி ஒத்து வராது. COWasaki BAJAJ okay...Super...

வெறும்பய said...

அதுக்கென்ன தலைவா.. உங்களுக்கு இல்லாததா COWasaki தானே எடுத்துக்குங்க...

mkrpost said...

நக்கலாக இருந்தாலும் விலையேற்றத்தின் கொடுமையை உணரவைக்கிறது.அந்த வகையில் இந்த நக்கல் வெற்றி.ஆனால் கடைசி மாடலுக்கு புளுகிராஸ் பிரச்சனை செய்யாது

வெறும்பய said...

mkrpost said...

நக்கலாக இருந்தாலும் விலையேற்றத்தின் கொடுமையை உணரவைக்கிறது.அந்த வகையில் இந்த நக்கல் வெற்றி.ஆனால் கடைசி மாடலுக்கு புளுகிராஸ் பிரச்சனை செய்யாது

///


அதுக்கெல்லாம் ஸ்பெஷல் அனுமதி நண்பா