கடைசியாய் ஒரு கவிதை..

கடைசியாய் ஒரு கவிதை எழுதலாமென
எனை மறந்த உலகை நான் மறந்து
வார்த்தைகளை வரிசைப்படுத்த துவங்கினேன்

எவ்வளவு முயற்சித்தும்
ஒத்துழைக்க முடியாதென
அடம்பிடித்தன பிடிவாத வார்த்தைகள்

பொறுமை காத்து பொறுக்க முடியாமல்
கோபத்தை கொட்டித் தீர்த்தேன்
வார்த்தைகளிடம்

எவ்வித அசைவுமின்றி அசையாமல்
ஆணியடித்தது போல் மௌனமாய் 
நின்று கொண்டிருந்தன வார்த்தைகளனைத்தும்

ஆத்திரப்பட்டு பயனில்லை என்றறிந்த பின்
சுற்றும் முற்றும் பார்வை வீசி
பார்வையாளர்கள் எவருமில்லையென
உறுதி செய்து என் உறுதி குலைத்தேன்
வார்த்தைத் தலைவனிடம்.

கை கூப்பி
தலை சாய்த்து
வெட்கம் விட்டு வேண்டிக்கொண்டேன்
காதலில்லாமல்
காமம் கலவாமல்
கடைசியாய் ஒரு கவிதை வேண்டுமென

மௌனம் ஆக்கிரமித்த சிறு இடைவேளைக்கு பின்
ஒட்டுமொத்த வார்த்தைகளும் ஒன்றாய் சேர்ந்து
ஒரே குரலில் சொல்லத்துவங்கின

"உருவமில்லாமல் உன்னில் ஒளிந்திருக்கும்
உன்னவளின் நினைவுகளின்
கடைசித்துளி வரை
துடைத்தெறிந்து விட்டு வா"  என்று...

மீண்டுமொருமுறை  மௌனம் ஆக்கிரமிக்க
கலங்கிய கண்களுடன்
"வேறு வழியே இல்லையா என்றேன்"

ஏளனமாய் என்னைப்பார்த்து
அதிகாரத் தோரணையில்
"சொன்னதைச் செய்
இல்லையேல் என்னிடம் வரதே" என்று கூறி
நடக்கதுவங்கின வார்த்தைகளனைத்தும்
பாதைகளற்ற ஒரு ஒற்றையடி  பாதையில்

அந்நேரம்
"இனி கவிதையேதும் எழுதுவதில்லையென
முடிவெடுத்திருந்தது என் மனது"

நா
    ன
        றி
            யா
                  ம
                      ல்....


35 comments:

test said...

வணக்கம் பாஸ்!

r.v.saravanan said...

கோபத்தை கொட்டித் தீர்த்தேன்
வார்த்தைகளிடம்

super jayandh

ரேவா said...

"உருவமில்லாமல் உன்னில் ஒளிந்திருக்கும்
உன்னவளின் நினைவுகளின்
கடைசித்துளி வரை
துடைத்தெறிந்து விட்டு வா" என்று...

மீண்டுமொருமுறை மௌனம் ஆக்கிரமிக்க
கலங்கிய கண்களுடன்
"வேறு வழியே இல்லையா என்றேன்"

வார்த்தை போர் பலமாய் இருக்கிறது....அதோடு தவிர்க்க முடியா காதலின் நினைவும் அழகாய்த் தெரிகிறது....கவிதை, காதல், வார்த்தை...கலந்த போர் அருமை....

test said...

//எவ்வளவு முயற்சித்தும்
ஒத்துழைக்க முடியாதென
அடம்பிடித்தன பிடிவாத வார்த்தைகள்//
Nice! :-)

செல்வா said...

அண்ணா இவ்ளோ நாள் கழிச்சு வந்தாலும் ரொம்ப அருமையான கவிதையோட வந்திருக்கீங்க .. உண்மைலேயே ரொம்ப பிடிச்சிருக்கு :-)

செல்வா said...

ஜோதி ய இன்னுமா மறக்கல ? ஹி ஹி

மாணவன் said...

நல்லாருக்குண்ணே.... :)
super

Unknown said...

நினைவுகளை அழித்தல் கொடூரமானது;
வார்தை களுடனான சண்டையில் எஞ்சுகின்றன கவிதைகள்:))
நல்ல இருக்கு :

மாலுமி said...

////////"உருவமில்லாமல் உன்னில் ஒளிந்திருக்கும்
உன்னவளின் நினைவுகளின்
கடைசித்துளி வரை
துடைத்தெறிந்து விட்டு வா" //////////

எப்படி மச்சி இப்படி எல்லாம்.....
மறந்து போன, மறக்க முயற்சித்த, மறக்க முடியாமல் இருந்த பழைய நினைவுகள் கிளறப்படுகிறது.... பெருத்த வலியுடன்....

arasan said...

நல்ல வரிகளில் நல்லதொரு கவிதை அண்ணே ,

Unknown said...

////"உருவமில்லாமல் உன்னில் ஒளிந்திருக்கும்
உன்னவளின் நினைவுகளின்
கடைசித்துளி வரை
துடைத்தெறிந்து விட்டு வா" என்று...///
அருமை...


வார்த்தைகளோடு வாதிட்டு களைத்த மனதில் அவளின் நினைவுகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற இயலாத மனம் தன்னையறியாமல் முடிவெடுத்தது அழகு...

இம்மியலவிலும் ரம்மியம்... வார்த்தைகளோடான வாதம்.. மிகவும் ரசித்து படித்தேன்...

வாழ்த்துக்கள் நண்பரே...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ohh my god , awesome man . . . .
so niceeeeeeeeee
just like that i started reading but when it flows with ur magical words towards the end was brilliant . . .
anyway thats true , cant write poem with out love . .
all the best . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//@கோமாளி செல்வா said...

ஜோதி ய இன்னுமா மறக்கல ? ஹி ஹி / / /

ஜோதியில் ஐக்கியம் ஆகிற வரைக்கும் மறக்க முடியுமா? என்ன நான் சொல்லுறது? ஹி ஹி ஹி . . .

எவனோ ஒருவன் said...

கவிதை மிக அருமை வசந்த். எல்லா நினைவுகளும் சுகமானதாய் இருந்தால் நன்றாக இருக்கும். வலியைத் தரும் நினைவுகள் தான் வார்த்தைகள் மூலம் கோபத்தைக் காட்ட வைக்கின்றன.

அந்நேரம்
"இனி கவிதையேதும் எழுதுவதில்லையென
முடிவெடுத்திருந்தது என் மனது"

இப்படி குறிப்பிட்டது இந்த கவிதைக்காக மட்டும் தானே?

Mohamed Faaique said...

late'ஆ வந்தாலும் ல் latest'ஆ ஒரு கவிதையோடு வந்திருக்கீங்க....
ரொம்ப தொல்லை பண்ணுதோ இந்தக் காதல்

Prabu Krishna said...

அருமையான கவிதை.....

Anonymous said...

///கை கூப்பி
தலை சாய்த்து
வெட்கம் விட்டு வேண்டிக்கொண்டேன்
காதலில்லாமல்
காமம் கலவாமல்
கடைசியாய் ஒரு கவிதை வேண்டுமென /// கஸ்ரம் தான் பாஸ். கவிதை நல்லாய் இருக்கு..

இம்சைஅரசன் பாபு.. said...

present sir.........present sir...present sir..........

சி.பி.செந்தில்குமார் said...

ஜோதி நலமா? # நண்பேண்டா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது யாருல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எதுக்கும் மறுக்கா மறுக்கா படிக்கிறேன்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதைக்கு கரு என்பது முக்கியம் அந்த கரு எது என்பதைப்பற்றி கவிதை...

கடைசி கவிதைக்கு வார்த்தைக் எப்போதும் ஒத்துழைக்காது...

தொடர்ந்து எழுதுங்கள்..

ADMIN said...

மிக அருமை..!!

நன்றி! வாழ்த்துக்கள்..!!

'பரிவை' சே.குமார் said...

அருமை. ரொம்ப பிடிச்சிருக்கு.

தமிழ்த்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

supper..

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!

...αηαη∂.... said...

//உருவமில்லாமல் உன்னில் ஒளிந்திருக்கும்
உன்னவளின் நினைவுகளின்
கடைசித்துளி வரை
துடைத்தெறிந்து விட்டு வா //


வலிமையான வரிகள்

சுஜா செல்லப்பன் said...

கவிதை எழுதும் போராட்டமே அழகான கவிதையாய்...வாழ்த்துக்கள் ஜெயந்த் நண்பரே!!

Sadhu said...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

Sen22 said...

Nalla irukkunga Boss...

rajamelaiyur said...

///
கை கூப்பி
தலை சாய்த்து
வெட்கம் விட்டு வேண்டிக்கொண்டேன்
காதலில்லாமல்
காமம் கலவாமல்
கடைசியாய் ஒரு கவிதை வேண்டுமென
///
அருமையான வரிகள்

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

AZAREEN said...

REALY SUPER