புது வீடு - நனவாகிய என் முதல் கனவு

கனவுகளும் எதிர்பார்ப்புகளும் ஆயிரம் இருந்தாலும் எல்லாவற்றையும் பின் நிறுத்தி முதல் வரிசையில் இருமார்ப்புடன் நின்றுகொண்டிருந்தது மனதிற்கு பிடித்த மாதிரி பிறந்த மண்ணில் எனக்கே எனக்காக என்று சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை. கடைசியாக பல இன்னல்களை வெகு சிரத்தையுடன் கடந்து ஒவ்வொரு அங்குலமும் எனக்கு பிடித்த மாதிரி அழகாய் மாளிகை ஒன்றை செதுக்கி கடந்த மாதம் இறுதி நாளில் கிரக பிரவேஷமும் செய்து விட்டு மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் இப்போது எனது சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

இதுக்கு மேல மொக்க போட்டா நல்லாயிருக்காது வாங்க வீட்டை பார்க்கலாம். 





வாங்க, வாங்க என்ன அங்கேயே நின்னுட்டீங்க நம்ம வீடு தான் தைரியமா உள்ள வாங்க 




கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சம்பிரதாயங்களை முடிச்சிட்டு வீட்டை சுற்றிப்பார்ப்போம் 






நல்லபடியா முடிஞ்சாச்சு வாங்க வீட்டை பார்ப்போம். 



இது தாங்க ஹால்.. 


வாங்க ரூம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம் 




நமக்கு எல்லாருக்கும் பிடித்தமான இடமான டைனிங் ஹால் பார்க்கலாம் வாங்க 








இனி நாம போகப்போறது தன மிக முக்கியமான இடம், என்ன புரியலையா  கல்யாணத்துக்கு அப்புறமா பசங்க எப்பவும் இருப்பாங்களே அந்த இடம் தான்.  அட கிச்சன் தாங்க..




ஹேலோ ஹேலோ எங்கே கிளம்பிட்டீங்க, இன்னும் முடியல வாங்க என் கூட மாடிக்கு போலாம்




வாங்க வாங்க இது மேல் மாடி தான்



இது தான் மேல் மாடியிலுள்ள ரூம்.

இனி நம்ம பார்க்க போறது தான் ஸ்பெசல் இடம். நண்பர்கள் நீங்கெல்லாம் வரும் போது விடிய விடிய உக்கார்ந்து அரட்டை அடிக்க ஏதுவான இடம் இது தான்




இதை திண்ணைன்னு சொல்லி வந்தவங்க இப்போ சிட்டவுட் ன்னு சொறாங்க.


வாங்க கீழே போலாம்



பார்த்து சூதானமா இறங்கி வாங்க



வீட்டை சுற்றி பார்த்தாச்சா , எப்படியிருக்குன்னு சொல்லுங்க


என்னங்க அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க.. கொஞ்ச நேரம் உக்காந்து என் கூட பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு பார்த்தா இப்படி கால்ல சக்கரத்தை கட்டிட்டு கிளம்புறீங்களே.. நீங்க வீட்டுக்கு வந்ததில எனக்கு ரொம்ப சந்தோசங்க.

நண்பர்கள் உங்களுகாக என் வீட்டு கதவுகள் எப்போது திறந்தே இருக்கும். 

40 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

//வாங்க, வாங்க என்ன அங்கேயே நின்னுட்டீங்க நம்ம வீடு தான் தைரியமா உள்ள வாங்க //

முன்னாடி போய் கதவை திறடா ராஸ்கல்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

ஒரு வித்தியாசமான முயற்சி. நல்லா இருக்கு மச்சி. வாழ்த்துகள்... :)

'பரிவை' சே.குமார் said...

வீடு ரொம்ப நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னங்க அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க.. கொஞ்ச நேரம் உக்காந்து என் கூட பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு பார்த்தா
//

இம்பூட்டு நேரமா வீட்டை சுத்திக்காட்டிட்டு..
ஒரு வாய் காபி தண்ணி குடிக்கிறியானு கேட்டியா மச்சி?..

:-))))

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் jayanth

இம்சைஅரசன் பாபு.. said...

// /வாங்க, வாங்க என்ன அங்கேயே நின்னுட்டீங்க நம்ம வீடு தான் தைரியமா உள்ள வாங்க //

வெத்தலை பாக்கு எல்லாம் வச்சு அழைச்சா தான் உள்ளே வருவேன் ..
மக்கா ..ரொம்ப சந்தோசமா இருக்கு ...உன் சந்தோஷத்தில் நானும் பங்கெடுக்கிறேன் ...

Yaathoramani.blogspot.com said...

ரசித்துக் கட்டியிருக்கிறீர்கள் அருமையாக இருக்கிறது
நலத்தோடும் வளத்தோடும் என்றென்றும்
சிறந்து வாழ மனமாற வாழ்த்துகிறோம்
அவசியம் ஒருமுறை வர உத்தேசமிருக்கிறது
படங்களும் விளக்கமும் நேரடியாக வீட்டில் இருக்கிற
உணர்வை ஏற்படுத்திப்போனது
வாழக வளமுடன்

மாலுமி said...

வாழ்த்துக்கள் மச்சி :)
கூடிய சீக்கரம் இன்னொரு நல்ல நிகழ்ச்சி உனக்கு நடக்க வாழ்த்துக்கள்..........



அதுதான் கல்யாணம்.........

தமிழ்வாசி பிரகாஷ் said...

வீடு ரொம்ப நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள்

இம்சைஅரசன் பாபு.. said...

முட்டா பையன் சார் .

ஜெயந்த் சந்தோசமா விஷயம் பகிர்ந்து இருக்கான் ..இங்க போய் சண்ட கமெண்ட்ஸ் எல்லாம் வேண்டாம் ..அவனோட கனவு சார் வீடு கட்டி லீவ் வாங்கி ஊர் போய் சேர்ந்து சொந்த பந்தங்களோட சந்தோசமா இருந்தத சொல்லி இருக்கான் ..சந்தோசமா ன விஷயம் சார் ...விடுங்க சார்

vinu said...

vaalthukkal machchi!!!

treat eppo???

and then where is this located???

i meant which city/town/village?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் மச்சி.......... சந்தோசமா இருக்கு.... வாழ்த்துகள்!

இராஜராஜேஸ்வரி said...

iஇனிய வாழ்த்துகள் !

புதுகை.அப்துல்லா said...

இளம் வயதிலேயே தனக்கான வீட்டை அடைவது பெரிய வரம். என்றும் இறையருள் உங்களுடன் இருக்கட்டும். வாழ்த்துகள்.

rajasundararajan said...

வாழ்த்துகிறேன்! வீடு ரெம்ப ரெமப நல்லா இருக்கு! உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் பிள்ளைங்க படிப்பாங்களாயிருக்கும், புத்தகங்கள் வைக்கிறதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணூங்க!

எஸ்.கே said...

உங்கள் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி! வாழ்த்துகள்! மென்மேலும் பல செல்வங்களை அடைந்து சிறப்புடன் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்!

TERROR-PANDIYAN(VAS) said...

:)

நண்பனின் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் பங்கெடுப்பதில் நாங்களும் மகிழ்கிறோம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏண்டா பால்காய்ச்சுக்கு பசுமாடைத்தான வீட்டுக்குள்ள கொண்டு போவாங்க. இங்க ஒரு எருமை மாட்டை கூட்டி போயிருக்காங்களே :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னங்க அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க.. கொஞ்ச நேரம் உக்காந்து என் கூட பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு பார்த்தா
//

இம்பூட்டு நேரமா வீட்டை சுத்திக்காட்டிட்டு..
ஒரு வாய் காபி தண்ணி குடிக்கிறியானு கேட்டியா மச்சி?..

:-))))///


only then bottle :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முனைவ்வ்வர்??

ithu eppo?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

congrats machi

யாஸிர் அசனப்பா. said...

வாழ்த்துக்கள். உண்மையிலேயே அழகாக உள்ளது.

மங்குனி அமைச்சர் said...

nandraaka ullathu jeyanthu, vaalththukkal

பெசொவி said...

Congrats! The House is very nice!

பெசொவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஏண்டா பால்காய்ச்சுக்கு பசுமாடைத்தான வீட்டுக்குள்ள கொண்டு போவாங்க. இங்க ஒரு எருமை மாட்டை கூட்டி போயிருக்காங்களே//

ரமேசு, அது எருமை மாடு இல்ல, ஜெயந்த் வீட்டுக்குள்ள வச்சிருக்கற திருஷ்டி பொம்மை

:)))
:)

Unknown said...

உண்மையிலேயே அனைவரது வாழ்நாள் கனவும் சொந்தவீடு வாங்குவதாகத்தான் இருக்கும்

உங்கள் கனவு நிறைவேறியதில் மிகவும் சந்தோசம்

வீடும் உங்களை போலவே அழகாக உள்ளது, வாழ்த்துக்கள் ஜெய்ந்த் சார்

காந்தி பனங்கூர் said...

மாளிகை ரொம்ப அழகா இருக்கு ஜெயந்த், ரொம்பவே ரசிச்சு ரசிச்சு கட்டியிருக்கீங்க. வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பார்கள். வீட்டை கட்டியாச்சு, கல்யாணத்தை எப்போ? கூடிய விரைவில் நடக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

i used to visit ur blog in the recent days.. so happy to c this post..my best wishes jayanth.. romba santhosama iruku.. hope u too..

raga

Anonymous said...

i used to visit ur blog in the recent days.. so happy to c this post..my best wishes jayanth.. romba santhosama iruku.. hope u too..

raga

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

ரொம்ப அழகா இருக்குங்க. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு. வாழ்த்துகள்.

அரிஅரவேலன் (Ariaravelan) said...

அழகிய வீடு! வாழ்த்துகள்!!

shanuk2305 said...

congrats.

ஜில்தண்ணி said...

வாழ்த்துக்கள் மாமு :)

Priyarajan said...

Hi ,
First time i visited your blog..
Really good..

your blog and way of ending the blog is good....
:)

Priyarajan said...

I am PriyaRajan doing M. Phil Communication in M.S University, Tirunelveli. As my part of study I am doing my research on blog and bloggers who use effectively blog for disseminate information. My Thesis titled as "Study on Blogging Pattern Of Selected Bloggers (Indians)".Thanks in Advance.

Unknown said...

Really superb... Un kanavugal menmelum vetriyadaya en manamaarndha vazhthukal...

ஊர் சுற்றி said...

நண்பா, உங்கள் முதல் கனவு மாதிரியே அனைத்து கனவுகளும் நனவாக உளமாற வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

வியந்து போனேன். ராஜசுந்தர்ராஜன் சொன்னதுக்கும் ஒரு ஏற்பாடு செய்யவும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜோதிஜி திருப்பூர் said...
வியந்து போனேன். ராஜசுந்தர்ராஜன் சொன்னதுக்கும் ஒரு ஏற்பாடு செய்யவும்//

நன்றி அண்ணே.. புத்தகங்கள் வைக்குரதுக்குன்னே ஒரு சின்ன ரூம் மாடியில இருக்கு.. அந்த ரூம் போட்டோ இங்கே போடவில்லை. ஆரம்பிக்கும் போதே அது அன்னுடைய மனதில் இருந்த விஷயம் தான்.

ஜீவன் சுப்பு said...

Pop colors மேல ரெம்ப விருப்பம் போல ...!

வீடும் சரி , வலை தளமும் சரி ரெம்ப அழகா இருக்கு ...