"ஜோதி"


"எலேய் மாப்பிள உன்ன ஜோதி கூப்பிட்டாளாம்டா.. உன்கிட்ட எதோ முக்கியமா பேசணுமாம்"

வாசலருகிலிருந்து வந்த அருணின் குரல் "மாப்பிளை பெஞ்ச்" என்ற பெருமை கொண்ட கடைசி பெஞ்சில் கவிதை என நினைத்து எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த என கவனத்தை கலைத்தது.. அவன் குரல் என செவிப்பறைகளை வந்தடைந்த அடுத்த கணம் நானறியாமல் நடக்கத்துவங்கின என் கால்கள் lllyear MECHANICAL Department லிருந்து ஏழு கிளாஸ் ரூம் தள்ளியிருந்த lllyear Computer Seience Department ஐ நோக்கி இனம் புரியா மகிழ்ச்சியுடனும், சொல்லத்தெரியா பதற்றத்துடனும்....

*****************

"ஜோதி" என்னை வாட்டி வதைக்கும் வசீகரப் பெயர்..  பெயருக்கேற்றார்ப்போல எப்போதும் புன்னைகைகளை ஏந்திக் கொண்டிருக்கும் லட்சணமான முகம், நெற்றியில் விழுந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஓரிரு முடிக்கற்றைகள், ஒவ்வொரு புன்னகையிலும் என்னை புதைக்கும் கன்னத்தின் குழிகள், பிறை நிலவுக்கு திருஷ்டிப்பொட்டு போல புருவங்களுக்கு சற்று மேலே பதிந்திருக்கும் சந்தனமும், சாந்துப்பொட்டும், அவளின் ஓரப்பார்வையும், சிதறாமல் சிந்தும் புன்னகையும் என்னை தினம் தினம் கொன்று விட்டு போகும்..

கல்லூரியில் படிக்கும் மொத்த பெண்களில் எண்ணிக்கையில் 80 % மலையாளிப் பெண்களாக இருந்தாலும் எனக்கிவள் "ஸ்பெசல்"

*****************


ஜோதியும் நானும் நல்ல நட்புகள் என்பதை அனைவரறிந்தாலும், என்னுள் நான் பூட்டி வைத்திருக்கும் காதலை அவளறிவாள் என்பதை நானறிவேன். ஒரு போதும் நான் வெளிப்படையாக சொன்னதில்லை என்றாலும் அவளின் புன்னகைகள் சொல்லும் என் பிரியத்தை அவள் புரிந்ததை. எதற்கும் அவசரப்படுவதில்லை அவள், இதுவரை கோபப்பட்டும் பார்த்ததில்லை நான், எதைக்கூறினாலும் புன்னகையே அவளின் பதில்.

நிச்சயமாக அடி விழாது என்ற நம்பிக்கையில் நேற்று மதிய இடைவேளைக்கு பின்னர் பேசிக்கொண்டிருக்கையில் அவளிடம் "உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, என் வாழ்க்கை முழுவதும் நீ துணையாக வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிவிட்டேன்..

பதிலேதும் வரவில்லை.. எப்போதும் போல புன்னகையை புன்னகையை சிதறவிடாமல் திடீரென எதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.

இரண்டு நிமிட மௌனத்திற்கு பின் வாய் திறந்தாள்.. வார்த்தைகள் உதிர்ந்தன..

"எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ஜெயந்த்.. இது நம்ம வாழ்க்கை எடுத்தோம் கவுத்தொமுன்னு முடிவெடுக்க முடியாது. சோ நான் கொஞ்சம் யோசிக்கணும்" என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சென்றாள்.. நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. இல்லை என்று சொல்லாமல் யோசிக்கிறேன் என்றாவது சொன்னாளே என்ற சந்தோசத்திலும் நல்ல பதில் தான் வரும் என்ற நம்பிக்கையிலும்...


*****************

இதோ சொல்லியனுப்பியிருக்கிறாள்.. அதற்காகத் தான் இருக்க வேண்டும்.. நிச்சயம் நல்ல முடிவாகத்தான் இருக்க வேண்டும் என்று தெரிந்த, தெரியாத, பெயருள்ள, பெயரில்லாத ஆயிரக்கணக்கான கடவுள்களை மனதிற்குள் வேண்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கிறேன் அவளின் பதிலை நோக்கி..

இதோ பக்கத்தில் வந்திட்டேன் இப்ப போயிருவேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அடுத்த பதிவு வரைக்கும்.. நல்ல முடிவாத்தான் இருக்கனுமுன்னு கடவுளை வேண்டிக்குங்க எனக்காக..


217 comments:

«Oldest   ‹Older   201 – 217 of 217   Newer›   Newest»
அழகி said...

அட​போப்பா.... இதுக்​கே இவ்வளவு க​மெண்ட்ஸா, இதுல நான் ஒரு க​மெண்ட் ​சொல்லி அ​த நீ படிச்சி..... அடுத்த பதிவுல பாக்கலாம்.

Anonymous said...

அடக் கடவுளே..
இந்த “தொடரும்“ போட்ற வியாதி உங்களுக்கும் ஒட்டிக்கிச்சா???

ஜெயந்தி said...

நல்லாத்தான் போகுது தொடர். கதையா உண்மையா?

Unknown said...

ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறீங்களே?

thozhi said...

hi suuuuuuuuuper!!!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

கக்கு - மாணிக்கம் said...



இந்த பாவம் உங்கள சும்மாவிடாது ! :))))))))))))

//

நீங்களே சொல்லுங்க இவங்கள என்ன பண்றது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எப்பூடி.. said...

தல அந்த பொண்ணு இல்லையின்னு மட்டும் சொல்லிகிச்சு அப்புறம் இன்னா நடக்குதின்னு மட்டும் பாரு, ஒரு பஸ்சு லாரி கூட நம்மகிட்டயிருந்து தப்பாது :-)

//

கொவப்படாதே தலைவா... நம்புவோம் நல்ல முடிவா தான் இருக்குமுன்னு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாதவன் said...

201 சுப்பர் கலக்கிடிங்க

//

thanks thala..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அழகி said...

அட​போப்பா.... இதுக்​கே இவ்வளவு க​மெண்ட்ஸா, இதுல நான் ஒரு க​மெண்ட் ​சொல்லி அ​த நீ படிச்சி..... அடுத்த பதிவுல பாக்கலாம்.

//

நீங்க வந்ததே போதும்.. அடிக்கடி வாங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்திரா said...

அடக் கடவுளே..
இந்த “தொடரும்“ போட்ற வியாதி உங்களுக்கும் ஒட்டிக்கிச்சா???

//

ஒரு சஸ்பென்ஸ் வேணாமா... ஒரே பதிவுல போட்டா ரொம்ப பெருசா இருக்கு அது தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜெயந்தி said...

நல்லாத்தான் போகுது தொடர். கதையா உண்மையா?

//

கொஞ்சம் கதையும், நிறைய உண்மையும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜிஜி said...

ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறீங்களே?

//

இருந்தா தானே நல்லாயிருக்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

thozhi said...

hi suuuuuuuuuper!!!!!

//

thanks thozhi..

THOPPITHOPPI said...

எப்பா கமன்ட் பண்ணலாம்னா scroll பண்ணியே கைவலிச்சிடுச்சி போங்க

அரவிந்த் said...

மிக நன்றாக, அழகாக, ஆவலைத் தூண்டும்படி எழுத வருகிறது உங்களுக்கு. வாழ்த்துகள். அப்புறம் என்ன ஆச்சு, சீக்கிரம் சொல்லுங்க சாமியோவ்!

Anonymous said...

கமென்ட் போடலாம்னு வந்தா இடமே இல்லபா

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

«Oldest ‹Older   201 – 217 of 217   Newer› Newest»