மன்னாதி மன்னன் 4 - பாபர் - தொடர்பதிவு..

மன்னாதி மன்னன் பாபரின் வரலாறு பற்றிய முந்தைய பதிவுகள்..

எங்கள் வீட்டில் ஆயிரம் சண்டைகள் இருக்கலாம்... நாங்கள் அண்ணன் தம்பிகள் பார்த்துக் கொள்கிறோம்... இங்கே அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன வேலை.... எனபது போல..அந்நியர்கள் எங்கள் நாட்டை கூறு போடுவதா என்று வீறுகொண்டெழுந்தான் சித்தூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன் ராணாசிங்.. இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள தேசப் பற்று கொண்ட மன்னர்களுக்கு கடிதம் எழுதி 80,000 குதிரை வீரர்கள், 500 யானைகள் கொண்ட ஒரு பெரும்படையை சேர்த்த் கிளம்பினார் பாபரை வெல்ல...

கி.பி 1527 மார்ச் 16 ம் தேதி ஆக்ராவின் மேற்கே 20 மைல் தொலைவில் மற்றொரு மாபெரும் யுத்தம் துவங்கியது. பாபரின் தைரியம், அசாத்திய சாமர்த்தியம் மற்றும் அனுபவம் மிக்க போர் வீரர்களாலும் யுத்தம் துவங்கி 10 மணிநேரத்தில் பாபரின் கைகளை தழுவியது வெற்றிக்கனி.

கந்தேரிக் கோட்டை, வங்காளம் என ஏறக்குறைய மொத்த வட இந்தியாவையும் கைப்பற்றி மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார் பாபர். இக்காலகட்டத்தில் வங்காளத்தில் வாலாட்டிய ஆங்கிலேயர்களை அடக்கினார்.

தான் வாழ்நாளில் அதிகமான நாட்களை போர்க்களங்களில் தொலைத்த பாபர் போர்களில் அதிக நாட்டம் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் ஒரு சிறந்த மன்னனாகவே திகழ்ந்தார். இவரது ஆட்சிகாலத்தில இந்து முஸ்லிம் நட்புக்கு வித்திடப்பட்டது.

ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை நாடக்குறிப்பில் நுணுக்கமாக விவரித்து எழுதுவது பாபரின் பழக்கம். இந்திய நாட்டின் பருவநிலை மாற்றங்கள், கலாச்சாரம், புவியல், தாவரங்கள், பூக்கள், ஜாதி, மாதம், மக்களின் கணிதத் திறமை மற்றும் கலைத் திறன் என எதையும் தன் நாட்குறிப்பில் குறிப்பிட மறக்கவில்லை. டெல்லியிலும் ஆக்ராவிலும் ஏராளமான பூங்காக்களை உருவாக்கினார்.மேலும் தாவரங்கள், பறவைகள் என பல நுணுக்கமான விவரங்களை பாபரின் சுயசரிதையில் காணலாம்..ஆனால் பாபர் காலத்தில் கட்டிடக்கலை எதுவும் சொல்லும் படியாக முன்னேறவில்லை..

நான்காண்டுகள் மட்டுமே டெல்லி அரியணையில் ஆட்சி செய்த பாபர் டிசம்பர் 26 கி.பி 1530 ம் ஆண்டு அதிகாலை மரணமடைந்தார்.. அப்போது அவருக்கு வயது 48 தான்..

பாபரின் உடல் பிற்காலத்தில் தாஜ்மஹால் கட்டப்பட்ட இடத்தருகே யமுனை நதிக்கக்ரையில் புதைக்கப்பட்டது. பின்னர் 9 ஆண்டுகள் கடந்த பின்னர் பாபரின் உயிலின் படி காபூலுக்கு கொண்டு செல்லப்பட்டு, முன்பு அவர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அழகான பெருந்தோட்டத்தில் மறுபடியும் புதைக்கப்பட்டது..

பாபர் என்ற மாவீரனின் சகாப்த்தம் முடிந்து விட்டாலும் அவருக்கு பின்னர் வந்த ஹீமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் மற்றும் ஒளரங்கஷீப் ஆகியோர் மொகலாய சாம்ராஜ்யத்தை மேலும் பரவ விட்டதோடு மட்டுமல்லாமல் கட்டிடக்கலைகளிலும் இந்திய பெயர் பெற காரணமாக இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை..

******************

ஒருவன் ஒரு பதிவு எழுதினாலே அதனை தங்கள் பணிச்சுமைகளின் காரணமாக படிப்பது கடினமான காரியம்... ஆனால் ஒரே பதிவாக எழுத வேண்டிய ஒரு மன்னனின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து நான்கு பகுதிகளாக எழுதிய போதும்.. கோவப்படாமல், திட்டாமல், அன்போடு வந்து படித்து தங்கள் கருத்துக்களை கூறிச்சென்ற அனைத்து சக பதிவர்கள், நண்பர்கள் தோழிகள் என அனைவருக்கும் எனது நன்றிகள்..

மன்னாதி மன்னன் தொடரை எழுத மிகவும் உதவியாக இருந்த மதனின் வந்தார்கள் வென்றார்களுக்கு மீண்டுமொரு முறை நன்றி..

ஹெலோ... ஹெலோ...

இருங்க சார்.. எங்கே கிளம்புறீங்க.. நன்றி சொன்னா எல்லாமே முடிஞ்சிடுமா.. இனி மேல் தான் ஆட்டமே ஆரம்பம்.. அதை மீண்டுமொரு பதிவில் தெரிவிக்கிறேன்..

..காத்திருங்கள் ஆவலுடன்..

80 comments:

செல்வா said...

நான்தான் முதல் ..

செல்வா said...

//இவரது ஆட்சிகாலத்தில இந்து முஸ்லிம் நட்புக்கு வித்திடப்பட்டது.///
இதனைப் பாராட்டலாம் ..!!

செல்வா said...

உண்மைலேயே பாபரோட வரலாற்றை அருமையா தொகுத்து சொல்லிட்டீங்க அண்ணா ..

இம்சைஅரசன் பாபு.. said...

உங்களுடைய முயற்சிகளுக்கு பாராட்டுகள்

செல்வா said...

///அதை மீண்டுமொரு பதிவில் தெரிவிக்கிறேன்..
..காத்திருங்கள் ஆவலுடன்..///

என்னது இன்னும் முடியலையா ..?

செல்வா said...

// உங்களுடைய முயற்சிகளுக்கு பாராட்டுகள்///
இது தொடர் பதிவுதானே நீங்க உங்க வாழ்த்த கூட பாதி சொல்லிட்டு தொடரும்னு போடலாம் ..!

வினோ said...

நல்லா வந்திருக்கு ஜெய்..
என்னது நீங்களும் சச்பென்சா? முடியலையே...

pinkyrose said...

வரலாற்ராசிரியரே வாழ்க வளமுடன்...!!!

Anonymous said...

//இனி மேல் தான் ஆட்டமே ஆரம்பம்..//
ரைட்டு.. உன் ஆட்டத்த ஆரம்பி நண்பா!

Anonymous said...

காத்திருங்கள் ஆவலுடன்//
ரைட்டு..அண்ணன் கிளம்பிட்டாரு!!

சௌந்தர் said...

எப்போ நண்பா பரீச்சை பாபர் பற்றி சுய குறிப்பு எழுத்து

ஹுஸைனம்மா said...

ரொம்பப் பொறுமையா தொகுத்து எழுதிருக்கீங்க. வாழ்த்துகள்.

சௌந்தர் said...

ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை நாடக்குறிப்பில் நுணுக்கமாக விவரித்து எழுதுவது பாபரின் பழக்கம்////

நல்லபழக்கம் இந்த உங்களுக்கு இருக்கா நண்பா

அடுத்த பதிவு எப்போ நண்பா ...

அன்பரசன் said...

என்ன ஆச்சு ஜெயந்த்? இந்த பதிவ ரெண்டு தடவ அழிச்சு அழிச்சு போட்டிருக்கீங்க?
மொத்தத்தில் அருமையான தொகுப்பு.

Katz said...

இந்த மாதிரி ஒரு வரலாறு பதிவு எழுதிய மனாதி மன்னர் வெறும்பய அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Sriakila said...

வரலாற்றுப் பதிவு ரொம்ப நல்ல இருந்தது!

//இனி மேல் தான் ஆட்டமே ஆரம்பம்.. அதை மீண்டுமொரு பதிவில் தெரிவிக்கிறேன்.. //

காத்திருக்கிறோம் ஆவலுடன்!

Anonymous said...

நல்லதொரு வரலாற்றுப் பதிவு..

அது இருக்கட்டும்.. வரலாறில் நீங்கள் எத்தனை மதிப்பெண்கள்??

சுசி said...

நல்ல முயற்சி..

வேற வழி.. காத்திருக்கோம் :))))

வினையூக்கி said...

நல்ல தொடர் கட்டுரை,

”இக்காலகட்டத்தில் வங்காளத்தில் வாலாட்டிய ஆங்கிலேயர்களை அடக்கினார்”

பாபர் காலத்தில் ஆங்கிலேயர்கள் வந்துவிட்டார்களா?

விஜய் said...

really very intresting ஜெயந்த் ...
இப்ப தான் தெரியுது வரலாறா நான் மிஸ் பண்ணி இருக்கேன் அப்டின்னு..என்ன பண்றது
பள்ளிகூடத்துல மனப்பாடம் செய்தி காலத்த ஓட்டியாச்சு

சீமான்கனி said...

பாராட்டுகள் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...

JDina said...

அருமை நண்பா, இக்காலத்தில் பண்டைய வரலாறு நமக்கு தெரிய வேண்டும், உதரணமாக, மன்னர்கள் Administration, Team Sprit, Team work and etc, எப்படி வழிவகுத்தார்கள் என்பது.
இதை போல் எதாவது புக் அல்லது லிங்க் உள்ளதா???
நான் ஆவலுடன் தேடிகிறேன்.....

Chitra said...

ஹலோ.... ஹலோ...... இந்த தொடரோடு முடிச்சுராதீங்க..... இன்னும் பல மன்னர்களை பற்றி தொடர்ந்து எழுதுங்க....

r.v.saravanan said...

நல்லதொரு வரலாற்றுப் பதிவு



அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்

மோகன்ஜி said...

உங்கள் மன்னாதி மன்னன்
சுவாரஸ்யமாக இருந்தது. உங்க எழுத்தின் நடையும் சரளமாய் ஓடுகிறது. எப்போ எங்க ராஜராஜசோழனைப் பத்தி எழுதப் போறீங்க?

ஜெய்லானி said...

பாபரின் 48 வயசுக்குள்ள இத்தனை வெற்றிகள்.... இது அவரின் அசாத்திய நம்பிக்கை மற்றும் வீரம்தான் காரணம்..!!!

நல்ல பதிவு

வேலன். said...

ராஜராஜ சோழனை பற்றி எழுதுவதானல் சொல்லுங்கள்..தஞசாவுர் புகைப்படங்கள் நிறைய என்னிடம் உள்ளது நண்பரே..தங்களுக்கு தருகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Ahamed irshad said...

அசத்தல் நண்பா..வரலாறு முக்கியம்னு சொல்ல வச்சுட்டீங்களே..நன்று..

Unknown said...

பாபரின் பதிவு sooper தொடராக செல்கிறது..வாழ்த்துக்கள் நண்பா!

அண்ணாமலை..!! said...

ஒரு நல்ல தொடர் நண்பரே!
அருமுயற்சி!

அண்ணாமலை..!! said...

ஒரு நல்ல தொடர் நண்பரே!
அருமுயற்சி!

மங்குனி அமைச்சர் said...

ஏற்கனவே படித்த வரலாறு தான் , ஆனாலும் சுருக்கமா , அழகா எழுதி இருக்கிங்க

a said...

சூப்பர்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

நான்தான் முதல் ..


///

முதல் வருகைக்கு நன்றி செல்வா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

//இவரது ஆட்சிகாலத்தில இந்து முஸ்லிம் நட்புக்கு வித்திடப்பட்டது.///
இதனைப் பாராட்டலாம் ..!!

//

நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

உங்களுடைய முயற்சிகளுக்கு பாராட்டுகள்

//

நன்றி நண்பரே.. உங்கள் வருகைக்கும்.. கருத்திற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said...

நல்லா வந்திருக்கு ஜெய்..
என்னது நீங்களும் சச்பென்சா? முடியலையே...

//

நன்றி நண்பரே.. உங்கள் வருகைக்கும்.. கருத்திற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

pinkyrose said...

வரலாற்ராசிரியரே வாழ்க வளமுடன்...!!!

//

யாருங்க அது.. நன்றி தோழி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

ரைட்டு.. உன் ஆட்டத்த ஆரம்பி நண்பா!

//

ஆரம்பிச்சிட்டா போச்சு

நன்றி நண்பரே.. உங்கள் வருகைக்கும்.. கருத்திற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...


ரைட்டு..அண்ணன் கிளம்பிட்டாரு!!

//

எங்கையும் போகாதீங்க...

உங்கள் வருகைக்கும்.. கருத்திற்கும் நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

எப்போ நண்பா பரீச்சை பாபர் பற்றி சுய குறிப்பு எழுத்து

//

அடுத்த வாரம் நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹுஸைனம்மா said...

ரொம்பப் பொறுமையா தொகுத்து எழுதிருக்கீங்க. வாழ்த்துகள்.

//
மிக்க நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை நாடக்குறிப்பில் நுணுக்கமாக விவரித்து எழுதுவது பாபரின் பழக்கம்////

நல்லபழக்கம் இந்த உங்களுக்கு இருக்கா நண்பா

அடுத்த பதிவு எப்போ நண்பா ...

//

இருக்கு நண்பா.. கடந்த 11 வருசமா தினமும் தவறாம பண்றது டைரி எழுதுறது தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்பரசன் said...

என்ன ஆச்சு ஜெயந்த்? இந்த பதிவ ரெண்டு தடவ அழிச்சு அழிச்சு போட்டிருக்கீங்க?
மொத்தத்தில் அருமையான தொகுப்பு.

//

எல்லாம் எதிர்கட்சி சதி... சரியாவே போஸ்ட் பண்ண முடியல..

உங்கள் வருகைக்கும்.. கருத்திற்கும் நன்றி .

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழிப்போக்கன் said...

இந்த மாதிரி ஒரு வரலாறு பதிவு எழுதிய மனாதி மன்னர் வெறும்பய அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

//

.நன்றி நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Sriakila said...

வரலாற்றுப் பதிவு ரொம்ப நல்ல இருந்தது!

காத்திருக்கிறோம் ஆவலுடன்!

//

உங்கள் வருகைக்கும்.. கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்திரா said...

நல்லதொரு வரலாற்றுப் பதிவு..

அது இருக்கட்டும்.. வரலாறில் நீங்கள் எத்தனை மதிப்பெண்கள்??

//

ரொம்ப சிரமப்பட்டு பாஸ் பண்ணினதா ஞாபகம்...

வருகைக்கு நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுசி said...

நல்ல முயற்சி..

வேற வழி.. காத்திருக்கோம் :))))

//

வேற வழியே இல்ல.. காத்திருந்து தான் ஆகணும்..

வருகைக்கு நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினையூக்கி said...

நல்ல தொடர் கட்டுரை,

பாபர் காலத்தில் ஆங்கிலேயர்கள் வந்துவிட்டார்களா?

//

ஆமாம் நண்பரே.. அப்படிதான் வரலாறு சொல்கிறது...

உங்கள் வருகைக்கும்.. கருத்திற்கும் நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

விஜய் said...

really very intresting ஜெயந்த் ...
இப்ப தான் தெரியுது வரலாறா நான் மிஸ் பண்ணி இருக்கேன் அப்டின்னு..என்ன பண்றது
பள்ளிகூடத்துல மனப்பாடம் செய்தி காலத்த ஓட்டியாச்சு

//

நீங்க மட்டுமில்ல நண்பா.. ரொம்ப பேரு அப்படி தான்... (நானும் ஒருத்தன்.)

வருகைக்கும்.. கருத்திற்கும் நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

சீமான்கனி said...

பாராட்டுகள் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...

//

உங்கள் வருகைக்கும்.. கருத்திற்கும் நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

JDina said...

அருமை நண்பா, இக்காலத்தில் பண்டைய வரலாறு நமக்கு தெரிய வேண்டும், உதரணமாக, மன்னர்கள் Administration, Team Sprit, Team work and etc, எப்படி வழிவகுத்தார்கள் என்பது.
இதை போல் எதாவது புக் அல்லது லிங்க் உள்ளதா???
நான் ஆவலுடன் தேடிகிறேன்.....

/

வருகைக்கு நன்றி தோழரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra said...

ஹலோ.... ஹலோ...... இந்த தொடரோடு முடிச்சுராதீங்க..... இன்னும் பல மன்னர்களை பற்றி தொடர்ந்து எழுதுங்க....

//

உங்கள் கேள்விக்கு அடுத்த பதிவில் பதில் வரும்...

வருகைக்கு நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

r.v.saravanan said...

நல்லதொரு வரலாற்றுப் பதிவு

அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்

//

வருகைக்கு நன்றி தோழரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மோகன்ஜி said...

உங்கள் மன்னாதி மன்னன்
சுவாரஸ்யமாக இருந்தது. உங்க எழுத்தின் நடையும் சரளமாய் ஓடுகிறது. எப்போ எங்க ராஜராஜசோழனைப் பத்தி எழுதப் போறீங்க?


//

சீக்கிரமே எழுதி விடலாம் சகோதரா....வருகைக்கு நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜெய்லானி said...

பாபரின் 48 வயசுக்குள்ள இத்தனை வெற்றிகள்.... இது அவரின் அசாத்திய நம்பிக்கை மற்றும் வீரம்தான் காரணம்..!!!

நல்ல பதிவு..

///

நம்பிக்கையுள்ளவன் என்று தோற்றதில்லை...
வருகைக்கு நன்றி சகோதரா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வேலன். said...

ராஜராஜ சோழனை பற்றி எழுதுவதானல் சொல்லுங்கள்..தஞசாவுர் புகைப்படங்கள் நிறைய என்னிடம் உள்ளது நண்பரே..தங்களுக்கு தருகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


//

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி அண்ணா... எழுதுவதாக இருந்தால் நிச்சயமாக கேட்கிறேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அஹமது இர்ஷாத் said...

அசத்தல் நண்பா..வரலாறு முக்கியம்னு சொல்ல வச்சுட்டீங்களே..நன்று..

//

வரலாறு என்றுமே முக்கியமான ஓன்று தானே நண்பரே...

வருகைக்கு நன்றி ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மைந்தன் சிவா said...

பாபரின் பதிவு sooper தொடராக செல்கிறது..வாழ்த்துக்கள் நண்பா!

//

நன்றி நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அண்ணாமலை..!! said...

ஒரு நல்ல தொடர் நண்பரே!
அருமுயற்சி!

//

மிக்க நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனி அமைசர் said...

ஏற்கனவே படித்த வரலாறு தான் , ஆனாலும் சுருக்கமா , அழகா எழுதி இருக்கிங்க


//

மிக்க நன்றி அமைச்சரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

சூப்பர்.

//

Thanks Thala..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Rajkumar said...

உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

///

Thaks for ur info..

புதியஜீவன் said...

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

வினையூக்கி said...

பாபர் காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வரவே இல்லை என்பதுதான் உண்மை. பாபருக்குப்பின்னர் நூறு வருடங்கள் கழித்தே ஜகாங்கீர் காலத்தில் தான் , ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றியது.

Bruno said...

//சித்தூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன் ராணாசிங்..//

???

//கி.பி 1529 மார்ச் 16 ம் தேதி ஆக்ராவின் மேற்கே 20 மைல் தொலைவில் மற்றொரு மாபெரும் யுத்தம் துவங்கியது.//

பானிபட் யுத்தமா

//இக்காலகட்டத்தில் வங்காளத்தில் வாலாட்டிய ஆங்கிலேயர்களை அடக்கினார்.//

ஞே ஞே ஙே ஙே ஙே ஙே

ஜகாங்கீரின் காலத்தில் தானே ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தார்கள்

--

தகவல்களை சரிபார்க்க முடியுமா

Bruno said...

//
ஆமாம் நண்பரே.. அப்படிதான் வரலாறு சொல்கிறது...//

இல்லை நண்பரே


ஜகாங்கீரின் காலத்தில் தானே ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தார்கள் எனறு தான் வரலாறு கூறுகிறது

சரி பார்க்கவும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாபர் காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா வரவில்லை என்ற தவறை சுட்டி காட்டிய சகோதரர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... ஒரே நேரத்தில் பாபரையும். பற்றி படித்ததால் சற்று குழம்பி விட்டேன்.... தவறுக்கு வருந்துகிறேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

//சித்தூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன் ராணாசிங்..//

//

மேவார் நாட்டை ஆண்ட ராஜபுத்திர மாவீரன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

தவறுகளை சுட்டிகாட்டிய சகோதரர்களுக்கு மீண்டுமொரு முறை என் நன்றிகள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

//கி.பி 1529 மார்ச் 16 ம் தேதி ஆக்ராவின் மேற்கே 20 மைல் தொலைவில் மற்றொரு மாபெரும் யுத்தம் துவங்கியது.//

பானிபட் யுத்தமா


//

பிழைக்கு மன்னிக்கவும்... 1529 அல்ல 1527 ...

இது பானிபட் யுத்தமல்ல.. கன்வா எனும் கிராமத்தில் நடந்த மற்றொரு யுத்தம்...

mkr said...

நல்ல பதிவு நண்பரே.தொடர்ந்து எழுதுங்கள்.பதிவு இடுவதற்கு முன்பு பல தடவை சரிபார்த்து கொள்ளுங்கள்

ம.தி.சுதா said...

வரலாற்றை அருமையான மொழி நடையில் காட்டியிரந்தீர்கள் மன்னிக்கவும் இதற்க மட்டும் தான் கருத்திட்டிருக்கிறேன்... தங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்..

ஆ.ஞானசேகரன் said...

வரலாற்று இடுகையானாலும் ஆழகாக எழ்தியுள்ளீர்கள்... பாராட்டுகளும் வாழ்த்துகளும் நண்பா

ஜெயந்த் கிருஷ்ணா said...

mkr said...

நல்ல பதிவு நண்பரே.தொடர்ந்து எழுதுங்கள்.பதிவு இடுவதற்கு முன்பு பல தடவை சரிபார்த்து கொள்ளுங்கள்

//
மிக்க நன்றி... நிச்சயமாக... இப்போது நடந்த பிழையை இதையும் ஒரு பாடமாகவே கருதுகிறேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ம.தி.சுதா said...

வரலாற்றை அருமையான மொழி நடையில் காட்டியிரந்தீர்கள் மன்னிக்கவும் இதற்க மட்டும் தான் கருத்திட்டிருக்கிறேன்... தங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்..


//

மிக்க நன்றி நண்பரே.. வருகைக்கும் வாசிப்பிற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆ.ஞானசேகரன் said...

வரலாற்று இடுகையானாலும் ஆழகாக எழ்தியுள்ளீர்கள்... பாராட்டுகளும் வாழ்த்துகளும் நண்பா

//

மிக்க நன்றி நண்பரே.. வருகைக்கும் வாசிப்பிற்கும்...

vinthaimanithan said...

இந்திய 'வரலாற்றை'ப் பாத்தீங்கன்னா 'ஆரியர் வருகை', 'இஸ்லாமியர் படையெடுப்பு'ன்னு இருக்கும்.... அது என்ன 'வருகை', 'படையெடுப்பு'?! அந்த அளவுக்கு இஸ்லாமிய விரோதத்தை வளர்த்துவிட்டு இருக்கின்றனர் காவியிஸ்டுகள்... இந்த நேரத்தில் அவசியமான , அற்புதமான பதிவு..... கூடியவிரைவில் திப்புசுல்தானைப் பற்றி எழுதுங்கள். நானும் எழுதலாம் என்றிருக்கிறேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..