நண்பர்களே ஒரு உதவி.. செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்..

அன்பானவர்களே.. இந்த தகவலை நண்பர் பூபாலன் அவர்களின் சேதுபதிச் சீமை என்ற தளத்தில் பார்த்தேன்.. உலகிலேயே மிகவும் கொடியது தாயிடமிருந்து சேயை பிரிப்பது தான்.. அப்படி சில கயவர்களால் களவாடப்பட்டு மாநிலம் தாண்டி கொண்டு வரப்பட்ட ஒரு சின்னஞ்சிறு மழலையின் கண்ணீர்... இந்த பதிவு..
பூஜா என்ற இந்த இளந்தளிரை ஒரு கொடூரன் கடத்தி வந்து பிச்சை எடுக்க வைத்திருக்கின்றான்.

நாம் பல பேருந்து நிலையங்களில் பார்த்திருப்போம். குழந்தைகள் பிச்சையெடுப்பதை ,


கையில் தட்டினை வைத்துகொண்டு அவர்கள் கெஞ்சும்போது விழும் தட்டில் தானாகவே காசும் கண்ணீரும்..

பூஜாவை வைத்து பிச்சை எடுக்கும்போது அவன் கேரளா போலீசிடம் சிக்கியுள்ளான்.

பூஜா தற்போது திருவேந்திரத்தில் உள்ள நிர்மலா சிசு பவனில் சேர்க்கப்பட்டுள்ளாள்.
போலீசார் அந்த பிச்சைகாரன் மூலம் குழந்தையின் இருப்பிடத்தை
கண்டறியலாம் என அவனிடம் விசாரிக்கும்போது , குழந்தையின் துரதிர்ஷ்டம்
அந்த பிச்சைக் காரனுக்கு வாயும் பேச முடியாதாம் காதும் கேட்காதாம்....

அந்த குழந்தை மழலை மொழியில் சொன்ன விபரங்கள்.:

தந்தை பெயர் : ராஜு , தாயின் பெயர் : முன்னிதேவி ,
பிறந்த இடம் நாகலுப்பி ,
தனக்கு ஒரு அக்காவும் தம்பியும் இருப்பதாக கூறியுள்ளாள்.
விசாரித்துப் பார்த்ததில் அதுபோன்ற ஒரு இடம் யாரும்
கேள்விப் பட்டதாகவே தெரியவில்லை...யாருக்கேனும் இந்த குழந்தைப் பற்றிய தகவல்கள் தெரிந்தாலோ.அல்லது குழந்தையைத் தேடும் பெற்றோர் பற்றி தெரிந்திருந்தாலும் கேரளாவில் உள்ள நிர்மலா சிசு பவனுக்கு தெரிவிக்கலாம்.
தொலைபேசி எண் 0471 - 2307434
இதப் படிப்பவர்கள் தங்களால் முடிந்த வரை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.பிரபல பதிவர்கள் அனைவரும் இதனை ஒரு இடுகையாக இடலாமே...

இதன் மூலம் நிறைய பேரை இந்தச் செய்தி சென்றடையும் என்று ஓர் நம்பிக்கை..

இதைப் படிப்பவர்கள் யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம்.
இதனை forward செய்ய எதுவும் நீங்கள் செலவழிக்க போவதில்லை.
உங்கள் நல்ல மனது மட்டுமே போதும்...இந்த தகவல் எனக்கு தெரிந்த உங்களுக்கு நான் தெரியப் படுத்திவிட்டேன்.. இது போன்று உங்களுக்கு தெரிந்து எனக்கு தெரியாத அன்பர்களுக்கு நீங்கள் தெரியப் படுத்தலாமல்லவா...

செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்..

25 comments:

LK said...

todarvatharkku nandri

Mohamed Faaique said...

கடந்த பதிவில் செய்ததற்கு இது பரிகாரமா...
முயற்சிக்கிறேன்...

சௌந்தர் said...

என்னால் முடிந்த விசயம் செய்கிறேன் நண்பா இந்த பதிவுக்கு நன்றி

வெறும்பய said...

Mohamed Faaique said...

கடந்த பதிவில் செய்ததற்கு இது பரிகாரமா...
முயற்சிக்கிறேன்...

//

முயற்சி என்ற சொல் வேண்டாம் அன்பரே.. பதிவிடுங்கள் உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துவதற்க்காக...

சீமான்கனி said...

எனக்கும் மெயிலில் வந்தது நண்பா அணைத்து நண்பர்களுக்கும் அனுபியுள்ளேன்...

Riyas said...

நிச்சயமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் நண்பா.. முடிந்தவற்றை செய்கிறோம்..

நந்தா ஆண்டாள்மகன் said...

நிச்சயமாக நண்பரே

புலவன் புலிகேசி said...

எனக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்ல என் பதிவில் இட்டு விட்டேன். மின்னஞ்சலிலும் சொல்லியிருக்கிறேன். நன்றி வெறும்பய.

கே.ஆர்.பி.செந்தில் said...

எனக்கும் மெயிலில் வந்தது...

கே.ஆர்.பி.செந்தில் said...

எனக்கும் மெயிலில் வந்தது...

மின்னஞ்சலிலும் சொல்லியிருக்கிறேன்.

Sriakila said...

அனைவருக்கும் இப்போதே அனுப்பிவிட்டேன். பகிர்வுக்கு நன்றி!

அருண் பிரசாத் said...

செய்துடுவோம்

புன்னகை தேசம். said...

http://punnagaithesam.blogspot.com/2010/08/blog-post_23.html

இது வதந்தி...

ரமேஷ் said...

இது குறித்து உண்மையான தகவல்களை அறிய இந்த இணைப்பைப் பாருங்கள் நண்பரே

http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_23.html

வெறும்பய said...

இந்த செய்தி பொய்யானது என்று நண்பர் ஒருவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்..

அது உண்மைஎன்றால் இந்த தவறுக்கு அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...

அனைவரையும் சிரமப் படுத்தியதற்கு மன்னியுங்கள் ....

உண்மைஎன்றால் உதவுவோம்... பொய்யென்றால் புறக்கணிப்போம்...

ஜெய்லானி said...

http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_23.html

பாருங்க இது 2 வருஷ பழைய மேட்டர்..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மற்ற நட்புக்களுக்கும் பகிர்ந்து இருக்கிறேன் ..

கவிதை காதலன் said...

இது போன்ற விஷயங்களில் செய்தியை சரி பார்த்தபின் வெளியிட்டால் நல்லதுதானே.. உடனடியாக உதவ வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்களுக்கு இது சங்கடமாய் இருந்துவிடக்கூடாது

முற்றம்-தமிழர் கருத்துக்களம் said...

இப்பதிவின் முக்கியத்துவம் கருதி இப்பதிவு நம் முற்றம்- தள உறுப்பினர்களின் மின் அஞ்சல் முகவரிக்கு சுற்றறிக்கை போல் விரைவில் அனுப்பபடும்.

நமது உறுப்பினர்கள் இது குறித்த தங்கள் கருத்தினை தவறாமல் தெரிவிக்கவும். நன்றி!

ப.செல்வக்குமார் said...

உங்களிடம் இருந்து வந்த மின்னஞ்சலை எனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டேன்.

ஆ.ஞானசேகரன் said...

இது ஒரு வருடங்களுக்கு முன் மின்னஞ்சலில் வந்தது... இதன் உண்மை தெரியவில்லை நண்பா,...

மின்னஞ்சலில் வரும் பல செய்திகள் நம்பும்படியாக இல்லை

எப்பூடி.. said...

good work sir, எல்லோரும் தங்களது முகப் புத்தகத்தில் இணைப்பை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அஹமது இர்ஷாத் said...

நானும் பகிர்ந்து இருக்கிறேன் நட்பு வட்டத்தில்..

vasan said...

Send this BLOG to your known friends. They may also spread this thru thier known friends. Spread this message to all direction.
I did send to all my friends listed in the mail.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பிஞ்சு குழந்தையை காட்டி ஏமாத்துறாங்களே..உங்கள் இரக்க குணம் பாராட்டுக்குறியது