மன்னாதி மன்னன் 2 - பாபர் - தொடர்பதிவு..

அன்பானவர்களுக்கு வணக்கம்.. இந்த மன்னாதி மன்னன் தொடர்பதிவின்முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம் .. முதல் பாகத்தை படித்தவர்களுக்கு தடையில்லை தொடரலாம்..விதியின் விளையாட்டால் அலைக்கழிக்கப்பட்ட பாபரின் பக்கம் அதிர்ஷ்டக்காற்று வீசத்தொடங்கியது.. இந்த சமயத்தில் சொல்லிவைத்தது போல ஆப்கானிஸ்தானில் காபூல் மன்னன் திடீரென இறந்து விடவே, சரியான வாரிசு இல்லாத காரணத்தால் அந்நாட்டை பாபர் கைப்பற்ற திட்டமிட்டார். வெறும் 200 பேர் கொண்ட ஒரு சிறு படையுடன் காபூலை நோக்கி புறப்பட்டார். போகும் வழியில் பாபரின் தன்னம்பிக்கையை கண்டு வழிநெடுகிலும் உள்ள பல கிராமங்களிருந்து இளைஞர்கள் வந்து சேர்ந்து கொண்டனர். கி.பி 1504 ல் காபூல் அரியணையில் அமர்ந்தார் பாபர். அப்போது அவருக்கு வயது இருபத்தியிரண்டு.காபூல் நகரில் கூடும் ஒரு பெரும் சந்தையில் வந்திறங்கும் கலைநயமிக்க மற்றும் பல வியக்கத்தக்க பொருட்களை பார்த்ததும் பாபரின் கண்கள் அகல விரிந்தது.. கேள்வி எழுந்தது.. எங்கிருந்து ... பதில் வந்தது இந்தியா என்று.. மெதுவாய் படர்ந்தது ஆசை இந்தியாவையும் ஆள வேண்டும் என்று..

அதிர்ஷ்ட காற்று பாபரை அரவணைத்து வீச ஆரம்பித்தது.. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் சொல்லி வைத்தது போல டெல்லியை கடங்கோலாட்சி புரிந்த இப்ரகாம் லோடியை வீழ்த்த தௌலத்கான் என்பவரிடமிருந்து "எங்களுக்கு உதவ முடியுமா" என்று ஒரு கடிதம் வந்து சேர்ந்தது பாபரின் கைகளுக்கு.. இது தான் தக்க சமயம் என்றெண்ணி ஒரு பெரும் படையோடு புறப்பட்டார் பாபர் இந்தியாவை நோக்கி..

உதவி செய்ய வரும் பாபர் நமக்கொரு உபத்திரபமாக மாறிவிடுவாரோ என்று பயந்த தௌலத்கான் சில சிற்றரசர்களை ஓன்று சேர்த்து பாபருக்கு எதிராக போரிட்டான், ஆனால் அனுபவமும் ஆவேசமும் கொண்ட பாபரின் படைக்கு முன் அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை..இவர்களை வென்ற வீரமுகத்தொடு டெல்லியை நோக்கி புறப்பட்டது பாபரின் படை...நேரம் கடத்தாமல் தயாரானது பாபரின் படை இப்ரகாம் லோடியுடனான போருக்கு.. போர் முரசு கொட்டப்பட்டது டெல்லிக்கு சுமார் 50 மைல் தூரத்திலுள்ள பானிபட் என்ற கிராமத்தில்.. யானைப்படை, குதிரைப்படை மற்றும் தரைப்படை என இப்ரகாம் லோடியின் படைகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஒரு லட்ச்சத்திக்கு மேல்.. ஆனால் பாபரின் படையின் எண்ணிக்கை வெறும் 12 ,000 தான்... துவங்கி ஆறு மணி நேரம் கூட நீடிக்கவில்லை இந்த வரலாற்று பிரசித்தி பெற்ற பானிபட் யுத்தம்.. இந்த யுத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 கும் மேல். (இந்த போருக்கு பின் சுமார் ஏட்டு லட்சம் பேர் சிறை பிடிக்கப்பட்டார்கள் என்பது கேட்டறிந்த செய்தி) இந்த பானிபட் யுத்தத்தில் முக்கிய தளபதியாக இருந்து வெற்றிக்கு பெரிது உதவியது பாபரின் பதினேழு வயது மகன் ஹீமாயூன்..
பானிபட் கிராமத்தில் போர் நடந்த மைதானத்தில் இப்ரகாம் லோடியின் பாழடைந்த கல்லறையை இன்றும் காணலாம்.

பானிபட் யுத்தம் முடிந்த கையோடு ஹீமாயூன் தலைமையில் ஒரு படை ஆக்ராவை கைப்பற்றியது. இந்த நேரத்தில் தான் உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரம் ஹீமாயூன் கைகளுக்கு வந்தது. (கோஹினூர் வைரத்தின் வரலாறு பற்றி நீங்கள் இங்கே படிக்கலாம்). நாட்கள் செல்ல செல்ல ஹீமாயூன்மற்றும் சில தளபதிகளின் சாமர்த்தியத்தால் பாபரின் படைகள் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றி டெல்லி சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரித்தனர்..
ஆனால்...

என்ன தான் நமக்குள் பூசல் இருந்தாலும் ஒரு அந்நியன் நம் நாட்டை கைப்பற்றுவதா என்று சில தேசப்பற்று மிகுந்த அரசர்கள் படையுடன் கிளம்பியதன் விளைவை.. அடுத்த பதிவில் பார்க்கலாம்...

45 comments:

முனியாண்டி said...

Way of writing is too good

பதிவுலகில் பாபு said...

சூப்பரா கதை சொல்றீங்க.. நல்லாயிருக்கு..

சௌந்தர் said...

நல்ல இடத்தில் தொடரும்

ப.செல்வக்குமார் said...

//வெறும் 200 பேர் கொண்ட ஒரு சிறு படையுடன் காபூலை நோக்கி புறப்பட்டார்.///
நம்பவே முடியல ..
// இந்த யுத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 கும் மேல். (இந்த போருக்கு பின் சுமார் ஏட்டு லட்சம் பேர் சிறை பிடிக்கப்பட்டார்கள் என்பது கேட்டறிந்த செய்தி)//
படிக்கரக்கே கஷ்டமாக இருக்கிறது ..
ஆனா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க . படிக்கும்போது அடுத்த பதிவு எப்பொழு அப்படின்னு ஆசையா இருக்கிறது ..

சௌந்தர் said...

.. இந்த யுத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 கும் மேல்.//

எப்போதும் போரின் விளைவு கொடுமையானது

அஹமது இர்ஷாத் said...

அருமை நண்பா.. ரொம்ப நல்லாயிருக்கு தொடருங்கள்..

கக்கு - மாணிக்கம் said...

பெரும்பாலோரின் ஆக்கங்களை படிக்கும் போது ஒரு எரிச்சல் வரும். நேரடியாக எதையும் சொல்ல முடியாமல் பெரிய "அறிவு ஜீவி தனமாக " நினைத்துக்கொண்டு வரட்டுத்தனமாக தத்துவம் பேசி எழுதுவார்கள்.
உங்கள் எழுத்துக்களின் அது போன்ற பாசாங்கு எதுவும் இல்லை. எந்த செய்தியாக இருந்தாலும் வாசகர்களின் ஆர்வத்தை தூண்டி, அவர்களுக்கு நிறைய செய்திகள் சொல்வது சுஜாதா. மதன் போன்றவர்களின் வழிமுறை.
உங்களுக்கும் அது வாய்த்துள்ளது. தொடருங்கள்.

அருண் பிரசாத் said...

நல்லா பரபரன்னு போகுது. தொடருங்கள்

வினோ said...

நல்ல இருக்கு நண்பா.. பாபர் பற்றி நிறைய விசயங்கள்.. மிக்க நன்றி..

Anonymous said...

Nalla thagaval... Varalaatrai miga azhagaak koori varivadharkku nandri!!!

ஜெய்லானி said...

நல்ல தகவல்கள் தொடருங்கள்..((நீங்க வெரும் பய இல்லை ))

அஹமது இர்ஷாத் said...

விருது வெயிட்டிங்...

http://bluehillstree.blogspot.com/2010/08/blog-post_30.html

Sriakila said...

இருங்க... முதல்ல இருந்துப் படிச்சிட்டு வர்றேன்.

மைந்தன் சிவா said...

Very nice bro,keep continue!!

ஜீவன்பென்னி said...

சூப்பர் நரேசன்......

ஜீவன்பென்னி said...

சூப்பர் நரேசன்......

வெறும்பய said...

முனியாண்டி said...

Way of writing is too good

//

Thanks Anna..

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

சூப்பரா கதை சொல்றீங்க.. நல்லாயிருக்கு..

//

நண்பரே இது கதையில்ல... நிஜம்.. வருகைக்கு நன்றி..

வெறும்பய said...

சௌந்தர் said...

நல்ல இடத்தில் தொடரும்

//

இல்லன்னா பதிவு ரொம்ப பெருசா போகுது நண்பா.. அதில்லாம ஒரு த்ரில் வேணாமா..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

ஆனா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க . படிக்கும்போது அடுத்த பதிவு எப்பொழு அப்படின்னு ஆசையா இருக்கிறது ..

//

நன்றி செல்வா.. அடுத்ததா சீக்கிரம் போட்டிருவோம்..

வெறும்பய said...

சௌந்தர் said...

.. இந்த யுத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 கும் மேல்.//

எப்போதும் போரின் விளைவு கொடுமையானது

//

இதை விடவும் மோசமான போர்கள் முன்பு நடந்திருக்கின்றன

வெறும்பய said...

அஹமது இர்ஷாத் said...

அருமை நண்பா.. ரொம்ப நல்லாயிருக்கு தொடருங்கள்..

//

நன்றி நண்பரே.. நிச்சயம் தொடருவோம்..

அன்பரசன் said...

சுவாரசியமா இருக்குங்க ஜெயந்த்

வெறும்பய said...

கக்கு - மாணிக்கம் said...

பெரும்பாலோரின் ஆக்கங்களை படிக்கும் போது ஒரு எரிச்சல் வரும். நேரடியாக எதையும் சொல்ல முடியாமல் பெரிய "அறிவு ஜீவி தனமாக " நினைத்துக்கொண்டு வரட்டுத்தனமாக தத்துவம் பேசி எழுதுவார்கள்.
உங்கள் எழுத்துக்களின் அது போன்ற பாசாங்கு எதுவும் இல்லை. எந்த செய்தியாக இருந்தாலும் வாசகர்களின் ஆர்வத்தை தூண்டி, அவர்களுக்கு நிறைய செய்திகள் சொல்வது சுஜாதா. மதன் போன்றவர்களின் வழிமுறை.
உங்களுக்கும் அது வாய்த்துள்ளது. தொடருங்கள்.

//

மிக்க நன்றி அண்ணா ..

சில விசயங்கள் காசு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது என்பார்கள்.. அது போன்ற ஒன்றாக தான் இதை நான் நினைக்கிறேன்.. எதோ வாங்க முடியாத விருது வாங்கியது போல எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது..

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

நல்லா பரபரன்னு போகுது. தொடருங்கள்

//

வருகைக்கு நன்றி..

வெறும்பய said...

வினோ said...

நல்ல இருக்கு நண்பா.. பாபர் பற்றி நிறைய விசயங்கள்.. மிக்க நன்றி..

//

வருகைக்கு நன்றி நண்பா..

வெறும்பய said...

akhenam said...

Nalla thagaval... Varalaatrai miga azhagaak koori varivadharkku nandri!!!

//

வருகைக்கு நன்றி நண்பா..

வெறும்பய said...

ஜெய்லானி said...

நல்ல தகவல்கள் தொடருங்கள்..((நீங்க வெரும் பய இல்லை ))

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரா..

வெறும்பய said...

அஹமது இர்ஷாத் said...

விருது வெயிட்டிங்...

///

எங்கே எங்கே... இதோ வரேன்..

வெறும்பய said...

மைந்தன் சிவா said...

Very nice bro,keep continue!!

//

Thanks for comming friend

வெறும்பய said...

ஜீவன்பென்னி said...

சூப்பர் நரேசன்......

//

தலைவா இது நமக்கு போட்டா கமெண்ட் மாதிரி இல்லையே..

வெறும்பய said...

அன்பரசன் said...

சுவாரசியமா இருக்குங்க ஜெயந்த்

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரா..

RVS said...

மன்னாதி மண்ணை எழுதி.. நீங்கள் மன்னாதி மன்னன் ஆகிவிட்டீர்கள்... நன்றாக வரலாறு படைக்கிறீர்கள்...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Chitra said...

very interesting.....

மோகன்ஜி said...

உங்கள் படைப்பில் உங்கள் மெனக்கெடல் தெரிகிறது. சரித்திரத்தை,சுவாரசியமாக எழுதுவது சுலபம் அல்ல.உங்களுக்கு லகுவாக வருகிறது. மேலும் மேலும் எழுதுங்கள்.

Anonymous said...

22 year old got 17 year old kid?
will not be possible even in rajini movies...
or it happened after some yrs of kabul's conquest

கவிதை காதலன் said...

அருமையான பதிவு. போர்கள் பற்றின சில நுணுக்கமான குறிப்புகள் தந்தீர்கள் என்றால் இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கும்.

Sriakila said...

பாபர் பற்றி நிறைய விஷயங்கள் எழுதியிருக்கீங்க. இதெல்லாம் நான் படிக்கும் வயதில் தெரிந்து கொள்ளாதவை. ஆனால் உங்கள் பதிவின் மூலம் படித்துத் தெரிந்துக் கொள்கிறேன்.

கோஹினூர் வைரம் பற்றி ஏற்கனவே பனித்துளி சங்கர் அவர்களின் பதிவில் படித்திருக்கிறேன்.

தொடருங்கள்!!

thanks sister.

வெறும்பய said...

மோகன்ஜி said...

உங்கள் படைப்பில் உங்கள் மெனக்கெடல் தெரிகிறது. சரித்திரத்தை,சுவாரசியமாக எழுதுவது சுலபம் அல்ல.உங்களுக்கு லகுவாக வருகிறது. மேலும் மேலும் எழுதுங்கள்.

//

மெனக்கெடல் கொஞ்சம் அதிகம் தான் .. ஆனால் அதிலும் ஒரு திருப்தி இருக்கிறது

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரா..

வெறும்பய said...

Anonymous said...

22 year old got 17 year old kid?
will not be possible even in rajini movies...
or it happened after some yrs of kabul's conquest

//

நன்றாக கேட்டீர்கள்.. இதற்க்கான பதிலை அடுத்த பதிவில் சொல்கிறேன். பெயர் தெரியாத அன்பரே...

வெறும்பய said...

கவிதை காதலன் said...

அருமையான பதிவு. போர்கள் பற்றின சில நுணுக்கமான குறிப்புகள் தந்தீர்கள் என்றால் இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கும்.

//

பல சுவாரஸ்யமான போர் நுணுக்கங்கள் இருக்கின்றன.. பதிவின் நீளம் கருதியே பல விசயங்களை சொல்ல முடியாமல் போய் விட்டது.. முயற்சிக்கிறேன்...

வெறும்பய said...

Sriakila said...

பாபர் பற்றி நிறைய விஷயங்கள் எழுதியிருக்கீங்க. இதெல்லாம் நான் படிக்கும் வயதில் தெரிந்து கொள்ளாதவை. ஆனால் உங்கள் பதிவின் மூலம் படித்துத் தெரிந்துக் கொள்கிறேன்.

கோஹினூர் வைரம் பற்றி ஏற்கனவே பனித்துளி சங்கர் அவர்களின் பதிவில் படித்திருக்கிறேன்.

தொடருங்கள்!!

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி..

Jaleela Kamal said...

எல்லோரும் கதை கவிதை கட்டுரை

நீங்கள் வித்தியாசமாக வரலாறு படைப்புகள் தொடருங்கல்