கடைசி சந்திப்பு..


வ்வொரு சந்திப்பின் முடிவிலும்
உள்ளும் புறமும்
ஒன்றுகூடி ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றுகின்றன
இதுவே அவளுடனான
கடைசி சந்திப்பென..

அம்முடிவை கயிறாக்கி
மனதை சுற்றி இறுக்கிக்கட்டி
இருளில் இடம் பெயர்க்கிறேன். 

நித்தம் நிகழும் ஒவ்வொரு செயலும்
அவளையே  நினைவூட்டும் போது
முட்டி மோதியும் 
திமிறித் துடித்தும்
அலறி அழுதும் 
முடிச்சுகள் அவிழாததால்
அமைதியாகிறேன்.

காலம் சில கடந்து 
மீண்டும் மீண்டு வருகிறாள் 
முழு மதியாய்  முகம் மலர்கிறாள்
முடிச்சுகள் மூர்ச்சையிழந்து விடுகின்றன..

நலம் விசாரிக்கிறாள்
முன் போல
அதிகாரம்
அரவணைப்பு
குற்றம்
குறை
கோபம்
கண்ணீர்
வெட்கம்
காதல்
கூடல்
என எதுவுமில்லாமல்
நட்பெனும் போர்வை போர்த்தி
கடந்தகாலம் கலக்காமல் கவனமாக
விடியும் வரை
பேசிக் கொண்டு விடை பெறுகிறாள்...

மீண்டும்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
இது தான் அவளுடனான
கடைசி சந்திப்பென...

47 comments:

மாணவன் said...

வணக்கம் அண்ணே :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

வணக்கம் அண்ணே :)//

வணக்கம் மாணவரே நலமா

சி.பி.செந்தில்குமார் said...

>>பெசிக் கொண்டு விடை பெறுகிறாள்...

பேசிக்கொண்டு

சி.பி.செந்தில்குமார் said...

>>மீண்டும்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
இது தான் அவளுடனான
கடைசி சந்திப்பென...

அண்னன் அனுபவிச்சு எழுதி இருக்கார் போல

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

>>பெசிக் கொண்டு விடை பெறுகிறாள்...

பேசிக்கொண்டு///

மாற்றம் செய்து விட்டேன் அண்ணா.. நன்றி

Unknown said...

மாப்ள ரொம்ப வலிக்குது பழைய விஷய்த்தஎல்லாம் தோண்டாதே விட்டுரு.......கவிதை அருமையா இருக்கு

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

அண்னன் அனுபவிச்சு எழுதி இருக்கார் போல //

கொஞ்சம் அனுபவிச்சு எழுதியது தான் அண்ணா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கி உலகம் said...

மாப்ள ரொம்ப வலிக்குது பழைய விஷய்த்தஎல்லாம் தோண்டாதே விட்டுரு.......கவிதை அருமையா இருக்கு///


மாம்ஸ் அங்கேயும் அதே பீல் தானா... ஓகே ஓகே.. இதெல்லாம் வாழ்க்கையில சகஜமாச்சே..

மாணவன் said...

//மீண்டும்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
இது தான் அவளுடனான
கடைசி சந்திப்பென..//

கடைசி சந்திப்பு.... நல்லாருக்குண்ணே

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

கடைசி சந்திப்பு.... நல்லாருக்குண்ணே

//

நன்றி மாணவரே..

Unknown said...

மீண்டும் மீண்டும்...

மாணவன் said...

//நானறியாமல் நான் தொலைத்த என்னை பற்றி என்னிடமே கேட்டால் என்னை பற்றி என்னவென்று நான் சொல்ல..//

இது எப்போதிலிருந்து.....எனக்கு போட்டியா? நல்லாருக்கு நல்லாருக்கு :))

பேசுவோம் பேசுவோமென்று நான் பேசாமல் விட்ட நொடிகள்தான் இன்றும் பேசுகின்றன... சிரிப்போமென்று தெரியாமல் சிரித்த கனங்கள்தான் நெஞ்சில் இன்றும் பசுமையாக நிற்கின்றன... கவிதையாய் நினைவுகளும் புதினமாய் நிகழ்வுகளும் ஓவியமாய் சந்திப்புகளும் புதைந்திருக்கும் நெஞ்சுக்குள் என்ன சொல்ல என்னைப்பற்றி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலாநேசன் said...

மீண்டும் மீண்டும்...

//

மீண்டும் மீண்டும் வந்து கொண்டுதானிருக்கிறாள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//நானறியாமல் நான் தொலைத்த என்னை பற்றி என்னிடமே கேட்டால் என்னை பற்றி என்னவென்று நான் சொல்ல..//

இது எப்போதிலிருந்து.....எனக்கு போட்டியா? நல்லாருக்கு நல்லாருக்கு :))

பேசுவோம் பேசுவோமென்று நான் பேசாமல் விட்ட நொடிகள்தான் இன்றும் பேசுகின்றன... சிரிப்போமென்று தெரியாமல் சிரித்த கனங்கள்தான் நெஞ்சில் இன்றும் பசுமையாக நிற்கின்றன... கவிதையாய் நினைவுகளும் புதினமாய் நிகழ்வுகளும் ஓவியமாய் சந்திப்புகளும் புதைந்திருக்கும் நெஞ்சுக்குள் என்ன சொல்ல என்னைப்பற்றி...

//

இது நல்லாயிருக்கே மாணவரே... ரொம்ப நல்லாயிருக்கு

சௌந்தர் said...

மீண்டும்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
இது தான் அவளுடனான
கடைசி சந்திப்பென... ////

இப்படியே சொல்றே ஆனா மீண்டும் அவளை சந்தித்து கொண்டு தானே இருக்கே

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//நட்பெனும் போர்வை போர்த்தி
கடந்தகாலம் கலக்காமல் கவனமாக //
நாமும் கடந்ததை மறந்து,எதிகாலம் ஏற்றம் பெற எழுச்சி கொள்வோம்...

பாட்டு ரசிகன் said...

அசத்தல் கவிதை..
வாழ்த்துக்கள்..

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமையா இருக்கு.

முனியாண்டி பெ. said...

Nice

Chitra said...

காதல்
கூடல்
என எதுவுமில்லாமல்
நட்பெனும் போர்வை போர்த்தி
கடந்தகாலம் கலக்காமல் கவனமாக
விடியும் வரை
பேசிக் கொண்டு விடை பெறுகிறாள்...



...... What a change of feeling for each other! நல்லா எழுதி இருக்கீங்க.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///மீண்டும்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
இது தான் அவளுடனான
கடைசி சந்திப்பென...////

Amazing....

so touching krishna ...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

பீலிங்க்ஸ் எல்லாம் முடிஞ்சது ...
சரி கும்மி அடிக்க ஆரம்பிக்கலாம? . . .
ஹி ஹி ஹி . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/ / / விடியும் வரை
பேசிக் கொண்டு விடை பெறுகிறாள்... / / /

இன்கமிங் கால் ப்ரீ யா சார்?
என்ன நெட்வொர்க் use பண்ணுரிங்க?
airtel ,
vodafone ,
docomo ,
idea ? ? ?
monthly போன் பில் எவ்வுளவு வருது ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது ஜோதிதானே...... வெரிகுட்... கீப் இட் அப்......!

NaSo said...

மச்சி கொன்னுட்டே போ!!

எஸ்.கே said...

இந்த தமிழ்மண வாரம் இனிமையாக அருமையாக செயல்பட்டீர்கள் வாழ்த்துக்கள் நண்பா!

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இது ஜோதிதானே...... வெரிகுட்... கீப் இட் அப்......!


ripeeeetttttttttttuuuuuuuuuuuuu

vinu said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
/ / / விடியும் வரை
பேசிக் கொண்டு விடை பெறுகிறாள்... / / /

இன்கமிங் கால் ப்ரீ யா சார்?
என்ன நெட்வொர்க் use பண்ணுரிங்க?
airtel ,
vodafone ,
docomo ,
idea ? ? ?
monthly போன் பில் எவ்வுளவு வருது ?


machi ennuthu vodafone-BSNL/Airtel ; 4 naalu billu 900rs;

alluthuuuuuuuuu

mudiyala
mudiyala

std callukkeay alluthuuuuuuu

vinu said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
/ / / விடியும் வரை
பேசிக் கொண்டு விடை பெறுகிறாள்... / / /

இன்கமிங் கால் ப்ரீ யா சார்?
என்ன நெட்வொர்க் use பண்ணுரிங்க?
airtel ,
vodafone ,
docomo ,
idea ? ? ?
monthly போன் பில் எவ்வுளவு வருது ?


machi ennuthu vodafone-BSNL/Airtel ; 4 naalu billu 900rs;

alluthuuuuuuuuu

mudiyala
mudiyala

std callukkeay alluthuuuuuuu

Sriakila said...

nice one Jayanth!

நிரூபன் said...

இருளில் இடம் பெயர்க்கிறேன்.//

கவிதையில் இடம் பெறும் பிரிவுத் துயரை அழகாக கையாள வெளிப்படுத்தப்பட்டுள்ள சொற் பதம். அருமை.

நிரூபன் said...

நட்பெனும் போர்வை போர்த்தி
கடந்தகாலம் கலக்காமல் கவனமாக
விடியும் வரை
பேசிக் கொண்டு விடை பெறுகிறாள்..//

இந்தக் கவியில் இரு பொருள்களைச் சாடியிருப்பதாக, உணர்த்தியிருப்பதாக உணர்கிறேன்.

ஒன்று அரசியல், மற்றையது- உங்கள் அவள்!

கவிதை எப்போதும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் பின்னாலுள்ள அழிந்து போகும் எதிர்ப்பார்ப்புக்களையும்,
தீர்மானத்தின் பின்னர் நாங்கள் மீண்டும் மீண்டும் அதனை நாடிச் செல்வதனையும் உணர்த்தி நிற்கிறது..

உங்கள் குறியீட்டினை ரசித்தேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

வழக்கம்போலவே நல்லாருக்கு ஜெ.

ADMIN said...

///ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்
உள்ளும் புறமும்
ஒன்றுகூடி ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றுகின்றன
இதுவே அவளுடனான
கடைசி சந்திப்பென..
//// முதல் வரியிலேயே முடிவும் என்னவென்று அறிந்துகொண்டேன்..!! சுவைமிக்க கவிதை.. வாழ்த்துக்கள்..!!

சுசி said...

சில விஷயங்களில் பெண்கள் ரொம்ப உறுதியா இருப்பாங்க ஜெயந்த்..

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

r.v.saravanan said...

கவிதை அருமை

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கடைசி சந்திப்பு முடிவில்லா பயணமாய் அமைய வாழ்த்துக்கள்..:))

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

இப்படியே சொல்றே ஆனா மீண்டும் அவளை சந்தித்து கொண்டு தானே இருக்கே ///

சந்திச்சாக வேண்டியிருக்கே நண்பா

@#@@@@

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
நாமும் கடந்ததை மறந்து,எதிகாலம் ஏற்றம் பெற எழுச்சி கொள்வோம்... ///


அதற்க்கான முயற்சியில் தான் நானும்

@@#@#@##@

பாட்டு ரசிகன் said...

அசத்தல் கவிதை..
வாழ்த்துக்கள்.. //

நன்றி நண்பரே

@@@#@#@@#

சே.குமார் said...

கவிதை அருமையா இருக்கு. //

நன்றி

@@@

முனியாண்டி said...

Nice //

thanks annaa

@@@@@

Chitra said...

...... What a change of feeling for each other! நல்லா எழுதி இருக்கீங்க. //

நன்றி சகோதரி

ஜெயந்த் கிருஷ்ணா said...

ℜockzs ℜajesℌ♔™ said... //

thanks rajesh..
நானக் மனசால பேசிப்போம்.. அதனால செலவு அதிகமில்ல

@@@@@

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது ஜோதிதானே...... வெரிகுட்... கீப் இட் அப்......! ///

தேங்க்ஸ் மாம்ஸ்.. அது ஜோதியில்ல

@#@@@@

நாகராஜசோழன் MA said...

மச்சி கொன்னுட்டே போ!! //

இப்படி என்னைய கொலைகாரன் ஆக்குறியே யாரை மச்சி..

@@@@@

எஸ்.கே said...

இந்த தமிழ்மண வாரம் இனிமையாக அருமையாக செயல்பட்டீர்கள் வாழ்த்துக்கள் நண்பா! ///

மிக்க நன்றி நண்பரே


@@@@##@#@#

vinu said...

thanks vinu..

@@@#@#@

Sriakila said...

nice one Jayanth! ///

thanks sister

ஜெயந்த் கிருஷ்ணா said...

நிரூபன் said...

வருகைக்கு மிக்க நன்றி அன்பரே.. உங்கள் புரிதல் என்னை மிகவும் வியப்பிலாழ்த்துகிறது. பெரும்பாலும் சரி தான்..


@@@@#@#@#@#

ப்ரியமுடன் வசந்த் said...

வழக்கம்போலவே நல்லாருக்கு ஜெ. ///

thanks vasanth

####


சுசி said...

சில விஷயங்களில் பெண்கள் ரொம்ப உறுதியா இருப்பாங்க ஜெயந்த்..

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.///

நன்றி சகோதரி.. எப்போது ஒரு முடிவில் உறுதியாக இருந்தால் நல்லதென்று நினைக்கிறேன்


#####

r.v.saravanan said...

கவிதை அருமை //

நன்றி


##@@#@

அப்பாவி தங்கமணி said...

கடைசி சந்திப்பு முடிவில்லா பயணமாய் அமைய வாழ்த்துக்கள்..:)) //

இனிமேல் அந்த சந்திப்பு நிகழாமல் இருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைக்கிறேன்


@#@@##@#@#

தோழி பிரஷா said...

கவிதை அருமை.... //

நன்றி சகோதரி..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
செல்வா said...

இப்பத்தான் படிச்சேன் .. ரொம்ப இயல்பாவும் அதே சமயம் ஒரு சிலிர்ப்பும் வருது. நீங்க சொன்னது புரிஞ்சது .. சீக்கிரமா வாங்க அண்ணா.. ethu

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது//

இன்று போய் நாளை வா தீர்மானங்கள்...அழகான கவிதை..:)

எவனோ ஒருவன் said...

தங்கள் தளத்திற்கு முதல்முறை வருகிறேன். இக்கவிதையை வாசித்ததும் தங்கள் தளம் மீதான எதிர்பார்ப்பு என்னுள் பல மடங்கு அதிகரித்துவிட்டது. கவிதை மிக அருமை. நிறைய மனங்களின் வலியை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். அருமை.

////மீண்டும்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
இது தான் அவளுடனான
கடைசி சந்திப்பென...////

:-) ரசித்தேன். நானும் மீண்டும் ஒரு சந்திப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்....

அன்புடன் மலிக்கா said...

கடைசி கடைசியென நினைக்கும்போதெல்லாம் அதுவே மீண்டும் மீண்டும் தொடரும் என தெளிவாக்கப்பட்டுவிடுகிறது..

மிக அருமையாக கவிதை வாழ்த்துக்கள்..

KOLLY123 said...

உங்கள் இணைய தளத்தை இலவசமாக விளம்பரம் செய்ய கிளிக் செய்யுங்கள் .........


தற்பொழுது பெருகிவரும் இணைய தளங்களில் உங்களுடைய இணைய தளமும் சிறப்பான இடம் பெற உங்களை தமிழ் டுடே நொவ் உடன் இணைத்து கொள்ளுங்கள் ,,,,
இதில் இணைத்து கொள்ள உங்களுடைய இணைய தள முகவரியை ckavin@rocketmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுபவும் ,,,,,
உங்களுடையா தளம் கண்டிப்பாக என்னுடைய இணைய தளத்தில்,,,,,,,
முக்கிய குறிப்பு : உங்கள் தளத்தில் என்னுடைய சிறிய விளம்பரம் இடம்பெற வேண்டும் ,,,,இதற்கு சம்மதம் என்றால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு உங்கள் தளத்தை சிறப்படைய செய்யுங்கள்,,,,,

இப்படிக்கு,
Admin,
www.tamiltodaynow.in
Contact : skype : kavin1432
Mail : ckavin@rocketmail.com

டக்கால்டி said...

Super ah irukku boss