கதையின் முந்தைய பாகங்கள்..
"ஜோதி" ஐந்தாம் பாகம் "ஜோதி" ஆறாம் பாகம்
"ஜோதி" ஏழாம் பாகம் "ஜோதி" எட்டாம் பாகம்
"ஜோதி" ஒன்பதாம் பாகம் "ஜோதி" பத்தாம் பாகம்
"ஜோதி" ஏழாம் பாகம் "ஜோதி" எட்டாம் பாகம்
"ஜோதி" ஒன்பதாம் பாகம் "ஜோதி" பத்தாம் பாகம்
“ஜோதி மகேஷ் கிட்ட சண்டை போடுகிட்டு ஷீலாவை பார்க்க போனா, ஆனா அவ மகேஷ் திட்டினதால ஊரை விட்டு போனது கேள்விப்பட்ட ஷீலா என்ன செய்யதுன்னு தெரியாம தற்கொலை செய்ய போனா. யதேட்சையா நான் பார்த்து தடுத்தேன். அவ மகேஷை அந்த நிமிசம் வெறுத்தா. வாழப் பிடிக்கலன்னு சொன்னா. நான் கொஞ்ச நாள் அவரை விட்டு பிரிஞ்சி இருக்கலாமேன்னு சொன்னேன். அவங்க அப்பாவும் இப்ப உயிரோட இல்ல. எங்க போறதுன்னு அவளுக்கு புரியலை. சொந்தக்காரங்க வீடுன்னா மகேஷ் தேடி வந்துருவாரே. நான் திருச்சியில எனக்கு தெரிஞ்ச விடுதியில ஜோதியை தங்க வச்சேன்” “நான் முரளிகிட்ட இந்த விசயத்தை சொன்னப்ப அவன் வேற மாதிரி யோசிச்சான். இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது ஜோதி மனசு மாறிட்டா மகேஷும் ஜோதியும் சேர்ந்துடுவாங்க. அதனால ஜோதியை கடத்தி அடைச்சு வைக்கனும்னு நினைச்சான். எனக்கு அதில விருப்பம் இல்ல. ஆனா அவன் கணேஷ் நிலைமையையும் ஃபிரண்ட்ஷிப்பையும் காரணம் காமிச்சு என்னை அமைதியாக்கிட்டான்.” “அவனே விடுதிக்கு போய் ஷீலா அழைச்சிட்டு வரச்சொன்னதா பொய் சொல்லி எப்படியோ ஜோதியை கடத்திட்டான். அவன் ஊர்ல அவனுக்கு செல்வாக்கு ஜாஸ்தி. ஜோதியை அங்க தந்திரமா கடத்தி வச்சிருந்தான். ஆனா ஒரு தப்பிக்கிற முயற்சியில அடிப்பட்டு ஜோதிக்கு நினைவு போயிருச்சு. முரளி அவன் ஹாஸ்பிடல்லேயே சேர்த்து பார்த்துகிட்டான். அவளை எங்கேயும் போக விடலை. அவளை யாரும் பார்க்கவும் வரலை. இதனால அவ அங்க இருக்கிறது யாருக்குமே தெரியலை. மகேஷ் நாளாக நாளாக ரொம்ப வேதனைப்பட ஆரம்பிச்சார். என்னைக்காவது அவரா தற்கொலை பண்ணி சாவார்னு முரளி காத்திருந்தான். ஆனா அப்பதான் நீ அவளை பார்த்து என்னென்னமோ ஆச்சு........” “எல்லாம் சரி அருண் நீ சொன்ன கணேஷ்-ஆகாஷ் விசயத்துக்கும் ஜோதி-மகேஷ்க்கும் என்ன சம்பந்தம்?” “மாலாவோட அண்ணன் வேற யாருமில்ல மகேஷ்தான்.” ”அன்னைக்கு மாலாவோட அண்ணன் திட்டி அவமானப்படுத்தினது தாங்க முடியாம ஆகாஷ் தற்கொலை பண்ணிகிட்டான். அதை கண்ணால கணேஷ் பார்த்தும் அவனால தடுக்க முடியலை. அந்த சம்பவம் அவன் மனநிலையை பாதிச்சிடுச்சு. இது முரளியை ரொம்ப கோவப்படுத்தியது. மாலாவோட அண்ணனை கொலையே பண்ணிடலாம்னு நினைச்சான் நான் தடுத்தேன். மாலாவோ கல்யாணம் பண்ணிகிட்டு நிம்மதியா இருக்கா. மகேஷ் அவர் ஊரை விட்டு கல்யாணம் பண்ணிகிட்டு எந்த ஊருக்கு போனாருன்னே தெரியலை. நான் இங்க குடிவந்தப்பதான் ஜோதி-மகேஷை பார்த்தேன்.” அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ”அருண் முரளிதான் டாக்டர்னா. அவர் இப்பதானே ஜோதி-மகேஷை தேடி வந்து போனாரு” “என்னடா சொல்றே, முரளி வந்தானா??” “ஆமாண்டா ஏன் பதட்டப்படறே?” “அய்யோ...ஜோதி இங்க வந்ததால என்ன பண்ணுறதுன்னே தெரியாம மறுபடியும் மகேஷை கொலையே பண்ணிடலாம்னு சொல்லிகிட்டு இருந்தான். நான் தடுத்து வச்சேன். அவன் இங்க வந்தானா அப்போ...” |
| அந்த மதிய நேரத்தில் அதிக கூட்டமில்லை கோயிலில். ”என்னங்க ஜெகன் நம்ம கூடத்தானே இருப்பான். எங்கேயும் போகமாட்டான் இல்ல?” “இல்ல ஜோதி, ஜெகன் நம்ம கூடத்தான் இருப்பான்” “ஆனா நீ இருக்க மாட்டே...!” “யார் சார் நீங்க ” “ஆகாஷ் ஞாபகமிருக்கா?..........” என ஆரம்பித்து முரளி எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். “நான் அப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கலை. ஆனா நீங்க அதுக்காக...” “இதுக்குமேல உன்னை விடப் போறதில்லை” கத்தி போன்ற ஒரு ஆயுத்ததுடன் மகேஷை நோக்கி பாய்ந்த முரளியை பின்னாலிருந்து யாரோ பிடித்து இழுத்தார்கள். ”வெங்கடேஷ் நீங்களா?” “யார் சார் இவன்” முரளி கோபமாக வெங்கடேஷை உதறித் தள்ள வெங்கடேஷ் ஜோதிமேல் விழுந்தார். ஜோதி தடுமாறி கோவில் சுவற்றில் முட்டிக் கொண்டு மயங்கினாள். முரளி மீண்டும் வேகமாக பாய்ந்தான். நடந்த சண்டையை பார்த்துக் கொண்டிருந்த ஜெகன் பலமாக அழ ஆரம்பித்தான். அவனை தூக்க குறுகே வந்த வெங்கடேஷை முரளியின் கத்தி பதம் பார்த்தது. அப்போதுதான் நானும் அருணும் அங்கே போய்ச் சேர்ந்தோம். அருண் எப்படியோ முரளியை தடுத்தான். நான் ஜோதியையும் வெங்கடேஷ்-ஜெகனையும் கவனித்தேன். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் தழுதழுத்த குரலோடு பேசினார். “சாரி முரளி. நான் அன்னைக்கு இருந்த மனநிலைமையில் ஒரு மனிதன் தற்கொலை செஞ்சிக்கிற அளவுக்கு பேசியிருக்கக் கூடாது. அந்த குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுதும் இருக்க போகுது. அப்படி பார்த்து கல்யாணம் செஞ்சு வச்ச என் தங்கையும் இப்ப நிம்மதியா வாழலை. நீங்க செஞ்ச எதுவும் எனக்கு பெரிசா படலை. ஏன்னா என்னால இனி நடந்ததை மாற்ற முடியாது. இதுக்கு மேலயும் உங்களுக்கு என் மேல கோபம்னா என்னை கொன்னுடுங்க.” |
ஆபிசில் விழா நன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாஸ் தீனதயாள் ஒரு புதிய ஃபாக்டரியை திறந்து வைப்பதுடன் தன் மாப்பிள்ளை கார்த்திக்கை ஜேஎம்டியாக அறிவிக்கும் ஃபங்ஷன் அது.
வாழ்க்கை ஒரு சுவாரசியமான நாவல் போன்றது. எப்போது எந்த திருப்பங்கள் வருமென்றே தெரியாது. ஜோதி அந்த சம்பவத்தில் அடிப்பட்டு மீண்டும் நினைவு வந்ததும், அங்கே ஜெகனை பார்க்க அவர்களை பின் தொடர்ந்த வெங்கடேஷ் அவர்களை காப்பாற்றியதும், பின் மனம் மாறி இனி ஜெகன் அவர்களிடமே வளரட்டும், ஆனால் என்றாவது ஆசைப்பட்டு ஒரு வெளியாளாக வந்து பார்க்க அனுமதி கேட்டதும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
முரளி மனம் மாறவில்லை. ஆனால் அவர் இப்போது சாந்தமாகிவிட்டார். அதற்கு கணேஷ் தேறி வருவது கூட காரணமாக இருக்கலாம். அருண் ஜோதியிடம் மன்னிப்பு கேட்ட பின்பும் மனம் கேளாமல் அங்கிருந்து வீட்டை காலி செய்து கொண்டு வேறு பகுதிக்கு சென்று விட்டான். காலம் போடும் கணக்கு என்றைக்கும் புரிவதில்லை. ஆனால் எல்லாவற்றிலும் அன்பு அடிப்படையாக இருந்ததை உணர்ந்தேன்.
தூரத்தில் ஸ்வப்னாவும் கோகுலும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். காலம் நினைத்தால் அவர்கள் கூட இணையலாம்....
ஃபோன் ஒலித்தது.
“ஜெயந்த் அம்மா பேசறேண்டா”
“சொல்லும்மா”
“நாங்க உனக்கு பொண்ணு பார்த்திருக்கோம்டா...
"என்னம்மா சொல்றீங்க...
"ஆமா அடுத்த வாரம் புறப்பட்டு வா. நீயும் பார்த்திடலாம். பொண்ணு நமக்கு சொந்தம்தான் பேரு ஜெயஸ்ரீ.”
"என்னம்மா சொல்றீங்க...
"ஆமா அடுத்த வாரம் புறப்பட்டு வா. நீயும் பார்த்திடலாம். பொண்ணு நமக்கு சொந்தம்தான் பேரு ஜெயஸ்ரீ.”
(முற்றும்)
| "ஜோதி" கதையை பொறுமையாக படித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூறிய அனைவருக்கும், மேலும் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்கள் மற்றும் சில நேரத்தில் சேற்றில் மாட்டிக்கொண்ட குதிரையை போல கதை தத்தளித்த பொது எனக்கு உதவி செய்து பல ஆலோசனைகள் தந்த அன்பு நண்பர் எஸ்.கே அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. |




















