மற்றுமொரு கடைசிக்கவிதை

காதல் தொலைத்த காலம் ஒன்றில் 
காற்றில் கலந்து அலைந்து திரிந்த போது 
உருவம் தொலைத்த கவிதையொன்றை
நிலைவை தொலைத்த கரிய நிறமுள்ள
இரவொன்றில் சந்தித்தேன்


எனைக்கண்டதும்
சிலுவை கண்ட வாதை போல
வழி மாறி திரும்பியது 

சரியாக நினைவிலில்லையெனினும் 
உள்ளுள் உறைந்து போன 
உருவமில்லா உறவைப் பற்றிய 
வார்த்தைத் தொகுப்பு போல 
தோன்றி மறைய 

பின்தொடர்ந்து நடக்கத் துவங்கினேன் 
மேகங்களில் தடம் பதித்து 
பதறியோடிச் சென்று 
மரணத்தின் தூரத்திலிருந்த அக்கவிதையை 

பாதையில்லா பாதையினூடே
தடம் பதித்த பக்கங்களெல்லாம் 
சின்னா பின்னமாய் சிதறிக்கிடந்தன 
நினைவுத்துண்டுகள் வார்த்தைகளாய் 

ஓடிச்சென்று எட்டிப்பிடித்தேன் 
மீதமிருந்த வார்த்தைகளை 
சிதறவிடாமல் 

ஏறக்குறைய உருக்குலைந்த 
வார்த்தைகளை உருவம் காண,  
சிதறிக் கிடந்த வார்த்தைகளையும் 
பத்திரமாய் எடுத்து பதறாமல் 
தொடுக்கத் துவங்கினேன்

ஒற்றைத்துளியில் 
உருவாகும் உயிர் போல 
உருவம் பெற்று நின்றது 
அக்கவிதை 

அது 

எழுதுகையில் 
கவிதையினி எழுதுவதில்லையென 
முடிவெடுத்த அக்கணத்தில் 
உருவான மற்றொரு 
கடைசிக் கவிதை...

கடைசிக்கவிதைகள் தொடரலாம்..  

67 comments:

எஸ்.கே said...
This comment has been removed by the author.
எஸ்.கே said...

உயிரைத் தொலைத்த காலம் ஒன்றில்
காற்றில் கலந்து அலைந்து திரிந்த போது
உடலை தொலைத்த ஆவியொன்றை
நிலைவை தொலைத்த கரிய நிறமுள்ள
இரவொன்றில் சந்தித்தேன்

எஸ்.கே said...

எனைக்கண்டதும்
கடன்காரனை கண்ட கடனாளி போல
வழி மாறி திரும்பியது

எஸ்.கே said...

சரியாக நினைவிலில்லையெனினும்
கேமராவில் உறைந்து போன
உருவமுள்ள படங்களின்
தொகுப்பு போல
தோன்றி மறைய

எஸ்.கே said...

பின்தொடர்ந்து நடக்கத் துவங்கினேன்
மேகங்களில் தடம் பதித்து
பதறியோடிச் சென்று
மரணத்தின் தூரத்திலிருந்த
அவனை

ஜெயந்த் கிருஷ்ணா said...

@கொலை
@ஆவி
@கடன்காரன்
@கேமரா


நண்பா கலக்குறீங்க போங்க..

வைகை said...

காதல் தொலைத்த காலம் ஒன்றில்

காற்றில் கலந்து அலைந்து திரிந்த போது
உருவம் தொலைத்த கவிதையொன்றை

நிலைவை தொலைத்த கரிய நிறமுள்ள
இரவொன்றில் சந்தித்தேன்///


ஜோதியை தொலைத்த காலம் ஒன்றில்

வீதியில் அலைந்து திரிந்த போது
உருவம் பெருத்த அவள் அப்பனை
சிரிப்பை தொலைத்த கரிய நிறமுள்ள
அவள் தோழியை
இரவொன்றில் சந்தித்தேன்

எஸ்.கே said...

உயிரைத் தொலைத்த காலம் ஒன்றில்
காற்றில் கலந்து அலைந்து திரிந்த போது
உடலை தொலைத்த ஆவியொன்றை
நிலைவை தொலைத்த கரிய நிறமுள்ள
இரவொன்றில் சந்தித்தேன்

எனைக்கண்டதும்
கடன்காரனை கண்ட கடனாளி போல
வழி மாறி திரும்பினான்

சரியாக நினைவிலில்லையெனினும்
கேமராவில் உறைந்து போன
உருவமுள்ள படங்களின்
தொகுப்பு போல
என் உருவம் தோன்றி மறைய

பின்தொடர்ந்து நடக்கத் துவங்கினேன்
மேகங்களில் தடம் பதித்து
பதறியோடிச் சென்று
மரணத்தின் தூரத்திலிருந்த
அவனை

பாதையில்லா பாதையினூடே
தடம் பதித்த பக்கங்களெல்லாம்
சின்னா பின்னமாய் சிதறிக்கிடந்தன
ஏற்கனவே இறந்த உடல்கள்

ஓடிச்சென்று எட்டிப்பிடித்தேன்
மீதமிருந்த அவனை
தப்பிவிடாமல்


ஏறக்குறைய உருக்குலைந்த
என் உருவம் காண,
அலறிக் கொண்டு ஓட
முடியாமல் திணறியிருந்த
அவனை
பத்திரமாய் பற்றிக் கொண்டு பதறாமல்
கொல்லத் துவங்கினேன்


ஒற்றைத்துளியில்
உருவான ரத்தம்
உருவம் பெற்று பெருகி நின்றது
அவன் அதுவானான்

கடைசியாய் ஒரு கொலை
செய்கையில்
கொலையினி செய்வதில்லையென
முடிவெடுத்த அக்கணத்தில்
உருவான மற்றொரு
கடைசிக் கொலை...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...
காதல் தொலைத்த காலம் ஒன்றில்

காற்றில் கலந்து அலைந்து திரிந்த போது
உருவம் தொலைத்த கவிதையொன்றை

நிலைவை தொலைத்த கரிய நிறமுள்ள
இரவொன்றில் சந்தித்தேன்///


ஜோதியை தொலைத்த காலம் ஒன்றில்

வீதியில் அலைந்து திரிந்த போது
உருவம் பெருத்த அவள் அப்பனை
சிரிப்பை தொலைத்த கரிய நிறமுள்ள
அவள் தோழியை
இரவொன்றில் சந்தித்தேன்

//

ஐயா ராசா எப்படிய இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..

(எனது எழுதினாலும் அது ஜோதிக்குன்னு முடிவு பண்ணிடுறதா)

வைகை said...

எனைக்கண்டதும்
சிலுவை கண்ட வாதை போல
வழி மாறி திரும்பியது //

எனைக்கண்டதும்
நாயை கண்ட பூனை போல
வழி மாறி திரும்பினாள்

வைகை said...

சரியாக நினைவிலில்லையெனினும்

உள்ளுள் உறைந்து போன
உருவமில்லா உறவைப் பற்றிய
வார்த்தைத் தொகுப்பு போல
தோன்றி மறைய ///

சரியாக பார்க்கவில்லைஎனினும்
உள்ளுள் உறைந்து போன
பொறுக்கமுடியாத நாற்றத்தை பற்றிய
மூக்கின் சுவாசம் போல
தோன்றி மறைய

ஜெயந்த் கிருஷ்ணா said...

@ எஸ்.கே

நண்பா *மற்றுமொரு கடைசிக்கொலை* சூப்பர்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

@ வைகை நடத்துனகையா..

இதுக்கு எத்தன எதிர்கவிதை வருதுன்னு எனக்கு பாக்கணும்.. ஏற்க்கனவே எஸ்.கே ஒன்னு எழுதிட்டாறு.. அப்படியே நீங்களும் முழுசா எழுதிடுங்க..

வைகை said...

பின்தொடர்ந்து நடக்கத் துவங்கினேன்
மேகங்களில் தடம் பதித்து
பதறியோடிச் சென்று
மரணத்தின் தூரத்திலிருந்த அக்கவிதையை //

பின்தொடர்ந்து பிச்சை எடுக்க துவங்கினேன்
குப்பைகளில் தடம் பதித்து
பதறியோடிச் விழுந்து பொரண்டு சென்று
அவளின் கைகளில் இருந்த ரொட்டித்துண்டை

kobiraj said...

http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html
மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்சினிமாவில் வெளிவரவுள்ள முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.இது வெற்றி வாய்ப்பு வரிசை முன்னிருந்துபின்னோ பின்னிருந்து முன்னோ அல்ல.

வைகை said...

பாதையில்லா பாதையினூடே
தடம் பதித்த பக்கங்களெல்லாம்
சின்னா பின்னமாய் சிதறிக்கிடந்தன
நினைவுத்துண்டுகள் வார்த்தைகளாய் //


குப்பையில்லா பாதையினூடே
துரத்தி சென்ற பக்கங்களெல்லாம்
சின்னா பின்னமாய் சிதறிக்கிடந்தன
ரொட்டிதுண்டுகள் வீணாக

வைகை said...

ஓடிச்சென்று எட்டிப்பிடித்தேன்
மீதமிருந்த வார்த்தைகளை
சிதறவிடாமல் //

ஓடிச்சென்று பொறுக்கி தின்னேன்
மீதமிருந்த ரொட்டித்துண்டுகளை
சிதறவிடாமல்

வைகை said...

ஏறக்குறைய உருக்குலைந்த
வார்த்தைகளை உருவம் காண,
சிதறிக் கிடந்த வார்த்தைகளையும்
பத்திரமாய் எடுத்து பதறாமல்
தொடுக்கத் துவங்கினேன்///


ஏறக்குறைய உடைந்துவிட்ட
ரொட்டிகளை உருவம் காண,
சிதறிக் கிடந்த ரொட்டிகளையும்
பத்திரமாய் பொறுக்கி பதறாமல்
திங்க துவங்கினேன்

வைகை said...

ஒற்றைத்துளியில்
உருவாகும் உயிர் போல
உருவம் பெற்று நின்றது
அக்கவிதை ///

ஒற்றை கரண்டியில்
உருவாகும் தோசை போல
உருவம் பெற்று நின்றது
அத்தனை ரொட்டிகளும்

வைகை said...

அது


கடைசியாய் ஒரு கவிதை
எழுதுகையில்
கவிதையினி எழுதுவதில்லையென
முடிவெடுத்த அக்கணத்தில்
உருவான மற்றொரு
கடைசிக் கவிதை...///


அது


கடைசியாய் ஒரு ரொட்டி
திங்கும்போது
ரொட்டி இனி தின்பதில்லை என
முடிவெடுத்த அக்கணத்தில்
பொறுக்கி தின்ற மற்றொரு
கடைசிக் ரொட்டி!

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

வைகை said...

@ ஆல்

என்னை மன்னிச்சு.. நல்ல கவிதைய கொலை செய்ததற்கு! நண்பன் என்ற உரிமையில் செய்தேன் :)

சுதர்ஷன் said...

வாழ்த்துகள் :)

எஸ்.கே said...

அந்த கடைசி பேராதான் கவிதைக்கே ஹைலைட்! நல்லா யோசிக்கிறீங்க நண்பா!

ஜெயந்த் கிருஷ்ணா said...

@ ஆல்

என்னை மன்னிச்சு.. நல்ல கவிதைய கொலை செய்ததற்கு! நண்பன் என்ற உரிமையில் செய்தேன் :)

//

எடுரா அந்த அருவாள.. மன்னிப்பாமில்ல மன்னிப்பு.. நான் உங்க ரெண்டு பேர் கவிதையும் படிச்சு சிரிச்சுகிட்டிருக்கேன்..

ரொம்ப நல்லாயிருக்கு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Rathnavel said...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

@S.Sudharshan said...
வாழ்த்துகள் :)

//

நன்றிகள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...
அந்த கடைசி பேராதான் கவிதைக்கே ஹைலைட்! நல்லா யோசிக்கிறீங்க நண்பா!

//

நன்றி நண்பா.. எதிர்பாரா விதத்தில் உங்க கவிதையும் வைகையின் கவிதையும் சூப்பர்...

செல்வா said...

//நிலைவை தொலைத்த கரிய நிறமுள்ள
இரவொன்றில் சந்தித்தேன்
//

எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலே என்னல நடக்கு இங்க?

செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எலே என்னல நடக்கு இங்க?//

தாங்களும் ஒரு கவிதை முயற்சிக்கலாமே ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
எலே என்னல நடக்கு இங்க?

//

வாங்க சாமி.. ஏன் இம்புட்டு நேரம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...
//நிலைவை தொலைத்த கரிய நிறமுள்ள
இரவொன்றில் சந்தித்தேன்
//

எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு//

நல்லவேளை இவனுக்கு எதுவும் புரியல போலிருக்கு.. இல்லன்னா இவனும் ஒரு கவிதை எழுதியிருப்பான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
எலே என்னல நடக்கு இங்க?

//

வாங்க சாமி.. ஏன் இம்புட்டு நேரம்..
/////////

ம்ம் கக்கூஸ்ல தண்ணி வரல அதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எலே என்னல நடக்கு இங்க?//

தாங்களும் ஒரு கவிதை முயற்சிக்கலாமே ?
///////

இதுக்கு மேலயா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
எலே என்னல நடக்கு இங்க?

//

வாங்க சாமி.. ஏன் இம்புட்டு நேரம்..
/////////

ம்ம் கக்கூஸ்ல தண்ணி வரல அதான்...

//

அட கருமம் புடிச்ச்வங்களா. ஏதாவது ஆத்தங்கரை பக்கம் ஒதுங்க வேண்டியது தானே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////கோமாளி செல்வா said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எலே என்னல நடக்கு இங்க?//

தாங்களும் ஒரு கவிதை முயற்சிக்கலாமே ?
///////

இதுக்கு மேலயா?

///

மாம்ஸ் உங்க பாணியில ஒரு கவிதை எழுதிட வேண்டியது தானே.. (ஆனா கக்கூஸ் மேட்டர் மட்டும் வேண்டாம்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
எலே என்னல நடக்கு இங்க?

//

வாங்க சாமி.. ஏன் இம்புட்டு நேரம்..
/////////

ம்ம் கக்கூஸ்ல தண்ணி வரல அதான்...

//

அட கருமம் புடிச்ச்வங்களா. ஏதாவது ஆத்தங்கரை பக்கம் ஒதுங்க வேண்டியது தானே..

/////////

பாதில எப்படி போறது?

Harini Resh said...

கவிதை அருமை ஜெயந்த் அண்ணா :)
எதிர் கவிதைகள் சுப்பர்

செல்வா said...

//அட கருமம் புடிச்ச்வங்களா. ஏதாவது ஆத்தங்கரை பக்கம் ஒதுங்க வேண்டியது தானே..//

ஆனா அதுக்கு ரொம்பதூரம் போகனுமே ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

Harini Nathan said...
கவிதை அருமை ஜெயந்த் அண்ணா :)
எதிர் கவிதைகள் சுப்பர்

//

நன்றி சகோதரி..

இந்திரா said...

அதுவே கடைசிக் கவிதை..
அதிலென்ன மற்றுமொரு கடைசி கவிதை???

இந்திரா said...

//பாதையில்லா பாதையினூடே
தடம் பதித்த பக்கங்களெல்லாம்
சின்னா பின்னமாய் சிதறிக்கிடந்தன
நினைவுத்துண்டுகள் வார்த்தைகளாய் //

அழகான கோர்வை.

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்திரா said...
அதுவே கடைசிக் கவிதை..
அதிலென்ன மற்றுமொரு கடைசி கவிதை???

///

தொடரும் ன்னு கூட போட்டிருக்கேன் அத கவனிக்கலையா நீங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திருவோட்டைத் தொலைத்த காலம் ஒன்றில்
தெருத்தெருவாய் அலைந்து திரிந்த போது
உருவம் தொலைந்த பிச்சைக்காரி ஒருத்தியை
சாப்பாட்டைத் தொலைத்த செந்நிறமுள்ள
மாலையொன்றில் சந்தித்தேன்

எனைக்கண்டதும்
போலீஸ் கண்ட திருடன் போல
வழி மாறி திரும்பினாள்

நன்றாக நினைவிருக்கிறது
உள்ளுக்குள் கசந்து போன
உருவத்தின் உறவைப் பற்றிய
கருமாந்திரம், தொகுப்பு போல
தோன்றி மறைய

தப்பித்துச் செல்லத் துவங்கினேன்
சந்துகளில் தடம் பதித்து
பதறியோடிச் சென்று
அருகில் இருந்த அப்பிச்சைக்காரியை

ப்ளாட்பாரத்தின் பாதையினூடே
படுத்து தூங்கிய பக்கங்களெல்லாம்
வரிசையாக வந்தன
கருமாந்திர வார்த்தைகளாய்

ஓடிச்சென்று காறித்துப்பினேன்
மீதமிருந்த எச்சியை
சிதறவிடாமல்

ஏறக்குறைய உருக்குலைந்த
டொக்கு வாங்கிய அவ்வுருவம் காண
சிதறிக்கிடந்த சோற்றுப்பருக்கைகளை
பத்திரமாய் எடுத்து பதறாமல்
தொடுக்க துவங்கினேன்

ஒற்றைச் சோற்றில்
திருப்தியாகும் உயிர் போல
உருவம் பெற்று நின்றாள்
அப்பிச்சைக்காரி

அது

கடைசியாய் ஒரு பிச்சைக்காரியை
பார்க்கையில்
இனி யாரையும் பார்ப்பதில்லையென
முடிவெடுத்த அக்கணத்தில்
பார்த்த மற்றொரு
அழகான பிச்சைக்காரி…

-ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா)

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//

ஹா ஹா
மாம்ஸ் செமையா இருக்கு,.. சிரிச்சுகிட்டே இருக்கேன்...

கலக்கீட்டீங்க

மாணவன் said...

எழுதியிருக்குறதுலயே ரமேஷ் கவிதைதான் டாப்பு... :))

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...
எழுதியிருக்குறதுலயே ரமேஷ் கவிதைதான் டாப்பு... :))

//
ஹா ஹா அது ரமேசுக்காக நம்ம ராம்ஸ் எழுதினது

அருண் பிரசாத் said...

என்ன மச்சி ஒரே கொலைகளமா இருக்கு....

இன்னைக்கு நீதான் சிக்கினதா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...
என்ன மச்சி ஒரே கொலைகளமா இருக்கு....

இன்னைக்கு நீதான் சிக்கினதா?

//

ஆமா மச்சி நீயே பாரேன்.. என்ன பாடு படுத்துராங்கன்னு..

Mohamed Faaique said...

அடுத்த கடைசிக் கவிதை எப்போ???/

தினேஷ்குமார் said...

நல்லாருக்கு இருங்க மறுபடியும் படிச்சுட்டு வர்றேன் ....

Anonymous said...

கடைசி வரிகள்... வெகு அழகு!

நாய் நக்ஸ் said...

அண்ணே,,,கவிதையா இது????
இல்லை,,,இல்லை ,,,,இது சங்க கால இலக்கியம்,,

நாய் நக்ஸ் said...

நாளை நமது சந்ததிய்னர் இதை தமிழ் பாடத்தில் படிப்பார்கள்,,,
கோனார் நோட்ஸ் உடன் ??????

Chitra said...

அழுவாதீங்க..... அழுவாதீங்க..... எல்லாம் சரியாயிரும். :-))))

Unknown said...

ஏன் மாப்ள கட்சீ கவிதைன்னு சொல்லி மெர்சல் பண்றே...பயமா கீது இல்ல!

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mohamed Faaique said...
அடுத்த கடைசிக் கவிதை எப்போ???///

எப்போ வேணா வரலாம் தலைவா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தினேஷ்குமார் said...
நல்லாருக்கு இருங்க மறுபடியும் படிச்சுட்டு வர்றேன் ....//

ஹா ஹா மாம்ஸ்.. நீங்க எழுதுறத விடவா குழப்பமாயிருக்கு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஷீ-நிசி said...
கடைசி வரிகள்... வெகு அழகு!//

நன்றி தோழரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

NAAI-NAKKS said...
அண்ணே,,,கவிதையா இது????
இல்லை,,,இல்லை ,,,,இது சங்க கால இலக்கியம்,,

நாளை நமது சந்ததிய்னர் இதை தமிழ் பாடத்தில் படிப்பார்கள்,,,
கோனார் நோட்ஸ் உடன் ??????//

அப்போ உங்களுக்கு புரியலைன்னு சொல்லுங்க.. அகவலப்படாதீங்க உங்களுக்கு புரியிறது மாதிரி ஒன்னு எழுதிடலாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra said...
அழுவாதீங்க..... அழுவாதீங்க..... எல்லாம் சரியாயிரும். :-))))//

ஹா ஹா அழுகையா.. இந்த கவிதைய படிச்சு யாரும் அழாம இருந்தா போதும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கியுலகம் said...
ஏன் மாப்ள கட்சீ கவிதைன்னு சொல்லி மெர்சல் பண்றே...பயமா கீது இல்ல!//

கட்சில தொடரலாமின்ன்னு போட்டுக்கிறேன் கண்டுக்கலையா நைனா..

r.v.saravanan said...

நல்லாருக்கு ஜெயந்த்
அடுத்த கவிதை எப்போது

மாலதி said...

ஏறக்குறைய உருக்குலைந்த
வார்த்தைகளை உருவம் காண,
சிதறிக் கிடந்த வார்த்தைகளையும்
பத்திரமாய் எடுத்து பதறாமல்
தொடுக்கத் துவங்கினேன்//வெகு அழகு!

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்ப அருமை.
கடைசிக் கவிதையாக இல்லாமல் கடைசியாய் ஒரு கவிதையாய் தொடரட்டும்...
நம்ம பக்கம் தலை காட்டி நாளாச்சே....
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

கடைசியாய் வந்துட்டேன்.

சத்ரியன் said...

ஏஞ்சாமீ!

வெறும்பய-ன்னு பேரு வெச்சிக்கிட்டு,
வெளியில சொல்ல முடியாம
உள்ளுக்குள்ள எக்கச்சக்கமா செச்சிருக்க போலயே!

விலாசம் தேடி,வீடு வந்து சேர்ரதுக்குள்ள இம்பூட்டு ஆளுக வந்து வழி மறிச்சிக்கிட்டு நிக்கிறாவுளே!

ஒருவழியா வீட்ட கண்டுபுடிச்சிட்டங்ணா.