மழையின் விழுதுகள்..
தென்றலை துணைக்கழைத்து 
சா
ரம் திறந்து 
மெதுவாய் மெலிதாய் 
உள்நுழைகின்றன 
மழையின் விழுதுகள் 

இவர்களெப்படித்தான் 
அறிகிறார்களோ 
அவள் 
என்னறை நுழைவதை...

♦♦

ன்னல் வழியாய் 
மெதுவாய் நுழைந்து 
வெட்க்கத்துடன் உள்ளே வருகின்றன 
மழைத் துளிகள் சில 

முன்பொரு மழைநாளில் 
என்னறை ஜன்னலில் அவள் நின்று 
மழை ரசித்த 
ஞாபகத்தில் வந்திருக்கலாம் 

அடுத்த மழைக்கும் 
வரக்கூடும் துளிகள் சில 
அவளைத் தேடி.. 

♦♦

சாரம் வழியாய் சன்னமாய் 
கசிந்து வருகிறது 
எப்போதுமவள் விரும்பிக்கேட்கும் 
மெல்லிசையொன்று 

வெளியில் 
கொஞ்சம் கொஞ்சமாய் 
உருவம் தொலைக்கிறது 
சிறு மழையொன்று 
பெருமழையாய் 

உள்ளில் 
சத்தமே இல்லாமல் சலங்கை கட்டி 
பேயாட்டம் ஆடத் தொடங்குகின்றன 
அவளுடனான 
மழைக்கால நினைவுகள்.. 

♦♦


10 comments:

கோவை ஆவி said...

நண்பா, அது சாரளம் அல்ல.. சாளரம்.!

காதல் ரசம் சொட்டும் கவிதைகள் அருமை!!

வெறும்பய said...

கோவை ஆவி said...
நண்பா, அது சாரளம் அல்ல.. சாளரம்.!

காதல் ரசம் சொட்டும் கவிதைகள் அருமை!!///


நன்றி நண்பரே.. பிழையை திருத்திவிட்டேன்.

மாணவன் said...

கவிதை படைப்புகள் விரைவில் புத்தகமாக வெளிவர வாழ்த்துகள்! :-)

வைகை said...

செருப்பை துணைக்கழைத்து
சாளரம் திறந்து
மெதுவாய் மெலிதாய்
உள்நுழைகின்றாள்
பக்கத்து வீட்டு பிகர்

இவளெப்படித்தான்
அறிகிறாளோ
அவளுக்கு லவ் லெட்டர்
எழுதியது நான்தான் என்பதை...

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டாவது மிகவும் அருமை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இருட்டை துணைக்கழைத்து
சாளரம் திறந்து
மெதுவாய் மெலிதாய்
உள்நுழைகின்றனர்
திருடனின் அல்லக்கைகள்

இவர்களெப்படித்தான்
அறிகிறார்களோ
வீட்டில்
யாருமில்லை என்பதை...

அன்புடன் மலிக்கா said...
This comment has been removed by the author.
அன்புடன் மலிக்கா said...

// சாளரம் வழியாய் சன்னமாய்
கசிந்து வருகிறது
எப்போதுமவள் விரும்பிக்கேட்கும்
மெல்லிசையொன்று //

சாளரம் வழியே சரம் சரமாய் வரும் மழைதுளிமட்டுமல்ல கவிதுளியும்..

கவிதை அருமை பாராட்டுகள்..

சே. குமார் said...

தங்க மீனில் தங்க கவிதைகள்...
வாழ்த்துக்கள் சரக்குள்ள பையா...

ஜெ.ஜெ said...

ஜன்னல் வழியாய்
மெதுவாய் நுழைந்து
வெட்க்கத்துடன் உள்ளே வருகின்றன.
மழைத் துளிகள் சில.

முன்பொரு மழைநாளில்
என்னறை ஜன்னலில் அவள் நின்று.
மழை ரசித்த
ஞாபகத்தில் வந்திருக்கலாம்

அடுத்த மழைக்கும்
வரக்கூடும் துளிகள் சில.
அவளைத் தேடி.. //////////

superb :)