ஒரு குழந்தையின் கதறல்...பதிவுகளுக்கு பொருத்தமான படங்களை தேடும் போது என் கண்ணில் பட்டது இந்த கண்ணீர் கவிதை.. இதை படிக்கும் போது பத்து மாதம் மடி சுமந்து பெற்றெடுத்த ஒரே பாவத்திற்காக.. தான் பேரக் குழந்தைகளுடன் ஆனந்தமாய் செலவிட வேண்டிய பொழுதை... முதியோர் இல்லங்களில் கண்ணீருடன் காலங்களை கரைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்களின் கதறலாகவே தோன்றியது...அனுப்புநர்:
ஒரு பெற்றோர்

பெறுநர்:
இன்னொரு பெற்றோர்

பொருள்:
உளறல்

அன்புள்ள மகனே !
நலமா ? ..............

அன்று உன் விரல் பிடித்து
அதே ஸ்பரிசத்தோட ....
இன்று பேனா பிடித்து
எழுதுகிறேன்...

இந்த கடிதத்தை
உன் மகனுக்கு தெரியாமல் படி ....
நீயும் பிற்காலத்தில்
இப்படி எழுதாமலிருக்க ...

உன்னை சபிப்பதோ .
என் துயரங்கள் சொல்வதோ..
இந்த கடிதத்தின் நோக்கமல்ல...
உன் தாய் என்று கூட
பாரபட்சம் பார்க்காமல்
என் கடைசி ஆசையை
தெரிவிப்பதே...

நான் இறந்தபிறகு கொள்ளியை
தலையில் வைக்காதே..
வயற்றில் வை...

என் உடலிலே
முதலிலே எரியப் போகும் உறுப்பு..
உன்னை சுமந்த கருப்பையாகத் தான்
இருக்க வேண்டும்..

நீ பால்வார்க்க
கொடுத்து வைக்காத வயிறு..
அஸ்தியாவது கொடுக்கட்டும்..

இந்த கடிதம் எழுதுகிற போது
கையில் தீக்காயம் ஏற்ப்பட்டுவிட்டது ..

ஒன்றுமில்லை

கடந்த இரண்டாண்டுகளாய் கொதித்த
கண்ணீர்துளி ஓன்று
என் கை மீது சிந்திவிட்டது..
அதுவே காரணம்...

மகனே.. பெத்தமனம் பித்து
என்பதற்கு சான்றாய்..
என் கடைசி வரி..

உன் வீட்டு உணவுதான்
எனக்கில்லை என்றாகிவிட்டது...
ஒருவேளை நீ இந்த கடிதத்திற்கு
பதில் போட்டால்...
தபால் தலையை எச்சிலால் அல்ல..
ஒரே..ஒரு...சோற்றுப் பருக்கையால்...
ஒட்டி அனுப்பு...

இப்படிக்கு...
ஒரு வயதான குழந்தை...


கலங்க வைத்துவிடாதீர்கள் உங்களை கண்ணுக்குள் வைத்து இமை போல காத்தவர்களை...

காலங்களும் மேகம் போல கரைந்து செல்லும்.. உனக்கும் ஒரு நாள் இளமை போய் முதுமை வரும்..

39 comments:

இளம் தூயவன் said...

arumaiyana pathivu.
tamil font problem

சௌந்தர் said...

தபால் தலையை எச்சிலால் அல்ல..
ஒரே..ஒரு...சோற்றுப் பருக்கையால்...
ஒட்டி அனுப்பு...//

இந்த வரி சரியானா வரி நண்பா நீ கலக்குற.. நண்பா

ப.செல்வக்குமார் said...

///ஒரே..ஒரு...சோற்றுப் பருக்கையால்...
ஒட்டி அனுப்பு...///
உண்மைலேயே கலங்க வச்சிருக்காங்க ..!!
இந்த அவலம் எப்போது நீங்குமோ..??

வினோ said...

உருக்கம்.... பகிர்வுக்கு நன்றி நண்பா

Sridhar said...

Good one, Let people have consideration for elders.

Balaji saravana said...

உருக்கமான கவிதை!

சே.குமார் said...

//உன் வீட்டு உணவுதான்
எனக்கில்லை என்றாகிவிட்டது...
ஒருவேளை நீ இந்த கடிதத்திற்கு
பதில் போட்டால்...
தபால் தலையை எச்சிலால் அல்ல..
ஒரே..ஒரு...சோற்றுப் பருக்கையால்...
ஒட்டி அனுப்பு...//

கலங்க வச்சிருக்காங்க ..!!
Vali unarththum uyirin kavithai.

Indhira said...

முதல் முறை வருகிறேன்..
பதிவுகள் அனைத்தும் அருமை.
இந்த வரிகள் ஏற்கனவே படித்தது தான் என்றாலும்
மீண்டும் மனதை எழுத்துகிறது..
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

ரகுநாதன் said...

கண்ணீரை வரவழைத்த கவிதை நண்பா... :(

Mrs.Menagasathia said...

நிஜமாவே கண்கலங்க வைத்துவிட்டது இந்த கவிதை..அருமை!!

Sriakila said...

கண்ணீரை வரவழைத்து விட்டக் கடிதம். ஒரு 5 வயது குழந்தைக்கு இருக்கக்கூடிய அத்தனை எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் 50 வயது குழந்தைகளுக்கும் இருக்கத்தான்செய்யும். அது நியாயமானதும் கூட. இதைப் புரிந்துக் கொள்ளாத கல் மனத்தைக் கரைய வைக்கக் கூடிய கவிதை. அவசியமான பதிவு!

Riyas said...

//கலங்க வைத்துவிடாதீர்கள் உங்களை கண்ணுக்குள் வைத்து இமை போல காத்தவர்களை//

அருமைங்க நல்லதொரு பதிவு..

Maduraimohan said...

Nalla pathirvu nanba :)

Jeyamaran said...

உண்மைதான் நண்பரே இதை மாற்ற வேண்டும்

எப்பூடி.. said...

சத்தியமாக சொல்கிறேன், கண் கலங்க வைத்து விட்டீர்கள், பெற்றோரை முதியோரில்லங்களுக்கு அனுப்பும் சாக்கடை நாய்களில் ஒரு நாய்க்கு உறைத்தாலே இந்த பதிவு ஆயிரம் பதிவுகளுக்கு சமம்.

எப்பூடி.. said...

எல்லோரும் படிக்க வேண்டியது, மூஞ்சிப்புத்தகத்திலும் இணைத்துள்ளேன்.

mynthan said...

உண்மைகளின் உளறல்!!அருமை நண்பரே!!

Ananthi said...

மனதைத் தொடும் வண்ணம் இருக்குதுங்க..

//நான் இறந்தபிறகு கொள்ளியை
தலையில் வைக்காதே..
வயற்றில் வை...
//

எப்பேர்ப்பட்ட வேதனை இருந்தால், இந்த வரிகள் பிறந்திருக்கும்.. :-((
கஷ்டமா இருக்கு..

(சரியாக வந்து பின்னூட்டம் இட முடியல.. மன்னிக்கவும்)

கே.ஆர்.பி.செந்தில் said...

கண்ணீரை வரவழைத்த கவிதை...

Gayathri said...

அழவச்சுட்டிங்க...மிகவும் உருக்கமான கவிதை....ஆழமான கருத்து...என்னை மிகவும் பாதித்தது..

அப்பாவி தங்கமணி said...

வார்த்தைகள் வரவில்லை... நிதர்சனம் கூறிய வரிகள்... கலங்க வைத்து விட்டன... அருமை

rangarajan said...

Enna oru manathai thotta pathivu.. Innum kanneer vadithuk kondu irukkiren.. Intha pathivil ulla tharam ketta thanayanil naanum oruvan.. Ini azhuthu enna payan? thanthai tahai iruvarum anathayaga iranthanar... Nanbargale.. thayavu seithu nam petrorgalai avargalukku undana urimayum magizhchiyum pera vaazha vaiyungal..

சீமான்கனி said...

//என் உடலிலே
முதலிலே எரியப் போகும் உறுப்பு..
உன்னை சோந்த கருப்பையாகத் தான்
இருக்க வேண்டும்..

நீ பால்வார்க்க
கொடுத்து வைக்காத வயிறு..
அஸ்தியாவது கொடுக்கட்டும்..//

நம் தெய்வங்களின் மனக்கொதிப்பின் உச்சமாய் வந்த கடிதம்...கலங்கடிக்குது....வாழ்த்துகள் ஜெய்...

முனியாண்டி said...

கவிதைக்கு ஆனா பதில் இன்னொரு கவிதையாய்...

மண்தின்ற அம்மா
---------------
பிள்ளைவரம் வேண்டி
மண்சோறு தின்றவளை
மண் தின்றது
பிள்ளைக்கு வேண்டததால்.

http://adisuvadu.blogspot.com/2010/04/blog-post_16.html

abul bazar/அபுல் பசர் said...

//கடந்த இரண்டாண்டுகளாய் கொதித்த
கண்ணீர் துளி ஒன்று
என் கை மீது சிந்திவிட்டது
அதுவே காரணம் //

நெஞ்சை சுட்ட வரிகள்.
கவிதை அருமை
வாழ்த்துக்கள்

Anonymous said...

ஜெயந்....இன்ன வரித்தான் என்றில்லாமல் ஒவ்வொருவரியும் அனைத்துதாய்மார்களின் சாரிபில் எழுதப்பட்டதாக கருதுகிறேன்..

மனிதனை சாகடிக்கிறதப்பா... மகன்கள் படிக்கவேண்டும்....ஈட்டியால் நெஞ்சை பிளக்கிறது...
பையன்கள் மட்டுமல்ல மகள்களும் படிக்கனும்..எனது சகோதரி ஒருத்தர் தாய் இருப்பதாகவே கருதுவதுக்கிடையாது...பார்ப்பதும் இல்லை இதை எதோடுசேர்ப்பது..இவளும் பெண்ணா..என்றிருக்கிறது...பேய்.... ஒரு எல்லாம் காசு இருந்தால்தான்

அரவிந்த் said...

நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். இளமையின் துள்ளலில் இருப்பவர்களுக்கு முதியோர்களைப் பற்றி அக்கறை கொள்ள எங்கே நேரம் இருக்கிறது? அவர்களும் ஓய்வெடுத்து ஒருநாள் உட்காரும் போதுதான் வலியும் வேதனையும் தெரியும், புரியும். அப்போது வருந்தி என்ன பயன்? இந்தப் பதிவைப் படித்து விட்டு யாராவது ஒரு நெஞ்சமாவது அவர்களது அன்பை உணர்ந்தால் சரி.

அன்புடன்
அரவிந்த்

குமரை நிலாவன் said...

மனதை கலங்கடிக்குது வரிகள்

ஜீவன்பென்னி said...

கனக்க வைக்கும் கனமான கடைசி வரிகள்.......

அஹமது இர்ஷாத் said...

வரிகளிலில்லை அது...

கலாநேசன் said...

உருக்கமான வரிகள்

hamaragana said...

அன்புடன் வணக்கம் எனது அம்மா அடிக்கடி சொல்லும் பழமொழி""" அளந்த நாழி பaaனைக்கு இடுவலில்""" ! பொருள் :நீ என்ன செய்தாயோ அது உனக்கு திரும்ப கிடைக்கும் .ஒரு வீட்டில் வயதான பெரியவர் அவரது மருமகள் சிரட்டைல் coffee குடிக்க கொடுத்தாளாம்.அவள மகன் தாத்தாவிடம் சொன்னானாம் இதை பத்திரமாக வைத்திரு நான் எனது அம்மா , அப்பாவுக்கு கொடுக்கணும் ??!!! பெற்றோரை கைவிடும் ஆசாமிகள் அதுவே கிடைக்கும்

கவிதை காதலன் said...

சத்தியமா கண் கலங்க வெச்சிட்டீங்க.

jeba said...

Chanceless, really superb... Pettrorai thavika vidum anaivarukum indha kavidhai oru paadam... kavithai ku nandri... by JJ...

Maha said...

Nanpa! Vallthukal.. Thodaratum un pathiuvkal........

BALA KRISHNAN said...

போயி வேலைய பாருங்கப்பா..

Maha said...

BALA KRISHNAN said...

போயி வேலைய பாருங்கப்பா..
Maha........ said

Neenka First போயி வேலைய பாருங்கப்பா..

BALA KRISHNAN said...

BALA KRISHNAN said...
போயி வேலைய பாருங்கப்பா..

Maha........ said
Neenka First போயி வேலைய பாருங்கப்பா..

BALA KRISHNAN said...
வேல பாக்காட்டி கூட பரவா இல்ல.. பாக்குறவங்கள பாக்க விடுங்கப்பா..

Anonymous said...

nalla irundhadhu indha padhivu.....padichittu oruthangalukku uraichaalum sari....
keep it up.
-lucky.