"மழை"யாலானவை..



நீ அடங்க மறுத்த
பொழுதுகளைத்தான் ஞாபகப்படுத்துகிறது
ஒவ்வொரு அடை மழையும்.. 





என்றோ மழை நாளில் 
நீ வந்து சென்ற ஞாபகத்தை 
பத்திரமாய் பதித்து வைத்திருக்கிறது 
என் வீட்டு முற்றம் 
உன் காலடி சுவடுகளாய். .






பெய்யும் முதல் மழையில் 
மண் வாசம் வீசுமாம் 
எனக்கோ 
விழுகிற ஒவ்வொரு துளியிலும் 
உன்வாசமே வீசுகிறது 







கவிதைகள் கரையும் 
சிறு தூறல்களுக்கு 
கொஞ்சம் கூட 
சளைத்ததாய் இல்லை 
எங்கிருந்தோ காற்றில் 
ஆடியசைந்து வரும் 
சில இறகுகள்..







மழை 
எப்போதும் போல 
சுயம் தொலைக்காமல் 
மழையாகவே 
பெய்து கொண்டிருக்கிறது 
நான் தான் 
கரைந்து கொண்டிருக்கிறேன் 
துளி 
து
ளி
யா
ய்.







32 comments:

வைகை said...

நீ கண்ணீர் விட்ட

பொழுதுகளைத்தான் ஞாபகப்படுத்துகிறது

ஒவ்வொரு அடைமழையும்.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

@வைகை

யாருக்கும் சொல்லையே அதுக்குள்ளே கண்ணில பட்டிருச்சா..

ம்ம் ஆரம்பிங்க ஆரம்பிங்க

வைகை said...

என்றோ ஒரு வெயில் நாளில்

நீ சிந்திச் சென்ற வியர்வைத்துளியை

பத்திரமாய் சேர்த்து வைத்திருக்கிறது

என் வீட்டு முற்றம்

உன் ஞாபங்கலாய்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...
என்றோ ஒரு வெயில் நாளில்

நீ சிந்திச் சென்ற வியர்வைத்துளியை

பத்திரமாய் சேர்த்து வைத்திருக்கிறது

என் வீட்டு முற்றம்

உன் ஞாபங்கலாய்!///


அண்ணே இதில முற்றத்துக்கு பதிலா அறைன்னு வந்திருந்தா பொருத்தமா இருந்திருக்கும்

வெளங்காதவன்™ said...

ஆம், அவளேதான் வானவில்!
மழைநாளின் முன்னிரவில்
கூடலின் மொழி பேசிய காற்றும் சொல்லும்,
ஆம், அவளேதான் வானவில்..

சுபத்ரா said...

வாவ்!!!! கவிதைகளும் படங்களும் சூப்பர்ப். முக்கியமாக முதல் கவிதையும், ‘துளி துளியாய்’னு துளித்துளியாய் எழுதியிருக்கும் கடைசிக் கவிதையும் :)

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகளுக்கேற்ற படங்கள்... அருமை...

மிகவும் பிடித்தவை :

பெய்யும் முதல் மழையில்
மண் வாசம் வீசுமாம்
எனக்கோ
விழுகிற ஒவ்வொரு துளியிலும்
உன்வாசமே வீசுகிறது

dheva said...

எப்போதும் எனக்கு தோன்றுவது என்ன தெரியுமா? இந்த தம்பி ஏன் இவ்வளவு வலிகளையும் தாக்கங்களையும் வைத்துக் கொண்டு அவ்வப்போது மட்டுமே எழுதுகிறான் என்று.....

அனுபவங்களை வாசிப்பவர்களுக்கும் கடத்தும் போது ஒரு படைப்பாளி விசுவரூபமெடுத்து முழுமையாகிறான்.

அட்டகாசம் தம்பி!!!!!

TERROR-PANDIYAN(VAS) said...

//இந்த தம்பி ஏன் இவ்வளவு வலிகளையும் தாக்கங்களையும் வைத்துக் கொண்டு அவ்வப்போது மட்டுமே எழுதுகிறான் என்று.....//

அப்புறம் நாங்க கும்முற கும்முல அந்த வலியும் தாக்கமும் அதிகமா ஆகிடுமில்ல.. :)

இமா க்றிஸ் said...

கவிதைகள் அனைத்தும் அருமை. படங்களும் அற்புதமாகத் தெரிவு செய்திருக்கிறீர்கள்.

பட்டிகாட்டான் Jey said...

கவிதைகள் எளிமை. படங்கள் அருமை.

அதிலும் “துளியாய் “ என்ற வார்த்தையை செங்குத்தாக 90 டிகிரியில் நிப்பாட்டிய விதம் அருமையிலும் அருமை.

தொடருங்கள் தோழமையே...தொடர்கிறோம். :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றோ மழை நாளில்
நீ அறைவிட்ட ஞாபகத்தை
பத்திரமாய் பதித்து வைத்திருக்கிறது
என் கன்னக் கதுப்பு
உன் காலடி சுவடுகளாய். .

TERROR-PANDIYAN(VAS) said...

//மழை
எப்போதும் போல
சுயம் தொலைக்காமல்
மழையாகவே
பெய்து கொண்டிருக்கிறது
நான் தான்
கரைந்து கொண்டிருக்கிறேன்
துளி
து
ளி
யா
ய்.//

உன் மண்டைகுள்ள மட்டும் தான் மண்ணு நினைச்சேன். முழு உடம்பும் அப்படிதானா.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்

//நீ அடங்க மறுத்த
பொழுதுகளைத்தான் ஞாபகப்படுத்துகிறது
ஒவ்வொரு அடை மழையும்.. //

வீட்ல எருமை வளர்க்கிறியா மச்சி? மழையில் அடங்காம அறுத்துகிட்டு ஓடி போச்சா... :(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெய்யும் முதல் மழையில்
மண் வாசம் வீசுமாம்
எனக்கோ
விழுகிற ஒவ்வொரு துளியிலும்
காக்கா கக்கா வாசமே வீசுகிறது

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐயையோ ஆரம்பிச்சிட்டாங்களே ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை ? நல்லாயிருக்குன்னு சொன்ன அனைவருக்கும் நன்றிகள்..

என்னை கலாய்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களுக்கு கண்டனங்கள்.. இதெல்லாம் கேட்க்க எங்க தலைவன் விஜய் அடுத்த படத்தில துப்பாக்கியோட வருவான்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கழுதைகள் கத்தும்
சிறு அலறல்களுக்கு
கொஞ்சம் கூட
சளைத்ததாய் இல்லை
எங்கிருந்தோ காற்றில்
ஆடியசைந்து வரும்
உன் நினைவுகள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றோ ஒரு மழை நாளில்

நீ சிந்திச் சென்ற பீர் துளியை

பத்திரமாய் சேர்த்து வைத்திருக்கிறது

என் வீட்டு முற்றம்

உன் ஞாபங்கலாய்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

முடிஞ்சுதா இல்ல இன்னும் இருக்கா

TERROR-PANDIYAN(VAS) said...

//என்றோ மழை நாளில்
நீ வந்து சென்ற ஞாபகத்தை
பத்திரமாய் பதித்து வைத்திருக்கிறது
என் வீட்டு முற்றம்
உன் காலடி சுவடுகளாய். //

அட்டை பூச்சி? நத்தை? இதுக்கு எல்லாம் கால் இல்லியே... ஓ!! கரப்பான் பூச்சியா...

TERROR-PANDIYAN(VAS) said...

//எனக்கோ
விழுகிற ஒவ்வொரு துளியிலும்
உன்வாசமே வீசுகிறது //

டேய் அது சோப்பு வாசனை. உன் வீட்டு சீலிங் ஊறி ஒழுகுது. அதான் மேல் வீட்ல இருக்கவங்க குளிக்கிற தண்ணி எல்லாம் உன் மேல விழுது.

TERROR-PANDIYAN(VAS) said...

//அண்ணே இதில முற்றத்துக்கு பதிலா அறைன்னு வந்திருந்தா பொருத்தமா இருந்திருக்கும்//

கை வியர்க்கர அளவு யார் மச்சி உன்னை அறைஞ்சா?

TERROR-PANDIYAN(VAS) said...

@வெளங்காதவன்

//ஆம், அவளேதான் வானவில்!
மழைநாளின் முன்னிரவில்
கூடலின் மொழி பேசிய காற்றும் சொல்லும்,
ஆம், அவளேதான் வானவில்..//

ஆம் அவளே தான் வாஷ்பேசின்!
லீவ் நாளின் முன்னிரவில்
குடித்து வாந்தி எடுத்த வாய்
சொல்லும்,
ஆம், அவளேதான் வாஷ்பேசின்..

(கமா, புல் ஸ்டாப் எல்லம் சரியா இருக்கா பார்த்துகோ மச்சி)

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//ஒரு படைப்பாளி விசுவரூபமெடுத்து முழுமையாகிறான். //

ஓ! விஸ்வரூபம் படம் டைரக்டர் பேரு படைப்பாளியா!!

//அட்டகாசம் தம்பி!!!!!//

தம்பி பழைய படமாச்சே மாப்ஸ் இப்போ தானா பாக்கர.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

//முடிஞ்சுதா இல்ல இன்னும் இருக்கா//

மச்சி ஏதாவது விட்டு போச்சா பார்த்து மெயில் போடு மச்சி. இப்போ கிளம்பறேன்.. :)

இம்சைஅரசன் பாபு.. said...

இனி ஒரு பொம்பள புள்ளைகளும் உன் ப்ளாக் வர முடியாம ஆகிட்டாணுக அவ்வளோ பேரும் சேர்ந்து

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...//

சந்தோசம் தானே.. முதல்ல எல்லாரையும் டைவர்ஸ் பண்ணனும் உங்களையும் சேர்த்து

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆகவே இத்துடன் எனது இலக்கிய உரையை முடித்துக் கொள்ளலாம் என்று விரும்புகிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் இந்த பொன்னான தருணத்திலே ஆனந்ததுடன் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என நினைக்கும் போது,எமக்கு வாய்ப்பளித்த இந்த வலைப்பூவின் உரிமையாளரின் தயாள சிந்தனையை எண்ணி நெஞ்சம் விம்முவதை உணர முடிகிறது என்று இரு கண்களும் கலங்கியவாறு கூறியவனாக நன்றியும் வணக்கமும் கூறிக் கொண்டு இப்போதைக்கு விடை பெற்றுக் கொள்ள முடிவு செய்துவிட்டேன் என்று அனைவருக்கும் எண்ணத் தோன்றும் விதமாக நல்ல முறையில் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்ற திட்டம் ஒன்று என் மனதில் உதித்ததை செயல்படுத்தி பார்த்திட பலமுறை எண்ணியதன் விளைவாகவே இத்தகைய பின்னூட்டங்கள் பலவற்றை இங்கே இட்டு பின் உவகையுடன் பதிவினை படித்து மகிழ்ந்தபின் முறையாக கிளம்புவதே சரியாக இருக்கும் என்று நினைத்தது கடைசியில் சரிதான் என தெரிய வரும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று எல்லோரும் அறிவார்கள் என்பது எனக்கும் தெரியும் என்று மற்றவர்களுக்கும் தெரியும் என்பதால் இத்துடன் உரையை முடித்துக் கொண்டு விடை பெற்று செல்கிறேன்...!

SELECTED ME said...

நானும் கரைந்து கரை-ந்துவிட்டேன்...

SELECTED ME said...

தள டிசைன் ரொம்ப நல்லா இருக்கு :-)

தகிடுதத்தம் ரமணி said...

மழைதான் எத்தனை வலிமையானதாகவும், அதேசமயம் மென்மையானதாகவும் ஆகிறது. மனமெங்கும் ஈரமாக்கிவிடுகிறது மழைக்கவிதை. நல்ல படைப்பு.