கற்றை நினைவுக்கு ஒற்றை மீன்..




காலம் தொலைத்த 
வருடத்திலொரு 
நாளொன்றின் இரவில்
யாருமில்லை என்றறிந்து 
என் வீட்டிற்கு 
வலது கால் வைத்து 
உள் நுழைந்தாய்  

பொறுமையாய் வீட்டை சுற்றிக்காட்டிக் 
கொண்டிருந்தேன் 
நான் 
எதிலும் நாட்டம் காட்டவில்லை 
நீ..

கடைசியாய் 
வா உன்னை பிரதிஷ்டை செய்யப்போகும் 
கருவறையை காட்டுகிறேன் என்றழைத்தேன் 
சட்டென்று ஒட்டிக்கொண்டது 
பூரண நிலவாய் புன்னகையும் 
வெளித்தெரியா வெட்கமும் 

மௌனமாய் 
பின் தொடர்ந்து
நடந்தாய் 
சில அடிகள் தாண்டியதும் 
தழுவிக்கொண்டது
நம் கைகள்

அறை 
நெருங்க நெருங்க 
நீ என்னிடம் நெருங்க
நான் நொறுங்க 
நாம்
கட்டிலை நெருங்கினோம்
நானுன்னை பிரதிஷ்டை செய்ய 
ஆடைகள் களைந்தேன் 

முத்த அபிஷேகத்தில் 
துவங்கி 
வியர்வை அபிஷேகத்தில் முடிந்தது

காற்றுபுகா இடைவெளி 
கணநேர மௌனம் 
எக்கச்சக்க முத்தங்கள் 
இதயங்கள்
இடம் பெயர்ந்தன 

சிறிய இடைவேளைக்கு பின்னர் 
என்னை விடுதலை செய்து 
கருவறையை 
கண்களால் அளவெடுத்துக்கொண்டே  
வெட்க்கம் கலந்த முகச்சுளிப்புடன்  
"என்ன மட்டமான டேஸ்ட்டா உனக்கு" 
என்னை திட்டிக்கொண்டே 
நீ
சன்னல் திரைச்சீலை 
புக் செல்ப் 
கம்ப்யூட்டர் டேபிள் 
பெட் கவர் 
........
.........
.......... etc.. etc  
என்று எல்லாவற்றையும் சரி செய்து
உனக்கு பிடித்த வெண்மை நிறத்தையும்  
அறை முழுவதும் விதைத்து சென்றாய்

ஆண்டுகள் கடந்தபின்
கண்ணாடித் தொட்டியில்  
உன் பெயரிட்டு 
ஒற்றை மீனொன்று வளர்க்கிறேன் 

உன்னோடு சேர்ந்து
எல்லாம் மாறின
இன்னும் மாறாத என்னையும் 
உன் வாசம் விட்டுப்போகாத 
என்னறையையும் 
மீண்டும் ஒரு முறை 
வந்து பார்த்துவிட்டு போ!

வரும் போது 
என் பெயர் சுமந்த உன் 
குழந்தையையும் கூட்டி வர மறவாதே....

22 comments:

வெளங்காதவன்™ said...

மச்சி... எப்புடி இருக்க?

வெளங்காதவன்™ said...

//வரும் போது
என் பெயர் சுமந்த உன்
குழந்தையையும் கூட்டி வர மறவாதே....////

பாருங்க சார்....
அந்தக் கொழந்தைக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறத..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வெளங்காதவன்™ said...//

நான் நலம் மச்சி.. அங்கே எப்படி

ஜெயந்த் கிருஷ்ணா said...

வெளங்காதவன்™ said...
//வரும் போது
என் பெயர் சுமந்த உன்
குழந்தையையும் கூட்டி வர மறவாதே....////

பாருங்க சார்....
அந்தக் கொழந்தைக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறத..//

நான் இல்லன்னு சொன்னா மட்டும் நீங்க நம்பவா போறீங்க..

வெளங்காதவன்™ said...

/வெறும்பய said...
வெளங்காதவன்™ said...//

நான் நலம் மச்சி.. அங்கே எப்படி
////


சொகமோ சொகம்...
ஊர்ப்பக்கம் எப்போ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

வெளங்காதவன்™ said...
/
சொகமோ சொகம்...
ஊர்ப்பக்கம் எப்போ?//

கூடிய சீக்கிரம் பார்க்கலாம்..

வெளங்காதவன்™ said...

//இன்னும் மாறாத என்னையும் ///

இன்னும் 38 சைஸ் பேண்டுத்தானா சார்?

வெளங்காதவன்™ said...

//வெறும்பய said...
வெளங்காதவன்™ said...
/
சொகமோ சொகம்...
ஊர்ப்பக்கம் எப்போ?//

கூடிய சீக்கிரம் பார்க்கலாம்..
/////

வெல்கம்...
#அது நம்மளை நோக்கி வருது.. ஓடுங்க....

:-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

வெளங்காதவன்™ said...
//இன்னும் மாறாத என்னையும் ///

இன்னும் 38 சைஸ் பேண்டுத்தானா சார்?//

இல்ல மச்சி இப்பெல்ல்லாம் ஒன்லி வெட்டி தான்.. (நமக்கு ஏற்ற சைஸ் கிடக்க மாட்டேங்குது..)

வெளங்காதவன்™ said...

அப்பாலிக்கா வாறன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அலோ........... அலோ....... சரியா கேட்கல......... சத்தமா சொல்லு.......... அலோ..... இங்க சிகுனல் கம்மியா இருக்கு.............. அப்பாலிக்கா வாரேன்.........

TERROR-PANDIYAN(VAS) said...

அலோ........... அலோ....... சரியா கேட்கல......... சத்தமா சொல்லு.......... அலோ..... இங்க சிகுனல் கம்மியா இருக்கு.............. அப்பாலிக்கா வாரேன்......

ஜெயந்த் கிருஷ்ணா said...

அலோ........... அலோ....... சரியா கேட்கல......... சத்தமா சொல்லு.......... அலோ..... இங்க சிகுனல் கம்மியா இருக்கு.............. அப்பாலிக்கா வாரேன்......//

இன்னும் பத்து பேர் இருக்காங்க.. அவங்களும் இதே டையலக்கை சொல்லிட்டு போயிட்டாங்கன்னா எவ்வளவு நல்லாயிருக்கும்..

செல்வா said...

இன்னும் பத்து பேர் இருக்காங்க.. அவங்களும் இதே டையலக்கை சொல்லிட்டு போயிட்டாங்கன்னா எவ்வளவு நல்லாயிருக்கும்..

செல்வா said...

இந்தப் பதிவிற்கு 18+ என்று தலைப்பில் எழுதியிருந்தால் என் போன்ற சிறுவர்கள் படிக்கமாட்டோமல்லவா. நன்றி.

முத்தரசு said...

நல்லாத்தாம்யா வைக்கிறீங்க.............தலைப்பு

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை.

கயல் said...
This comment has been removed by the author.
வைகை said...

ஞாபகம் மறந்த

வருடத்திலொரு
நாளொன்றின் இரவில்
தங்ஸ் இல்லை என்றறிந்து
என் வீட்டிற்குள்
செருப்பு காலோடு
உள் நுழைந்தாய்


பொறுமையாய் ஆம்ப்லேட் போட்டுக்
கொண்டிருந்தேன்
நான்
எதிலும் நாட்டம் காட்டவில்லை
நீ..


கடைசியாய்
வா.. நாம் சரக்கடிக்கும்
பார் ரூமை காட்டுகிறேன் என்றழைத்தேன்
சட்டென்று ஒட்டிக்கொண்டது
ஃபுல் பாட்டிலாய் புன்னகையும்
வெளித்தெரியா நாக்கின் எச்சியும்!


ஆர்வத்தோடு
பின் தொடர்ந்து
நடந்தாய்
சில அடிகள் தாண்டியதும்
எடுத்துக்கொண்டது
நம் கைகள் ஐஸ் கியூப்!


பார் ரூம்
நெருங்க நெருங்க
நீயும் என்னிடம் நெருங்க
உன் நாற்றத்தால்
நான் நொறுங்க
நாம்
பார் ரூமை நெருங்கினோம்
நாமும் சரக்கடிக்க
ஃபிரிட்ஜை திறந்தேன்

ஸ்காட்ச் விஸ்கியில்
துவங்கி
மானங்கெட்ட மானிட்டரில் முடிந்தது


சரக்கில்லா பாட்டில்கள்
கணநேர ஏப்பம்
எக்கச்சக்க குப்பைகள்
கால்கள்
இடம் பெயர்ந்தன


கொஞ்சம் புலம்பல்களுக்குப் பின்னர்
லுங்கியை சரிசெய்து கொண்டு
மானிட்டர் பாட்டிலை
கண்களால் அளவெடுத்துக்கொண்டே
போதை கலந்த முகச்சுளிப்புடன்
"என்ன மட்டமான சரக்குடா இது?"
சரக்கை திட்டிக்கொண்டே
நீ
சன்னல் திரைச்சீலை
புக் செல்ப்
கம்ப்யூட்டர் டேபிள்
பெட் கவர்
........
.........
.......... etc.. etc
என்று எல்லாவற்றிலும் வாந்தி எடுத்து
நீ அணிந்த செருப்பில் இருந்த நாற்றத்தை
அறை முழுவதும் பரப்பிச் சென்றாய்


ஆண்டுகள் கடந்தபின்
என் வீட்டு ஃப்ரிட்ஜில்
உன் பெயரிட்டு உனக்காக
சரக்கு பாட்டிலொன்றை வைத்திருக்கிறேன்


உன்னோடு சேர்ந்து
எல்லாம் நாறின
இன்னும் நாறாத என்னையும்
உன் நாற்றம் விட்டுப்போகாத
என்னறையையும்
மீண்டும் ஒரு முறை
வந்து பார்த்துவிட்டு போ!


வரும் போது
என் பெயர் சுமந்த உன்
சரக்கு பாட்டிலையும் எடுத்து வர மறவாதே....

TERROR-PANDIYAN(VAS) said...

உன்னை தொலைத்து விட்டேன்
என நிம்மதியாக நானிருந்த
வருடத்தின்
நாளொன்றின் இரவில்
யாருமில்லை என்றறிந்து
என் வீட்டிற்கு
வலது கால் வைத்து
உள் நுழைந்தாய்
நீ எந்த கால் வைத்தாலும் நாசமாய்தான் போகுமென
உனக்கு தெரியவில்லை

பொறுமையாய் வீட்டை சுற்றிக்காட்டிக்
கொண்டிருந்தேன்
நான்
எதை சுட்டுக் கொண்டு போகப் போகிறாயோ என்ற பயத்துடன்
எதிலும் நாட்டம் காட்டவில்லை
நீ..
என்னமோ பெரிசா பிளான் பண்ணிட்டே

கடைசியாய்
வா உனக்கு டைனிங் டேபிள்
காட்டுகிறேன் என்றழைத்தேன்
சட்டென்று ஒட்டிக்கொண்டது
சகிக்கமுடியா இளிப்பும்
வெட்கமில்லா பார்வையும்
நீயல்லவா மனிதன்.. த்து..

மௌனமாய்
பின் தொடர்ந்து
நடந்தாய்
சில அடிகள் தாண்டியதும்
என்னை தள்ளிவிட்டு
முன்னே ஓடினாய் நீ

டேபிளை நான்
நெருங்க நெருங்க
நீ அங்கே நொறுக்க நொறுக்க
பாத்திரத்தை திறந்து
பார்த்தேன்
பாவி பொட்டு கூட
வைக்கவில்லையே நீ!

மொத்தத்தில் உன்னை
கத்த தொடங்கி
காறித் துப்பி முடித்தேன்

காதில் கேட்கமுடியா வசவுகள்
கணக்கிலடங்கா காறித்துப்பல்கள்
எக்கச்சக்க திட்டுகள்
எதற்கும்
இடம்பெயரவில்லை நீ

சிறிய இடைவேளைக்கு பின்னர்
டைனிங் டேபிளை விடுதலை செய்து
வீட்டை
கண்களால் அளவெடுத்துக்கொண்டே
வெட்கமில்லாத முகத்துடன்
"மச்சான் ஒரு அம்பது ரூபா இருக்குமாடா?"
என்னிடம் கேட்டுக் கொண்டே
நீ
டிவி
ஃபேன்
புக் செல்ப்
கம்ப்யூட்டர் டேபிள்
பெட் கவர்
........
.........
.......... etc.. etc
என்று எல்லாவற்றையும்
பார்க்க பார்க்க
எனக்கோ பயம் உள்ளுக்குள்
வேர்க்க வேர்க்க
விட்டால் போதுமென அம்பது
ரூபாய் கொடுத்தனுப்பினேன் உன்னை

ஆண்டுகள் கடந்தபின்
அசிங்கமான
உன் பெயரிட்டு
நாயொன்று வளர்க்கிறேன்
உன் ஞாபகம் வரும்போதெல்லாம்
அதையே கல்லால் அடிக்கின்றேன்

நீ வந்து சேர்ந்து
எல்லாம் நாசமாய் போயின
இன்னும் மாறாத என்னை
மட்டுமாவது விட்டுவிடு
என்னையும் என் வீட்டையும்
மீண்டும் ஒரு முறை
வந்து பார்த்துவிடாதே!

அப்படி தப்பித்தவறி வந்தால்
வரும் போது
மறக்காமல் என்னிடம் சுட்ட
சுடர்மணி ஜட்டியை கொண்டு
வர மறவாதே....

எழுதியவர்
மாண்பு மிகு
எஸ்.கே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பரா கீது மச்சி...
உன்னோட நடைய பார்த்தா.. இடுப்பு சைஸ், 42க்கு குறையாம இருக்கும் போல...


இப்ப.. இன்னா மேட்டர்னா...?

மச்சி,.. இந்த பதிவுக்கு விளக்கம் சொல்லி.. இன்னொரு பதிவை போட்டு.. தமிழகத்தை வாழவை....

Unknown said...

Nice verumpaye... Kavidhai superb...