கொலையும், தற்கொலையும் பின்னே ரைட்டர் நாகாவும்


தோழர்  "ரைட்டர் நாகா" அவர்களுக்கு வணக்கம்,

தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த அவளும் அவனும் பின்னே ரைட்டர் நாகாவும்! என்ற பதிவை படித்தேன், தங்கள் எழுத்துக்களிலுள்ள உயிரோட்டத்தை பார்த்த அந்த நொடியில்.அகம் மகிழ்ந்தேன் அதனால் சுயம் தொலைத்தேன்.தங்களை நான் ஒரு முறை கூட பார்த்ததில்லையாததால்  தங்களுக்கு நான்கைந்து முறை தொலையாடி பேசியிருக்கிறேன், தங்களின் மெதுவான பேச்சு, பேச்சிலுள்ள லாவகம், பேச்சினூடே தாங்கள் இலைமறை காயாக சொல்லும் தகவல்கள் போன்றவற்றை கேட்ட மாத்திரத்திலே "மொழி" திரைப்படத்தில் மண்டையில் மணி அடிப்பது போன்று எனக்கும் எனக்கும் ஒரு சத்தம் கேட்டது. மிக அருமையான சத்தம் உன்னித்து என் சிந்தையை கூர்மையாக்கி கேட்டதில் அந்த சத்தம் சில நொடிகள் ஒப்பாரி சத்தம் போலவும், சில நொடிகள்  பறை கொண்டாடிக்கும் சாவு மேளம் போலவும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன்னலோரத்தில் அமர்ந்து அதிவேகத்தில் பயணிக்கும் அழகு பதுமையின் முகம் போன்று தெளிவில்லாமல் கேட்டுக்கொண்டே இருந்தது அப்போதே நான் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன் தங்கள் மிக விரைவில் மிகச்சிறந்த எழுத்தாளனாகி ரைட்டர் ஆவீர்கள் என்று, ஞானிகள் சொல் பலிக்காமல் போகாது என்பார்கள்.

கடந்த சில காலங்களாக தங்களிடம் சரிவர தொலைபேச முடியவில்லை. தங்களை தொடர்பு கொள்ள நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் தொல்வியிலையே வெற்றிகரமாக முடிந்தன. அப்பொழுது தான் நான் தாங்கள் தங்களை செம்மையாக்கி, சீர்படுத்தி, சிகையலங்காரம் செய்து ஒரு சிறந்த எழுத்தாளர் என்று சொல்லும் ரைட்டர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கலாம் என்னை அறியாமல் எண்ணிக்கொண்டேன். ஒரு வேளை அக்காலகட்டத்தில் தங்களை நான் தொந்தரவு செய்திருந்தால் தாங்கள் எழுத்தாளர் என்று சொல்லக்கூடிய ரைட்டர் ஆக முடியாமல் போயிருக்கலாம். எந்திரன் படத்தில் வரும் ரஜினி முந்தைய அசத்தல் பிகரும் இப்போதைய அட்டுபிகருமான ஐஸையும் மறந்து வசீகரன் என்ற ரோபோ ரஜினியை குளோனிங் செய்து உருவாக்கியது போன்று தாங்கள் அனைவரையும் மறந்து ஆற்றங்கரை, குளத்தங்கரை, மகளிர் கல்லூரிகள் மற்றும் மகளிர் விடுதிவாசல்கள் போன்ற இடங்களில் காத்திருந்து அனைத்தையும், அனைவரையும்  மறந்து எழுத்தாளர் ஆவதற்கு தாங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தைகள் முயற்சிகள், உழைப்புகள் போன்றவற்றை நான் கேள்விப்பட்ட வேளையில் உள்ளம் உடைந்து வெந்து வெம்பிப்போனேன் தோழரே. 

இப்படி வெம்பிப்போன மனதுடன் தும்பிகளை துணைக்கழைத்து கொஞ்சி குலாவி கொண்டிருந்த நல்லதொரு வேலையில், பொழுதினில், நேரத்தில் சமயத்தில் தான் தாங்கள் எழுதிய இலக்கிய செறிவு வாய்ந்த படைப்பை பார்த்தேன். பார்த்த மாத்திரத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற எண்ணம் என் மனதில் ஒரு மின்னல் போல வந்து மறைந்தது என்பதை நான் இங்கே சொல்லிக்கொள்ள வெட்க்கப்படவோ வேதனைப்படவோ வருத்தப்படவோ இல்லை. 

இனி தங்கள் இலக்கிய செறிவு மிகுந்த கட்டுரைக்கு வருவோம்..

தோழரே தங்கள் பதிவின் முதல் வரியையே "அங்கிங்கெனாதபடி" என்று ஆரம்பித்தது தான் எனக்கு  அளப்பரிய ஆச்சர்யத்தையும் வியப்பையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. இப்படி ஆரம்பிக்க வேண்டுமென்றால் தாங்கள்  சாயங்காலம், மழைக்காலம், வெயில்காலம் போன்ற எத்தனை விதமான காலங்களிலுள்ள ஏடுகளையும் கல்வெட்டுகளையும் புத்தகங்களையும் இணைய பக்கங்களையும் புரட்டியிருப்பீர்க்ள என்பதை நினைத்தாலே எனக்கு மயக்கம் வந்துவிடும் போலிருக்கிறது ஆகையால் கொஞ்சம் பொறுத்திருங்கள் தோழரே நீர் அருந்திவிட்டு வருகிறேன். 

நிற்க...

மீண்டும் வருவோம் முதல் வரிக்கே... தங்கள் கட்டுரையின் முதல் வரியிலையே நான் பார்த்த மாத்திரத்தில வாய்திறந்து சுவாசிக்க வைத்த இன்னொரு விஷயம் ஊழல்  என்ற வரத்தை தான். ஊழல் பற்றி தெரிய வேண்டுமானால் தாங்கள் அரசியலில் எத்தனை பழங்களை தின்று கோட்டை போட்டிருப்பீர்கள் என்று நினைக்கும் போது எனக்கு விழி பிதுங்குகிறது. 

அடுத்தடுத்த வரிகளை பற்றி எனக்கு என்னசொல்வது என்றே தெரியவில்லை தோழரே. உணவு, உடை, இருப்பிடம் என்பனவற்றை பார்க்கும் போது தங்களின் வாரிக்கொடுக்கும் வள்ளல் குணம் எனக்கு தெரியவந்தது. அதற்கடுத்த வரிகளில் தாங்கள் எழுதியிருக்கும் சிலவார்த்தைகளை பார்க்கும் போது யாரையோ கன்னாபின்னாவென்று திட்டுவது போன்று தோன்றியது, அதுவே எனக்கு தங்கள் மிகவும் கோபக்காரர் என்பதையும் சொல்லாமல் சொல்லிற்று. 

அதற்கு பிந்தைய வரிகளை எவ்வளவு தரம் வாசித்தும் என் சிறு மூளையின் ஒரு மூலைக்கு கூட எதுவும் பிடிபடவில்லை. தமிழ் போன்ற சாயலில் வேற்று மொழிகள் கலந்து எழுதலாம் என்பதையும் அங்கு தான் நான் தெரிந்து கொண்டேன். எனக்கு கொரிய மொழியில் எழுதும் ஒரு சகோதரரை நன்றாக தெரியும் அவரின் எழுத்துக்களை படித்து படித்து தற்போது சிறிதளவு கொரிய மொழி கட்டுரைகள் என்னால் படிக்க முடிகிறது ஆனால் தங்களின் இந்த கட்டுரையின் பிந்தைய பகுதிகளை  நான் இதுவரையில் கேள்விப்படாத ஒரு மொழியில் தான் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும் என்பது எனது அனுமானம். இவற்றை எல்லாம் பார்த்தால் நாம் என்ன மாதிரியான சூழலில் வாழ்கிறோம் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.  ஆகையால் நானறிந்த விஞ்ஞானிகளும் அறிஞர்களுமான டெரர்கும்மி நண்பர்களிடம் தங்களின் கட்டுரையை ஆராய்ச்சிக்கு அனுப்பலாம் என்று என் ஒரு மனதுடன் முடிவு செய்திருக்கிறேன். 

இவற்றையெல்லாம் வைத்து பக்கத்து அப்பார்ட்மெண்டில் ஆண்டடிகளை சைட்டு அடிக்கும் தொலை நோக்கு பார்வையுடன் கொஞ்சம் தூரமாக நின்று பார்த்தால் தாங்கள் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் என்று இலக்கியவாதிகளால் கூறப்படும் ரைட்டர் என்பதில் எந்த ஐயமில்லை. 

மன்னிக்கவும்  தோழரே  தங்களை பற்றியும், தங்களின் எழுத்துக்களை பற்றியும் இன்னும் எவ்வளவோ சொல்லவேண்டும் போல தான் தோன்றுகிறது ஆனால் தங்களின் அந்த இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிக்க கட்டுரையை பற்றி யோசிக்கும் தருவாயில் கூடவே கொலை மற்றும் தற்கொலை செய்யும் எண்ணங்களும் வந்து தொலைக்கின்றன ஆகையால் என் உயிருக்கு பயந்து நான் இந்த புலம்பலை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.  

"மீண்டும் சந்திக்க முயற்ச்சிக்கிறேன்"
நன்றி. 


15 comments:

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ்வ்வ்வ் ....
கவிதைவீதி சௌந்தர்....

சும்மா இருக்க கூடாதா?????????

இப்ப பாரு கும்மி குரூப் கிளம்பிட்டாங்க...
யாருயா....தாங்கறது...??????

சௌந்தர் நீ இப்ப கொலை ஆகப்போற பாரு....

மாலுமி said...

தக்காளி......இருடி வரேன் :)

வெறும்பய said...

நாய் நக்ஸ் said...

இப்ப பாரு கும்மி குரூப் கிளம்பிட்டாங்க...
யாருயா....தாங்கறது...??????//

அண்ணே நாங்க எங்கேயும் கிளம்பல.. கிளம்பவும் மாட்டோம்.. பிடிச்சு இழுக்கிறது வரைக்கும்

வெறும்பய said...

மாலுமி said...
தக்காளி......இருடி வரேன் :)//

நீயும் பதிவு எழுத போறியா மச்சி... பிளீஸ் சொன்னா கேளு வேணாம்

எஸ்.கே said...

//அகம் மகிழ்ந்தேன் அதனால் சுயம் தொலைத்தேன்.//

பார்த்தீங்களா, நீங்க சந்தோசமா இருந்தாலே எதையாவது தொலைச்சிடுறீங்க!:-)

வெறும்பய said...

எஸ்.கே said...
//அகம் மகிழ்ந்தேன் அதனால் சுயம் தொலைத்தேன்.//

பார்த்தீங்களா, நீங்க சந்தோசமா இருந்தாலே எதையாவது தொலைச்சிடுறீங்க!:-)//

அப்போ பழையது மாதிரி சோகமாவே இருக்கிறது நல்லதுன்னு சொல்றீங்களா நண்பா

பட்டிகாட்டான் Jey said...

டேய் ஜெயந்து எனக்கு ஏற்கனவெ இதயத்த கிழிச்சி தச்சிருக்காய்ங்க.... அதனால தலைப்பு படிச்சிட்டு நேரா கமெண்ட் பாக்ஸ் வந்துட்டேன். எப்படி தப்பிச்சிடேனா.....

ங்கொய்யாலே இப்ப என்னடா பண்ணுவே... ராஸ்க்கல்...

எஸ்.கே said...

//Blogger வெறும்பய said...

எஸ்.கே said...
//அகம் மகிழ்ந்தேன் அதனால் சுயம் தொலைத்தேன்.//

பார்த்தீங்களா, நீங்க சந்தோசமா இருந்தாலே எதையாவது தொலைச்சிடுறீங்க!:-)//

அப்போ பழையது மாதிரி சோகமாவே இருக்கிறது நல்லதுன்னு சொல்றீங்களா நண்பா //


இல்லை... சந்தோசம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்று என் பதிவில்
கொலையாய் கொல்வது எப்படி தூ.சு (23234324545435)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

test

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களுடைய பதிவில் பொம்மை எதுவும் போடவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

Nagarajachozhan MA said...

தோழர் ஜெயந்த் அவர்களே, உங்களின் கட்டுரையை பலமுறை படித்தேன்.. ஒவ்வொரு வரியும் படி தேன்.. (நன்றி சங்கர்ஜி)

Nagarajachozhan MA said...

இங்கே மட்டும் தான் நாய்-நக்ஸ் அவர்களின் பின்னூட்டம் தமிழில் உள்ளது.. :(

வெளங்காதவன்™ said...

//தொல்வியிலையே///

ஏண்டா மச்சி? பாபு கிட்ட தமிழ் ட்யூசன் போறியா?

:-)

மாணவன் said...

:-)
கவிதை அருமை..... (ஊ.கு.15)