நான் பிறந்தவுடன் என்னை வாரியெடுத்து
நீ உச்சி முகர்ந்திருக்க்லாம்
உன் தோளிலும் மாரிலும் கிடத்தி
தாலாட்டு பாடி உறங்க வைத்திருக்கலாம்
நான் தவழ ஆரம்பித்த பொழுதுகளில்
நீ எல்லையில்லா ஆனந்தமடைந்திருக்கலாம்
தட்டு தடுமாறி எழ முயற்சித்து
கீழே விழுந்த நாட்களில்
அழுத என்னை அரவணைத்துவிட்டு
நீ அழுதிருக்கலாம்
நான் நடை பயில
நீ உருட்டுவண்டியாகியிருக்கலாம்
நான் நடக்க துவங்கிய பின்
உன் விரல்கள் பிடித்து
நான் உன்னையோ
நீ என்னையோ
பின் தொடர்ந்திருக்கலாம்
இவ்வளவும் செய்திருக்கலாம் நீ
ஆனாலும்
என்ன செய்ய
நினைவுகளை தேக்கி வைக்கும்
பருவம் நான் அடையும் முன்னரே
நாங்கள் வேண்டாமென அனாதைகளாக்கிவிட்டு
இறைவனடி சேர்ந்த உன்னை வணக்குவதை விட
நீயில்லாத நாள் முதல் நீயாகவும் மாறி
நீயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற நினைப்பை
இன்று வரை எங்களுக்கு வரவிடாமல்
தாய் என்ற பந்தத்தில் இருக்கும் எங்கள் தெய்வத்தை
என்றும் வணங்கினாலும் இன்று ஒரு முறை கூடுதலாக
உன் சார்பாக வணங்குகிறேன் அப்பா.
ஆனாலும் We Miss you DAD ...
7 comments:
:'(
நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள்!
A nice tribute to father!
உணர்வுப்பூர்வமான கவிதை..
மச்சி...கண்ணு கலங்க வெச்சுட்டியே :(
மனச என்னவோ பண்ணுது...தம்பி.
no words to say
Post a Comment