கண்மூடினால்
அவன் சின்னாபின்னமாய்
சிதறியோடிய காட்சிகள் விரிவதைக்கண்டு
பயத்தில் ஓடி ஒளிகிறது தூக்கம்,
எங்கு எதை நோக்கினும்
சிவப்பு வர்ணமாகவே தெரிகிறது
என் கண்ணுக்கு,
அவ்விடம் தாண்டிச்செல்லும்
போதெல்லாம் அவனின் சிரித்த
முகமே முன் நிற்கிறது
டெட்டாலுக்கும் பணியாமல்
பரவி நிற்கிறது தேங்கி நின்ற
ரத்தத்தின் வீச்சம்,
"எப்படி இருக்கார்,
எப்போது கண்முளிப்பார்
ஏதாவது பேசினாரா
எப்போ பேசுவார்
எனக்கு அவரை பாக்கணும்"
என்றவர் மனைவி அடக்கமுடியா
அழுகைச் சத்ததுடன் எங்களிடம்
கேட்க்கும் போதெல்லாம்
எதைப்பற்றியும்
யோசிக்காமல் யோசிக்கிறேன்
பத்து நொடி முன்பு அந்த விபத்து நடந்து
அதில் சிக்கி
நானே இறந்து போயிருக்கலாம் என்று .
12 comments:
இழப்பின் துயரத்தை கண்முன் நிறுத்தியிருக்கீங்க நண்பா. கவிதை அருமை.
உண்மையிலையே வாடை அடிக்கிறது , ரத்த வாடை ...
:(
:((
SOOOOOO
SAD..........
:((
சோக கீதம் :-(
மாப்ள ரத்தக்கவிதை வாடை அதிகமா அடிக்குதுய்யா!
google Buzz இல் சம்பவத்தை படித்தேன். ரொம்ப கஷ்டமாக இருந்தது. உங்கள் நன்பர் குணமடைய பிரார்த்திப்போம்,,
நாசமாபோன விபத்தே உனக்கொரு விபத்து வராதா..
குணமடைய பிரார்த்திப்போம் பங்கு....
எனக்கு ஒரு மாதிரியா இருக்கும்.. கவிதையின் வார்த்தைகளில் தெறிக்கிறது இழப்பின் சோகம்..!!
இழப்பின் வலியை சொல்லும் கவிதை.
அருமை.
:(...
Post a Comment