கோபம் வருகிறது...


சில சமயம்
கோபம் வருகிறது உன் மீது
கோபப்படும்
என்னைப் பார்த்து...

உன் நினைவுகள்..தோற்றாலென்ன
வெற்றிப் புன்னகையோடு உன்
நினைவுகள்....

வயதான குழந்தை From முதியோர் இல்லம்

கிறுக்கல்கள்

முந்நூறு நாள்
மடி சுமந்து பெற்றெடுத்தேன்
முப்பது வருடம்
கழித்து தத்துக் கொடுக்கிறான்
என்னை
முதியோர் இல்லத்திற்கு .....தாய்க்குப் பின் தாரம் என்றாய்
தாரம் வந்ததும் தாரை வார்க்கிறாய்..
என்னை
முதியோர் இல்லத்திற்கு.....கல் சுமந்து உன்
கனவை நவனாக்கினேன்
கடமைக்கென்று வருகிறாய் ,
என்னைப் பார்க்க
முதியோர் இல்லத்திற்கு ....மார் விட்டு இறக்கியதில்லை
என் மகனை
மாதம் தவறாமல் அனுப்புகிறான்
பணம் எனக்காக
முதியோர் இல்லத்திற்கு .....

உழைப்பாளர் தினம் - காலண்டரில் இருக்கட்டும்
"மே தினமாம்"

இன்று
அரசு ஊழியனுக்கு
ஊழியத்தோடு விடுமுறை ...

நாங்கள் தினக்கூலிக்கு
இன்று போனால் இரட்டைச்
சம்பளம்..

காலண்டரில் இருக்கட்டும்
கிழிக்கப்படாமல்
சுரண்டல் முதலாளிகள் இருக்கும்வரை..