மூன்றாம் ஜாமம்.


நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்த என்னை தொடர்பதிவு என்று உள்ளே இழுத்துவிட்ட திரு வைகை அவர்களுக்கு கொலைவெறியுடன் ஒரு வணக்கத்தை (வணக்கமா நன்றியா) தெரிவித்துவிட்டு வாங்க போலாம்.. 

யோவ்.. யோவ்.. எங்கையா போறீங்க நான் சொனது பதிவ படிக்க போலாமின்னு.. 




1. விரும்பும் 3 விஷயங்கள்


அ. தூறலுடன் கூடிய மாலை நேர கடற்கரை 
ஆ. ஜன்னலோர கடைசி இருக்கை பயணம்  
இ.  அடைமழை தேநீர் 




2. விரும்பாத 3 விஷயங்கள்

அ.  என்னிடம் கேள்விகள் கேட்ப்பது (ஆனா நான் கேட்ப்பேன்)
ஆ. தூக்கம் கலைப்பது 
இ.  அதிக சத்தம் 


3. பயப்படும் 3 விஷயங்கள்

அ. என்றாவது ஒரு நாள் ஜோதி கதையை "ஜோதி" படிப்பாள் என்று நினைக்கும் போது 
ஆ. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பைக் ஓட்டும் போது மட்டும் 
இ.  தற்போதைய இயந்திர வாழ்க்கை. 


4. புரியாத 3 விஷயங்கள்

அ.  என்னவள் கண்கள் பேசும் மௌன மொழி 
ஆ. பள்ளிக்காலம் முதல் கல்லூரிக்காலம் வரை கணக்குப்பாடம்   
இ.  என்னையும் ஒரு பதிவர் என்று நம்புவது  


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்

அ.  ஒடஞ்ச  கீபோர்ட்
ஆ. ஓடைய போற மௌஸ் 
இ.  அவள் நினைவுகளை நித்தம் பதிவு செய்யும் டைரி. 


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்

அ. மலையாள நடிகர் Suraj Venjaramoodu ன் நகைச்சுவைகள் 
ஆ. கும்மி குரூப் மக்களின் கமெண்ட்கள் மற்றும் பதிவுகள் 
இ. கல்லூரிகால ஆட்டோகிராப் புக்.

7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

அ. இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன் 
ஆ.
இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன்  
இ. இதை டைப் 
செய்து கொண்டிருக்கிறேன்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. பொறுமை 
ஆ. சமையல் (வருங்காலத்தில உதவுமில்லையா)
இ. செய்யிற வேலைய ஒழுங்கா செய்ய 


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்

அ. மீன் குழம்பு (அம்மா சமைத்தது மட்டும்)
ஆ. காரக்கொழம்பு
இ. கேரளா உணவுவகைகள் எல்லாமே. 


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

அ. மரணம் மற்றும் துயர செய்திகள் 
ஆ. அட்வைஸ் 
இ. அள்ளக்கைகளின் அலப்பறைகள் 


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

அ. காதலின் தீபம் ஓன்று (தம்பிக்கு எந்த ஊரு)
ஆ. வெண்மதியே வெண்மதியே (மின்னலே).
இ. பூவே பூவே பாலப்பூவே (தேவதூதன் -  மலையாளம்)


14. பிடித்த 3 படங்கள்

அ. மின்னலே 
ஆ. பிரம்மாரம் (மலையாளம்)
இ. கம்யம் (தெலுகு)


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

அ. உண்ண உணவு 
ஆ. உடுத்த உடை 
இ.  இருக்க இடம் 
       (பள்ளிக்காலத்தில படிச்சதெல்லாம் மறக்கமாட்டமில்ல)


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்


17. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்



18. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்



19. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்

அ. பனங்காட்டு நரி  (இலக்கியம் மட்டும் வேனாஞ்சாமி )
ஆ. மாலுமி (தண்ணியிலிருந்து கொஞ்சம் வெளிய வாங்கையா)

இ. சுற்றுலா விரும்பி - அருண் 



இங்கே கூப்பிட்டிருக்கிற அத்தன பேர் பிளாகும் தூசு படிஞ்சு போய் கிடக்கு.. இதில ஒரு சிலருக்கு ப்ளாக் ன்னு ஒண்ணு இருக்கிறதே மறந்து போயிருக்கும்.. அதனால அண்ணன் சொன்னத மறுக்காம ஒழுங்கு மரியாதையா இந்த தொடர் பதிவ எழுதுங்க.. இல்லன்னா பயங்கரமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. இவ்வளவு சொல்லியும் எழுதாம போனா நான் மறுபடியும் கதை எழுத ஆரம்பிச்சிருவேன் சொல்லிட்டேன்.. 

68 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ளாக் பூரா ஒரே தூசியா இருக்குப்பா....

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ப்ளாக் பூரா ஒரே தூசியா இருக்குப்பா...//

பார்த்து பத்திரமா வாங்க..பாம்பு பூரான் ஏதாவது இருக்க போகுது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்த என்னை//////

அது என்ன ஜோதிய தேடுற வேலையா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்த என்னை//////

அது என்ன ஜோதிய தேடுற வேலையா//

ஜோதி எல்லாம் பழசு மாம்ஸ்,, இப்போ ஜெயஸ்ரீ தான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// தொடர்பதிவு என்று உள்ளே இழுத்துவிட்ட திரு வைகை அவர்களுக்கு கொலைவெறியுடன் ஒரு வணக்கத்தை (வணக்கமா நன்றியா) தெரிவித்துவிட்டு வாங்க போலாம்.. ////////

பார்ரா........?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// தொடர்பதிவு என்று உள்ளே இழுத்துவிட்ட திரு வைகை அவர்களுக்கு கொலைவெறியுடன் ஒரு வணக்கத்தை (வணக்கமா நன்றியா) தெரிவித்துவிட்டு வாங்க போலாம்.. ////////

பார்ரா........?

/////

மனுஷன் மட்டும் கையில மாட்டுனாறு.. அவ்வளவு தான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அ. தூறலுடன் கூடிய மாலை நேர கடற்கரை ///////

ஏன் காலைல தூறல் விழுந்தா பாக்க மாட்டீங்களாக்கும்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அ. தூறலுடன் கூடிய மாலை நேர கடற்கரை ///////

ஏன் காலைல தூறல் விழுந்தா பாக்க மாட்டீங்களாக்கும்?

///\

இதுக்கு தான் நான் இந்த ப்ளாக் பக்கமே வரதில்ல.. எப்படியெல்லாம் கேள்வி கேக்குறாங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆ. ஜன்னலோர கடைசி இருக்காய் பயணம் //////

கடைசி சீட்ல ரொம்ப தூக்கி தூக்கி போடாது....? ஓ நீ உக்காந்துட்டா வண்டி மூவாகுறதே அதிகம் இதுல எங்க தூக்கி போடுறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////2. விரும்பாத 3 விஷயங்கள்

அ. என்னிடம் கேள்விகள் கேட்ப்பது ///////

அப்போ எல்லா எக்சாமும் அவுட்தானா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ஆ. ஜன்னலோர கடைசி இருக்காய் பயணம் //////

கடைசி சீட்ல ரொம்ப தூக்கி தூக்கி போடாது....? ஓ நீ உக்காந்துட்டா வண்டி மூவாகுறதே அதிகம் இதுல எங்க தூக்கி போடுறது?

//

வெட்க்கம் அவமானம்.. (ஐயோ ஐயோ)

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////2. விரும்பாத 3 விஷயங்கள்

அ. என்னிடம் கேள்விகள் கேட்ப்பது ///////

அப்போ எல்லா எக்சாமும் அவுட்தானா?

//

இதிலென்ன சந்தேகம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அ. என்றாவது ஒரு நாள் ஜோதி கதையை "ஜோதி" படிப்பாள் என்று நினைக்கும் போது ///////

ஆமா படிச்சிட்டு ஆள கண்டுபுடிச்சி வந்து கட்றா தாலியன்னா அப்புறம் என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////4. புரியாத 3 விஷயங்கள்
ஆ. பள்ளிக்காலம் முதல் கல்லூரிக்காலம் வரை கணக்குப்பாடம்//////

ஆனா கணக்கு பண்றது மட்டும் நல்லா புரியுமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இ. அவள் நினைவுகளை நித்தம் பதிவு செய்யும் டைரி. ///////

இதுல இருந்துதான் ஜோதி, ஜெயஸ்ரீன்னு மேட்டர் ரெடியாகுதா?

Unknown said...

மாப்ள சிங்கத்த எழுப்பியது யாரு.....பாருங்கய்யா எம்புட்டு பேசுது ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
ஆ. கும்மி குரூப் மக்களின் கமெண்ட்கள் மற்றும் பதிவுகள் //////

ஏன் இந்த வெளம்பரம்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அ. என்றாவது ஒரு நாள் ஜோதி கதையை "ஜோதி" படிப்பாள் என்று நினைக்கும் போது ///////

ஆமா படிச்சிட்டு ஆள கண்டுபுடிச்சி வந்து கட்றா தாலியன்னா அப்புறம் என்ன பண்றது?

//

அவ புருசன் கதி அதோ கதி தான்,,...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
இ. கல்லூரிகால ஆட்டோகிராப் புக்./////


நீ கைநாட்டுபுக்குதானே வெச்சிருப்பே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////4. புரியாத 3 விஷயங்கள்
ஆ. பள்ளிக்காலம் முதல் கல்லூரிக்காலம் வரை கணக்குப்பாடம்//////

ஆனா கணக்கு பண்றது மட்டும் நல்லா புரியுமே?

//

எஸ் எஸ்

Unknown said...

அந்த டைரிக்கு மட்டும் வாய் இருந்தா.....ஓ ன்னு அய்வும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

அ. இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன் /////


தம்பி பதிவு பப்ளிஷ் ஆகிடுச்சு, போதும் டைப் பண்ணது.......!

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கியுலகம் said...
மாப்ள சிங்கத்த எழுப்பியது யாரு.....பாருங்கய்யா எம்புட்டு பேசுது ஹிஹி!

//

வாங்க தலைவா... நலமா.. (இத நீங்க தான் கேட்க்கனுமோ)

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
இ. கல்லூரிகால ஆட்டோகிராப் புக்./////


நீ கைநாட்டுபுக்குதானே வெச்சிருப்பே?

//

போலீஸ் ஸ்டேஷன் தவித=ற எங்கயும் கைநாட்டு யூஸ் பண்றதில்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
ஆ. சமையல் (வருங்காலத்தில உதவுமில்லையா)///////

சமைச்சா மத்தவங்களுக்கும் கொஞ்சம் கொடுக்கனும், பழக்க தோசத்துல நீயே சாப்புட்டு முடிச்சிடாத.....

Unknown said...

என்னய்யா இன்னும் அந்த ராசாத்திய மறக்கலியா ஹிஹி!

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கியுலகம் said...
அந்த டைரிக்கு மட்டும் வாய் இருந்தா.....ஓ ன்னு அய்வும்!

///

அழுதாலும் விடமாட்டமில்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
இ. செய்யிற வெளிய ஒழுங்கா செய்ய ///////

ராஸ்கல்,மொதல்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம டைப் பண்ணு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

அ. உண்ண உணவு
ஆ. உடுத்த உடை
இ. இருக்க இடம்
(பள்ளிக்காலத்தில படிச்சதெல்லாம் மறக்கமாட்டமில்ல)//////

இத அப்பவே பரிட்சைல எழுதி இருந்தா பாசாவது ஆகி இருக்கலாம்ல?

Unknown said...

16-19 சூப்பர். ஸ்டார்ட் மியூசிக்.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
ஆ. சமையல் (வருங்காலத்தில உதவுமில்லையா)///////

சமைச்சா மத்தவங்களுக்கும் கொஞ்சம் கொடுக்கனும், பழக்க தோசத்துல நீயே சாப்புட்டு முடிச்சிடாத.....

...

அது சமைக்கிற பொருள பொறுத்து முயற்சி செய்யலாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கியுலகம் said...
என்னய்யா இன்னும் அந்த ராசாத்திய மறக்கலியா ஹிஹி!

//

யார் இது நம்ம லிஸ்ட்ல இதுவரைக்கும் வராத பெயரா இருக்கே..

எஸ்.கே said...

இன்னும் யாராவது விட்டுப்போச்சானு பாருங்க!:-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலாநேசன் said...
16-19 சூப்பர். ஸ்டார்ட் மியூசிக்.....

//

ஹா ஹா தொலைந்தார்கள் எதிரிகள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...
இன்னும் யாராவது விட்டுப்போச்சானு பாருங்க!:-)

//

ரொம்ப நேரம் யோசிச்சேன் நண்பா.. இனி யாரவது இருந்தா சொல்லுங்க செர்த்திரலாம்..

Unknown said...

அந்த டைரியையும் பிலாகில அப்டேட் பண்ணுவீங்களா பாஸ்?

Unknown said...

அந்த டைரியையும் பிலாகில அப்டேட் பண்ணுவீங்களா பாஸ்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜீ... said...
அந்த டைரியையும் பிலாகில அப்டேட் பண்ணுவீங்களா பாஸ்?

?//

போட்டுட்டா போச்சு.. நீங்க கேட்டு இல்லன்னு சொல்ல முடியுமா பாஸ்

நாய் நக்ஸ் said...

என்னவோ நடக்குது பார்போம்,,,,

WILPER S.RAJ FAN said...

ஹலோ...மைக் டெஸ்டிங் ,,,,

தினேஷ்குமார் said...

மாம்ஸ் நான் படிச்சிட்டு வர்றேன் ... ஆனா எப்ப வருவேன் எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது மாம்ஸ் என் நிலைமை அப்புடி ........

மாணவன் said...

வணக்கம்ணே,

என்னாண்ணே ப்ளாக் என்னமோ மூனு மூனா தெரியுது ஓ....எழுதுனதே மூனு மூனாதான் எழுதியிருக்கீங்களா?!

இருங்க படிச்சிட்டு வரேன்...
:)

மாணவன் said...

//அ. என்றாவது ஒரு நாள் ஜோதி கதையை "ஜோதி" படிப்பாள் என்று நினைக்கும் போது ///

அப்ப இன்னும் படிக்கலையா?? :)

மாணவன் said...

//1. விரும்பும் 3 விஷயங்கள்//

இதுல இன்னொன்ன விட்டுட்டீங்க.... ஓ மூனு விசயம் மட்டும்தான் சொல்லனுமோ? :)

மாணவன் said...

கடைசியில 16 - 19 என்னா ராசா இது? இப்படி எல்லோரையும் நீயே சொல்லிட்டீன்னா நாங்க யார தொடர்பதிவுக்கு அழைக்கறது?? :)

மாணவன் said...

நல்லவேள நம்ம தல பட்டாபட்டிய யாவது விட்டு வச்சியே அதுவரைக்கும் சந்தோஷம்... :)

சிங்கையின் சிங்கங்கள் பட்டாபட்டி & வெளியூர்காரன் ரெண்டு பேரையும் நான் புக் பண்ணிட்டேன்பா தொடர்பதிவுக்கு...

இப்படிக்கு
பதிவு எழுதாமலே தொடர்பதிவுக்கு அழைப்போர் சங்கம்
சிங்கை மாவட்டம் 13வது கிளை
சிங்கப்பூர்.
:)

வைகை said...
This comment has been removed by the author.
வைகை said...

அண்ணா... அருமையான பதிவு! சில இடங்களில் சிந்திக்கவும் சில இடங்களில் சிரிக்கவும் வைத்தீர்கள்

வைகை said...

அண்ணா... அது யாருன்னா பன்னிகுட்டி ராமசாமி? இவ்வளவு நல்ல பதிவை இப்படி கிண்டல் அடித்திருக்கிறார்?

வைகை said...

இழுத்துவிட்ட திரு வைகை அவர்களுக்கு கொலைவெறியுடன் ஒரு வணக்கத்தை (வணக்கமா நன்றியா) //

அடங்கொன்னியா.. கால்ல விழுந்து கெஞ்சி கூப்புட சொல்லிட்டு இங்க ஏன் இந்த நல்லவன் வேஷம்?

வைகை said...

யோவ்.. யோவ்.. எங்கையா போறீங்க நான் சொனது பதிவ படிக்க போலாமின்னு.. ///

அட இருய்யா..போய் ஜோதிய பார்த்திட்டு வர்றோம் :))

வைகை said...

என்றாவது ஒரு நாள் ஜோதி கதையை "ஜோதி" படிப்பாள் என்று நினைக்கும் போது //


அத நாங்களே படிக்கல? அவ எங்க படிக்கபோறா?

வைகை said...

என்னவள் கண்கள் பேசும் மௌன மொழி //


என்னவள் கண்கள் பேசும் மௌன மொழி

வைகை said...

மலையாள நடிகர் Suraj Venjaramoodu ன் நகைச்சுவைகள்///

டேய்ய்..சொல்லவந்தது யார? ஒழுங்கா சொல்லிரு :))

வைகை said...

அழகர் said...
அண்ணா... அது யாருன்னா பன்னிகுட்டி ராமசாமி? இவ்வளவு நல்ல பதிவை இப்படி கிண்டல் அடித்திருக்கிறார்?//


ஆமாங்க..அவருக்கு இதே வேலையா போச்சு.. நல்லா கேளுங்க ஆபிசர் :))

இம்சைஅரசன் பாபு.. said...

//அதனால அண்ணன் சொன்னத மறுக்காம ஒழுங்கு மரியாதையா இந்த தொடர் பதிவ எழுதுங்க.//

டேய் ..டேய் படுவா யாருக்கு யாரடா அண்ணன் ....ராஸ்கல் ..

இம்சைஅரசன் பாபு.. said...

சரி எழுதிருவோம் ..எழுதிருவோம் ...

இந்திரா said...

ஜோதி “ஜோதி“யைப் படிக்க வாழ்த்துக்கள்.

செல்வா said...

நீங்க மலையாளமா ? ஒரே மலையாளம் பத்தி அதிகமா இருக்கே ? ஹி ஹி

செல்வா said...

சரி சரி, நேரம் இருக்கும்போது எழுதுறேன்னா.. ஹி ஹி

'பரிவை' சே.குமார் said...

அழகான பதில்கள்.
வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said...

எலேய்... எல்லாரையும் நீயே கூப்பிட்டுட்ட... அப்போ எனக்கு அந்த கேள்வி சாய்ஸ்ல விடறதுக்கா....

karthikkumar said...

தேங்க்ஸ் மாம்ஸ் என் ப்ளாக் அட்ரெஸ் எனக்கே மறந்து போச்சு.. இதுல பாத்துதான் ஞாபகம் வருது... :))

மாலுமி said...

அட பன்னாட.........
மொதல உன் போன் நம்பர் கொடு
ஒரு கடன் பாக்கி இருக்குது........

என்னது என்ன வா ????

நான் உன் மேல வாந்தி எடுக்கணும்
மவனே.......அன்னைக்கு நைட் நீ எஸ்கேப்
ஆன டெரர் சிக்குணன், அவன் மேல வாந்தி எடுத்தேன்

மொதல உன் போன் நம்பர் கொடு

NaSo said...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)))))))))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அப்ப ஜோதி மெய்யாலுமே ஜோதியா? சரி சரி...;))

Josephine Baba said...

சுவாரசியமா சொல்ல வந்ததை சொல்லியிருக்கிங்க. வாழ்த்துக்கள் ஜெயந்த்