"பெண் மனசு"..

"பெண் மனசு" என்ற தலைப்பில் பெண் மனதை பெண்ணின் குரலில் வெளிப்டுத்தும் பாடல் பற்றி எழுத அழைத்த "வார்த்தைகளை வசியப்படுத்திஅவற்றை கவிதைகளாக மாற்றி தெளிவான நீரோடை போன்று கருத்துக்களை கூறும் சகோதரி அன்புடன் மல்லிகா" அவர்களுக்கு நன்றி..

பெண்மனசு என்ற பெயரை பார்த்தவுடன் என் நினைவுக்கு வந்தது அதற்கு சற்று முன் கேட்ட ஈசன் படத்திலிருந்து ஒரு பாடல் தான். ஒரு விலைமகள் தான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன் என்பததை கூறும் படியாக அமைந்திருந்தது இந்த பாடல்.

மானத்தை விற்று வாழும் பெண்களுக்கும் மனசு என்று ஓன்று இருக்கிறது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். இவர்களில் எவரும் இத்தொழிலை விரும்பி செய்வதில்லை, உறவுகள், குடும்பம், குழந்தை, பசி, காதல், ஏமாற்றம், போன்ற பல காரணிகளாலும் காரணங்களாலும் தான் இந்த நரகத்தில் வந்து விழுந்து விடுகிறார்கள் என்பது தான் உண்மை. இப்படி குடும்ப சூழ்நிலையால் ஒரு சான் வயிற்றை நிரப்ப தன்னையே தானமாக கொடுக்கும் ஒரு பெண் தன்னை பற்றி தானே கூறுவது போன்று எழுதியிருக்கிறார் மோகன்ராஜன் அவர்கள். குரல் கொடுத்திருக்கிறார் தஞ்சை செல்வி..

என்னால் முடிந்தவரை பாடலை வார்த்தைகளாக்கி இங்கே பதிந்துள்ளேன். பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.வந்தனமாம் வந்தனம்
எல்லோருக்கும் வந்தனம்
மனமணமாம் சந்தனம்
சந்தனத்த பூசிகிட்டு சந்தோசமா கேக்கணும்
கலகலப்பா ஆடணும், விசிலு தாளம் போடணும்

ஜில்லா விடு ஜில்லா வந்த
பொண்ணு கதைய கேளையா
நான் தூத்துக்குடி பொண்ணையா
என் கதைய கேளையா

சுகத்த விக்குற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா

அஞ்சு பொண்ண பெத்தெடுத்த
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்..

எட்டாவதா பெத்தெடுத்த
எங்கப்பனுக்கு தெரியல
சொக்கனும் அத கேக்கல..

வளைந்து நிக்குற தென்னையா
வக்கணையா நானின்னேன்

ஏழையும் கரை சேத்ததாலே
ஏழரையா நானானேன்.

அங்கெ சுத்தி இங்கே சுத்தி
வந்தானையா மாப்பிள
சீக்காளிக்கு மறுபுள்ள
பழைய பாயா என்ன சுத்தி
போனானையா மாப்பிள
அவன் துப்பில்லாத ஆம்பிள

அஞ்சாந்நாளு மூட்டு வலியில
மாப்பிள தான் படுத்திட்டான்
என் கனவையெல்லாம் ஒடச்சிட்டான்

காச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நிலம் வித்தேன்
வித்ததேல்லாம் போக மிச்சமாக
நான் நானின்னேன்
அட எச்சமாக நானின்னேன்

ஊரிலுள்ள மீசையெல்லாம்
என்ன சுத்தி வந்திச்சு
இள மனச கெடுத்திச்சு

உசிர விட மானம் பெருசு
புத்திக்கு தான் தெரிஞ்சிச்சு.
வயிறு எங்கே கேட்டிச்சு

ஒரு சாணு வயித்துக்கு தான்
எல்லாத்தையும் விக்குறேன்
நான் எல்லாத்தையும் விக்குறேன்

இப்ப இங்கே நிக்குறேன்
என் கதைய முடிக்கிறேன்


--------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------


ஒரு தொடர்பதிவு எழுதினால் குறைந்தது இரண்டு பேரையாவது தொடர்ந்து எழுத கை (மாட்டி) காட்டி விடவேண்டும் என்பது பதிவுலகின் எழுதப்படாத சட்டமாக இருப்பதால் வேறு வழியின்றி


ஆகியோரை தொடர அழைக்கிறேன்.. நேரமின்மை காரணமாக இங்கே ஒரு பாடலை தான் என்னால் குறிப்பிட முடிந்தது.. இத்தொடர் பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.


78 comments:

நாகராஜசோழன் MA said...

Me the First!!

மாணவன் said...

ஒரு விலைமாதுவின் வலிகளை உணர்வுகளோடு பதிவு செய்துள்ளது பாடல் வரிகள் அருமை,

பாடலை ஏற்கனவே கேட்டுவிட்டேன் இருந்தாலும் உங்களுக்காக ஒருமுறை..

Arun Prasath said...

present sir

நாகராஜசோழன் MA said...

மச்சி பெண் மனசைப் பற்றி எழுதி என் மனசை கலங்க வச்சிட்டே!!

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

present sir//

எங்கப்பா கடை ஓனரை காணோம்?

ம.தி.சுதா said...

“பெண்ணின் மனதைத் தொட்டு“ பார்த்திங்களா...????

LK said...

ennai koopidathavarai santhosam

மாணவன் said...

//மானத்தை விற்று வாழும் பெண்களுக்கும் மனசு என்று ஓன்று இருக்கிறது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். இவர்களில் எவரும் இத்தொழிலை விரும்பி செய்வதில்லை, உறவுகள், குடும்பம், குழந்தை, பசி, காதல், ஏமாற்றம், போன்ற பல காரணிகளாலும் காரணங்களாலும் தான் இந்த நரகத்தில் வந்து விழுந்து விடுகிறார்கள் என்பது தான் உண்மை.//

முற்றிலும் உண்மை...

ஒரு விலைமாதுவின் கல்லறையில் எழுதப்பட்ட வரிகள்:

”இன்றுதான் இவள் தனியாக உறங்குகிறாள்”

ஒரு விலைமாந்தரின் கதறல்:

”நாங்கள் நிர்வாணங்களை விறபனை செய்கிறோம் ஆடைவாங்குவதற்காக...

சங்கவி said...

Super songs..........

மங்குனி அமைச்சர் said...

good and thanks

எஸ்.கே said...

அருமையான பாடல்!

பட்டாபட்டி.. said...

ஒரு விலைமாதுவின் கல்லறையில் எழுதப்பட்ட வரிகள்:

”இன்றுதான் இவள் தனியாக உறங்குகிறாள்”
//

நான் படித்தது..

கடைசியாக அவளுடைய கால்கள் சேர்ந்தது..

வினோ said...

நல்லா இருக்கு நண்பா...

Sriakila said...

பாடல் வரிகள் நல்லாருக்கு ஜெயந்த்!

இசைப் பைத்தியமான எனக்கு இது போன்றுப் பாடல்களுக்காகத் தொடர்பதிவு அழைத்தது ரொம்பப் பிடிச்சிருக்கு ஜெயந்த். நன்றி!

'பெண்மனசு'டன் விரைவில் வருகிறேன்.

ஹரிஸ் said...

ஒகே...

ப்ரியமுடன் வசந்த் said...

பாடல் வரிகளோடு தஞ்சை செல்வியின் குரலில் மயங்கித்தான் போகிறது மனசு
...

ஒரு அருமையான பாடலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜெ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான பாடலைத்தான் போட்டிருக்கீங்க!

ப்ரியமுடன் வசந்த் said...

//காதல் இளவரசன் பிரியமுடன் வசந்த்//

மச்சி இதுல எந்த உள்குத்தும் இல்லியே

ஏன்யா ஏற்கனவே கொள்ளு ஜொள்ளுன்னு நம்ம பேரை பிரிக்கிறாய்ங்க இதுல இந்த பேரு வேறயா

ஆவ்வ்வ்

ஆவ்வ்வ்

மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!

ப.செல்வக்குமார் said...

வடை போச்சே ..!!

ப்ரியமுடன் வசந்த் said...

கண்டிப்பா சிறந்த பாடல்களுடன் ஒரு பதிவை இடுகிறேன் மிக்க மகிழ்ச்சி ஜெ.தொடர அழைத்தமைக்கு...!

கே.ஆர்.பி.செந்தில் said...

கொஞ்சம் ஆழமான வரிகள் ....

ப்ரியமுடன் வசந்த் said...

//”நாங்கள் நிர்வாணங்களை விறபனை செய்கிறோம் ஆடைவாங்குவதற்காக...//

மாணவன் எடுத்தியம்பிய

இந்த வரிகள் சிறந்த எடுத்துக்காட்டு

ப.செல்வக்குமார் said...

பாடல் வரிகள் உண்மைலேயே ரொம்ப கஷ்டமா இருக்கு ,,

//உசிர விட மானம் பெருசு
புத்திக்கு தான் தெரிஞ்சிச்சு.
வயிறு எங்கே கேட்டிச்சு//

உங்கள் தேர்வு அருமை அண்ணா ..!!

வெறும்பய said...

ப்ரியமுடன் வசந்த் said...

//”நாங்கள் நிர்வாணங்களை விறபனை செய்கிறோம் ஆடைவாங்குவதற்காக...//

மாணவன் எடுத்தியம்பிய

இந்த வரிகள் சிறந்த எடுத்துக்காட்டு

//

உண்மை தான் நண்பரே.. இந்த வரிகளை இப்போது தான் படிக்கிறேன்... எவ்வளவு கொடுமையான வரிகள்...

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

Me the First!!


//

வாங்க தலிவா...

வெறும்பய said...

Arun Prasath said...

present sir


//

ok sir...

வெறும்பய said...

ம.தி.சுதா said...

“பெண்ணின் மனதைத் தொட்டு“ பார்த்திங்களா...????


//

தொட்டு தான் பார்க்கவேண்டுமேன்றில்லை நண்பரே... தூரமாக நிற்று பார்த்தால் கூட வலிகள் தெரியும்..

வெறும்பய said...

LK said...

ennai koopidathavarai santhosam


///

தப்பிசிட்டோமுன்னு சந்தோசமா...

வெறும்பய said...

மாணவன் said...
முற்றிலும் உண்மை...

ஒரு விலைமாதுவின் கல்லறையில் எழுதப்பட்ட வரிகள்:

”இன்றுதான் இவள் தனியாக உறங்குகிறாள்”

ஒரு விலைமாந்தரின் கதறல்:

”நாங்கள் நிர்வாணங்களை விறபனை செய்கிறோம் ஆடைவாங்குவதற்காக..


//


இந்த வரிகளை இதற்கு முன்பு எங்கும் படித்ததில்லை... கொடுமையான விஷயம்.. அடுத்தவன் சந்தோசத்துக்காக தனது உயிரையே கொடுக்கிறார்கள்..

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..

வெறும்பய said...

சங்கவி said...

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

பட்டாபட்டி.. said...

வினோ said...

///

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர்களே...

வெறும்பய said...

Sriakila said...

பாடல் வரிகள் நல்லாருக்கு ஜெயந்த்!

இசைப் பைத்தியமான எனக்கு இது போன்றுப் பாடல்களுக்காகத் தொடர்பதிவு அழைத்தது ரொம்பப் பிடிச்சிருக்கு ஜெயந்த். நன்றி!

'பெண்மனசு'டன் விரைவில் வருகிறேன்.


//


தங்களுக்கு இசை எவ்வளவு பிடிக்கும் என்பதை நானறிவேன் சகோதரி .. ஆகையால் தான் தாங்களை அழைத்தேன்.. சீக்கிரம் எழுதுங்கள் டன் கணக்கில் பெண் மனதை பற்றி..

வெறும்பய said...

ப்ரியமுடன் வசந்த் said...

பாடல் வரிகளோடு தஞ்சை செல்வியின் குரலில் மயங்கித்தான் போகிறது மனசு
...

ஒரு அருமையான பாடலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜெ..


//

குரலால் மயங்கி போனாலும் பாடல் வரிகளால் மனது கனமாகிறது நண்பரே...

வெறும்பய said...

ஹரிஸ் said...

ஒகே...


//


thanks haris..

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான பாடலைத்தான் போட்டிருக்கீங்க!


//

எல்லாம் நீங்க சொல்லி கொடுத்தது தானே தலைவா...

சௌந்தர் said...

இன்னொரு தொடர் பதிவிவா அது சரி பாடல் வரிகள் நல்லா இருக்கு நண்பா

வெறும்பய said...

ப்ரியமுடன் வசந்த் said...

//காதல் இளவரசன் பிரியமுடன் வசந்த்//

மச்சி இதுல எந்த உள்குத்தும் இல்லியே

ஏன்யா ஏற்கனவே கொள்ளு ஜொள்ளுன்னு நம்ம பேரை பிரிக்கிறாய்ங்க இதுல இந்த பேரு வேறயா

ஆவ்வ்வ்

ஆவ்வ்வ்

மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!


//

எந்த உள்குத்தும் இல்லை மச்சி.. நீ காதல் மன்னன் என்று எல்லோருக்கும் தெரியும்..

எப்பவுமே ஜொள்ளு விடுறவன் தான் காதல பற்றி சரியா எழுத முடியும்.. அதுக்கு உதாரணமும் நீங்க தான் தல...

எதுக்கு குவாட்டர் சொல்லிக்கிட்டு.. சந்தோசமா மச்சி ஒரு புல்ளு சொல்லேன்...

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

வடை போச்சே ..!!


//

நல்லா தேடு செல்வா கிடைக்கும்..

வெறும்பய said...

ப்ரியமுடன் வசந்த் said...

கண்டிப்பா சிறந்த பாடல்களுடன் ஒரு பதிவை இடுகிறேன் மிக்க மகிழ்ச்சி ஜெ.தொடர அழைத்தமைக்கு...!


//

நன்றி வசந்த்...

வெறும்பய said...

கே.ஆர்.பி.செந்தில் said...

கொஞ்சம் ஆழமான வரிகள் ....


//

உண்மை தான் அண்ணா..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

பாடல் வரிகள் உண்மைலேயே ரொம்ப கஷ்டமா இருக்கு ,,

உங்கள் தேர்வு அருமை அண்ணா ..!!

//

கருத்திற்கு நன்றி செல்வா...

வெறும்பய said...

சௌந்தர் said...

இன்னொரு தொடர் பதிவிவா அது சரி பாடல் வரிகள் நல்லா இருக்கு நண்பா

//

thanks nanpaa..

Riyas said...

பாடல் கேட்டாச்சு நல்லாயிருக்கு..

ம.தி.சுதா said...

வெறும்பய said...

ஃஃஃஃஃஃஃ“பெண்ணின் மனதைத் தொட்டு“ பார்த்திங்களா...????


//

தொட்டு தான் பார்க்கவேண்டுமேன்றில்லை நண்பரே... தூரமாக நிற்று பார்த்தால் கூட வலிகள் தெரியும்.ஃஃஃஃஃ

சகோதரா நான் படத்தைச் சொன்னேனுங்கோ...

ஜீ... said...

nice! :)

இம்சைஅரசன் பாபு.. said...

இந்த பாட்டு ரொம்ப ஹிட் ஆக்கும் மக்கா .......வரிகள் அனைத்தும் அருமை .............

பதிவுலகில் பாபு said...

பாடலின் வரிகள் அருமை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் இந்த பாட்டு ஒரு வாரமா கேட்டுகிட்டு இருக்கேன். அந்த பெண்ணின் குரலும் அருமை . நீ லக்கி பிளாசா ஆளுன்னு நிருபிச்சிட்ட. கலாங் ச்சீ கலாச்சார காவலா!!!

பிரவின்குமார் said...

தொடர்பதிவு தலைப்பே.. அருமை.,! நீங்கள் எடுத்துககூறிய விதம் அதைவிட அருமை..! தல பதிவு படிச்சுட்டு நேரா பாடலை பதிவிறக்க போய்டேன் அதான் கருத்து சொல்ல தாமதமானது.

பாடல்வரிகள் பிரமாதமாக வந்துள்ளது.
பகிர்வுக்கு நன்றி.

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நானும் இந்த பாட்டு ஒரு வாரமா கேட்டுகிட்டு இருக்கேன். அந்த பெண்ணின் குரலும் அருமை . நீ லக்கி பிளாசா ஆளுன்னு நிருபிச்சிட்ட. கலாங் ச்சீ கலாச்சார காவலா!!!.//

ரமேஷ் அண்ணே,
உங்களுக்கும் லக்கி பிளாசா அனுபவம் இருக்கா?

Chitra said...

அருமையான பாடல்.

சிவகுமாரன் said...

மிக அருமையான பாடல். பதிவுக்கு நன்றி நண்பரே

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

மனதை நெருடும் வரிகள்..!!!
மற்றும்
உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அன்போடு அழைத்திருக்கிறேன்...!!!!

dineshkumar said...

கலக்கல் நண்பா ஒரு பாடலையே மனச கவர்ந்துட்டீங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலக்கும் பாட்டு..மனசை கரைக்கும் பாட்டு!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நானும் இந்த பாட்டு ஒரு வாரமா கேட்டுகிட்டு இருக்கேன். அந்த பெண்ணின் குரலும் அருமை . நீ லக்கி பிளாசா ஆளுன்னு நிருபிச்சிட்ட. கலாங் ச்சீ கலாச்சார காவலா!!!.//

ரமேஷ் அண்ணே,
உங்களுக்கும் லக்கி பிளாசா அனுபவம் இருக்கா?
////

hehe

siva said...

present sir...

asiya omar said...

பாடலை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.

அஹமது இர்ஷாத் said...

அருமையான‌ ப‌கிர்வு ந‌ண்பா..பாட‌ல் நெஞ்சைத் தொட்ட‌து..வாழ்த்துக்க‌ள்..

karthikkumar said...

அருமையான பாடல். இந்த பாடலில் வரும் நாதஸ்வர இசை நல்லா இருக்கும் பங்கு

சசிகுமார் said...

Nice Post

என்னது நானு யாரா? said...

பாடல் வரிகள் ஏழையின் நிதர்சனத்தை தொட்டுக்காட்டி விடுகிறது. நல்ல தேர்வு!

Balaji saravana said...

அந்தப் பாடல் கேட்டேன் நண்பா.. அருமை

ராஜி said...

சொல்ல வார்த்தைகள் ஏதுமில்லை. அருமை

Prasanna said...

சூப்பர் பாடல் நண்பா :)

Jaleela Kamal said...

மிக அருமை

r.v.saravanan said...

நல்ல பாடல் நண்பா

Priya said...

பாடல் வரிகள் நல்லா இருக்கு!

சி.பி.செந்தில்குமார் said...

suupparuசூப்பரு

ஆ.ஞானசேகரன் said...

ஓகே நண்பா

சாமக்கோடங்கி said...

//ஒரு சாணு வயித்துக்கு தான்
எல்லாத்தையும் விக்குறேன்
நான் எல்லாத்தையும் விக்குறேன்//

நிதர்சனமான குரல்... பல மக்களின் ஒருமித்த குரல்..

நன்றி..
சாமக்கோடங்கி..

அன்பரசன் said...

இந்த பாடலை நானும் கேட்டேன்.
தரவிரக்கம் செய்த நாளிலேயே 10 முறைக்கும்மேல் கேட்டேன்.
அருமையான பெண்குரல்.
தேர்வு அருமை.

vanathy said...

arumai!

அன்புடன் மலிக்கா said...

ஆகா நாந்தான் லேட்டா சாரிமா.

ரெண்டுநாளா லீவாச்சா அதான்..

மனதை கனக்க வைக்கும் வரிகள்,பாடல் அருமை.

எத்தனையோ பல நல்வழிகளிருக்கு இவ்வுலக்கில் உயில் வாழ. வலியையே வாழ்வாக்கும் இவ்வழியைதவிர என்பது
என் தனிப்பட்டக் கருத்து

இந்திரா said...

அருமையான வரிகள் கொண்ட பாடல். வெறும்பயலுக்கு வாழ்த்துக்கள்.


என்னையும் தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

சே.குமார் said...

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... தினமும் பலமுறை கேட்கிறேன்... தஞ்சை செல்வியின் குரலில் வேதனை இழையோடும் பாடல்...

வெறும்பய said...

Riyas said...

ம.தி.சுதா said...

ஜீ... said...

இம்சைஅரசன் பாபு.. said...

பதிவுலகில் பாபு said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரவின்குமார் said...

மாணவன் said...

Chitra said...

சிவகுமாரன் said...

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

dineshkumar said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

siva said...

asiya omar said...

அஹமது இர்ஷாத் said...

karthikkumar said...

சசிகுமார் said...

என்னது நானு யாரா? said...

Balaji saravana said...

ராஜி said...

Prasanna said...

Jaleela Kamal said...

r.v.saravanan said...

Priya said...

சி.பி.செந்தில்குமார் said...

ஆ.ஞானசேகரன் said...

சாமக்கோடங்கி said...

அன்பரசன் said...

vanathy said...

அன்புடன் மலிக்கா said...

இந்திரா said...

சே.குமார் said...


/////

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோடி..

Harini Nathan said...

மனதை கனக்க வைக்கும் வரிகள்,பாடல் அருமை :)
இந்த தலைப்புடன் தொடர்புடைய என் பதிவு lilnk ல்

http://harininathan.blogspot.com/2010/11/blog-post_6005.html

பூரணி said...

அருமையான வரிகள் கேட்கும் நமக்கு! அர்த்தம் புரிந்தபின் மனது கனக்கிறது...
நன்றி.