Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

எந்திரனும் நொந்திரனும் பின்ன நானும்...


எந்திரனும் நொந்திரனும்...

150 கோடி பணம் போட்டு படம் எடுத்திருக்காங்களாம்...

ரஜினி நடிசிருக்காராம்....

ஒலக அழகி ஐசு நடிச்சிருக்காங்களாம்...

சங்கரு இயக்கியிருக்காராம்...

இங்கிலீஷ் படத்துக்கு இணையா கிராபிக்ஸ் பண்ணியிருக்காங்களாம்....

எங்கே பாத்தாலும்... எந்த பக்கம் திரும்பினாலும்.... ஒரே பேச்சு எந்திரன் தான்...

அந்த 150 கோடியும் எவன் பணம்? எல்லாம் நம்ம வயித்தில அடிச்சு அவங்க சம்பாதிச்சது தான்... இந்த ஐசு பொண்ணு இன்னும் எத்தன வருசத்துக்கு தான் நான் அழகி..!! நான் தான் அழகி..!!! நான் ஒருத்தி தான் ஒலக அழகி அப்படீன்னு சொல்லிட்டு திரியுமோ... சங்கர சொல்லவே வேண்டாம்... எந்த பிரோடியுசர் கிடப்பான் அவன் தலையில மிளகா அரைக்கலாமுன்னு காத்திருக்கிற ஒரு அறிவாளி..!!
ன்னய்யா பெரிய எந்திரன்... வில் ஸ்மித் நடிச்ச ரோபோட்ஸ் மாதிரி வருமா.... 75 வருஷ சினிமாவுல வராததா இந்த படத்தில வரப்போகுது... தேவையில்லாம வெட்டித்தனமா பேசிக்கிட்டு... எதோ ஒரு புதிய கிரகத்த கண்டுபிடிச்ச மாதிரியில்ல பேசிக்கிறாங்க... நாட்டில எவ்வளவோ பிரச்சனை இருக்கு... ஏன் உங்க வீட்டில ஆயிரத்தெட்டு பிரச்சன இருக்கு... அதையெல்லாம் விட்டுட்டு என்னய்யா சும்மா.. எந்திரன்.. சந்திரனுட்டு.. போங்கையா போய் பொழப்ப பாருங்க... காலங்காலமா நடந்துகிட்டிருக்கிற இந்து முஸ்லிம் சமந்தப்பட்ட அயோத்தி பிரச்சனைக்கு தீர்ப்பு சொன்னாங்க... அதுக்கு கூட யாரும் இந்த அளவு ஆர்வம் காட்டினதா தெரியல... வந்திட்டானுங்க வெட்டிப்பயலுவ... எந்திரன்.. நொந்திரனுன்னு...

ஐயா... அம்மா... ராசா... கோவப்படாதீங்க... ஆத்திரப்பட்டு ஆள காலி பண்ணிராதீங்க.... இதெல்லாம் நான் சொன்னதில்ல... நேத்தைக்கு படத்துக்கு போனப்போ தியேட்டர் வாசல்ல நின்னு ஒரு பன்னாட சொன்னது... அந்த நேரம் அந்த இடத்திலையே அவன போட்டு தள்ளியிருக்கணும்...சூழ்நிலை சரியில்ல.. அதனால தான் கம்முன்னு வந்திட்டேன்....

இந்த மாதிரி ஏதாவது வேலையத்தவனுங்க பேசினா. அவன செருப்பால அடிங்க.... அவன் வீட்டுக்கு சைக்கிள்.. பைக்.. ஆட்டோ.. கார் லாரி... இப்படி பாரபட்சம் பாக்காம அனுப்புங்க... கொய்யால சாகட்டும்... தலைவர் படத்த பற்றி இனிமேல் எவனும் பல்லு மேல நாக்கையோ இல்ல மூக்கையோ போட்டு பேசக்கூடாது....



*************************************
எந்திரனும் நானும்..

ஷ்டப்பட்டு வாங்குன டிக்கெட் கையிலிருக்க.. இருந்த வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு போலாமுன்னு முட்டி மோதி செஞ்சா... திரும்பவும் கொஞ்சம் பைல்ஸ் எடுத்து வந்து என் முன்னால போட்ட டேமேஜரை அசிங்க அசிங்கமா மனசுக்குள்ள திட்டிட்டு... வேற வழியில்லாம அந்த வேலையும் முடிச்சு... அவசர அவசரமா வீட்டுக்கு வந்து குளிச்சு கிளம்பும் போது டைம் பாத்தா படம் ஆரம்பிக்க இன்னும் 40 நிமிஷம் தான் இருக்கு.. அலறியடிச்சு டாக்ஸி கூப்பிட்டு, டிரைவர் கிட்ட கெஞ்சி கூத்தாடி வண்டிய வேகமா ஓட்ட சொல்லி ஒரு வழியா வந்து சேர்ந்தோம் தியேட்டருக்கு படம் தொடங்குறதுக்கு 10 நிமிஷம் முன்னாடியே....

செம கெத்தா உள்ள போய் நாங்க ரிசர்வ் பண்ணியிருந்த VIP ஸீட்ல போய் உக்காந்தா.. எதோ சாதிச்சது மாதிரியே ஒரு பீல்... தலைவர் படத்த முன்னாடியே பாக்குறதுன்னா சும்மாவா.... அடுத்த 5 நிமிசத்தில படத்த ஆரம்பிச்சிட்டான்... தலைவர் பெயர போடும் போது வந்த விசிலு சத்தம் இருக்கே... அய்யோ இப்ப நினச்சாலும் சும்மா அதிருது... அப்படி ஒரு சத்தம்...


முதல் சீன்ல தலைவர காமிச்சான் பாருங்க அத்தன பேரும் ஸீட்ட விட்டு எழும்பி நின்னு விசிலடிச்சு கை தட்டினாங்க... அப்படி ஒரு மாஸ் நம்ம தலைவருக்கு... தலைவருக்கும் சரி... நம்ம செல்லம் ஐஷுக்கும் சரி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத அறிமுகம்... தலைவரும் ஐஷும் ஏன்னா ஒரு ஜோடி பொருத்தம்... வர வர தலைவருக்கு வயசு குறைஞ்சுகிட்டே வருது.... காதல் அணுக்கள் பாட்டுல கையில கிற்றார் எடுத்துகிட்டு நடந்து வருவாரு பாருங்க... அந்த அழகா பாக்க இந்த ரெண்டு கண்ணு பத்தாம பக்கத்தில இருந்தவங்களோட கண்ணையும் கடன் கேக்கலாமான்னு தோணிச்சு. பாட்டுக்கு லோகேசன் தேடி உலகத்தோட மூலைக்கே போனாங்களோன்னு நினைக்கிற அளவுக்கு அவ்வளவு அழகு அந்த இடம்.... காதல் அணுக்கள் பாட்டு எடுத்த லோகேசன் எதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு...

டம் தொடக்கி கொஞ்ச நேரத்திலையே ரோபோ ரஜினியையும் காமிச்சிடுறாங்க... படத்தில மொத்தமும் ரோபோ ரஜினியோட அட்டகாசம் தான்... ரோபோ ரஜினி செய்யும் காமெடி.. பைட்...டான்ஸ் எல்லாமே ரொம்ப ரசிக்கும் படியா இருந்திச்சு.... இடைவேளை வரைக்கும் நல்லவனா இருக்கிற ரோபோ ரஜினி... இடைவேளைக்கப்புறம் வில்லனா மாறுறது தான் செம கலக்கல்... மொத்த படத்திலும் வர்ற ப்ரொபசர் ரஜினி... நல்ல ரோபோ ரஜினியையும் விட வில்லன் ரோபோ ரஜினியின் கதாப்பாத்திரம் தான் என்னையும் படம் பார்த்தவர்களையும் ரொம்ப கவர்ந்தது.... வில்லன் ரோபோ பேசும் வசனங்கள்.. முக பாவனை.. நடை.. வில்லத்தனம் என எல்லாமே நல்லாயிருக்கு... வில்லன் ரோபோவின் முகம் மூன்றுமுகம் ரஜினியை ஞாபகப்படுத்தியது...

க்களே.... நீங்க படம் பாருங்க இல்ல பாக்காம போங்க... ஆனா எப்படியாவது கடைசி 45 நிமிஷம் படத்த பாக்க மிஸ் பண்ணாதீங்க... மொத்த படத்துக்கும் செலவு பண்ணின 150 கோடி பணத்தில 100 கோடி இந்த 45 நிமிசத்துக்கு மட்டும் தான் செலவு பண்ணியிருப்பாங்க... அதெயெல்லாம் சும்மா வார்த்தையால சொல்ல முடியாது... கண்ணால பாத்து அனுபபிக்கணும்... அவ்வளவு ஒரு பிரமாண்டம்... என்ன விட்டா தலைவர பற்றியும்... தலைவர் நடிச்ச படத்த பற்றியும் பேசிட்டே இருப்பேன்...

போங்க மக்கா... போங்க.. சும்மா இத படிச்சு நேரத்த வீணடிக்காம தலைவர் படத்துக்கு எங்கையாவது டிக்கெட் கிடைக்குமான்னு போய் தேடுங்க....

**************
அதிமுக்கிய குறிப்பு....

நேத்தைக்கு எந்திரன் படத்துக்கு போன எங்க 9 பேருக்கு ஆனா செலவு இந்தியா காசுக்கு மொத்தம் வெறும் 18,000 /- தான்... இதில டிக்கெட் மட்டும் 9 பேருக்கு வெறும் பத்தாயிரம் தான்... மீதி எட்டாயிரம் டாக்ஸி.. சாப்பாடு... அப்படீன்னு ஆகிப்போச்சு... இதெயெல்லாம் கணக்கு பாத்தா தலைவர் படத்த முதல் நாளு பாக்க முடியுமா.... இல்ல இப்படி பதிவு தான் எழுத முடியுமா....

காசு இன்னைக்கு போனா நாளைக்கு வரும்.. ஆனா தலைவர் படம்..???

இன்றைய இயக்குனர் 3 - ஞான ராஜசேகரன்.


மகாகவி பாரதியையும், பெரியாரையும் பற்றி கேள்விபட்டிருக்கிறேன், புத்தகங்களில் படித்திருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை. இவர்களை நம் கண் முன்னால் நிறுத்தியவர் எனது இன்றைய இயக்குனர் திரு ஞான ராஜசேகரன் அவர்கள். மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போகிறோம் என்று பல முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் அறிவிப்புகள் விட்ட போதிலும் அதை சாதித்து காட்டிய பெருமை இயக்குனர் ஞான ராஜசேகரனையே சாரும்.

தனித்துவமான படங்களை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வமுடையவர், இளம்வயதிலேயே சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த இவர் ஒரு குறும்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். ஞான ராஜசேகரன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே சிறந்த படைப்புகளாகவே அமைந்தன.

மோகமுள்:

1995 ம் ஆண்டு ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். இத்திரைப்படம் எழுதப்பட்ட காலத்தில் சர்ச்சைகளை தோற்றுவித்த தி. ஜானகிராமனின் மோகமுள் என்ற நாவலாகும். இந்த படம் கருநாடக சங்கீதத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படம்.


மோகமுள் திரைப்படம் இந்திரா காந்தி தேசிய விருதை தமிழுக்கு பெற்றுத்தந்தது.

முகம்:

1999 ல் வெளிவந்த திரைப்படம். தமிழ் சினிமாவில் வில்லனாகவே அறியப்பட்ட ஒரு சிறந்த நடிகர் நாசர் மீது நம்பிக்கை வைத்து, அவை கதாநாயகனாக அறிமுகம் செய்த படம்.

பாரதி:

2000 ல் இளையராஜாவின் இசையில், தங்கர்பச்சான் ஒளிப்பதிவில், ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மகாகவி பாரதியின் வேடத்தில் ஷியாஜி ஷிண்டே என்ற மராட்டிய நாடக நடிகரை நடிக்க வைத்தார்.


பாரதி திரைப்படம் 2001 ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.


பெரியார்:

2007 ல் வெளியானது, இத்திரைப்படம் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பெரியாராக சத்தியராஜ் நடித்திருந்தார்.


பெரியார் திரைப்படத்திற்கு தமிழக அரசால் 95 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஞான
ராஜசேகரன் எழுதிய வயிறு, மரபு மற்றும் பாடலிபுத்திரம் என்ற நாடகங்கள் 1980 ல் வயிறு என்ற தொகுப்பாக வெளிவந்தது.

என்னை கவர்ந்த இயக்குனர்களோடு மீண்டும் சந்திக்கிறேன்....

இன்றைய இயக்குனர் 2 - மகேந்திரன் (உதிரிப்பூக்கள்)


என்னை கவர்ந்த இயக்குநர்களை உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்
இந்த பதிவு ..




தமிழ் திரையுலக இயக்குனர்களில் என்றும் நினைவில் நிற்பவர்களில் ஒருவர் இயக்குனர் மகேந்திரன் அவர்கள். இவருடைய படங்கள் ஆழமான கதையும், மென்மையான உணர்வுகளையும் சொல்லக் கூடியதாகவும் இருக்கும்.




இயக்குனர் மகேந்திரன் அவர்களின் முதல் படமான முள்ளும் மலரும் சினிமா என்பது விஷுவல் மீடியா என்பதை தமிழ் சினிமாவுக்கு எடுத்து சொன்னப் படம். முள்ளும் மலரும் படம் 1978 ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்தது.இத்திரைப்படம் உமா சந்திரன் எழுதி கல்கி வார இதழில் வெளிவந்த கதையாகும். இப்படம் ரஜினிகாந்த்துக்கு புகழ் தேடித்தந்த படமாகும். ரஜினிகாந்தின் உன்னத வளர்ச்சிக்கு காரணமானவர்களில் இயக்குனர் மகேந்திரன் முக்கியமானவர் எனலாம்.




இவரது இரண்டாவது படமான உதிரிப்பூக்கள் 1979 ல் அதிரடியான இசை இல்லாமல், ஆர்ப்பாட்ட காட்சிகள் இல்லாமல்,இயல்பான ஒளியில் யதார்த்தமான நடிப்பில் வெளிவந்ததது. இந்த படத்தின் மொத்த வசனத்தையும் இரண்டு பேப்பரில் எழுதிவிடலாம். படம் முழுவதும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. இப்படம் பல பாராட்டுகளைப் பெற்றது.




மகேந்திரன் அவர்களின் இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த படங்களாக கருதப் படுகிறது. மேலும் ஜானி, மெட்டி, நெஞ்சத்தை கிள்ளாதே என 12 படங்களை இயக்கியுள்ளார், இவை அனைத்துமே பெயர் சொல்லும் படங்களாகவே அமைந்ததன.





இயக்குனர் மகேந்திரன் அவர்கள் தங்கப்பதக்கம், காளி, கள்ளழகர், அழகிய பூவே என 25 படங்களுக்கு மேல் கதை, வசனம், திரைக்கதை எழுதியுள்ளார். இவர் இன முழக்கம், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். மேலும் சினிமாவும் நானும் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

2005 ம் ஆண்டு விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த சச்சின் என்ற திரைப்படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் என்பவர் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படங்கள் என்றாலும், சிறந்த ஐந்து படங்கள் என்றாலும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் படம் அந்த பட்டியலில் இருக்கும்.



என்னைக் கவர்ந்தவர்கள் இன்னும் வருவார்கள்...

இன்றைய இயக்குனர் - அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan)


என்னை கவர்ந்த இயக்குநர்களைப் பற்றி ஒரு பதிவு , உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்..




அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, ஜூலை 3 , 1942)



கேரளத்தை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். மலையாளப்படங்களை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் இவர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய திரைப்படங்கள்.
  • நிழல்குத்து (2002)
  • கதாபுருஷன் (1996)
  • விதேயன் (1994)
  • மதிலுகள் (1990)
  • அனந்தரம் (1987)
  • முகாமுகம் (1984)
  • எலிப்பத்தாயம் (1981)
  • கொடியெட்டம் (1977)
  • சுயம்வரம் (1972)


மேலும் பல குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் , சினிமாயுடே லோகம் {சினிமாவின் உலகம்},நிர்மால்யம் மற்றும் எலிப்பத்தாயம் போன்ற நூலகளைய்ம் எழுதியுள்ளார். இவை அனைத்தும் தமிழ் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது. இதில் , சினிமாயுடே லோகம் 1983 வருட தேசிய விருது பெற்ற புத்தகம்.

இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைசிறந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

என்னை கவர்ந்தவர்கள் இன்னும் வருவார்கள்....