ஊஞ்சலாடும் என் இறகொன்று..நான் வெறுத்தொதுக்கிய என் கையெழுத்தை மீண்டுமொருமுறை கிறுக்கிப்பார்க்கும் ஆசையுடனும்.. என்னுள் காணமல் போன என்னை தேடவும்.. அரையாண்டுகள் எழுதாமல் விட்ட பக்கங்களை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு என் பேனா முத்தமிடுகிறது உன்னுடலை...

வாழ்ந்த வாழ்க்கை, வாழும் வாழ்க்கை, படித்த படிப்பு, செய்யும் வேலை என எதுவுமே என் எதிர்பார்ப்பின் படி அமையாவிடினும், எனக்கு கிடைத்த அனைத்தையும் நான் எதிர்பார்த்தவைகளாக மாற்றி வாழ பழகி விட்ட எனக்கு கடந்த சில வாரங்களாக எல்லாமே மாறி வருகிறது.. வலி.. வலி.. வலிகள் மட்டுமே வலிய வந்து என்னுடன் சேருகின்றன.. சாண் ஏறினால் மீட்டர் கணக்கில் சறுக்குகிறது.. அடி மேல் அடி அடுக்கடுக்காய் விழுந்து கொண்டிருக்கிறது.. ஒரு தடவை கீழே வீழ்ந்து எழப்போனால் மீண்டும் தடுக்கி விழுகிறேன்.. சுதாகரித்துக் கொண்டு எழுந்து நிற்க முயற்சிக்கிறேன்.. பின்னாலிருந்து யார் யாரோ காலை தட்டிவிடுகிரார்கள்.. கால்பந்தாட்ட மைதானத்தில மாட்டிக்கொண்ட ஒரு உயிருள்ள பந்து போலாகிவிட்டது என் நிலை..

எல்லாம் ஒவ்வொன்றாய் என்னை விட்டு விலகிப்போவது போன்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.. எது போனாலென்ன உன்னுடன் நானிருக்கிறேன் என்று என்னிலிருந்த என் தன்னம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதை உணருகிறேன்.. வாழ்க்கையை வலியோடு கூடி அனுபவித்த எனக்கு, இந்த நாட்கள் ஒரு வித இனம் புரியாத பயத்தையும், வெறுப்பையும் தோன்ற வைக்கிறது.. எதற்க்கெடுத்தாலும் கோவம், ஆத்திரம் என என்னை நானே இழந்து கொண்டிருக்கிறேன்..

என்னை நான்.. நானாக மீட்டுக்கொண்டு வர, கல்லூரி நட்புகள் கிடைக்க துவங்கிய நாட்களில் என் மனம் வெறுத்தொதுக்கிய தனிமை.. எனக்கு தேவைப்படுகிறது..

இப்போதெல்லாம்
எனக்கு துணையாய்
யாருமில்லா தனிமையும்..
என்னறை கும்மிருட்டும் தான்..

நாளை நடக்கவிருப்பதை பற்றி கவலைப்படாமல்... நான் தூங்காத இரவுகளின் எண்ணிக்கையில் இந்த இரவும் சேரக்கூடாதென்ற சிந்தனையில்..

50 comments:

LK said...

என்ன நீயும் தேவா மாதிரி ஆகிட்ட ??

வினோ said...

இதுவும் கடந்து போகும் நண்பா

Riyas said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

வலியென்பது எத்துனை உண்மையோ அந்த அளவிற்கு நடை முறை வாழ்க்கையில் வழிகளும் உண்டு. அதையும் சேர்த்து எழுதுங்கள்.

யாதவன் said...

உங்கள் வேதனையை என்னால் உணர முடிகிறது
அய்ஹன் கொடுமையை உணரமுடிகிறது

Jeyamaran said...

Nanbare netru siritha ninaivugal ninaikukum pothu kaneer varum athu pola inraiya valigalai naalai ninaithu paarthaal kandippaga itharkkagava varunthinom enru thonrum..........
Nothing 2 worry.................

எஸ்.கே said...

நண்பா நீங்கள் எழுதிய இப்பதிவு, உண்மையின் உங்கள் மனதின் தற்போதைய உணர்வுகள் என்றால் நீங்கள் என்னிலையில்தான் இருக்கிறீர்கள்! ஆனால் என்னிடம் இருப்பது தன்னம்பிக்கை ஒன்றே! காலம் நம்மை வீழ்த்தும். ஆனால் நாம் நம்மை அவநம்பிக்கையால் வீழ்த்தக் கூடாது. தன்னம்பிக்கை கொண்டு வாழ பழக வேண்டும்!

மைந்தன் சிவா said...

வலி வெளிப்படுகிறது...ம்ம்ம்

Sriakila said...

வலிகள் நமக்கு நிறைய பக்குவத்தைக் கொடுக்கும். அந்த வலிகளை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருந்தால் அதை விட உயர்வான விஷயம் வேறொன்றுமில்லை.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நிச்சயம் ஜெயிப்பீங்க...நண்பா...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சோர்ந்து போகாதீங்க..

அன்புடன் அருணா said...

அட!சந்தோஷமாயிருங்கப்பா!இது நிரந்தரமல்ல.....

குத்தாலத்தான் said...

மச்சி எதுக்கும் கவலை படாத எல்லா ஒரு அனுபவம்தான் !
எப்போதும் சந்தோசம் மட்டும் இருந்தா வாழ்கை வெறுத்துடும் !

Chitra said...

எல்லாம் ஒவ்வொன்றாய் என்னை விட்டு விலகிப்போவது போன்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.. எது போனாலென்ன உன்னுடன் நானிருக்கிறேன் என்று என்னிலிருந்த என் தன்னம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதை உணருகிறேன்.. வாழ்க்கையை வலியோடு கூடி அனுபவித்த எனக்கு, இந்த நாட்கள் ஒரு வித இனம் புரியாத பயத்தையும், வெறுப்பையும் தோன்ற வைக்கிறது.. எதற்க்கெடுத்தாலும் கோவம், ஆத்திரம் என என்னை நானே இழந்து கொண்டிருக்கிறேன்..


.......இந்த அளவுக்கு உணர்வுகளை கொட்டி எழுதி இருக்கிறீர்களே......Be cheerful! உற்சாகமாக - நம்பிக்கையுடன் இருக்கவே வாழ்க்கை அழைக்கிறது. மீண்டும் கலகலப்புடன் வர என் பிரார்த்தனைகள்.

kutipaiya said...

idhuvum oru season madhiri thaaan..seekirame kadanthu pogum..

ப்ரியமுடன் வசந்த் said...

சூ சூ தோல்வியே ஓடிப்போ ஜெவை விட்டு...

ஹேய் பீ ஹேப்பி மேன்... டோண்ட் வொர்ரி...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நண்பருக்கு வணக்கம் இந்த பதிவு வெறும் புனைவா இல்லை தங்களின் உண்மையான உணர்வுகளின் கசிவா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் மனதில்
சில நிமிடங்கள் சுமக்க இயலாத கனத்தை ஏற்றி சென்றது . வலிகள் இல்லாத வாழ்க்கை விரைவில் கிழிந்து போகும் ஆடையாக மாறிப்போகலாம் . வலிகளை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள் வரும் நாட்களில் உங்களை பாதுகாக்கப் போகும் கவசமாகவும் மாறிப்போகலாம் . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் தோழரே !

ம.தி.சுதா said...

/////இப்போதெல்லாம்
எனக்கு துணையாய்
யாருமில்லா தனிமையும்..
என்னறை கும்மிருட்டும் தான்..///
உண்மை தான் சகோதரா வாழ்வின் ஆரம்பத்திற்குள் மீள நுழையப் போகிறோம்....

கலாநேசன் said...

என்ன ஆச்சு?

கவலைகள் யாவும் கடந்து போகும். வாழ்க்கை வாழ்வதற்கே.

டேக் கேர்.

அம்பிகா said...

\\இப்போதெல்லாம்
எனக்கு துணையாய்
யாருமில்லா தனிமையும்..
என்னறை கும்மிருட்டும் தான்..\\
\\.......இந்த அளவுக்கு உணர்வுகளை கொட்டி எழுதி இருக்கிறீர்களே......Be cheerful! உற்சாகமாக - நம்பிக்கையுடன் இருக்கவே வாழ்க்கை அழைக்கிறது. மீண்டும் கலகலப்புடன் வர என் பிரார்த்தனைகள்\\
இந்த சகோதரியின் வாழ்த்துக்களும்

malgudi said...

இதுவும் கடந்து போகும்....................

எப்பூடி.. said...

கவலையை விடுங்க பாஸ், எல்லாம் சரியாகும்.

சுசி said...

அவ்ளோ நல்லா இருக்குங்க..

உயிருள்ள பந்து.. அருமை.

Balaji saravana said...

பாஸ்! கவலைகள் சீக்கிரம் காணமல் போய்விடும்.. Cheer up man!

சௌந்தர் said...

தோல்விகளை ஒரு பாடமாக எடுத்துகொள் நண்பா எல்லாம் ஒரு நாள் மாறும்

gunalakshmi said...

அன்புத் தோழரே...
நீங்கள் எழுதிய பதிவு உங்கள் உண்மை உணர்வுகள் என்றால் நான் சந்தோழப்படுகிறேன். ஆம் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிமை மிகவும் அவசியம். ”உன் சோகத்தை பகிரந்து கொள்ள யாரும் இல்லை. உனக்காக ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்திக்கிறேன்”. இவை அத்தனையும் மாற்றி யோசித்துப்பாருங்கள் தோழரே. உங்களுக்காக ஒரு புது உலகம் தோன்றும். இவை அனைத்தும் உங்களுக்கு பாடசாலை. இதில் கற்க வேண்டியன இன்னும் ஆயிரம் ஆயிரம்...
துவன்டுவிடாதே தோல் கொடுக்க நிச்சயம் நான் ஒரு துரும்பாய் இருப்பேன்.

நாகராஜசோழன் MA said...

"எதுவும் சில காலம்
இதுவும் கடந்து போகும்" நண்பா..

அருண் பிரசாத் said...

காலம் கண்டிப்பாய் மாறும்
உங்கள் கவலைகள் தீரும்.

வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு பிடித்த பாடல்களை கேளுங்கள், நகைச்சுவைகளை பாருங்கள்... எல்லாம் விரைவில் மாறும்... இது தற்காலிக தேகம்மே! Cheer up! All the Best

சங்கவி said...

//இப்போதெல்லாம்
எனக்கு துணையாய்
யாருமில்லா தனிமையும்..
என்னறை கும்மிருட்டும் தான்..//

கவலைப்படாதே நண்பா... உலகம் உருண்டை உருண்டு வரும்... உனது வெற்றிக்காக கொஞ்சம் காத்திரு...

தமிழ் உதயம் said...

கால்பந்தாட்ட மைதானத்தில மாட்டிக்கொண்ட ஒரு உயிருள்ள பந்து போலாகிவிட்டது என் நிலை..


////

உங்கள் நிலை மட்டுமல்ல. பெரும்பாலோர் நிலை அதுவே. ஆறுதல் அடைவோம்.

karthikkumar said...

இதுவும் கடந்து போகும் மாற்றங்கள் நிகழும் நண்பரே

ப.செல்வக்குமார் said...

//இப்போதெல்லாம்
எனக்கு துணையாய்
யாருமில்லா தனிமையும்..
என்னறை கும்மிருட்டும் தான்..///

அண்ணா ஒண்ணும் பிரச்சினை இல்லை , நீங்க தனிமையில் இருப்பதாக என்ன வேண்டாம் .. உங்களுடன் நான் எப்பொழுதும் இருக்கிறேன் .. கோமாளி எப்பொழுதும் உங்களுக்கு துணை நிற்பான்..

Anonymous said...

வலிகள் மிகுந்தது தான் வாழ்க்கை.

சந்தோசம் நிறைந்த பின்னாட்களில் அவற்றை நினைத்துப் பார்த்து அசைபோடலாமே..

இதுவும் கடந்து போகும். கவலை வேண்டாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வலிகளை உணர்த்தும் உன்னதமான வார்த்தைகள். இது வெறும் கற்பனை என்று எண்ணத் தோன்றவில்லை. எதற்கும் கலங்கவேண்டாம் நண்பா!எல்லாம் விரைவில் சரியாகிவிடும்!

அமைதிச்சாரல் said...

கவலைகளை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டிருந்தா இன்னும்தான் கவலைகள் கூடும். தூக்கிப்போட்டுட்டு உற்சாகமா இருங்க :-))

கே.ஆர்.பி.செந்தில் said...

முதலில் ஆறுதல் தேடும் மனநிலையை கைவிடுங்கள் .. அதுதான் உங்களை மேம்படுத்தும்..

Riyas said...

கவலை வேண்டாம்.. எதுவும் கடந்து போகலாம்..

தமிழ் மகன் said...

இவ்வளவு வலியிலும்... அருமையான கவிதை!!!

மோகன்ஜி said...

வாழ்வியல் வகுப்பெடுக்கும் போது மேலாளர்களுக்கு நான் அவ்வப்போது சொல்லும் ஒரு வாக்கியம்..
"இன்னமும் மீதமுள்ள நம் வாழ்க்கைக்கு இன்று தான் முதல் நாள்!"

கடக்க வேண்டிய தூரம் பல காதம் இருக்கிறது.சிரித்துக் கொண்டே நடக்கப் பழகு சோதரா! நீ வெல்லப் பிறந்தவன்..

பிரஷா said...

கவலை வேண்டாம்.. எதுவும் கடந்து போகலாம்

ஜிஜி said...

அருமையான கவிதை!மாற்றங்கள் நிகழும்.கவலை வேண்டாம்..

kurumbukuppu said...

anubangal ellaamey paadangal thaaney!

சசிகுமார் said...

அருமை நண்பா

vasan said...

ஊஞ்ச‌லாடுவ‌து இறகுக‌ள் தானே?
சிற‌குக‌ள் இல்லையே?
ஊஞ்ச‌லாடி பின், இற‌குக‌ள்
உதிர்வ‌து தானே இய‌ற்கை.
வ‌லையில் இருங்க‌ "வெறும் ப‌ய‌"லாய்
வாழ்வில் இருங்க 'பெரும் ப‌ய‌'லாய்.

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம் .ஜீஜிக்ஸ் தளத்தை பற்றிய ஒரு ப்ளாகரின் விமர்சனத்தை காண இங்கே கிளிக் செய்யவும் http://adrasaka.blogspot.com/2010/08/500.html

பதிவுலகில் பாபு said...

நல்லா எழுதியிருக்கீங்க ஜெயந்த்..

வெறும்பய said...

என்னை எனக்கு அடையாளம் காட்டிய அத்தனை இணைய உறவுகளுக்கும் நன்றி..

Priya said...

உங்களின் உணர்வுகளுக்கு உற்சாகம் கிடைக்கும் விரைவில், தன்னம்பிக்கையுடன் இருங்க!
Be happy!

சுபத்ரா said...

இந்நிலையும் கடந்து போகும்.

வெறும்பய said...

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..