அஸ்தமனம் - விடியல் - கனவு


நான் என்ன  எழுதினாலும் அதற்கு நக்கலும் நையாண்டியுமாக எதிர்கவிதை எழுதுவதில் வல்லவர்கள் எனது நண்பர்கள். அதே போன்று  நண்பர்கள் இருவர்  நக்கல் நையாண்டி இல்லாமல் நாசூக்காய் எழுதிய கவிதைகளை இங்கே ..  அஸ்தமனம் 

முற்று பெறாத நாளொன்றின்  
இறுதி நேரத்தில் வந்தவள் 
நட்டு வைத்துப்போன 
உயிர்ப்பூக்கும் செடி 
பிரசவித்த தலைப்பூவொன்றின் வாசம் 
கருமையைக் கவ்விப்பிடித்த இரவின் 
ஓரங்களை கிழித்துக்கொண்டு 
என் தூக்கம் கலைக்கிறது

நீங்காமல் நீளும் பல நினைவுகளுக்கு மத்தியில் 
நுரையீரல் தழுவும் ஆழப்புகை
நெஞ்சம் பற்றியெரியும் நாட்டு வாற்றுச்சாராயம் 
முன்னிலையில் முடிவெடுக்கிறேன் 

இந்த இரவும் அஸ்தமிக்கும் 
அக்ககணத்தில் அவள் 
கல்லறைக்கு பக்கத்திலிருக்கும் 
அந்த செடியும்.. 


விடியல் - எஸ்.கே  

தொடங்கி விடாத நாளொன்றின்  
வைகைறை நேரத்தில் வந்தவன் 
நட்டு வைத்துப்போன 
உயிர்ப் பூவொன்றின் 
மலர்ந்திடும் ஓசை 
வெண்மையைக் கவ்விப்பிடித்த விடியலின் 
கதிர்களை ஒருபுறம் தள்ளி
என் தூக்கம் கலைக்கின்றது

புத்தம் புதிதாய் நித்தம் நீளும் 
பல நினைவுகளுக்கு மத்தியில் 
நுரையீரல் முழுதும் தென்றலின் வாசம்
நெஞ்சம் பற்றித்தழுவும் வண்ணக் கனவுகள் 
முன்னிலையில் முடிவெடுக்கிறேன் 

இந்த விடியலும் தொடங்கும் 
அக்ககணத்தில் அவன் 
மனக் கோயிலுக்குள்ளிருக்கும் 
தூணாய் நான்...


கனவுகள் -  வைகை  

முற்று பெறாத நிமிடத்தின்
இறுதி நொடியில்  வந்தவள் 
நட்டு வைத்துப்போன 
கனவு பூக்கும்  செடி 
பிரசவித்த காதல்கனவின்  ஒளியில்
வெறுமையைக்  கவ்விப்பிடித்த மனதின்  
பாரங்களைக்  கிழித்துக்கொண்டு 
என் சோகம்  கலைக்கிறது

நினைவுக்குள்  நீளும் பல கனவுகளுக்கு மத்தியில் 
வெற்றுமார்பு தழுவும் உன் நினைவு
நெஞ்சத்தை நெகிழ்ச் செய்யும் உன் புன்னகை  
முன்னிலையில் முடிவெடுக்கிறேன்

இந்த கனவுகள் முற்றுப்பெறும் 
அக்ககணத்தில் அவள் 
கண்களுக்கு உள்ளிருக்கும் 
என்னைப்பற்றிய கனவுகளும்.......57 comments:

நாகராஜசோழன் MA said...

வடை!!

நாகராஜசோழன் MA said...

யாருமே இல்லையா?

TERROR-PANDIYAN(VAS) said...

சொந்தமா பதிவு எழுத துப்பில்லாத நாய் ஒன்று தான் வாங்கிய எதிர் காறிதுப்புகளை வைத்து பதிவு தேற்றி இருக்கிறாது. நடு குறிப்பு : ஏண்டா பொது வெளியில் ஒரு பிரபல பதிவரை இப்படி கேவலபடுத்தர கேட்டா ஆமாங்க. அப்படி தான் துப்புவேன்.

பின்குறிப்பு : பார்மாலிட்டி பார்த்து பாழா போனது போதும்.. :)

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...
வடை!!//

அடிங்க வடையாவது பாயசமாவது

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...
சொந்தமா பதிவு எழுத துப்பில்லாத நாய் ஒன்று தான் வாங்கிய எதிர் காறிதுப்புகளை வைத்து பதிவு தேற்றி இருக்கிறாது. நடு குறிப்பு : ஏண்டா பொது வெளியில் ஒரு பிரபல பதிவரை இப்படி கேவலபடுத்தர கேட்டா ஆமாங்க. அப்படி தான் துப்புவேன்.

பின்குறிப்பு : பார்மாலிட்டி பார்த்து பாழா போனது போதும்.. :)//

தங்களின் பொன்னான கருத்துக்கு நன்றி..

(ச்சே என்னமா துப்புராங்கங்க)

மாலுமி said...

நானும் எதாவது இங்கே பண்ணனுமா ???
சொல்லு......மணி ஆறு ஆச்சு..........நல்ல டைம் தான் சுத்தி ஏத்தி இங்கே வந்து பேசறதுக்கு :)

நாகராஜசோழன் MA said...

//சுத்தி ஏத்தி இங்கே வந்து பேசறதுக்கு :)//

டேய் அது சுதி...

நாகராஜசோழன் MA said...

// வெறும்பய said...
நாகராஜசோழன் MA said...
வடை!!//

அடிங்க வடையாவது பாயசமாவது//

அண்ணே, அவங்க வரல?

வெறும்பய said...

மாலுமி said...
நானும் எதாவது இங்கே பண்ணனுமா ???
சொல்லு......மணி ஆறு ஆச்சு..........நல்ல டைம் தான் சுத்தி ஏத்தி இங்கே வந்து பேசறதுக்கு :)//

மச்சி உன் ஒருத்தன் கமெண்ட் தான் என்னைய ரொம்ப யோசிக்க வைக்கும்.. "ஏண்டா நாயே போஸ்ட் போட்டேன்னு:"

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...
//சுத்தி ஏத்தி இங்கே வந்து பேசறதுக்கு :)//

டேய் அது சுதி...///

மச்சி சாரு சுதி ஏத்திக்கிட்டு வந்திருக்கணும்..

ப.செல்வக்குமார் said...

ஏற்கெனவே ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா ?

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...
ஏற்கெனவே ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா ?///

மாலுமி இப்போ தான் ஸ்டார்ட் பண்ண போயிருக்கான்

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் said...
ஏற்கெனவே ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா ?//
இன்னைக்கும் நீ தான் அவுட்...

மாலுமி said...
This comment has been removed by the author.
மாலுமி said...

/// மச்சி உன் ஒருத்தன் கமெண்ட் தான் என்னைய ரொம்ப யோசிக்க வைக்கும்.. "ஏண்டா நாயே போஸ்ட் போட்டேன்னு:" ///


மச்சி......என்ன நடந்துச்சு........மப்புல கண்டபடி பேசிட்டேன ???

நாகராஜசோழன் MA said...

//Comment deleted
This comment has been removed by the author.//

இது யாரு?

வெறும்பய said...

மாலுமி said...
/// மச்சி உன் ஒருத்தன் கமெண்ட் தான் என்னைய ரொம்ப யோசிக்க வைக்கும்.. "ஏண்டா நாயே போஸ்ட் போட்டேன்னு:" ///


மச்சி......என்ன நடந்துச்சு........மப்புல கண்டபடி பேசிட்டேன ???//

ச்சே ச்சே.. மச்சி நீ மப்புல பேசுனா தானே சரியா பேசுவே..

மாலுமி said...

/// டேய் அது சுதி...///
சரி விடு.......இன்னும் ரெண்டு ரவுண்டு போச்சுனா.....
சுதி கூட பிகரா தெரியும் மச்சி :)))))))

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...
//Comment deleted
This comment has been removed by the author.//

இது யாரு?//

மப்புல ரெண்டு வாட்டி கமெண்ட் போட்டு டெலிட் பண்ணியிருக்காரு நம்ம குடிமகன்.

மாலுமி said...

/// இது யாரு? ///
நான் தான் :)

ப.செல்வக்குமார் said...

ஏன் கவிதையில் ஒரு இடத்தில் கூட முற்றுப்புள்ளி இல்லை ?

மாணவன் said...

This comment also has been removed by the author.
:-)

மாலுமி said...

/// ச்சே ச்சே.. மச்சி நீ மப்புல பேசுனா தானே சரியா பேசுவே..///
அப்படியா.........உன் போன் நம்பர் கொடு மச்சி......:)))

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...
ஏன் கவிதையில் ஒரு இடத்தில் கூட முற்றுப்புள்ளி இல்லை ?//

அப்படின்னா இன்னும் எழுதி உன்னைய சாகடிக்கப்போறேன்னு அர்த்தம்

தினேஷ்குமார் said...

சற்றும் எதிர்பார நேரத்தின்
இறுதி நாழிகையில் சாரல்
பொட்டு வைத்துப்போன
இளந்தூறல் பேசின
உண்மைகள் உள்ளளவும் உணர
உயிர்ப்பிக்கும் இமைகளின்
காட்சி இல்லையென்றில்லாத
என் தேடல் தொடுவானம் வரை

விடைகள் வினவும் வினாக்கள்
தடைகள் தாழ்த்தி பயணப்பட
துகளும் உருவுடுத்தி அகலும்
இருளின் விடியல் முடிவாகின்றன

இந்த நிழலும் நிலையாகும்
அக்கணத்தில் உலவும்
களவும் வில்லிழுத்து
மாண்டு போகும் ...........

மாலுமி said...

/// மாணவன் said...
This comment also has been removed by the author.
:-) ///

இதோ இன்னொரு மாலை குடிகாரர் வந்துட்டார் :)))

வெறும்பய said...

மாலுமி said...
/// ச்சே ச்சே.. மச்சி நீ மப்புல பேசுனா தானே சரியா பேசுவே..///
அப்படியா.........உன் போன் நம்பர் கொடு மச்சி......:)))//

அப்பாடா தப்பிச்சேன்.. நம்பரை மறந்திட்டான்.. நிம்மதியா தூங்குவேன்

வெறும்பய said...

மாணவன் said...
This comment also has been removed by the author.//

அண்ணா வணக்கமிண்ணா

வெறும்பய said...

தினேஷ்குமார் said...
சற்றும் எதிர்பார நேரத்தின்
இறுதி நாழிகையில் சாரல்
பொட்டு வைத்துப்போன
இளந்தூறல் பேசின
உண்மைகள் உள்ளளவும் உணர
உயிர்ப்பிக்கும் இமைகளின்
காட்சி இல்லையென்றில்லாத
என் தேடல் தொடுவானம் வரை

விடைகள் வினவும் வினாக்கள்
தடைகள் தாழ்த்தி பயணப்பட
துகளும் உருவுடுத்தி அகலும்
இருளின் விடியல் முடிவாகின்றன

இந்த நிழலும் நிலையாகும்
அக்கணத்தில் உலவும்
களவும் வில்லிழுத்து
மாண்டு போகும் ...........//

நல்லாயிருக்கு பங்கு

மாலுமி said...

/// அப்பாடா தப்பிச்சேன்.. நம்பரை மறந்திட்டான்.. நிம்மதியா தூங்குவேன் ///
ஹி ஹி ஹி........மாணவனுக்கு ஒரு பெக் கொடுத்த சொல்லிட்டு போறான் :)))

ப.செல்வக்குமார் said...

// ஹி ஹி ஹி........மாணவனுக்கு ஒரு பெக் கொடுத்த சொல்லிட்டு போறான் :)))//

மாணவனைப் பற்றிய அவதூராகப் பேசியதற்கு என் கண்டனங்கள். அவர் ஒன்றும் ஒரு பெக்கிற்கு ஆளைக் காட்டிக் கொடுப்பவர் அல்ல. குறைந்தது ஒரு புல்லாவது கேட்பார் :))

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...
// ஹி ஹி ஹி........மாணவனுக்கு ஒரு பெக் கொடுத்த சொல்லிட்டு போறான் :)))//

மாணவனைப் பற்றிய அவதூராகப் பேசியதற்கு என் கண்டனங்கள். அவர் ஒன்றும் ஒரு பெக்கிற்கு ஆளைக் காட்டிக் கொடுப்பவர் அல்ல. குறைந்தது ஒரு புல்லாவது கேட்பார் :))//

திரு மானவரை பற்றி முழுசா தெரியாமலையே பேசிக்கிட்டிருக்கீங்க

தினேஷ்குமார் said...

வெறும்பய said...
தினேஷ்குமார் said...
சற்றும் எதிர்பார நேரத்தின்
இறுதி நாழிகையில் சாரல்
பொட்டு வைத்துப்போன
இளந்தூறல் பேசின
உண்மைகள் உள்ளளவும் உணர
உயிர்ப்பிக்கும் இமைகளின்
காட்சி இல்லையென்றில்லாத
என் தேடல் தொடுவானம் வரை

விடைகள் வினவும் வினாக்கள்
தடைகள் தாழ்த்தி பயணப்பட
துகளும் உருவுடுத்தி அகலும்
இருளின் விடியல் முடிவாகின்றன

இந்த நிழலும் நிலையாகும்
அக்கணத்தில் உலவும்
களவும் வில்லிழுத்து
மாண்டு போகும் ...........//

நல்லாயிருக்கு பங்கு

////

இது பத்தாது பங்கு ஒரு குவாட்டர் சொல்லுங்க இன்னைக்கு வியாழக்கிழமை ............

vinu said...

மாணவன் said...
This comment also has been removed by the author.
:-)

ப.செல்வக்குமார் said...

//
திரு மானவரை பற்றி முழுசா தெரியாமலையே பேசிக்கிட்டிருக்கீங்க//

ஏன் கடை வச்சுக் குடுக்கச் சொல்லுவாரா ?

எஸ்.கே said...

ஒரு பாட்ஷாவின் அருகில் என் கவிதையும் சிறு நாயாய்...

வெறும்பய said...

எஸ்.கே said...
ஒரு பாட்ஷாவின் அருகில் என் கவிதையும் சிறு நாயாய்...//

இது உங்களுக்கே கொஞ்சமில்ல ரொம்பவே ஓவரா தெரியல...

vinu said...

இப்போ இங்கே என்ன சொல்லணும்????

vinu said...

///எஸ்.கே said...
ஒரு பாட்ஷாவின் அருகில் என் கவிதையும் சிறு நாயாய்...
/////


அப்போ வைகைதான் ரகுவரனா?

வெறும்பய said...

vinu said...
இப்போ இங்கே என்ன சொல்லணும்????//

ஆகா
அருமை
அற்ப்புதம்
அழகு
சிறப்பு
சூப்பர்

இப்படி நிறைய இருக்கு வினோ

vinu said...

@எஸ்.கே

அப்போ நம்ம வெறும்பயளோட "நக்மா" யாருங்க

வெறும்பய said...

vinu said...
///எஸ்.கே said...
ஒரு பாட்ஷாவின் அருகில் என் கவிதையும் சிறு நாயாய்...
/////


அப்போ வைகைதான் ரகுவரனா?//

பயபுள்ள எப்படி கோர்த்து விடுத்தது பாருங்க

வெறும்பய said...

vinu said...
@எஸ்.கே

அப்போ நம்ம வெறும்பயளோட "நக்மா" யாருங்க//

அது வேற யாருமில்ல "சொப்பன சுந்தரி" தான்..

vinu said...

அப்பாடா வந்த வேலை முடிஞ்சது கொளித்திப் போட்டாச்சு இன்னி ஆளாளுக்கு வந்து நம்ம வெறும்பயலை காறி காறித் துப்புவாங்க நாம ஜாலியா வேடிக்கை பாக்கலாம்!

தினேஷ்குமார் said...

வெறும்பய said...
vinu said...
@எஸ்.கே

அப்போ நம்ம வெறும்பயளோட "நக்மா" யாருங்க//

அது வேற யாருமில்ல "சொப்பன சுந்தரி" தான்..


கவுண்டர கூப்பிடுங்கப்பா பல காலமா பதிலே தெரியாம புலம்பிக்கிட்டு இருந்த கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சி

வைகை said...

கம்பனுக்கு பக்கத்தில் என் கவிதையும் ஒரு கட்டுத்தறி போல :-)

vinu said...

மச்சி கூகுல்கூட்ஸ் வண்டியை பாக்கவும்!

வெறும்பய said...

வைகை said...
கம்பனுக்கு பக்கத்தில் என் கவிதையும் ஒரு கட்டுத்தறி போல :-)//

இதுக்கு கெட்ட வார்த்தையில ரெண்டு தடவை திட்டியிருக்கலாம்..

வெறும்பய said...

தினேஷ்குமார் said...
வெறும்பய said...
vinu said...
@எஸ்.கே

அப்போ நம்ம வெறும்பயளோட "நக்மா" யாருங்க//

அது வேற யாருமில்ல "சொப்பன சுந்தரி" தான்..


கவுண்டர கூப்பிடுங்கப்பா பல காலமா பதிலே தெரியாம புலம்பிக்கிட்டு இருந்த கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சி//

சொப்பன சுந்தரி காணாம போயி ரொம்ப வருசமாச்சு..

vinu said...

////வெறும்பய said...
இதுக்கு கெட்ட வார்த்தையில ரெண்டு தடவை திட்டியிருக்கலாம்..///

மச்சி உன்னோட ஆசையை நான் கூட நிறைவேத்தலைன்னா எப்புடி?


!@#@$#!@$ #$%#$^ ^&%^*&(

போதுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சமைக்காத நாளொன்றின்
மதிய வேளையில் வந்தவள்
தின்றுவிட்டுப் போன
போன பிரியாணி
கெட்டுப் போன வாசம்
முதுகில் விழும் வெயிலின்
வெப்பத்தைக் கிழித்துக்கொண்டு
என் மூக்கைத் துளைக்கிறது.

இன்னும் அடங்காமல் குமுறும் பசிக்கு மத்தியில்
வயிற்றைக் கவ்வும் பிரியாணி
நெஞ்சில் பற்றியெரியும் நாட்டுக்கோழிக்குழம்பு
முன்னிலையில் முடிவெடுக்கிறேன்

இன்று இரவு அஸ்தமிக்கும்
அக்கணத்தில் அவள்
கக்கூசிற்கு பக்கத்திலிருக்கும்
அந்த வாளியும்...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சமைக்காத நாளொன்றின்
மதிய வேளையில் வந்தவள்
தின்றுவிட்டுப் போன
போன பிரியாணி
கெட்டுப் போன வாசம்
முதுகில் விழும் வெயிலின்
வெப்பத்தைக் கிழித்துக்கொண்டு
என் மூக்கைத் துளைக்கிறது.

இன்னும் அடங்காமல் குமுறும் பசிக்கு மத்தியில்
வயிற்றைக் கவ்வும் பிரியாணி
நெஞ்சில் பற்றியெரியும் நாட்டுக்கோழிக்குழம்பு
முன்னிலையில் முடிவெடுக்கிறேன்

இன்று இரவு அஸ்தமிக்கும்
அக்கணத்தில் அவள்
கக்கூசிற்கு பக்கத்திலிருக்கும்
அந்த வாளியும்...//

யோவ் மாம்ஸ் ஏன்யா ஏன்..

சே.குமார் said...

கவிதைகள் அருமை...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

சிவகுமாரன் said...

கவிதைகள் மூன்றும் அருமை.
வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

பன்னிக்குட்டி
உவ்வே

krishy said...

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் போஸ்ட்

To get vote button


தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

Sweety said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in