ஏழைகளுக்கு எட்டாத கனி...(உதவலாமே)

அன்பானவர்களுக்கு வணக்கம்.. இந்த பதிவை கடைசி வரை படிக்காமல் சென்று விடாதிர்கள். ஒருவேளை உங்கள் உதவியால் இருவரின் வாழ்க்கை பிரகாசமாகலாம்.


இந்தியாவில் இன்றைக்கு சிறந்த வியாபாரம் எது என்றால் மறுக்காமல் சொல்லலாம் கல்வி என்று.அந்த அளவிற்கு கொடி கட்டி பறக்கிறது கல்வி வியாபாரம். நம் கல்வி நிறுவனங்கள் நிர்ணயித்திருக்கும் கட்டணம் சாமானியனுக்கு எட்டாத கனியாகவே இருக்கின்றது ...இது போதாது என்று நன்கொடை என்ற பெயரில் நிறுவனங்கள் வசூலிக்கும் தொகை எல்லோருக்கும் தெரிந்ததே . இன்று கல்வியை கூறுப்போட்டு விற்றுக்கொண்டிருக்கும் நிலை உருவாகி விட்டது.

கடந்த வாரம் சென்னை ஆவடியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் MBA மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலித்திருக்கிரார்கள், வருடம் ஒன்றிற்கு ஒரு லட்சம் என்று வசூலித்தவர்கள் 81,500 ரூபாய்க்கு மட்டுமே ரசீது கொடுத்திருக்கிறார்கள். மீதி 18,500 ரூபாய்க்கு ரசீது கொடுக்கவில்லையாம், மாணவர்கள் காரணம் கேட்டதற்கு நன்கொடை என்றார்களாம். சரி நன்கொடை என்ற பெயரிலாவது ரசீது கொடுங்கள் என்று கேட்டதற்கும் மறுத்து விட்டார்களாம். இந்த நன்கொடையில் கல்லூரி முதல்வருக்கு தான் பெரும் பங்காம். அதனால் மாணவர்களும் தங்கள் படிப்புக்கு ஏதாவது பிரச்சனை வரும் என்றெண்ணி பயந்து கொண்டு எதுவும் கேட்க்காமல் இருக்கிறார்கள்.


இந்த ஒரு லட்ச ரூபாய்க்கு எத்தனை வீடுகள், எத்தனை நகைகள் அடகு வைக்கப் பட்டிருக்கும், ஒவ்வொரு பெற்றோரும் எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள். இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் பிற்காலத்தில் கல்வி கடனுக்காக தான் தற்கொலை செய்தவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.

" ஏழைகளுக்கு கல்வி என்றுமே எட்டா கனி தான் "

பள்ளி படிப்பை முடித்தவர்களில் பத்து பேரில் ஒருவர் தான் உயர் கல்வி படிக்க பல்கலை கழகத்திற்கு போகிறார்.உயர் கல்வி என்பது இன்றளவில் பாமரனுக்கு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவனுக்கு எட்டாகனி என்று ஆகிவிட்டது.

கல்வி எனும் இந்த எட்டாகனியை நாம் நினைத்தால் இரு ஏழை மாணவ மாணவியருக்கு எட்ட வைக்கலாம். கனவுகள் கைகூடியும் படிக்க பண வசதி இல்லாததால் வாடிகொண்டிருக்கும் இவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்யலாம்.


பெயர் : கோவிந்தராஜ்

டாக்டர் கனவு கைகூடியும், பணமில்லாததால் இவர் செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். பொதுத்தேர்வில் 1,079 மதிப்பெண் பெற்றார். கட் - ஆப் மார்க் 194.75 பெற்றதால், மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. வரும் 21ம் தேதி கல்லூரியில் சேர வேண்டும். ஆனால், வசதியில்லாததால் சீட் கிடைத்தும் படிக்க முடியாத நிலையில் கோவிந்தராஜ் உள்ளார்.


எஸ்.கோவிந்தராஜ்,
த/பெ. சி்த்தையன், 4/149,
மல்லிபாளையம், போடிநாயக்கன்பட்டி அஞ்சல்,
இடைப்பாடி தாலுகா- 637 105;
மொபைல்: 96882 26467)

வங்கியின் அக்கவுண்ட் எண் :

SBI N 000221331245117385(வெளிநாட்டினர்)
SBI N 0002213-31245117385(இந்தியா)


....................................................பெயர் : காயத்திரி

வறுமை காரணமாக கல்லூரியில் சேர இயலாமல் இருக்கிறார். இவரது தந்தை சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வெட்டியான் வேலை செய்து வருகிறார். ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 1,142 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவியின் மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் 197.25. மருத்துவ படிப்புக்கான கவுன்சலிங்கில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் காயத்திரிக்கு இடம் கிடைத்துள்ளது. இம்மாதம் 14ம் தேதி கல்லூரியில் சேருவதற்கான அழைப்புக் கடிதமும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


அ.காயத்ரி,
த/பெ அன்பழகன்,
4/26, காந்திநகர், ஆதி திராவிடர் தெரு,
சுல்தான் பேட்டை, பரமத்திவேலூர்
அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
தொலைபேசி எண் : 80569-74150.


தங்களால் இயன்ற உதவியை செய்யலாமே.. வரும் காலத்தில் இவர்கள் உங்களுக்கும் மருத்துவம் செய்யலாம்.

சிக்கனப் படுத்துவதாக
நினைத்து கைகளை
மூடிவிடாதே..

கதவுகள் மூடிவிட்டதாய்
வரவுகளும் வாசல் கடந்து
வராமலே போய் விடும்..
மாநாடு, பேரணி, போராட்டங்கள் என பணத்தை செலவழிக்கும் நம் அரசு இவர்களின் மொத்த செலவையும் ஏற்று படிக்க வைக்கலாம். (மன்னிக்கவும் நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டேன்.)

27 comments:

வால்பையன் said...

நிச்சயம் உதவுவோம்!

முனியாண்டி said...

Sure...We will do something...I'm talking to my friends

ஜில்தண்ணி - யோகேஷ் said...

கண்டிப்பாக உதவனும்

அஹமது இர்ஷாத் said...

கண்டிப்பாக உதவுவோம்...

எப்பூடி.. said...

தங்கள் சேவை உள்ளத்துக்கு நன்றிகள், இதனை முகப்புத்தகத்தில் இணைத்துள்ளேன்.

கலாநேசன் said...

நிச்சயம் உதவுகிறேன்.

தகவலுக்கு நன்றி

கே.ஆர்.பி.செந்தில் said...

நிச்சயம் உதவுவோம்!

pinkyrose said...

verum payya!

nejammava neenga great paa...

Valai said...

இவ்வளவு சிறந்த மாணவர்கள் யாரிடமும் இனி கையேந்த வேண்டியதில்லை. இந்த வருடம் முதல் குடும்பத்தில் முதல் பட்டதாரியின் முழு உயர்கல்வி செலவையும் தமிழக அரசு ஏற்றுகொள்கிறது. குடும்பத்தில் வேறு யாரும் பட்டதாரிகள் இருந்தாலும் வங்கிகள் இப்போது தாராளமாக கல்வி கடன் வழங்குகிறது. மிகச்சில வங்கி மேலாளர்கள் தவிர அனைத்து வங்கிகளும் இதை ஒரு சேவையாகவே செய்கின்றனர்.

Sai
http://www.valaipookkal.com

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கல்வியில் இன்றைய நிலையில் நமது தேசம் எந்த நிலையில் தரம் கேட்டு இருக்கிறது என்பதை முகவும் சிறப்பாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறது . இந்த பதிவு .
நிச்சயம் இயன்ற உதவிகளை செய்வோம் நண்பரே . உங்களின் இந்த சிறந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.


பகிர்வுக்கு நன்றி !

sri said...

வலை அவர்களே கையேந்த இல்லை.தமிழர்களிடம் உதவிதான் கேட்கிறார்கள்.சக மனிதனுக்கு உதவி செய்யாமல் யாருக்கு செய்யப்போறோம்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் முன்னேறுவதற்கு அல்லது ஏதோவொரு வகையில் இன்னொருவருடைய உதவி நிச்சயமாக தவிக்கமுடியாதது.

நிச்சயமாக செய்வோம்.

வெறும்பய said...

உதவும் எண்ணம் படைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

வெறும்பய said...

Valai said...

இவ்வளவு சிறந்த மாணவர்கள் யாரிடமும் இனி கையேந்த வேண்டியதில்லை. இந்த வருடம் முதல் குடும்பத்தில் முதல் பட்டதாரியின் முழு உயர்கல்வி செலவையும் தமிழக அரசு ஏற்றுகொள்கிறது. குடும்பத்தில் வேறு யாரும் பட்டதாரிகள் இருந்தாலும் வங்கிகள் இப்போது தாராளமாக கல்வி கடன் வழங்குகிறது. மிகச்சில வங்கி மேலாளர்கள் தவிர அனைத்து வங்கிகளும் இதை ஒரு சேவையாகவே செய்கின்றனர்.

Sai
http://www.valaipookkal.com

///

நல்ல விஷயம் தான்.. அப்படிஎன்றால் இரண்டாவதாகவோ அல்லது மூன்றாவது பிள்ளையாக பிறந்திருந்தால் அவர்களின் கத்தி என்ன ?

நீங்கள் என்றைக்காவது வங்கியில் வாசலில் ஏதாவது கடனுதவிக்காக சென்றதுண்டா.. அங்கே ஏழைகளுக்கு கிடைக்கும் மரியாதை என்னவென்று தெரியுமா ?

வலை அவர்களே கையேந்த இல்லை.தமிழர்களிடம் உதவிதான் கேட்கிறார்கள்..

வெறும்பய said...

sri said...

வலை அவர்களே கையேந்த இல்லை.தமிழர்களிடம் உதவிதான் கேட்கிறார்கள்.சக மனிதனுக்கு உதவி செய்யாமல் யாருக்கு செய்யப்போறோம்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் முன்னேறுவதற்கு அல்லது ஏதோவொரு வகையில் இன்னொருவருடைய உதவி நிச்சயமாக தவிக்கமுடியாதது.

நிச்சயமாக செய்வோம்.


///

நல்லது செய்தாய் சகோதரா..

உதவ நினைக்கும் நல்ல உள்ளத்திற்கு எனது நன்றிகள்..

ப.செல்வக்குமார் said...

நிச்சயமாய் உதவுவோம் ..
நீங்கள் அனுப்பின மின்னஞ்சலை எனது நண்பர்களுக்கும் அனுப்பி விட்டேன் ..

சௌந்தர் said...

முதல் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நண்பா. நிச்சயம் உதவுவோம்

Anonymous said...

Hi,

I dont know this below information how much useful and how it is going to work. But give it a try.

Actor Surya has launched Agaram Foundation.

www.agaram.in
Agaram Ph No :98418 91000

Thanks
Karthik J

திரவிய நடராஜன் said...

நாசமாக போகட்டும் இந்த நாடு

அஹமது இர்ஷாத் said...

தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் நண்பா....

மாதேஸ்வரன் said...

இருவரையும் அழைத்து பேசினேன். இருவருக்குமே தேவையான அளவு நிதி சேர்ந்து விட்டது, என கூறினர். வேறு எதுவும் உதவி (அடுத்த வருடத்திற்கு) தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டேன்.

"வெறும்பய" அவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அவர்களுக்கு கை கொடுத்துள்ளது.

உதவி செய்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

வெறும்பய said...

மிக்க நன்றி ப.செல்வக்குமார்
மிக்க நன்றி சௌந்தர்

வெறும்பய said...

Anonymous said...

Hi,

I dont know this below information how much useful and how it is going to work. But give it a try.

Actor Surya has launched Agaram Foundation.

www.agaram.in
Agaram Ph No :98418 91000

Thanks
Karthik J

///

தகவலுக்கு நன்றி..

வெறும்பய said...

திரவிய நடராஜன் said...

நாசமாக போகட்டும் இந்த நாடு

///

அப்போ நீங்க எங்கே போவீங்க சார்..

வெறும்பய said...

மாதேஸ்வரன் said...

இருவரையும் அழைத்து பேசினேன். இருவருக்குமே தேவையான அளவு நிதி சேர்ந்து விட்டது, என கூறினர். வேறு எதுவும் உதவி (அடுத்த வருடத்திற்கு) தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டேன்.

"வெறும்பய" அவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அவர்களுக்கு கை கொடுத்துள்ளது.

உதவி செய்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

///

மிக்க நன்றி சகோதரா ...

உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

அன்புடன் மலிக்கா said...

நல்லத்தொரு பணி உங்களுடையது.
நம்மால் இயன்ற உதவிகள் பிறக்கு செய்வது சிறந்த நன்மை..

அன்புடன் மலிக்கா said...

நல்லத்தொரு பணி உங்களுடையது.
நம்மால் இயன்ற உதவிகள் பிறக்கு செய்வது சிறந்த நன்மை..

sairam said...

உதவும் உள்ளங்கள் உள்ளன. இருக்கின்ற உள்ளங்களை உபயோகித்துக்கொள்ளுங்கள் நடிகர் சூரியா
அகரம் என்ற பௌண்டேசன் அமைப்பு வைத்து பல படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். அது போல் பல அமைப்புக்கள் உள்ளன. அவைகளை கண்டு உபயோகித்துக்கொள்ளுங்கள் .