பயந்த சுபாபம்....!
அவருக்கு கொஞ்சம்
பயந்த சுபாபம்....!
இருபதில் ஆரம்பித்த
காதலை
அறுபதில் தான்
அவளிடம் தெரியப்படுத்தினார்
மனைவி மூலமாக..பள்ளி பருவத்தில் நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது..

இள வயதில் தோன்றி மனதுக்குள் மௌனமாய் மறைத்த காதலை நாற்ப்பது வருடம் கழித்து நரை விழுந்த பிறகு நாகரீகமாய் கூறுவது போன்று அமைந்த கவிதையை யார் எழுதியது என்று தெரியவில்லை , தெரிந்தால் சொல்லலாம்..

கேரளா ஸ்பெஷல் "புட்டு" எளிதாய் சமைக்கலாம் வாங்க..

அனைவருக்கும் வணக்கம். "சமையல் பற்றிய முதல் பதிவு ( முயற்சி ) இது.


"புட்டு" இதை நம் தமிழ் நாட்டில் அதிகமாக சமைப்பதில்லை. கேரளாவிலும் இலங்கையிலும் தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். உங்களுக்கும் சாப்பிட ஆசையா இருக்கா..கவலையே வேண்டாம், நீங்களும் சமைத்து பார்க்கலாம் மிகவும் எளிதாக..

தேவையான பொருட்கள்:-

1.
பிரசர் குக்கர் (Pressure Cooker)

2. தேங்காயோடு கண்ணுள்ள பகுதி (கொட்டங்கச்சி அல்லது சிரட்டை)

3. அரிசிமாவு வறுத்தது (புட்டு மாவு என்று கடைகளில் கிடைக்கும்)

4 . தேங்காய்ப்பூ (தேங்காய் துருவியது)

செய்முறை:-

ரொம்ப எளிமையான முறைதாங்க.. அதனால நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க..

இவை தான் தேவையான பொருட்கள்..இவ்வளவு தாங்க... பாத்தீங்களா எவ்வளவு எளிமையா இருக்கு..

சுவை எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போலாமே..

அறிந்ததும் அறியாததும் 6 - அழிந்த பறவைகள்...


உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் பறவைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. உலகிலுள்ள மொத்தம் பத்தாயிரம் வகையான இனப்பெருக்கப் பறவைகளில் சுமார் 1200 வகை பறவைகள் அழியும் தருவாயில் உள்ளன. இதில்
பறக்க முடியாத பறவைகள் தான் அதிகமாக அழிந்து வருகிறது.


மனிதர்களால் தான் பறவைகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டது. இப்படி மனிதர்களின் உணவுக்காகவும், தேவைகளுக்காகவும் வேட்டையாடி இன்று இல்லாமல் பறவைகள் பற்றிய பதிவு இது.
யானைப் பறவை..


யானைப் பறவை அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும். இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும் ஐநூறு கிலோகிராம் எடை இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீற்றரை விட அதிக சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.***********

பெரிய ஓக்..


75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஓக் எல்லா ஓக்குகளிலும் பெரியதாகும். இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடும்.
மற்ற பறவைகளை போல பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதர்களால் அதிகமாக வேட்டையாடப்பட்டது. 8 ஆம் நூற்றாண்டிலிருந்தாவது இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன.

பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, மற்றும் அயர்லாந்து இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசிச் சோடிகள், 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.


***********

டோடோ பறவை...

டோடோ
அழிந்த பறவையினங்களில் ஒன்று. இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் கொண்டது.கொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கேயர் 1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது.

டோடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது.


***********

பறவைகளின் அழிவு தொடர்ந்தால் இனி வரும் சந்ததியினருக்கு காக்க, குருவியை கூட GOOGLE ல் தான் காட்ட முடியும். ஆகையால் பறவைகளையும் விலங்கினங்களையும் நம்மால் இயன்ற வரை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்.
கோழியும் ஒரு பறவை இனம் தானே.. அதற்காக சிக்கன் கறி சாப்பிடாமல் இருக்க முடியுமா என்று கேட்கலாம். (கண்டிப்பா கேட்ப்பீங்க) .. இதுக்கு பதில் உங்க கையில் தான்.

அறிந்தா அறியாமலோ வந்திட்டீங்க ..
உங்க கருத்துகளை சொல்லிட்டு போகலாமே..

"மாமியாரும் மாட்டுப் பொண்ணும்"

"விமலா மிகவும் சோகத்தில் இருந்தாள்"

உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள், அந்த தெரு மக்கள் அனைவரும் விமலாவின் வீட்டின் முன்பு தான் கூடியிருந்தார்கள் ..

அன்று காலையில் தான் அந்த அசம்பாவிதம் நடந்திருந்தது. விடியலில் பால் கறக்க சென்ற போது பசு மாடு உதைத்ததில் விமலாவின் மாமியார் இறந்து போயிருந்தார். அந்த பசு விமலா மிகவும் ஆசையுடன் செல்லமாக வளர்த்தது, அவள் கொஞ்சம கூட எதிர்பார்க்கவில்லை தான் வளர்த்த பசுவால் உதைபட்டு சாவார் என்று . .

திருமணமாகி வந்ததிலிருந்து விமலாவுக்கும் மாமியாருக்கும் ஒத்து போனதே இல்லை, எதற்க்கெடுத்தாலும் சண்டை தான், இருவரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் அல்ல, எந்த ஒரு விசயத்திலும் விட்டு கொடுக்க மாட்டார்கள், சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் எரிந்து விழுவார்கள், எந்த வேலைகள் செய்தாலும் மாறி மாறி குறை சொல்லிக் கொள்வார்கள் ..

ஆனாலும் மாமியாரின் இழப்பு விமலாவை மிகவும் பாதித்திருந்தது, துக்கம் தொண்டையை அடைத்தாலும் அடக்கி கொண்டிருந்தாள் ..

எல்லாம் ஆகி விட்டது .. இன்னும் சிறிது நேரத்தில் அடக்கமாக போகிறார்கள் மாமியார் , அந்த சோக நிமிடங்களில் அவளுக்கு பலர் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர், அனைவருக்கும் பதில் சொல்லி தலையாட்டிக் கொண்டிருந்தாள் விமலா ..

இத்தனை ஒரு பெரியவர் கவனித்து கொண்டிருந்தார் ..

திருமணமான இள வயது பெண்களிடம் இல்லை என்றும் .. முதிய பெண்கள் மற்றும் ஆண்களிடம் சரி என்றும் தலையாட்டிக் கொண்டிருந்தாள் .. தூரத்தில் நிற்று கொண்டிருந்த பெரியவரை இது மிகவும் குழப்பியது ..

துக்கம் விசாரிப்பதில் கூடவா வயது வித்தியாசம் இருக்கும் என நினைத்து போய் அவளிடமே கேட்டார் ..

அதற்கு விமலா..

ஆண்களும் வயதான பெண்களும் மனது கலங்காதே .. எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள் ..

இளவயது திருமணமான பெண்கள் அந்தா பசுமாடு விலைக்கு கிடைக்குமா என்று கேட்டார்கள் ..!!!!"என்ன கொடுமை சார் இது"

சரி.. சரி..
உங்க மனசுல இருக்கிறத மறைக்காம சொல்லிட்டு போங்க..

ஏழைகளுக்கு எட்டாத கனி...(உதவலாமே)

அன்பானவர்களுக்கு வணக்கம்.. இந்த பதிவை கடைசி வரை படிக்காமல் சென்று விடாதிர்கள். ஒருவேளை உங்கள் உதவியால் இருவரின் வாழ்க்கை பிரகாசமாகலாம்.


இந்தியாவில் இன்றைக்கு சிறந்த வியாபாரம் எது என்றால் மறுக்காமல் சொல்லலாம் கல்வி என்று.அந்த அளவிற்கு கொடி கட்டி பறக்கிறது கல்வி வியாபாரம். நம் கல்வி நிறுவனங்கள் நிர்ணயித்திருக்கும் கட்டணம் சாமானியனுக்கு எட்டாத கனியாகவே இருக்கின்றது ...இது போதாது என்று நன்கொடை என்ற பெயரில் நிறுவனங்கள் வசூலிக்கும் தொகை எல்லோருக்கும் தெரிந்ததே . இன்று கல்வியை கூறுப்போட்டு விற்றுக்கொண்டிருக்கும் நிலை உருவாகி விட்டது.

கடந்த வாரம் சென்னை ஆவடியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் MBA மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலித்திருக்கிரார்கள், வருடம் ஒன்றிற்கு ஒரு லட்சம் என்று வசூலித்தவர்கள் 81,500 ரூபாய்க்கு மட்டுமே ரசீது கொடுத்திருக்கிறார்கள். மீதி 18,500 ரூபாய்க்கு ரசீது கொடுக்கவில்லையாம், மாணவர்கள் காரணம் கேட்டதற்கு நன்கொடை என்றார்களாம். சரி நன்கொடை என்ற பெயரிலாவது ரசீது கொடுங்கள் என்று கேட்டதற்கும் மறுத்து விட்டார்களாம். இந்த நன்கொடையில் கல்லூரி முதல்வருக்கு தான் பெரும் பங்காம். அதனால் மாணவர்களும் தங்கள் படிப்புக்கு ஏதாவது பிரச்சனை வரும் என்றெண்ணி பயந்து கொண்டு எதுவும் கேட்க்காமல் இருக்கிறார்கள்.


இந்த ஒரு லட்ச ரூபாய்க்கு எத்தனை வீடுகள், எத்தனை நகைகள் அடகு வைக்கப் பட்டிருக்கும், ஒவ்வொரு பெற்றோரும் எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள். இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் பிற்காலத்தில் கல்வி கடனுக்காக தான் தற்கொலை செய்தவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.

" ஏழைகளுக்கு கல்வி என்றுமே எட்டா கனி தான் "

பள்ளி படிப்பை முடித்தவர்களில் பத்து பேரில் ஒருவர் தான் உயர் கல்வி படிக்க பல்கலை கழகத்திற்கு போகிறார்.உயர் கல்வி என்பது இன்றளவில் பாமரனுக்கு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவனுக்கு எட்டாகனி என்று ஆகிவிட்டது.

கல்வி எனும் இந்த எட்டாகனியை நாம் நினைத்தால் இரு ஏழை மாணவ மாணவியருக்கு எட்ட வைக்கலாம். கனவுகள் கைகூடியும் படிக்க பண வசதி இல்லாததால் வாடிகொண்டிருக்கும் இவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்யலாம்.


பெயர் : கோவிந்தராஜ்

டாக்டர் கனவு கைகூடியும், பணமில்லாததால் இவர் செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். பொதுத்தேர்வில் 1,079 மதிப்பெண் பெற்றார். கட் - ஆப் மார்க் 194.75 பெற்றதால், மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. வரும் 21ம் தேதி கல்லூரியில் சேர வேண்டும். ஆனால், வசதியில்லாததால் சீட் கிடைத்தும் படிக்க முடியாத நிலையில் கோவிந்தராஜ் உள்ளார்.


எஸ்.கோவிந்தராஜ்,
த/பெ. சி்த்தையன், 4/149,
மல்லிபாளையம், போடிநாயக்கன்பட்டி அஞ்சல்,
இடைப்பாடி தாலுகா- 637 105;
மொபைல்: 96882 26467)

வங்கியின் அக்கவுண்ட் எண் :

SBI N 000221331245117385(வெளிநாட்டினர்)
SBI N 0002213-31245117385(இந்தியா)


....................................................பெயர் : காயத்திரி

வறுமை காரணமாக கல்லூரியில் சேர இயலாமல் இருக்கிறார். இவரது தந்தை சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வெட்டியான் வேலை செய்து வருகிறார். ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 1,142 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவியின் மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் 197.25. மருத்துவ படிப்புக்கான கவுன்சலிங்கில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் காயத்திரிக்கு இடம் கிடைத்துள்ளது. இம்மாதம் 14ம் தேதி கல்லூரியில் சேருவதற்கான அழைப்புக் கடிதமும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


அ.காயத்ரி,
த/பெ அன்பழகன்,
4/26, காந்திநகர், ஆதி திராவிடர் தெரு,
சுல்தான் பேட்டை, பரமத்திவேலூர்
அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
தொலைபேசி எண் : 80569-74150.


தங்களால் இயன்ற உதவியை செய்யலாமே.. வரும் காலத்தில் இவர்கள் உங்களுக்கும் மருத்துவம் செய்யலாம்.

சிக்கனப் படுத்துவதாக
நினைத்து கைகளை
மூடிவிடாதே..

கதவுகள் மூடிவிட்டதாய்
வரவுகளும் வாசல் கடந்து
வராமலே போய் விடும்..
மாநாடு, பேரணி, போராட்டங்கள் என பணத்தை செலவழிக்கும் நம் அரசு இவர்களின் மொத்த செலவையும் ஏற்று படிக்க வைக்கலாம். (மன்னிக்கவும் நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டேன்.)

அறிந்ததும் அறியாததும் 5 - வானமும் பூமியும்.

Photobucket


*பூமி உண்மையில் உருண்டையல்ல, நிலநடுக் கோட்டின் வழியாக பூமியின் விட்டம் 12,756 கி மீ , ஆனால் வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கி மீ ஆகும்.

*பூமியன் எடை 5,976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன் ஆகும்.

*சூரிய ஒளியில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்கள் அலை நீளம் அதிகமுடைய செந்நிறத்தை காட்டிலும் அதிகமாக சிதறுகின்றன. இவை வலி மண்டலத்திலுள்ள காற்று, நீர் மற்றும் தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப் பட்டு வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை காட்டலும் நீல நிறம் தான் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால் வானமே நீலமாக தெரிகிறது.


*ஒளி சூரியனிடமிருந்து பூமிக்கு வர சுமார் 8 நிமிடம் ஆகும்.

*பூமியின் மீது விழக் கூடிய பெரும்பாலான விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் புவியை விட அதிக ஈர்ப்பு விசை உடைய வியாழன் மீது விழுந்து விடுகின்றன. எனவே தான் வியாழன் 'பூமியின் பாதுகாவலன்” என அழைக்கப்படுகிறது.

SUN MOON

*சந்திர மண்டலத்தில் ஒரு நாள் என்பது முப்பது நாளுக்கு சமம். அங்கு 15 நாட்கள் தொடர்ந்து இரவாகவும், 15 நாட்கள் தொடர்ந்து பகலாகவும் இருக்கும்.


*அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய ஒரே நேர்கோட்டில் இருக்கும்.


*நமக்கு மிகவும் அருகில் இருக்கும் நட்சத்திரம் சூரியன்.


*நட்சத்திரங்கள் பிரகாசிப்பதை ஆழமான கிணற்றின் அடியிலிருந்து பகலில் பார்த்தால் கூட தெரியும்.

StaRS

மீண்டும் வருவேன் இது போன்ற அறிந்த அறியாத தவல்களோடு..

பெட்ரோல் போராட்டமும் அதற்கான தீர்வுகளும்...செய்தி:

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெறாத கட்சிகள் சார்பில், நேற்று, "பாரத் பந்த்' அறிவிக்கப்பட்டது.இந்த, "பந்த்'தால் நாட்டின் பல பகுதிகளில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ஒரு சராசரி இந்தியனாக எனது பார்வை ...

எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் கடைசியில் பாதிக்கப்படுவது என்னவோ, ஒவ்வொரு மாதமும் இவ்வளவு தான் செலவு என்று பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்களும், அன்றைய தேவைகளை மட்டுமே பூர்த்தியானால் போதும் என்று வாழும் அடித்தட்டு மக்களும் தான்.


நேற்று (05 - 07 - 2010) நடந்த போராட்டத்தினால் இந்திய அரசுக்கு சுமார் 10,௦௦௦ கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டிருக்கிறதாம், எந்த ஒரு அரசியல்வாதியும் இந்த இழப்புக்கு பதில் சொல்லப் போவதில்லை, எப்படியும் விரைவில் இன்னொரு விதத்தில் இந்த பணத்தை வசூலிக்க தான் போகிறார்கள்.இதுவும் அத்யாவசிய பொருட்கள் என்ற பெயரில் வந்து சேரப் போவது நம் தலையில் தான்.


மக்களுக்கான பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் இது வரை ஓன்று சேர்ந்து போராடியதே இல்லை, இவற்றை பார்க்கும் பொது நேற்று நடந்தது விலை உயர்வுக்கான போராட்டமாக தெரியவில்லை, அடுத்த தேர்தலுக்காக முன்கூட்டியே நடந்த ஒரு பிரசாரமாகவே தெரிகிறது.பெட்ரோல் மற்றும் டீஸல் பிரச்சனையை தீர்க்க சில வழிகள்...


1 . விமானங்களுக்கும் பெட்ரோல் உபயோகப்படுத்துவதால் செலவை குறைக்க விமானங்களுக்கு சிறக்குகள் கட்டி விடலாம்.2 . குதிரை பந்தயங்களில் பயன்டுத்தப்பட்ட பழைய குதிரைகளை குறைந்த விலைக்கு வாங்கி வண்டியின் முன்னால் கட்டி இழுக்க வைக்கலாம். (பெட்ரோல் வாங்கும் செலவை விட குதிரைக்கு தீனி போடும் செலவு குறைவாகத் தான் இருக்கும்)


3 . சமீபத்தில் நடந்த விழ ஒன்றில் சமூக சேவகி த்ரிஷா அவர்கள் தெரு நாய்களை தத்து எடுக்க சொல்லியிருந்தார்கள். அதான் படி நாய்களை தத்தெடுத்து வண்டியின் முன்னால் கட்டி இழுக்க வைக்கலாம்.4 . நம்ம வாத்தியார் M G R அவர்கள் நடித்த பழைய படங்களின் நீங்கள் பாய்மர கப்பல் பார்த்திருக்கலாம். அதில் வருவது போன்ற பாய்மரத்தை உங்க காரின் மேல் கட்டி காற்றடிக்கும் பக்கமா ஓட்டலாம். (துணி கிழியாம பத்திரமா பாத்துக்கணும்.)5 . மேல சொன்னது எல்லாமே உங்களுக்கு சிரமமா இருந்தா... இதோ இப்படி கூட பைக் ஓட்டலாம்... அது உங்க விருப்பம்..

Driver
Bajaj Auto launched another fuel saver bike.....

After The SUCCESS of .........

.
.
.
.
.


CT100.......
.
.
.
.
.

PLATINA ............ .

.
.
.
.
.


Presenting.. .........
.
.
.
.
.
.
.
.


COWasaki BAJAJ

verumpaye


அட அப்படியே போன எப்படி சார்..
நம்ம புது வாகனத்தை பற்றி கருத்து சொல்லிட்டு போகலாமே....