காதல் கொன்று ராகம் தின்பவள்..




மனம் கலைத்துக்களைந்த மனிதர்களால்
அரங்கம் நிரம்பியிருக்கிறது,
தானே செய்த இசைக்கருவியொன்றை
கையில் எந்தியிருக்கிறாள் அவள்
இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த
இசைக்கருவியில் என்
மூளையிலிருந்து இதயத்திற்கு வரும்
நரம்புகளை மட்டும் தனியாய்
பிரித்தெடுத்து நேர்த்தியாய்
வரிந்து கட்டியிருக்கிறாள்,
நரம்புகளை மீட்ட
விரலிடுக்குகளில்
என் நாவின் நுனியை
இதய வடிவில்
கத்தரித்து கவ்வியிருருக்கிறாள்,
கூச்சலும் குழப்பமுமாய்
குழுமியிருந்த அரங்கம்
உயிர் பிரியும் வேளையில் தோன்றும்
அமைதியை போல்
மௌனம் கொள்கிறது
அவள் இசைக்கருவியை கையிலேந்தி
வாசிக்க துவங்குகிறாள்
ஒரு சில துளிகளுடன்
மௌனமாய் ஆரம்பித்து
அதிகம் நீளாமல் ஆர்ப்பரித்து அடங்கும்
பெருமழையை போல ஒலிக்க ஆரம்பிக்கிறது
இசை என்ற பெயரில்
என் அலறல் சத்தம்,
அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி
அமைதியாய் அரங்கின் ஓரமாய்
கிடக்கிறது அவள்
முன்னெச்சரிக்கையாய் பறித்தெடுத்த
என் இதயம்
கூடவே துணையாய்
என் காதலும்.

10 comments:

பட்டிகாட்டான் Jey said...

காதல் ரசம் ஓவராக் கொட்டிருக்கானோ !!!:-)))

பயபுள்ளைக்கி கால் கட்டு போட்டாத்தான் அடங்குவாம் போல :-)))))))))

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டிகாட்டான் Jey said...
காதல் ரசம் ஓவராக் கொட்டிருக்கானோ !!!:-)))///

அங்கெ காதல் ரசமும் இல்ல சாம்பாரும் இல்ல.. சரியா படிங்க..

மாலுமி said...

/// அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி
அமைதியாய் அரங்கின் ஓரமாய்
கிடக்கிறது அவள்
முன்னெச்சரிக்கையாய் பறித்தெடுத்த
என் இதயம்
கூடவே துணையாய்
என் காதலும். ///

மற்றவர்கள் உணர முடியாத உன் வலி..........
நான் உணருகிறேன்......
உணர்ந்துகொண்டிருக்கிறேன்.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாலுமி said...

மற்றவர்கள் உணர முடியாத உன் வலி..........
நான் உணருகிறேன்......
உணர்ந்துகொண்டிருக்கிறேன்..////

நீ பீல் பண்ணாத மச்சி...

இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு பாரு ஒரு கூட்டமே வந்து எப்படி என்னைய பாடாபடுத்திட்டு (பாராட்டிட்டு) போறாங்கன்னு

rajamelaiyur said...

அருமையான கவிதை ..

rajamelaiyur said...

இதையும் படிக்கலாமே :

google தெரிந்ததுதும் தெரியாததும்

சுபத்ரா said...

Super :)))

வெளங்காதவன்™ said...

// ஒரு கூட்டமே வந்து எப்படி என்னைய பாடாபடுத்திட்டு (பாராட்டிட்டு) போறாங்கன்னு ///

மூடில்லா காரணத்தால், யாரும் இன்னும் காறித் துப்பாத காரணத்தால், இதை இன்னும் படிக்காத காரணத்தால், அப்பாலிக்கா வாறேன்.

dheva said...

வெறுமை....வார்த்தைகளில் நிரம்பி வழிகிறது தம்பி!

வாழ்த்துக்கள்...!

சாதாரணமானவள் said...

Nice :)