மெளனம் தவிர்
கண்ணீர் துடை
மெல்ல எழு
நாட்க்குறிப்பை திற
கூர்முனை பேனா எடு
கவிதையொன்றை துவங்கு
பாதியில் நிறுத்து
பேனாவை
கைகளுக்கு பின்னால் மறை
என்னைப்பார்
நெருங்கி வா
கண்களில் காமம் காட்டு
கட்டியணை
என்னை நான் மறக்க செய்
குறிபார்
பேனாவை
என் கழுத்தில் சொருகு
அலற விடாமல்
இதழ் மீது இதழ் பத்தி
இறுக்கம் கூட்டி
திமிறல் தவிர்
மெல்ல அடங்க
மெதுவாய் ஒதுங்கு
பேனாவை சரிபார்
விட்ட கவிதையை
மீண்டும் தொடர்
எனக்கான அந்த
கடைசிக்கவிதையின்
முடிவில் முற்றுப்புள்ளியொன்றை
மறவாமல் என்
உதிரம் தொட்டு வை .
4 comments:
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணே
உதிரம் கசிகிற யதார்த்த கவிதை. எங்கேயோ கேட்டதாக ஞாபகம்.இரவு நேரத்தின் ஸ்லீப்பிங் டோஸாக பயன்படுத்தப்படுகிறார்கள் என/
கவிதை சூப்பர்.
Post a Comment