ஒரு மன்னனுடைய வரலாற்றை பற்றி படிக்கும் போது அம்மன்னனுடைய வீரத்தையும், அவனுடைய வாழ்க்கை முறையும் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாது, அந்நாட்டின் அந்த காலகட்டத்தின் நாகரிக வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, கட்டிடக்கலை, உடையமைப்பு, கல்வித்திறமை, ஆயுதங்கள், ஆபரணங்கள், போர் முறைகள் என பலதரப்பட்ட விசயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது..
பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ஒரு காலத்தில் மாணவ மாணவியர் தமிழ் மற்றும் வரலாறு பாடங்களை விரும்பி கற்றுக்கொண்டனர் .. ஆனால் இன்று வரலாறு என்ற சொல் மட்டும் தான் வழக்கிலிருப்பதாக கருதுகிறேன்..(தமிழின் நிலை பற்றி நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை).. என் பள்ளிப்பருவத்தில் வரலாறு பிரிவில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவே... அந்த மாணவர்களில் பலரும் குறைவான மதிப்பெண் பெற்றதாலும், வேறு பிரிவுகளில் சேர அனுமதி கிடைக்காததாலும் வரலாற்று பிரிவில் சேர்ந்தவர்கள்.. இது எட்டு வருடங்களுக்கு முன்புள்ள நிலையென்றால், இன்றைய நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்..
கல்லூரிகளில் வரலாறுகள் படும் பாடு பற்றி எனக்கு தெரியவில்லை.. ஆனால் என் நண்பர்களோ, எனக்கு தெரிந்தவர்களோ வரலாறு பாடம் எடுத்து படித்த ஞாபகமும் இல்லை... இப்போது படிப்பதாகவும் தெரியவில்லை.. இதற்கு நேர்மாறாக தொலை தூரக் கல்வியில் வரலாறு படிக்கும் பலரை பார்த்திருக்கிறேன்.. இவர்கள் படிப்பது வரலாறுகள் தெரிய வேண்டுமென்பதற்காக அல்ல...எப்படியாவது ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்று தான்...
நம்மை இணைக்கும் இந்த வலையுலகில் உள்ள நண்பர்கள், சகோதரிகள், சகோதரர்கள் என பெரும்பாலானோர் அறிவியல், பொறியியல், கணிதம் மற்றும் கணினி போன்ற பலதரப்பட்ட துறைகளிருந்து தான் இருக்கிறார்களே தவிர வரலாறு படித்தவர்களோ, வரலாற்று துறை சம்மந்தப்பட்டவர்களோ மிகவும் குறைவு..(எனக்கு தெரிந்து என்னை தெரிந்தவர்கள் யாருமில்லை).. இன்றே இப்படியென்றால் நாளைய நிலை..???
சகலமும் கணினிமயமாக்கப்பட்ட இந்த உலகில் நமக்கு அடுத்த தலைமுறைகள் யாரும் வரலாறுகளையோ, வரலாற்று சம்மந்தப்பட்ட படிப்புகளை பள்ளி, கல்லூரிகளில் படிக்கப் போவதில்லை. ஒரு வேளை வரலாறுகள் அறிய ஆசைப்பட்டால் புத்தகங்களை கூட தேடிப்போக மாட்டார்கள்.. மாறாக இமைகள் தேடுவது இணையத்தை தான். ஆகையால் நமக்கு தெரிந்த, வாழ்ந்த, வீழ்ந்த வாழ்த்திய மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவுலகம் எனும் வான்வெளியில் மின்னும் நட்ச்சத்திரங்களாகிய உங்கள் பதிவெனும் கல்வெட்டுகளில் பதித்து வையுங்கள்..
"மன்னாதி மன்னன் தொடர் பதிவை தொடர்ந்து எழுத அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்" இப்படி வெறுமனமே சொல்லிட்டு போனால் யாராவது எழுத முன்வருவார்களா..?? நிச்சயமாக வரமாட்டார்கள்.. அதனால் எனக்கு தெரிந்த நல்லுங்களில் சிலரை மட்டும் கை கா(மா)ட்டி விடுகிறேன்.. (இந்த லிஸ்ட்ல நான் இருக்கா கூடாதேன்னு நீங்க சாமி கும்பிடுறது எனக்கு தெரியுது... கவலைபடாம தைரியமா போங்க... உங்க பெயரும் இருக்கும்) உங்களுக்கு இயன்ற பொழுதில் எழுதுங்கள்.. ஆனால் எழுதாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்..
நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என இந்த மன்னாதி மன்னன் தொடர்பதிவை தொடர அழைக்கும் நல்ல உள்ளங்கள்..
ஜெய்லானி
Warrior - தேவா
ரசிகன் - மகேஷ்
விந்தை மனிதன்
மனசு - சே.குமார்
இம்சை அரசன் பாபு
யாவரும் நலம் - சுசி
மல்லிகை - ஸ்ரீ அகிலா
நான் நானாக - அன்பரசன்
நிலவின் மடியில் - வினோ
கனவு பட்டறை - சீமான் கனி
மனதோடு மட்டும் - கௌசல்யா
கொஞ்சம் வெட்டி பேச்சு - சித்ரா
புது(க்க)விதை - அண்ணாமலை..!!
இந்திராவின் கிறுக்கல்கள் - இந்திரா
என் மனச் சிதறல்கள் - பாலாஜி சரவணா
இதுக்கு மேல நான் யார் பெயரையாவது சொன்னா..... எனக்கு தெரியும் நீங்க என்ன பண்ணுவீங்கன்னு... அதனால இதோட முடிச்சிக்குறேன்.... (மேற்கூறிய எவர் மீதும் எனக்கு முன்விரோதமில்ல..) என்னடா இப்படி மாட்டி விட்டுட்டானேன்னு உங்களுக்கு என் மீது கோவம் இருந்தால் (இருக்கும்) நான் அழைக்காத மற்றும் உங்கள் நண்பர்களை பாரபட்சம் பார்க்காமல் கை கா(மா)ட்டி விடுங்கள்... என் மீதுள்ள கோவம் தானாக குறையும்..
பின்குறிப்பு:- மன்னாதி மன்னன் தொடர் பதிவை தொடருபவர்கள்.. தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள்...
அன்பானவர்களே..சற்று தாமதமானாலும் எழுதுங்கள்.... எழுதாமல் புறக்கணிக்க வேண்டாம்...
116 comments:
நீங்க நடத்துங்க நண்பா...
நான் முதல் முதலில் ஒரு பெரிய பூக்க படித்து மதனின் வந்தார்கள் வேந்தர்கள் என்ற புத்தாக்கம் தான் என்று சொல்லிகொள்கிறேன் .நீங்கள் என்னையும் உங்கள் பதிவில் எழுதனும்னு சொனதர்க்கு நன்றி கண்டிப்பாக முயற்சி செய்வேன்
நல்லா எழுதி முடிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்
தொடர் பதிவு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்---
இம்சை அரசன் க்கு தனி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
தொடர அழைத்தமைக்கு நன்றி ஜெயந்த்.
கண்டிப்பாக முயற்சி செய்வேன்.
போயி வரலாற்று புத்தகங்களை படிச்சிட்டு வர்றேன்.
நிறைய வரலாறுகள் மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு விட்டன என்பது மிக உண்மை. தொழில்நுட்பங்கள் தெரிந்த அளவு நமக்கு வரலாறு தெரிவதில்லை!! ஆகவே இதை தொடர்பதிவாக ஆக்கியமைக்கு வாழ்த்துகள்!!
(ஆனாலும், நல்லவேளை என் பேரு இல்லைன்னுதான் தோணுது!!)
:-)))
தொடர அழைத்தமைக்கு நன்றி நண்பா ( பத்த வச்சிட்டியே பரட்ட!! )
ரைட்டு.. கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதுவோம் :)
தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி.. (என் மேல உனக்கு என்னய்யா கோவம்??)
முயற்சி செய்து எழுதுகிறேன்.
எங்கப்பா அந்த வரலாறு புத்தகமெல்லாம்???
/(தமிழின் நிலை பற்றி நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை)//
ஆமாங்க ..! இனிமேல் தமிழ் கூட கிடையாது .. டமில் ஆக போகுது ..!
//(எனக்கு தெரிந்து என்னை தெரிந்தவர்கள் யாருமில்லை).. இன்றே இப்படியென்றால் நாளைய நிலை..???//
நீங்க எப்படி அப்படி சொல்லலாம் .. ஹி ஹி .. எனக்கும் தெரியாது ..
அட பார்ரா.. அப்படியே கோபுரம் மாதிரியே கட்டிருக்காய்ங்க .... நான் கூட தேவா அண்ணனை கூப்பிட்டேன்.. அவரு இன்னும் எழுதலை..
க்கும் இம்சை அரசன் தமிழ்ல எழுதி அதை நாம தமிழ்ன்னு நினைச்சு படிச்சு. ஷ் யப்பா... ஏன் இந்த இம்சை...
இத்தனை வரலாறுகள் உருவாகப் போகுது ..!! இனிமேல் தொடரும் அனைவரும் வரலாறு படைத்திட வாழ்த்துகிறேன் ..!!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
க்கும் இம்சை அரசன் தமிழ்ல எழுதி அதை நாம தமிழ்ன்னு நினைச்சு படிச்சு. ஷ் யப்பா... ஏன் இந்த இம்சை...
///
அட ச்சே .. நம்ம போலீஸ்காரர விட்டுட்டீங்களே ..!?
மெயிலில் அழைத்ததற்கு நன்றி நண்பா.. நேரம் கிடைக்கும் போது தொடர்கிறேன்..:))
அப்படி போட்டு தாக்கு.இன்னும் சில பேரையும் களத்துல இறக்கி விட்டு காதுல கண்ணுல ரத்தம் வர வைத்திருக்கலாம்
பதிவுலக வரலாற்றிலேயே ரொம்ப டஃப்பான தொடர் பதிவாக இதுதான் இருக்கும். :-)
வினோ said...
நீங்க நடத்துங்க நண்பா...
//
நன்றி நண்பா..
இம்சைஅரசன் பாபு.. said...
நீங்கள் என்னையும் உங்கள் பதிவில் எழுதனும்னு சொனதர்க்கு நன்றி கண்டிப்பாக முயற்சி செய்வேன்
//
வேற வழியே இல்ல எழுதி தான் ஆகணும்... வருகைக்கு நன்றி..
அருண் பிரசாத் said...
நல்லா எழுதி முடிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்
//
தப்பிசிட்டோமுன்னு ரொம்ப சந்தோசப்பட வேணாம்... எப்படியும் மாட்டி விட்டிருவாங்க...
வருகைக்கு நன்றி நண்பா..
சௌந்தர் said...
தொடர் பதிவு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்---
//
நண்பா ஞாபகம் இருக்கா.. நீ இன்னும் எழுதவே இல்ல...
சௌந்தர் said...
இம்சை அரசன் க்கு தனி வாழ்த்துக்கள்
//
இம்சை மேல உனக்கு அப்படி என்ன கோவம்...
அன்பரசன் said...
தொடர அழைத்தமைக்கு நன்றி ஜெயந்த்.
கண்டிப்பாக முயற்சி செய்வேன்.
போயி வரலாற்று புத்தகங்களை படிச்சிட்டு வர்றேன்.
//
முயற்சி என்ற வார்த்தையோடு நின்று விடாமல் செயல் படுத்தி காட்டுங்கள் அன்பரே...
ஹுஸைனம்மா said...
நிறைய வரலாறுகள் மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு விட்டன என்பது மிக உண்மை. தொழில்நுட்பங்கள் தெரிந்த அளவு நமக்கு வரலாறு தெரிவதில்லை!! ஆகவே இதை தொடர்பதிவாக ஆக்கியமைக்கு வாழ்த்துகள்!!
(ஆனாலும், நல்லவேளை என் பேரு இல்லைன்னுதான் தோணுது!!)
:-)))
//
மிக்க நன்றி சகோதரி... வருகைக்கும் வாசிப்பிற்கும்...
என்னோட லிஸ்ட்ல உங்க பெயரும் உண்டு... அடுத்த தொடர் பதிவுல கண்டிப்பா இருக்கும்...
யாதவன் said...
வாழ்த்துக்கள்
//
மிக்க நன்றி நண்பரே...
Balaji saravana said...
தொடர அழைத்தமைக்கு நன்றி நண்பா ( பத்த வச்சிட்டியே பரட்ட!! )
ரைட்டு.. கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதுவோம் :)
//
ஹா ஹா.. ஹா....
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
இந்திரா said...
தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி.. (என் மேல உனக்கு என்னய்யா கோவம்??)
முயற்சி செய்து எழுதுகிறேன்.
எங்கப்பா அந்த வரலாறு புத்தகமெல்லாம்???
//
எந்த கோவமும் இல்லை சகோதரி.. நீங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான்...
ப.செல்வக்குமார் said...
ஆமாங்க ..! இனிமேல் தமிழ் கூட கிடையாது .. டமில் ஆக போகுது ..!
//
அதே தான்...
ப.செல்வக்குமார் said...
அட பார்ரா.. அப்படியே கோபுரம் மாதிரியே கட்டிருக்காய்ங்க .... நான் கூட தேவா அண்ணனை கூப்பிட்டேன்.. அவரு இன்னும் எழுதலை..
//
அந்த கோபுரம் இந்த காலத்தில் வாழும் மன்னன் வெறும்பய கட்டியது..
தேவா அண்ணன் கண்டிப்பா இந்த தடவை எழுதுவாரு...
வரலாறில் நான் ரொம்ப வீக் - ன்னு தெரிஞ்சும் இப்படி மாட்டி வுட்டுட்டீங்களே ஜெயந்த்.
எனக்கு ரொம்ப அழுகை, அழுகையா வருது.
படிக்கும்போதே வரலாறு எனக்கு மண்டையில ஏறவே ஏறாது.
ஏதோ வெறும்பய ஜெயந்தாவது விஷயமா நாலெழுத்து எழுதுறானேன்னு படிச்சா இப்படியா மாட்டி விடறது.
இனிமே இந்த தொடர்பதிவுக்காகத்தான் நான் வரலாறை என் மண்டையில ஏத்த முயற்சி செய்யணும். என்ன பண்றது? நண்பனாப் போயிட்டீயே... எ...ழு.......து........து..............றே......றே......றே......றே......றே......ன்.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
க்கும் இம்சை அரசன் தமிழ்ல எழுதி அதை நாம தமிழ்ன்னு நினைச்சு படிச்சு. ஷ் யப்பா... ஏன் இந்த இம்சை...
//
அவரும் எப்படி எழுதுரானுன்னு பாப்போமே....
வருகைக்கு நன்றி சகோதரா...
ப.செல்வக்குமார் said...
அட ச்சே .. நம்ம போலீஸ்காரர விட்டுட்டீங்களே ..!?
//
எங்க போகப் போறாரு... யாராவது மாட்டி விடுவாங்க... டோன்ட் வொர்ரி...
தேனம்மை லெக்ஷ்மணன் said...
மெயிலில் அழைத்ததற்கு நன்றி நண்பா.. நேரம் கிடைக்கும் போது தொடர்கிறேன்..:))
//
வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி சகோதரி...
ஆர்.கே.சதீஷ்குமார் said...
அப்படி போட்டு தாக்கு.இன்னும் சில பேரையும் களத்துல இறக்கி விட்டு காதுல கண்ணுல ரத்தம் வர வைத்திருக்கலாம்..
///
அடடா நீங்க தப்பிசிட்டீங்களே.... பரவாயில்ல... அடுத்த தடவை பார்க்கலாம்...
ஆதிமூலகிருஷ்ணன் said...
பதிவுலக வரலாற்றிலேயே ரொம்ப டஃப்பான தொடர் பதிவாக இதுதான் இருக்கும். :-)
//
வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி சகோதரா... நீங்களும் இது போன்ற ஒரு பதிவை எழுதி உங்களுடைய மிகப்பெரிய நண்பர்கள் வட்டத்திலிருந்து ஒரு சிலரையாவது எழுத அழைக்கலாமே...
Sriakila said...
வரலாறில் நான் ரொம்ப வீக் - ன்னு தெரிஞ்சும் இப்படி மாட்டி வுட்டுட்டீங்களே ஜெயந்த்.
எனக்கு ரொம்ப அழுகை, அழுகையா வருது.
படிக்கும்போதே வரலாறு எனக்கு மண்டையில ஏறவே ஏறாது.
ஏதோ வெறும்பய ஜெயந்தாவது விஷயமா நாலெழுத்து எழுதுறானேன்னு படிச்சா இப்படியா மாட்டி விடறது.
இனிமே இந்த தொடர்பதிவுக்காகத்தான் நான் வரலாறை என் மண்டையில ஏத்த முயற்சி செய்யணும். என்ன பண்றது? நண்பனாப் போயிட்டீயே... எ...ழு.......து........து..............றே......றே......றே......றே......றே...
//
வாங்க சகோதரி இதுக்கே அழுதா எப்படி... சும்மா அழுகுகிறத நிப்பாட்டிட்டு.. நீங்களும் பத்து பேர மாட்டி விடுங்க... கவலை காணாமே போயிடும்...
மிக்க நன்றி வருகைக்கும் வாசிப்பிற்கும்...
தம்பி!!! உன்ன தூக்கிபோட்டு மிதிக்க போறேன் பாரு... பதிவு போட்ட சொல்லிவிட மாட்டியா?? அருண்கிட்ட சொல்லி பையோ டேட்டா போடனுமா?
TERROR-PANDIYAN(VAS) said...
தம்பி!!! உன்ன தூக்கிபோட்டு மிதிக்க போறேன் பாரு... பதிவு போட்ட சொல்லிவிட மாட்டியா??
//
ஆமா யாரு பதிவு போட்டாலும் மொத ஆளா போய் நிப்பீங்க... நான் பதிவு போட்டா மட்டும் தெரியாதா...
TERROR-PANDIYAN(VAS) said...
அருண்கிட்ட சொல்லி பையோ டேட்டா போடனுமா?
//
நமக்கே வா... இந்த பூசாண்டிஎல்லாம் நம்மகிட்ட வேண்டாம் ஒஒய்...
//தொடர்பதிவை தொடர அழைக்கும் நல்ல உள்ளங்கள்..//
அப்பொ நீ ஜெய், ரமேஷ், அருண், பன்னிகுட்டி, முத்து இவங்க எல்லாம் மதிக்கல... பன்னிகுட்டி எவ்வளோ பெரிய தரித்திர...ச்ச சரித்திர எழுத்தாளர்...
//ஆமா யாரு பதிவு போட்டாலும் மொத ஆளா போய் நிப்பீங்க... நான் பதிவு போட்டா மட்டும் தெரியாதா..//
மச்சி நம்ம எல்லாம் ஒரே தட்டுல பிச்சை எடுத்து சாப்டவங்க. உன் வீட்டுக்கு வராம இருப்பனா? நீ எதோ சூனியம் வச்சி இருக்க. உன்னை என்னால Follow பண்ணா முடியல. திட்டுது..
TERROR-PANDIYAN(VAS) said...
அப்பொ நீ ஜெய், ரமேஷ், அருண், பன்னிகுட்டி, முத்து இவங்க எல்லாம் மதிக்கல... பன்னிகுட்டி எவ்வளோ பெரிய தரித்திர...ச்ச சரித்திர எழுத்தாளர்...
//
என்ன வாத்தியாரே இப்படி சொல்லிட்ட... இவங்கெல்லாம் இப்பதானே வரலாறு படச்சுகிட்டு இருக்காங்க...
//அப்பொ நீ ஜெய், ரமேஷ், அருண், பன்னிகுட்டி, முத்து இவங்க எல்லாம் மதிக்கல... பன்னிகுட்டி எவ்வளோ பெரிய தரித்திர...ச்ச சரித்திர எழுத்தாளர்...
///
எப்பப் பாரு சண்டைக்கு கூபிடறதே உங்களுக்கு வேலையா போச்சு ..!!
//நமக்கே வா... இந்த பூசாண்டிஎல்லாம் நம்மகிட்ட வேண்டாம் ஒஒய்...//
ஏன்? நீயே பூசாண்டியா?
TERROR-PANDIYAN(VAS) said...
மச்சி நம்ம எல்லாம் ஒரே தட்டுல பிச்சை எடுத்து சாப்டவங்க. உன் வீட்டுக்கு வராம இருப்பனா? நீ எதோ சூனியம் வச்சி இருக்க. உன்னை என்னால Follow பண்ணா முடியல. திட்டுது..
//
அது தானே மறந்திட்டியோன்னு நினச்சேன்....
எவன்டா அவன் நம்மாளுக்கு வழி மறைக்கிறது...யோசிக்காத மச்சி போட்டு தள்ளு... நம்மள பிரிக்க எவன் வரான்னு பாப்போம்...
TERROR-PANDIYAN(VAS) said...
ஏன்? நீயே பூசாண்டியா?
//
வர வர ஒழுங்கா கண்ணு தெரிய மாட்டேங்குது.... யாராவது இத படிச்சு சொல்லுங்களேன்......
@ப.செல்வக்குமார்
//எப்பப் பாரு சண்டைக்கு கூபிடறதே உங்களுக்கு வேலையா போச்சு ..!!//
செல்வவவவா!!!! நீயா? நீயா? நீயா இப்படி பேசிட்ட? இனி டெரர் திருந்திடான். இனி வலிய வந்து யாராவது சண்டைக்கு கூப்டாலூம் டெரர் சண்டைக்கு போகமாட்டான். இனி நான் சீரியஸ் பதிவு எழுத போறேன்... ஜெய் இராணுவம் கலைக்கபடுகிறது...
50
@வெறும்பய
//வர வர ஒழுங்கா கண்ணு தெரிய மாட்டேங்குது.... யாராவது இத படிச்சு சொல்லுங்களேன்.....//
ரஷ்ய புரட்சி தலமை தாங்கி நடத்திய வெறும்பய வாழ்க...அப்படினு எழுதி இருக்கு.. இப்போ கண்ணூ நல்லா தெரியுமே...
இதனால் பதிவுலகத்திற்கு தெரிவிப்பது என்னவென்றால் எங்கள் அண்ணா TERROR அவர்கள் திருந்தி விட்டார். ஆனால் அது இந்த ஒரு பதிவிற்கு மட்டுமே செல்லும் .. !! ஹி ஹி ஹி .. நாங்களாவது திருந்துறதாவது ..!!
TERROR-PANDIYAN(VAS) said...
செல்வவவவா!!!! நீயா? நீயா? நீயா இப்படி பேசிட்ட? இனி டெரர் திருந்திடான். இனி வலிய வந்து யாராவது சண்டைக்கு கூப்டாலூம் டெரர் சண்டைக்கு போகமாட்டான். இனி நான் சீரியஸ் பதிவு எழுத போறேன்... ஜெய் இராணுவம் கலைக்கபடுகிறது...
//
யோவ் இருய்யா... சட்டு புட்டுன்னு எந்த முடிவும் எடுக்க கூடாது... முதல்ல எல்லா ப்லோகுக்கும் போய் இந்த விசயத்த தெரியப்படுத்தணும்..... அதுக்கப்புறம்.. உன்னோட ப்ளாக்குல :நான் திருந்திடீன்னு" ஒரு பதிவு போடணும்...
இப்படி நிறைய பார்மாலிடீஸ் இருக்கு... உடனேஎல்லாம் விட முடியாது...
TERROR-PANDIYAN(VAS) said...
50
//
அதுக்குள்ளையா...
TERROR-PANDIYAN(VAS) said...
ரஷ்ய புரட்சி தலமை தாங்கி நடத்திய வெறும்பய வாழ்க...அப்படினு எழுதி இருக்கு.. இப்போ கண்ணூ நல்லா தெரியுமே...
//
அட இது நால்லவே தெரியுது... அதிலையும் "வெறும்பய வாழ்க" மட்டும் ரொம்ப நல்லா தெரியுது...
//யோவ் இருய்யா... சட்டு புட்டுன்னு எந்த முடிவும் எடுக்க கூடாது... முதல்ல எல்லா ப்லோகுக்கும் போய் இந்த விசயத்த தெரியப்படுத்தணும்..... அதுக்கப்புறம்.. உன்னோட ப்ளாக்குல :நான் திருந்திடீன்னு" ஒரு பதிவு போடணும்...//
சாதரணமா நான் பதிவு போட்டா ரவுடி, நாதரி, பண்னாட, மொள்ளமாரி இப்படி உயரிய விருது வாங்கினவங்க மாட்டும் வந்து கும்முவிங்க. நீ சொன்ன மாதிரி பதிவு போட்டா அல்லு, சில்லு சர்டிபிகோட் கோர்ஸ் பண்ணது எல்லாம் வந்து கும்மும். அதனால நான் நோட்டிஸ் இல்லாம திருந்திடேன்...
TERROR-PANDIYAN(VAS) said...
//நமக்கே வா... இந்த பூசாண்டிஎல்லாம் நம்மகிட்ட வேண்டாம் ஒஒய்...//
ஏன்? நீயே பூசாண்டியா?////
@@@TERROR-PANDIYAN
ஏம்பா ரெண்டு பேரும் இப்படி உண்மைய வெளியே சொல்றிங்க
// நீ சொன்ன மாதிரி பதிவு போட்டா அல்லு, சில்லு சர்டிபிகோட் கோர்ஸ் பண்ணது எல்லாம் வந்து கும்மும். அதனால நான் நோட்டிஸ் இல்லாம திருந்திடேன்..///
அப்படின்னு நம்பிடாதீங்க .. அப்படித்தான் சொல்லுவோம் .. ஆனா திருந்த மாட்டோம் ...!!
@ப.செல்வக்குமார்
//இதனால் பதிவுலகத்திற்கு தெரிவிப்பது என்னவென்றால் எங்கள் அண்ணா TERROR அவர்கள் திருந்தி விட்டார். ஆனால் அது இந்த ஒரு பதிவிற்கு மட்டுமே செல்லும் .. !! ஹி ஹி ஹி .. நாங்களாவது திருந்துறதாவது ..!//
அண்ணன் ஆட்ட காட்டினா தம்பி அதோட தலைய எடுத்துட்டு வந்து நிக்கனூம்... உன்ன நம்பி நான் இனி மத்த ப்ளாக் மேல எப்படி போர் தொடுக்கரது?? அதனால நான் திருந்திடேன்...
@சௌந்தர்
//@@@TERROR-PANDIYAN
ஏம்பா ரெண்டு பேரும் இப்படி உண்மைய வெளியே சொல்றிங்க//
பூச்சாண்டி பத்தி பேசினா புள்ள புடிக்கிறவன் வர.... அந்த புள்ளை கீழ விடு...
TERROR-PANDIYAN(VAS) said...
//யோவ் இருய்யா... சட்டு புட்டுன்னு எந்த முடிவும் எடுக்க கூடாது... முதல்ல எல்லா ப்லோகுக்கும் போய் இந்த விசயத்த தெரியப்படுத்தணும்..... அதுக்கப்புறம்.. உன்னோட ப்ளாக்குல :நான் திருந்திடீன்னு" ஒரு பதிவு போடணும்...//
@@@@TERROR-PANDIYAN(VAS)
யாருயா இவரு எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு
TERROR-PANDIYAN(VAS) said...
சாதரணமா நான் பதிவு போட்டா ரவுடி, நாதரி, பண்னாட, மொள்ளமாரி இப்படி உயரிய விருது வாங்கினவங்க மாட்டும் வந்து கும்முவிங்க. நீ சொன்ன மாதிரி பதிவு போட்டா அல்லு, சில்லு சர்டிபிகோட் கோர்ஸ் பண்ணது எல்லாம் வந்து கும்மும். அதனால நான் நோட்டிஸ் இல்லாம திருந்திடேன்...
//
கண்டிப்பா.. இலன்னா பத்து பேருக்கு பெரியாம போயிடுமே... அந்த நோட்டீச பாத்தாவது உனக்காக பயந்து போய் ஓடி ஒளிஞ்சவங்க திரும்பி வருவாங்களே...
TERROR-PANDIYAN(VAS) said...
பூச்சாண்டி பத்தி பேசினா புள்ள புடிக்கிறவன் வர.... அந்த புள்ளை கீழ விடு..////
@@@TERROR-PANDIYAN(VAS)
எனப்பா என்னை பற்றி உண்மைய இப்போ வெளியே சொல்லிட்டே இப்போ உனக்கு சந்தோசமா
சௌந்தர் said...
@@@@TERROR-PANDIYAN(VAS)
யாருயா இவரு எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு..
//
ப்ரோபைல் போட்டோவ மாத்த வேணாமுன்னு சொன்னா கேக்கணும்.. பாரு.. அவனுக்கே உன்னை அடையாளம் தெரியல
TERROR-இந்த பதிவை பத்து தடவை எழுதணும்
@சௌந்தர்
//TERROR-இந்த பதிவை பத்து தடவை எழுதணும்//
இந்த பதிவ ஒரு முறை படிக்கிறதே கஷடம். இதில பத்து தடவை?? சரி. கமெண்ட்ல 10 தடவை காப்பி & பேஸ்ட் பண்ணா போதுமா?
@வெறும்பய
//ப்ரோபைல் போட்டோவ மாத்த வேணாமுன்னு சொன்னா கேக்கணும்.. பாரு.. அவனுக்கே உன்னை அடையாளம் தெரியல//
போட்டோவ நல்லா பாரு மச்சி. அது ஒரு கருத்து சொல்லுது. ஆடு சும்மா இருந்தா ஒன்னும் பண்ண மாட்டேன்... ஆட்டம் போட்டுச்சி...
TERROR-PANDIYAN(VAS) said...
@சௌந்தர்
//TERROR-இந்த பதிவை பத்து தடவை எழுதணும்//
இந்த பதிவ ஒரு முறை படிக்கிறதே கஷடம். இதில பத்து தடவை?? சரி. கமெண்ட்ல 10 தடவை காப்பி & பேஸ்ட் பண்ணா போதுமா?///
சரி சரி சின்ன பையன் ஏதோ கேக்குறே அப்படியே செய். முதல் இந்த பதிவை படித்து விட்டு எனக்கு சொல் நான் இன்னும் இந்த பதிவை படிக்கவில்லை
அடப்பாவிகளா... நீங்க இன்னும் இந்த பதிவ படிக்கவே இல்லையா... படிக்காம தான் இந்த கூத்து நடக்குதா...
//போட்டோவ நல்லா பாரு மச்சி. அது ஒரு கருத்து சொல்லுது. ஆடு சும்மா இருந்தா ஒன்னும் பண்ண மாட்டேன்... ஆட்டம் போட்டுச்சி...
///
ஹி ஹி .. நாங்க எப்பவுமே ரத்த வெறியோட அலைஞ்சுட்டு இருப்போம் .. ஆனா ஏதாவது சத்தம் வந்தா மட்டும் வெட்டுவோம் ..!!
வெறும்பய said...
அடப்பாவிகளா... நீங்க இன்னும் இந்த பதிவ படிக்கவே இல்லையா... படிக்காம தான் இந்த கூத்து நடக்குதா./////
@@@வெறும்பய said...
ஆமா நாங்க இன்னும் படிக்க வில்லை இது என்ன போஸ்ட் விமர்சனம் அருமை தொருங்கள்
இன்னைக்கு நான் தான் மாட்டுனனா... நடத்துங்க... நான் சத்தம் போட்டா தானே...
@சௌந்தர்
//சரி சரி சின்ன பையன் ஏதோ கேக்குறே அப்படியே செய். முதல் இந்த பதிவை படித்து விட்டு எனக்கு சொல் நான் இன்னும் இந்த பதிவை படிக்கவில்லை//
படிக்க அங்க ஒன்னும் இல்லை. எழுத விஷயம் கிடைக்காம எதோ கருத்து சொல்றேன் கிறுக்கி இருக்கு... ஒரு நல்ல மொக்க எழுத்தர் வீனா போய்ட்டார்.
TERROR-PANDIYAN(VAS) said...
படிக்க அங்க ஒன்னும் இல்லை. எழுத விஷயம் கிடைக்காம எதோ கருத்து சொல்றேன் கிறுக்கி இருக்கு... ஒரு நல்ல மொக்க எழுத்தர் வீனா போய்ட்டார்.
//
மனுசன திருந்தவே விட மாட்டீங்களா... இப்படியே போய் கிட்டிருந்தா நான் எப்ப தான் பிரபல பதிவராகிறது...
//வெறும்பய said...
இன்னைக்கு நான் தான் மாட்டுனனா... நடத்துங்க... நான் சத்தம் போட்டா தானே...
//
@ TERROR
அண்ணா ஆடு கண்டுபிடிசிடுச்சு ..? என்ன பண்ணலாம் ..?
மனுசன திருந்தவே விட மாட்டீங்களா... இப்படியே போய் கிட்டிருந்தா நான் எப்ப தான் பிரபல பதிவராகிறது..///
@@@@@வெறும்பய
வெறும்பய இருக்கும் உன் பெயரை பிரபல பதிவர் என்று மாத்திவை அவ்வளவு தான் நீ பிரபல பதிவர்
சௌந்தர் said...
வெறும்பய இருக்கும் உன் பெயரை பிரபல பதிவர் என்று மாத்திவை அவ்வளவு தான் நீ பிரபல பதிவர்
//
நன்றி நண்பா ... இந்த விஷயம் இதுவரைக்கும் எனக்கு தெரியாம போச்சே... நம்ம டேரருக்கு ஏதாவது அப்ஜெக்சன் இருக்கானு கேட்டு சொல்லு...
@செல்வா
//அண்ணா ஆடு கண்டுபிடிசிடுச்சு ..? என்ன பண்ணலாம் ..?//
கொஞ்ச நாள் திருந்தி வாழுவோம்... ஆடுகள் நல்லா வளரட்டும்... மார்ச் மாதம் நிறைய ஆடு அறுப்பு இருக்கு...
TERROR-PANDIYAN(VAS) said...
கொஞ்ச நாள் திருந்தி வாழுவோம்... ஆடுகள் நல்லா வளரட்டும்... மார்ச் மாதம் நிறைய ஆடு அறுப்பு இருக்கு...
//
அடங்கொக்க மக்கா .. எப்படியும் வெட்டாம விட மாட்டீங்க போலிருக்கே...
@வெறும்பய, சௌந்தர், செல்வா
இன்னைக்கு மொக்க போதும்.... நாளைக்கு மீதி... டாடா...
(அபீஸ் ஒவர்..)
ஒரு தடவைல இத்தனை நல் உள்ளங்கள கோர்த்து விட்ட ஒரே நல் உள்ளம் எங்க வெறும்பய தாங்க!!
TERROR-PANDIYAN(VAS) said...
@வெறும்பய, சௌந்தர், செல்வா
இன்னைக்கு மொக்க போதும்.... நாளைக்கு மீதி... டாடா...
(அபீஸ் ஒவர்..)
//
இப்பவாவது விட்டீங்களே.... டாட்டா.. போனவுடனே மறக்காம லெட்டர் போடுங்க...
மைந்தன் சிவா said...
ஒரு தடவைல இத்தனை நல் உள்ளங்கள கோர்த்து விட்ட ஒரே நல் உள்ளம் எங்க வெறும்பய தாங்க!!
\
//
நன்றி நண்பா... நன்றி நன்றி...
தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி நண்பரே!
நிறைய துல்லியமான தகவல்கள் தேவைப்படுமென்பதால் நேரம் கிடைக்கும்போது பூஜை போட்டுவிடலாம்!
(மேற்கூறிய எவர் மீதும் எனக்கு முன்விரோதமில்ல..)
......இப்படி மட்டும் சொல்லவில்லை என்று வைங்க ... படை எடுத்து "போருக்கு" வந்து இருப்பேன், அரசரே!
வரலாற்றை எழுத போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இருந்தாலும் இத நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..
எழுதுவேன்.. அது விக்கிபீடியால இருந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.
பாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி!
இதுல என் பேரை பாத்துட்டு நான் அழுத அழுகை இருக்கே... அதை நீங்க பார்த்தா ஏண்டா கூப்பிட்டோமுன்னு நினைச்சி இருப்பீங்க ..அவ்வ்வ்வ்வ்
பரவாயில்லை ..எவ்வளவோ பாத்துட்டோம் இதை பாத்துட மாட்டோமா..? :-)))))
மன்னாதி மன்னன்.. வாழ்க...!!
மன்னாதி மன்னன்...வாழ்க..!!
ரொம்ப நன்றி தல....
ஆக்சுவலி, இந்த தொடரை நான் தான் ஆரம்பித்து வைத்தேன்.
http://gcefriends.blogspot.com/2010/07/blog-post.html
திருப்ப என்னிடமே அனுப்பியிருக்கிறீர்கள்....
தொடர முயற்சிக்கிறேன்...
;))))))))))
// இதுல என் பேரை பாத்துட்டு நான் அழுத அழுகை இருக்கே... அதை நீங்க பார்த்தா ஏண்டா கூப்பிட்டோமுன்னு நினைச்சி இருப்பீங்க ..அவ்வ்வ்வ்வ்//
பரவா இல்ல நீங்க அழுதுகிட்டே வந்து எழுங்க பாஸ். நீங்க அழுதாலும் சிரிக்கிற மாதிரிதானிருக்கும் ஹி.. ஹி..
நல்லவேளை எங்கள கூப்பிடல! கூப்பிட்டாலும் ஹி..ஹி.. எழுதப் போவதில்லை. அப்படியே எழுதிட்டாலும்! ...............!
(இப்பவே எஸ் ஆயிடுறது நல்லது. நாளை சரித்திரம் நம்மை சாடாது ஹி..ஹி.. ))):-D
வரலாற்றை எழுத போகும், எழுத முயற்சிக்கும், எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்!!
super topic friend
நண்பரே!
நான் பிள்ளையார் சுழி போட்டுவிட்டேன்!
மன்னாதி மன்னன்- ராஜராஜசோழன்!
http://puthuvithai.blogspot.com
வருக!
Chitra said...
(மேற்கூறிய எவர் மீதும் எனக்கு முன்விரோதமில்ல..)
......இப்படி மட்டும் சொல்லவில்லை என்று வைங்க ... படை எடுத்து "போருக்கு" வந்து இருப்பேன், அரசரே!
//
அப்பாடா தப்பிச்சேன்... அந்த ஒரு வரியையும் எழுதலன்னா என்ன ஆகியிருக்கும்... நினச்சாலே பயமாயிருக்கு...
&&&&&&&&&&&&
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி...
r.v.saravanan said...
வரலாற்றை எழுத போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் உங்களுக்கும் நன்றி சொல்கிறேன்...
சுசி said...
இருந்தாலும் இத நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..
எழுதுவேன்.. அது விக்கிபீடியால இருந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.
//
எதிர்பார்த்து நடந்தா அதில சுவாரசியமே இருக்காது...படிக்கிற சமயத்தில தான் காப்பின்னா இங்கேயுமா... எதுவானாலும் எழுதினால் மகிழ்ச்சி..
நன்றி சகோதரி..
velji said...
பாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி!
//
மிக்க நன்றி..
ஜெய்லானி said...
இதுல என் பேரை பாத்துட்டு நான் அழுத அழுகை இருக்கே... ////
எங்கே இருக்கு..
///
அதை நீங்க பார்த்தா ஏண்டா கூப்பிட்டோமுன்னு நினைச்சி இருப்பீங்க ..அவ்வ்வ்வ்வ்///
அகா அந்த கண்கொள்ளா காட்சிய பார்க்க முடியாம போச்சே...
Ananthi said...
மன்னாதி மன்னன்.. வாழ்க...!!
மன்னாதி மன்னன்...வாழ்க..!!
//
நன்றி சகோதரி..
மகேஷ் : ரசிகன் said...
ரொம்ப நன்றி தல....
ஆக்சுவலி, இந்த தொடரை நான் தான் ஆரம்பித்து வைத்தேன்.
http://gcefriends.blogspot.com/2010/07/blog-post.html
திருப்ப என்னிடமே அனுப்பியிருக்கிறீர்கள்....
தொடர முயற்சிக்கிறேன்...
//
தெரியாமல் போய்விட்டது நண்பரே.... மன்னிக்கவும்... முடிந்தால் எழுதவும்...
வருகைக்கு நன்றி..
எம் அப்துல் காதர் said...
வரலாற்றை எழுத போகும், எழுத முயற்சிக்கும், எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்!!
//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் உங்களுக்கும் நன்றி சொல்கிறேன்...
சசிகுமார் said...
super topic friend
//
Thanks Friend..
அண்ணாமலை..!! said...
நண்பரே!
நான் பிள்ளையார் சுழி போட்டுவிட்டேன்!
மன்னாதி மன்னன்- ராஜராஜசோழன்!
http://puthuvithai.blogspot.com
வருக!
//
என்னையும் மதித்து மன்னாதி மன்னனை முதலில் தொடங்கிய மன்னர் வாழ்க....
உங்களுக்கு ஒரு விருது கொடுத்து இருக்கிறேன் . பெற்றுக் கொள்ளவும்
http://lksthoughts.blogspot.com/2010/09/blog-post_19.html
இனிய தொடக்கம்.. நல்ல பல தகவல்களைப் பெறலாம் என நினைக்கிறேன்.....
super
மன்னர் களின் வரலாரை கல்வெட்டில் பதிப்பார்கள் வலை உலகில் வரலாறு என்னும் சப்ப்ஜெக்ட் எடுத்து எழுதியது நீங்க தான்/
வலை உலகம் என்ற் இடத்தில் உங்கள் பெயரும் கல்வெட்டில் பதித்தது போல் இருக்கும்.
நல்லா இருக்கு உங்க தொடர் பதிவு..வாழ்த்துக்கள்
தப்பிச்சேன்டா சாமி! யம்மா...கிரேட் எஸ்கேப்!
viththiyaasamaana padhivu.சினிமா,அரசியல் என படித்து சலித்த உள்ளங்களுக்கு உங்கள் பதிவு ஒரு மாற்றமான ரசனையை ஏற்படுத்தும்
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..
Post a Comment