என்னை பற்றி உங்களுக்காக


அறிமுகம் : -

நீங்கள் அறியாத முகம் என்பதால் நான் என்னை அறிமுகம் செய்வது என் அறிமுக கடமை.

நீங்க நினைக்கிற அளவுக்கு பெரிய ஆள் இல்லனாலும், 13 படங்களுக்கு துணை இயக்குனராகவும், ஒரு படத்தை நானே இயக்கவும் செய்துருகிறேன். ( அந்த படம் வெளி வரவில்லை ) மேலும் மூன்று குறும் படங்களையும் இயக்கிருகிறேன் . நான் கலை உலகிற்கு பழையவன் அனால் கணினி உலகிற்கு புதிவன்.

இப்படி எல்லாம் சொல்லி தான் உங்க கிட்ட என்னை அறிமுகபடுதனும்னா அப்படி ஒரு அறிமுகமே தேவை இல்லேங்க, ஆனாலும் என்னை பற்றி சொல்றது என்னோட கடமைங்க.....


என் பள்ளிக்காலம் : -

மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் போனதில்லைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன், எப்போவாவது மழை வந்தால் வேற வழி இல்லாம பள்ளிக்கூடம் போவோம்.

என் கல்லூரி காலம் : -

என் வாழ்க்கையை திருப்பி போட்ட காலம் அது ( ஹலோ ரொம்ப ஓவரா கற்பனை பண்ணாதிங்க) கூட படிச்ச பொண்ணுக்கு ரூட் விட்டதால தான் என்னோட உடம்ப மட்டுமில்ல வாழ்க்கையையே புரட்டி போட்டுட்டு போனாங்க. ரொம்ப நல்லவங்க. ( நான் சைட் அடிக்க ஆரம்பிக்கும் போது எனக்கு தெரியாதுங்க அந்த பொண்ணுக்கு 2 அண்ணனுங்க, 4 தாய்மாமன் , 2 சித்தப்பா முக்கியமா அவளோட முறைபையன், சும்மா சொல்ல கூடாதுங்க பாரபக்ஷம் பாக்காம அடிச்சானுங்க அதிலயும் அந்த முறைபையன் இருக்கானே அடிக்ககூடாத இடத்திலல்லாம்........ இதுக்கு மேலே என்னாலே சொல்ல முடியலங்க ) அடுத்த நாளே கொடுத்தாங்க அவார்ட் இல்லேங்க டிஸ்மிஸ் லெட்டெர , இப்படி என்னோட காலேஜ் வாழ்க்கையும் .....

அப்புறம் என்னங்க என்னோட எல்லா செர்டிபிகட்ஸ் ( வெள்ளை பேப்பர்ல நானே எழுதிகிட்டது ) எடுத்துகிட்டு தெரு தெருவா வேலை தேடினேன். ஒரு பய புள்ளயும் வேல குடுக்கல. நீண்ட நாள் தேடுதல்ல ஒரு வேலை கிடைச்சுதுங்க ( மேனேஜர் போஸ்ட் எல்லாம் இல்லெங்க )
நல்ல வேலைங்க, இப்போ நல்லா இருக்கேன், இதோ உங்க கழுத்துல கத்தி வச்சிக்கிட்டு ........இதுதாங்க நான்,, இன்னொரு சந்தோஷமான விஷயம்
நான் இப்போ படிச்சுகிட்டு இருக்கேன் காலேஜ்ல தான் , ஆனால் படிப்பது பாடத்தை மட்டுமல்ல உன்னையும், என்னையும், நம்மை தாங்கும் இந்த உலகத்தையும் ........

ஹலோ ஹலோ கொஞ்சம் இருங்க, நான் இன்னும் முடிக்கல


உங்களுக்கு என்ன தோணினாலும் அதை உங்க பொன்னான எழுத்துகளால் தெருவியுங்கள் ...
உங்கள் பொறுமைக்கு நன்றி ..........

11 comments:

பட்டாபட்டி.. said...

வாங்கய்யா வெறும்பயலே..

வந்தாச்சு.. இருந்தாச்சு.. போயாச்சுனு இல்லாம, நீங்களாவது நல்லா எழுதுங்க..

பதிவர் உலகில் காலடி எடுத்து வைத்ததால், உங்களுக்கு இன்னைக்கு என்னோட ட்ரீட்.. மறக்காம வந்திடுங்க சிங்கைக்கு..நிறையப்பேசலாம்..

வெறும்பய said...

உன் வரவேற்புக்கு நன்றி சகோதரா...

அண்ணாமலையான் said...

வாங்க வாங்க நல் வாழ்த்துக்கள்..

எப்பூடி ... said...

பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்.

Yoganathan.N said...

verumpaye - பெயர் நல்லா இருக்கு. வாழ்த்துகள். All the Best :)

director said...

வாங்க தம்பி, நீங்களாவது நல்லா எழுதி நம்ம சங்கத்து பேர காப்பாத்துங்க. ஆமா உங்க profile போட்டோ.வ எங்க தம்பி புடிச்சிங்க? உங்கள மாதிரி இல்ல, ரொம்ப நல்லா இருந்திச்சி.
சரவணன்,
குறும்பலூர்.

குந்தவை said...

வாங்க தம்பி. அறிமுகம் நல்லாயிருக்கு.. ஆனா எங்கேயிருந்து புடிச்சீங்க இந்த படத்தை(ரெம்ப பயமுறுத்துறீங்க) .

வெறும்பய said...

குந்தவை said...

வாங்க தம்பி. அறிமுகம் நல்லாயிருக்கு.. ஆனா எங்கேயிருந்து புடிச்சீங்க இந்த படத்தை(ரெம்ப பயமுறுத்துறீங்க) .

///

நன்றி சகோதரி..

சத்தியமா அது என்னோட போட்டோ இல்லங்க.

cheena (சீனா) said...

அன்பின் வெறும்பய

வருக வருக வலிஉலகிற்கு வருக வருக

நல்வரவாகுக

நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

வெறும்பய said...

நன்றி சகோதரா..
வலி தான் ஆனால் அதுவும் ஒரு சுகம்....

எவனோ ஒருவன் said...

உங்கள் தளம் முழுவதையும் படித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே தங்கள் முதல் பதிவில் இருந்து ஆரம்பிக்கிறேன். நிறைய எழுதி இருக்கீங்க எத்தனை வருஷம் எடுத்துக்கப் போறேன்னு தெரியல :-)

ஆரம்பமே அட்டகாசமா இருக்கு :-)