ஒரு தாய்க்கு உதவுங்கள்.......!


மறக்கப்பட்ட மகனின் உறவு : அனாதையான மூதாட்டி   என்று மகனால் நடுத்தெருவில் வீசப்பட்ட ஒரு தாய் பற்றிய செய்தியை இன்று காலையில் படிக்க நேர்ந்தது. இத்தனை  செய்தியை படிக்கும் போதே ஒரு கணம் மனது கனத்து போனது என்றால் இந்த காரியத்தை செய்தவர்களின் மனது எத்தகையதாக இருக்க வேண்டும்..

ஒரு பெண் தன் கருவை சுமக்கும் போதே குழந்தையின் எதிர்காலம் பற்றி கனவுகாண ஆரம்பித்து விடுவாள், குழந்தை வளரும் வரை பார்த்து பார்த்து வளர்த்து வாருவாள், மனித உறவுகளை எதிர்பார்ப்பு என்ற ஓன்று இல்லாதது தாய் என்ற ஒரு உறவு தான். ஆனால் அந்த தாயையே நடு ரோட்டில் விடுவதற்கு இது போன்ற மனித உருவமுள்ள அரக்கர்களுக்கு எப்படி தான் மனம்  வருகிறதோ தெரியவில்லை. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற பழமொழியின் அர்த்தம் இந்த  அரக்கனுக்கு தெரியாது போலிருக்கிறது.

இந்த தாய் பெற்றவன்  தான் நடுத்தெருவில் விட்டு விட்டான் என்றால் அந்த வீட்டிற்கு வந்த மருமகள் அவளுக்கு கூட அக்கறையில்லாமல் போய் விட்டது.  அவளும் ஒரு பெண் தானே, இப்படி தாயை நடு தெருவில் விடுபவர்களுக்கும் இந்த மாதிரி நிலைமை வராமல் போகாது..


ஒரு கதை கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு மகன் தன் தாயை வீட்டு பின் பக்கம் கொட்டகையில் தங்க வைத்து தனியாக ஒரு தட்டில் கஞ்சி ஊற்றுவானாம். அந்த தாய் இறந்தவுடன் அந்த மகனின் மகன்(பேரன்) அந்த தட்டை எடுத்து வைப்பானாம் எதற்கு என கேட்டதற்கு உனக்கும் வயசானா தேவைப்படும் என்றானாம்.

"சிலர் மறந்து விடுகிறார்கள் தனக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள் நமக்கும் வயதாகும் என்பதை"

விலங்குகளுக்கு இருக்கும் பாசம் கூட இந்த மனிதர்களுக்கு இல்லையே! இத்தனை வருடம் தன்னை வளர்த்த தாயின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத அவர்கள் உறவுகள் மட்டுமில்லை, மனிதர்களே கிடையாது!

இந்த செய்தியை பார்த்தவுடன் சகோதரி ஒருவர் மதுரையிலுள்ள ஒரு காப்பகத்தில் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார், அவர்களும் கட்டணங்கள் எதுவுமில்லாமல்  இலவசமாகவே சேர்த்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள். ஆனால்  அவர்களை எவரேனும் அங்கு கொண்டு சேர்க்க வேண்டும். இதற்கு மதுரையிலுள்ள நண்பர்கள் உதவி தேவைப்படுகிறது. ஆகையால் நண்பர்களே அந்த தாயை உங்கள் தாய் போன்று நினைத்துக்கொண்டு உதவி செய்யுங்கள்.

இதை படிப்பவர்களின்  நண்பர்களோ அல்லது பதிவர் வட்டத்திலுள்ள எவரேனும் மதுரையில்  இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து அந்த தாய்க்கு உதவ முன்வாருங்கள்..

அந்த காப்பகத்தின் முகவரி.. 
CAPTAIN LINGAM WELFARE TRUST RB8 – Gandhiji Road, 1st Stop, Tirunagar, Madurai – 625006 Phone: 0452 -24852130452 -2485212 - mobile: 9442089306 

38 comments:

சௌந்தர் said...

எப்படி தான் ஒரு தாயாய் தெருவில் விட மணம் வருகிறதோ இவர்கள் எல்லாம் மனிதர்களா இல்லை மிருகமா

மாணவன் said...

உங்களின் பங்களிப்புக்கும் பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி அண்ணே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அவனுக்கும் அப்படித்தான் நடக்கும்

மாணவன் said...

//இந்த தாய் பெற்றவன் தான் நடுத்தெருவில் விட்டு விட்டான் என்றால் அந்த வீட்டிற்கு வந்த மருமகள் அவளுக்கு கூட அக்கறையில்லாமல் போய் விட்டது. அவளும் ஒரு பெண் தானே, இப்படி தாயை நடு தெருவில் விடுபவர்களுக்கும் இந்த மாதிரி நிலைமை வராமல் போகாது.. //

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் எனும்போது பெரும் வேதனையாக உள்ளது

சி.பி.செந்தில்குமார் said...

முதுமை எனபது எல்லொருக்கும் உண்டு.. அவனுக்கும் அது வரும்.

MANO நாஞ்சில் மனோ said...

நான் இப்பவே தேனம்மை கவனத்திற்கு எடுத்து செல்கிறேன்...
எனது பேஸ்புக்'கிலும் போடுகிறேன் இந்த பதிவை....

எஸ்.கே said...

உங்களின் பங்களிப்புக்கும் பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி நண்பரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மதுரை நண்பர்கள் யாருக்காவது தெரிவிக்கலாம்!

பாரத்... பாரதி... said...

பதிவிட்டு கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுக்களும், நன்றியும்..

சங்கவி said...

நல்ல பதிவு...

MANO நாஞ்சில் மனோ said...

என் பேஸ்புக்'கில் போட்டு விட்டேன் நண்பரே....

facebook.com/nmano1

வைகை said...

என் மதுரை நண்பர்களிடம் முயற்சிக்கிறேன்! மனித நேயம் வாழ்க..வேறு என்ன சொல்ல?

ரஹீம் கஸாலி said...

இதையும் படிங்க பாஸ்
http://ragariz.blogspot.com/2010/12/short-story-from-rahim-gazali.html

# கவிதை வீதி # சௌந்தர் said...

தனக்கும் இந்த நிலை வரும் என்பதை மனிதன் மறந்து விடுகிறான்...
கொடுமை..

தங்கம்பழனி said...

மனித நேயப் பதிவு..தங்களின் நல்லெண்ணத்திற்கு பாராட்டுக்கள்..! வாழ்க வளமுடன்..!

சே.குமார் said...

கொடுமை.

பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

மதுரையை சேர்ந்த பதிவுலக நண்பர் மணியை சற்று முன் தொடர்பு கொண்டேன். அவர் உதவுவதாக கூறி உள்ளார். எப்படி உதவ வேண்டும் என சற்று தெளிவாக விளக்கினால் உடனே செய்வதாக கூறி உள்ளார். தங்களை தொலைபேசியில் எப்படி தொடர்பு கொள்வது என்று சொல்லவும் நண்பரே!

வேடந்தாங்கல் - கருன் said...

என்ன கொடுமை சார் இது.. மனிதநேயம் என்னாச்சு...

சித்தாரா மகேஷ். said...

கேட்கவே அந்தரமாயிருக்குதுங்க...

சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்

ம.தி.சுதா said...

மனதை நெருடுகிறது... என்ன உலகமிது..

மைந்தன் சிவா said...

நிக்க வைச்சு சுடுங்கையா இவனுகள

karthikkumar said...

சௌந்தர் said...
எப்படி தான் ஒரு தாயாய் தெருவில் விட மணம் வருகிறதோ இவர்கள் எல்லாம் மனிதர்களா இல்லை மிருகமா ////

சந்தேகமே இல்லை மச்சி மிருகம்தான்..... இதைவிட கொடுமைய அவன் அனுபவிப்பான்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ரொம்பக் கொடுமை.. நானும் இதை முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன்., நாஞ்சில் மனோ., ஜயந்த்., மாணவனுக்கு நன்றி.

சி.கருணாகரசு said...

பொறுப்பான செயல்.... உங்களுக்கு நன்றி

நா.மணிவண்ணன் said...

நான் இது குறித்து தினமலரை தொடர்பு கொண்டு பாட்டி இன்னும் அங்குதான் இருக்கிறாரா என்று அறிய முயற்ச்சித்தேன் ,ஆனால் வேறு யாரோ ஒரு நல்ல உள்ளம் படைத்தவர்கள் அந்த பாட்டியை அழைத்து சென்றிருக்கிறார்கள் ,பாட்டி நலமாக இருப்பதாக நம்புவோமாக .நன்றி

கல்பனா said...

hi,
enaga oorku maduraiku konjam thooram than

so plz give me ur number or tell about her i will do that work

nan kandipa seiren anna

அரசன் said...

அண்ணே ரொம்ப ரொம்ப மனிதநேயமிக்க பதிவு ..
நிச்சயம் நண்பர்கள் உதுவுவார்கள் ...
இப்பவே இரண்டு மூன்று மதுரை நட்புகள் கேட்டிருக்கிறது என்று நினைக்கிறேன் ..
நிச்சயம் தங்களின் எண்ணம் சிறக்கும் ...

இந்த மாதிரி மனித உருவங்கொண்ட மிருகங்களை
காணும்போதே தூக்கில் போடணும் ....

அரசன் said...

நான் இது குறித்து தினமலரை தொடர்பு கொண்டு பாட்டி இன்னும் அங்குதான் இருக்கிறாரா என்று அறிய முயற்ச்சித்தேன் ,ஆனால் வேறு யாரோ ஒரு நல்ல உள்ளம் படைத்தவர்கள் அந்த பாட்டியை அழைத்து சென்றிருக்கிறார்கள் ,பாட்டி நலமாக இருப்பதாக நம்புவோமாக .நன்றி//

உங்களின் எண்ணத்திற்கு எண்களின் அன்பு நன்றிகள்
தல

Chitra said...

I am in tears......

வெறும்பய said...

உதவ முன் வந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

வெறும்பய said...

நா.மணிவண்ணன் said...

நான் இது குறித்து தினமலரை தொடர்பு கொண்டு பாட்டி இன்னும் அங்குதான் இருக்கிறாரா என்று அறிய முயற்ச்சித்தேன் ,ஆனால் வேறு யாரோ ஒரு நல்ல உள்ளம் படைத்தவர்கள் அந்த பாட்டியை அழைத்து சென்றிருக்கிறார்கள் ,பாட்டி நலமாக இருப்பதாக நம்புவோமாக .நன்றி

//

அன்பரே நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி.. அந்த நல்ல காரியத்தை செய்த நல்ல மனிதருக்கு கோடி நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்..

எங்கள் தரப்பிலும் விசாரிக்கிறோம்..

வெறும்பய said...

கல்பனா said...

hi,
enaga oorku maduraiku konjam thooram than

so plz give me ur number or tell about her i will do that work

nan kandipa seiren anna

//

சில நண்பர்கள் அதற்க்கான முயற்ச்சியில் இருக்கிறார்கள் சகோதரி.. அவர்கள் பத்திரமாக தான் இருக்கிறார்கள் என்ற தகவலும் வந்தது.

தங்களது உதவி தேவைப்பட்டால் நிச்சயம் உங்களை அனுகுகிறேன்.. உதவ முன் வந்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி சகோதரி..

வெறும்பய said...

உதவிய உள்ளங்களுக்கும் உதவ முன் வந்தவர்களுக்கும் மீண்டுமொரு முறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

யாரோ நல்லுள்ளம் கொண்ட ஜீவன் அந்த தாயை அழைத்து சென்றதாக தகவல் வந்துள்ளது.. எவருக்கேனும் அவரை பற்றிய தகவல்கள் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்..

சீமான்கனி said...

நானும் பகிர்ந்து விட்டேன் அந்த அம்மா நல்லபடியாய் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...ஆமீன்.

கலாநேசன் said...

கொடுமை...

விக்கி உலகம் said...

கொடுமைடா சாமி

ராஜவம்சம் said...

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.

Sriakila said...

so sad Jayanth!
உறவுகளுக்குள்ளேயே மனிதாபிமானம் செத்துப்போனதை நினைத்து வருந்துகிறேன். அனைவரும் நம்முடைய உறவுகள் என்று யோசித்துப்பார்த்தால் சிறுவயது வெறுப்புகள் தான் மிஞ்சும். அதைத்தாண்டி மனிதன் என்ற மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதே நல்லது.

உன்னுடைய இந்தப் பதிவு ஒரு சிலரையாவது யோசிக்க வைக்கும்.

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நான் இன்னும் உன்னுடைய தொடர்பதிவை முடிக்காமல் இருப்பதை நினைத்து எழுதாமல் இருக்க வேண்டாம்.

'வரலாறு'க்கு எனக்கு ரொம்ப டைம் வேணும்பா...