கடுதாசி என்ற என் காதல் தறி..

உனக்காக கவிதை எழுதுகிறேன்  என்று இதுவரை புரிந்தும் புரியாமலும் பலவற்றை கிறுக்கிவிட்டேன் , அத்தனையும் நீ மட்டுமே படிக்க வேண்டுமென  என் மனமெனும் நிலவறையில் எவருமறியாமல் புதைத்து வைத்திருக்கிறேன். இதோ இன்று நமக்கு பிறந்த நாளானதால் முதல் முறையால் உனக்கொரு கடிதம் எழுதலாமென களத்தில் இறங்கியிருக்கிறேன். 

நான்  பிறந்தது வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள், நீ பிறந்தது வருடத்தின் கடைமாதத்தின் இரண்டாவது நாளல்லவா.. !! அப்படியிருக்கையில் எப்படி இன்றைய தினத்தை நம் பிறந்த நாள் என்று சொல்கிறேன்  என்று யோசிக்கிறாயா..!!!   எனக்கு தெரியும் நீ அப்படி தான் யோசிப்பாய் என்று...   உனக்கு என்னை நேசிப்பதை தவிர வேறென்ன தெரியும், எவரேனும் சூரியன் மேற்கில் உதிக்கிறது என்றாலும், வானவில்லின் வர்ணமிழந்து போய் விட்டது என்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க்காமல் அப்படியா..! என்று ஆச்சர்யமாய் கேட்ப்பது  போல உன்னிரு புருவம் நெருக்கி  பார்த்துவிட்டு மீண்டும் என் புகைப்படத்தின்  மீது முகம் புதைக்கும் பேதையல்லவா நீ..  

அடி மக்கு பெண்ணே சொல்கிறேன் கேள்..

இன்று நமக்கு மட்டும் பிறந்த நாளல்ல, காதலால் காதலிக்கப்பட்டு காதல் தேவதையால் ஆசிர்வதிக்கப்பட்ட உன்னையும் என்னையும் போல  உலகமெங்கும் காதலித்துக்கொண்டிருக்கும் அத்தனை  காதலர்களுக்கும் இன்று தான் பிறந்த நாள், அதானால்  தான் உனக்கும் எனக்குமில்லாத இந்த நமக்கான நாளில் உனக்கான எனது முதல் கடிதத்தை எழுதிகிறேன்.

கடிதம் எழுதுகிறேன் என்று வீராப்பாய் ஆரம்பித்துவிட்டேன் ஆனால் என்ன எழுதுவது எதை பற்றி எழுதுவது என்றறியாமல் எழுத்துக்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன்.

உன்னையும் என்னையும், நம்மையும் பற்றி எழுத ஆயிரம் இருக்கிறது, ஆனால் எதை பற்றி எழுதுவது என்பது தான் குழப்பமாயிருக்கிறது..  

மாநகர பேருந்தின் பின்னிருக்கையில் ஜன்னலோரமாய் அமர்ந்து தென்றலுடன் பேசிக்கொண்டிருந்த தேவதையாய் உன்னை பார்த்த அந்த முதல் நாள்..  ஒவ்வொரு முறை வீட்டில் அம்மாவுடன் சண்டையிடும் போதும் கோபத்தில் "என்ன எதுக்குமா பெத்த" என்று கேட்ப்பது உன்னை பார்த்த அக்கணம் நினைவில் வர, இதோ இந்த தேவதைக்காக தான் நீ பிறந்தாய் என்று நீ பேசிக்கொண்டிருந்த தென்றல் வந்து காதோரமாய் சொல்லிப்போன அந்த நிமிடங்களை  பற்றி எழுதவா...

மறுநாள்  உன்னை பார்க்க வேண்டுமென்று அதிகாலை 10 மணி வரை தூங்கும் பழக்கமுள்ள நான் நள்ளிரவு 6  மணிக்கே எழுந்து பேருந்து நிலையம் வந்து நீ எந்த பேருந்தில் வருவாயென்று  தெரியாமல் ஒவ்வொரு பேருந்தின் கடைசி இருக்கையின் ஓரங்களை துலாவி உன்னைக் காணாமல் ஏமாந்து போய் திரும்பி வந்தததை பற்றி எழுதவா..

தேடல்களுக்கென  கரைந்து போன நாட்களில் ஒவ்வொரு நாளும் இன்றாவது உன்னை என் கண்ணில் காட்டு என்று பெயர் தெரியாத தெய்வங்களிடம் கூட வேண்டிக்கொண்டதையும்,  உன்னை காணாமல் ஏமாற்றங்களுடன் திரும்புகையில் அந்த தெய்வங்களை திட்டியதை பற்றி எழுதவா..

பிறிதொரு நாளில் தோழி ஒருத்தியை பார்க்க கல்லூரிக்கு வந்த போது தோழிகளின் நடுவில் தேவதையென  தாவணியில் உன்னை கண்ட அந்த நிமிடங்களை பற்றி எழுதவா..

அடுத்தடுத்த நாட்களில் உன்னை பார்க்க உன் கல்லூரிக்கு வந்ததால் பெண்கள் கல்லூரியில் உனக்கென்ன வேலையென்று உன் எதிரிலேயே வாட்ச்மேன் என் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் போது நீ சிரித்ததையும் நான் அப்போது குறுகிப்போனதை பற்றியும் எழுதவா..

அடிகளும், அவமானங்களும் தேவதை உனக்காக தானே என்று மீண்டும் உன் கல்லூரி வந்து ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கி கொடுத்து வாட்ச்மேனை  தோழனாக்கிய கதையை பற்றி எழுதவா..

உன்னை தேடி அலைந்ததால் நான் தொலைத்த என் கல்லூரி நாட்களுக்கு பரிசாய் கிடைத்த அரியர்களுக்காக அம்மாவும் அப்பாவும்  என் முதுகு வீங்கும் வரை பாராட்டு விழா  நடத்தியதை பற்றி எழுதவா..

எழுதவா....எழுதவா...இத்தனை தூரம் எழுதிவிட்டேன், இதையே தேர்வுகளில் எழுதியிருந்தால் என் முதுகாவது வீங்காமல் பிழைத்திருக்கும்...யார் கண்டது? என் நல்ல மதிப்பெண்ணை பார்த்துவிட்டு உன்னைவிட நல்ல பிகர் என்னை லவ் பண்ணியிருக்கும்......இதை நீ படிக்கும்போது சிந்தும் கண்ணீர்த்துளியை ஏந்திக்கொள்ள  கைகளில்  உன் அருகில் நான் இருப்பேன்.....என்னைப்பற்றி என்னைவிட தெரிந்த உனக்கு இப்படி பொய்களை நம்புவதில் நியாயமில்லை,

உன் கண்களில் நீ சொல்லாத காதலையா நான் என் கடிதத்தில் காண்பிக்க போகிறேன்? 

எத்தனை பக்கங்கள் நான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் என்னைப்பார்த்ததும் அடித்துக்கொள்ளும் உன் இமைகளும், என் மூச்சு காற்றிலே மலர்ந்துவிடும் நம் காதல் பூக்களும், அத்தனை பக்கங்களையும் கிண்டலுடன் பார்த்துவிட்டு...நம் அனுமதி இல்லாமலே ஊர் சுற்ற சென்றுவிடும்.....

நம் காதலை கை கோர்த்து சுற்ற விட்டு விட்டு......இந்த எழுத்துக்களை மட்டும் யாருக்கு அர்ச்சனை செய்யப்போகிறேன்?

உன் கூந்தலை விட்டு வந்துவிட்டால் பூக்கள்கூட குப்பைதான்.....நம் காதலை சொல்லாத என் எழுத்துக்களும் எனக்கு எப்போதும் குப்பைதான்!

நீ வரும் தடம் பார்த்து என் எழுத்துக்களை தூவிக்கொண்டே வருகிறேன்.....அதுகூட அழுத்திவிட்டால் என்னிடம் சொல்....என் இதயத்தை எடுத்து வைத்து உன் பாதங்களில் ஒத்தி எடுக்கிறேன்!

இப்படிக்கு,
நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்.. 

172 comments:

Anonymous said...

First?!

மாணவன் said...

2...

எஸ்.கே said...

//நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்.. /
எப்படி இப்டி?

மாணவன் said...

//இப்படிக்கு,
நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்//

இப்பதான் புரியுது... :))

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதோ வந்திட்டேன் ...

Anonymous said...

செம ஃபீலோட ஒரு கடிதம். நடு நடுவுல கொஞ்சம் நகைச்சுவையும் தூவி இருக்க மச்சி! தூள் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

First?!

//

வாங்கப்பு வாங்க.. சௌக்கியமா..

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

//நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்.. /
எப்படி இப்டி?

//

லவ்வுமா லவ்வு... (நம்புங்கப்பா..)

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//இப்படிக்கு,
நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்//

இப்பதான் புரியுது... :))

//

உனக்கென்ன புரியுதுன்னு எனக்கும் புரியுது..

ம.தி.சுதா said...

காதலர் தின வாழ்த்துக்கள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

இம்சைஅரசன் பாபு.. said...

//அதிகாலை 10 மணி வரை தூங்கும் பழக்கமுள்ள நான் நள்ளிரவு 6 மணிக்கே எழுந்து//

இது ஜூப்பரு .......ரொம்ப நல்ல இருக்கு

கவி அழகன் said...

நல்லாயிருக்கு ...வாழ்த்துக்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

செம ஃபீலோட ஒரு கடிதம். நடு நடுவுல கொஞ்சம் நகைச்சுவையும் தூவி இருக்க மச்சி! தூள் :)

//

தேங்க்ஸ் மச்சி... எல்லாம் காதல் சாமிக்கு தான் சமர்ப்பணம்..

இம்சைஅரசன் பாபு.. said...

//அரியர்களுக்காக அம்மாவும் அப்பாவும் என் முதுகு வீங்கும் வரை பாராட்டு விழா //

அடி வாங்குனதே எவ்வளவு டீசென்ட் ஆக சொல்லி இருக்கான் பாரு ......

Anonymous said...

//அடி மக்கு பெண்ணே சொல்கிறேன் கேள்.//
சைடு கேப்புல மக்குன்னு சொல்லி புத்திசாலி மாதிரி காட்டிக்கிறியா நீ?! ;)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ம.தி.சுதா said...

காதலர் தின வாழ்த்துக்கள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

//

உங்களுக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரா.. கொஞ்சமா பணிச்சுமையால் தான் தங்கள் வீட்டு பக்கம் வரமுடியவில்லை... சீக்கிரம் வரேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

//அதிகாலை 10 மணி வரை தூங்கும் பழக்கமுள்ள நான் நள்ளிரவு 6 மணிக்கே எழுந்து//

இது ஜூப்பரு .......ரொம்ப நல்ல இருக்கு

//

உண்மைய தானே சொன்னேன்... நமக்கு அது தானே அதிகாலை...

karthikkumar said...

என் இதயத்தை எடுத்து வைத்து உன் பாதங்களில் ஒத்தி எடுக்கிறேன்!////
சூப்பர் அண்ணே நல்லா FEELING ஆ இருக்கு.............:))

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாதவன் said...

நல்லாயிருக்கு ...வாழ்த்துக்க

//

நன்றி நண்பரே..

karthikkumar said...

இந்த மாதிரியெல்லாம் பதிவு போட்டீங்கன்னா எப்படி ஓட்றது..............:((

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

//அடி மக்கு பெண்ணே சொல்கிறேன் கேள்.//
சைடு கேப்புல மக்குன்னு சொல்லி புத்திசாலி மாதிரி காட்டிக்கிறியா நீ?! ;)

//

அப்பப்போ நாமளும் புத்திசாலிங்கிரத சொல்லி காட்ட வேணாமா... அதுக்கு தான் மாம்ஸ்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

என் இதயத்தை எடுத்து வைத்து உன் பாதங்களில் ஒத்தி எடுக்கிறேன்!////
சூப்பர் அண்ணே நல்லா FEELING ஆ இருக்கு.............:))

//

தேங்க்ஸ் கார்த்தி..

வைகை said...

நான் பிறந்தது வருடத்தில் முதல் வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள், நீ பிறந்தது வருடத்தின் கடைமாதத்தின் இரண்டாவது நாளல்லவா..////

இப்பிடி எழுதினா அவ எப்பிடியா படிப்பா?

சி.பி.செந்தில்குமார் said...

கடுதாசி என்ற என் காதல்த்தறி.

title mistake i think. kadhal thari

காதல் தறி.

வைகை said...

25

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

இந்த மாதிரியெல்லாம் பதிவு போட்டீங்கன்னா எப்படி ஓட்றது..............:((

//

என்னப்பா புதுசா கேக்குற.. எப்பவும் பதிவு சம்மந்தமா தான் ஆரம்பிப்பீங்களா.. அப்படி ஆரம்பிக்க வேண்டியது தானே..

சி.பி.செந்தில்குமார் said...

உன்னை தேடி அலைந்ததால் நான் தொலைத்த என் கல்லூரி நாட்களுக்கு பரிசாய் கிடைத்த அரியர்களுக்காக அம்மாவும் அப்பாவும் என் முதுகு வீங்கும் வரை பாராட்டு விழா நடத்தியதை பற்றி எழுதவா..

haa haa

வைகை said...

சூரியன் மேற்கில் உதிக்கிறது என்றாலும், வானவில்லின் வர்ணமிழந்து போய் விட்டது என்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க்காமல் அப்படியா..! என்று ஆச்சர்யமாய் கேட்ப்பது ///

மாமு...ஒரு லூசையா காதலிச்ச?

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

நான் பிறந்தது வருடத்தில் முதல் வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள், நீ பிறந்தது வருடத்தின் கடைமாதத்தின் இரண்டாவது நாளல்லவா..////

இப்பிடி எழுதினா அவ எப்பிடியா படிப்பா?

//

அவளுக்கு தெரியும் உங்களுக்கு புரிய கூடாதில்லையா... அதுக்கு தான் இப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்கு...

வைகை said...

அடி மக்கு பெண்ணே சொல்கிறேன் கேள்.///

ஒன்ன காதலிச்சா அவ மக்குதானே?

Anonymous said...

//கல்லூரி நாட்களுக்கு பரிசாய் கிடைத்த அரியர்களுக்காக //
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.. ;)

Unknown said...

ஆஹா... காதல் கடிதம் அருமை தோழா.. :)

காதலர் தின வாழ்த்துக்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

உன்னை தேடி அலைந்ததால் நான் தொலைத்த என் கல்லூரி நாட்களுக்கு பரிசாய் கிடைத்த அரியர்களுக்காக அம்மாவும் அப்பாவும் என் முதுகு வீங்கும் வரை பாராட்டு விழா நடத்தியதை பற்றி எழுதவா..

haa haa

//

எல்லாம் நம்மூட்டில நடந்தது தான்

வைகை said...

கடிதம் எழுதுகிறேன் என்று வீராப்பாய் ஆரம்பித்துவிட்டேன் ஆனால் என்ன எழுதுவது எதை பற்றி எழுதுவது என்றறியாமல் எழுத்துக்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன்////

எழுத படிக்க தெரியலன்னு எவ்வளவு டீசண்டா சொல்ற மாமு?

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

கடுதாசி என்ற என் காதல்த்தறி.

title mistake i think. kadhal thari

காதல் தறி.

//

நன்றி அண்ணா.. மாற்றியாச்சு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

சூரியன் மேற்கில் உதிக்கிறது என்றாலும், வானவில்லின் வர்ணமிழந்து போய் விட்டது என்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க்காமல் அப்படியா..! என்று ஆச்சர்யமாய் கேட்ப்பது ///

மாமு...ஒரு லூசையா காதலிச்ச?

//

அப்படியெல்லாம் முழுசா செல்ல முடியாது..

வைகை said...

கடைசி இருக்கையின் ஓரங்களை துலாவி உன்னைக் காணாமல் ஏமாந்து போய் திரும்பி வந்தததை பற்றி எழுதவா..////

உள்ள பாக்காம ஓரத்துல ஏன்யா துலாவுன?

மாணவன் said...

//பபுதைக்கும் //

spelling mistake....

இப்பவாவது நம்புங்க நான் பதிவை படிக்கேறேன்னு ...ஹிஹி நம்பித்தான் ஆகணும்

மாணவன் said...

40

மாணவன் said...

// வைகை said...
கடைசி இருக்கையின் ஓரங்களை துலாவி உன்னைக் காணாமல் ஏமாந்து போய் திரும்பி வந்தததை பற்றி எழுதவா..////

உள்ள பாக்காம ஓரத்துல ஏன்யா துலாவுன?//

ennaapaa ithu...he he

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

//கல்லூரி நாட்களுக்கு பரிசாய் கிடைத்த அரியர்களுக்காக //
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.. ;)

//

குவாட்டர் எதுக்கு மச்சி.. வா புல்லே அடிக்கலாம்..

வைகை said...

பிறிதொரு நாளில் தோழி ஒருத்தியை பார்க்க கல்லூரிக்கு வந்த போது தோழிகளின் நடுவில் தேவதையென தாவணியில் உன்னை கண்ட அந்த நிமிடங்களை பற்றி எழுதவா.///

நல்லா மாட்டிக்கிட்டனு சொல்லு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜெ.ஜெ said...

ஆஹா... காதல் கடிதம் அருமை தோழா.. :)

காதலர் தின வாழ்த்துக்கள்..

//

நன்றி தோழி.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

TERROR-PANDIYAN(VAS) said...

//நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்..//

நாயாய் பிறந்து பேயாய் வாழ்பவன்... :))

(அட தெரு தெருவா சுத்திட்டு இருந்த பய இப்போ பிகர் பின்னடி சுத்தர சொன்னேன்)

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

கடிதம் எழுதுகிறேன் என்று வீராப்பாய் ஆரம்பித்துவிட்டேன் ஆனால் என்ன எழுதுவது எதை பற்றி எழுதுவது என்றறியாமல் எழுத்துக்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன்////

எழுத படிக்க தெரியலன்னு எவ்வளவு டீசண்டா சொல்ற மாமு?

//

என்ன மாமு.. இப்படி பப்பிளிக்காவா இதெல்லாம் சொல்றது... நாங்க தான் சமாளிக்கிரமில்லையா..

வைகை said...

கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் போது நீ சிரித்ததையும் நான் அப்போது குறுகிப்போனதை பற்றியும் எழுதவா..
//

சரி விடு மாமு...இதெல்லாம் உனக்கு புதுசா என்ன?

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

//நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்..//

நாயாய் பிறந்து பேயாய் வாழ்பவன்... :))

(அட தெரு தெருவா சுத்திட்டு இருந்த பய இப்போ பிகர் பின்னடி சுத்தர சொன்னேன்)

//

வாப்பு நல்லாயிருக்கியா,,,, அந்த வசனம் யாருக்கு மச்சி... நம்ம ரமேசுக்கா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

கடைசி இருக்கையின் ஓரங்களை துலாவி உன்னைக் காணாமல் ஏமாந்து போய் திரும்பி வந்தததை பற்றி எழுதவா..////

உள்ள பாக்காம ஓரத்துல ஏன்யா துலாவுன?

//

வேற ஏதாவது நல்ல பிகரு மாட்டும்ன்னு தான்.. கடைசி வரைக்கும் மட்டலையே./... நம்ம அதிஷ்டம் அவ்வளவு தான்..

வைகை said...

உன்னை தேடி அலைந்ததால் நான் தொலைத்த என் கல்லூரி நாட்களுக்கு பரிசாய் கிடைத்த அரியர்களுக்காக//

இல்லைனாலும்...இவரு அப்பிடியே படிச்சு ஒரு டாக்டராவோ என்ஜினியராவோ ஆயிருப்பாறு.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//பபுதைக்கும் //

spelling mistake....

இப்பவாவது நம்புங்க நான் பதிவை படிக்கேறேன்னு ...ஹிஹி நம்பித்தான் ஆகணும்

//

ஒத்துக்கிறேன்.. நீ பதிவ படிக்கிறேன்னு ஒத்துக்கிறேன்..

Unknown said...

ஏன் சார்..நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு??அப்புறம் என்ன?

வைகை said...

உன் கண்களில் நீ சொல்லாத காதலையா நான் என் கடிதத்தில் காண்பிக்க போகிறேன்?///

ங்கொய்யால......எழுதுனா புரியாது.....இதுல பில்டப் வேற ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் போது நீ சிரித்ததையும் நான் அப்போது குறுகிப்போனதை பற்றியும் எழுதவா..
//

சரி விடு மாமு...இதெல்லாம் உனக்கு புதுசா என்ன?

//

ஆமா மாம்ஸ்.. எத்தன இடத்தில நீ நாயடி பேயடி வாங்கியிருப்பே .. உனக்கு புதுசில்ல தான்... ஆனா எனக்கு புதுசாச்சே...

வைகை said...

நம் காதலை கை கோர்த்து சுற்ற விட்டு விட்டு......இந்த எழுத்துக்களை மட்டும் யாருக்கு அர்ச்சனை செய்யப்போகிறேன்? ///

வீட்டுக்கு போடி உனக்கு பண்ணுவாங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

உன்னை தேடி அலைந்ததால் நான் தொலைத்த என் கல்லூரி நாட்களுக்கு பரிசாய் கிடைத்த அரியர்களுக்காக//

இல்லைனாலும்...இவரு அப்பிடியே படிச்சு ஒரு டாக்டராவோ என்ஜினியராவோ ஆயிருப்பாறு.....

//

அப்படியில்ல மாம்ஸ்.. எப்படியாவது டிகிரியாவது முடிச்சிருப்பனே.. இப்போ அதுவும் இல்லாம போச்சே..

வைகை said...

நம் காதலை சொல்லாத என் எழுத்துக்களும் எனக்கு எப்போதும் குப்பைதான்! ///

.உன் எழுத்து குப்பைனு ஊருக்கே தெரியுமே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

மைந்தன் சிவா said...

ஏன் சார்..நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு??அப்புறம் என்ன?

//

ச்சும்மா. ஒரு சேஞ்சுக்கு தான்

மாணவன் said...

//உன் கூந்தலை விட்டு வந்துவிட்டால் பூக்கள்கூட குப்பைதான்.....நம் காதலை சொல்லாத என் எழுத்துக்களும் எனக்கு எப்போதும் குப்பைதான்! //

he he he...

மாணவன் said...

60

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

நம் காதலை கை கோர்த்து சுற்ற விட்டு விட்டு......இந்த எழுத்துக்களை மட்டும் யாருக்கு அர்ச்சனை செய்யப்போகிறேன்? ///

வீட்டுக்கு போடி உனக்கு பண்ணுவாங்க...

//

இதுக்கெல்லாம் பயப்படலாமா. பக்கத்தில அர்ச்சனா வீட்டு திண்ணை இருக்கில்ல.. .

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

நம் காதலை சொல்லாத என் எழுத்துக்களும் எனக்கு எப்போதும் குப்பைதான்! ///

.உன் எழுத்து குப்பைனு ஊருக்கே தெரியுமே?

//

எப்படியாவது கண்டு பிடிச்சுடுரான்களே..

Sriakila said...

ரொம்ப சூப்பரா இருக்கு.. இந்த லெட்டர் யாருக்கு ஜெயந்த்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

Sriakila said...

ரொம்ப சூப்பரா இருக்கு.. இந்த லெட்டர் யாருக்கு ஜெயந்த்?

//

ஹா ஹா இப்படி மாட்டிவிடுரீங்களே அக்கா ..
கண்டிப்பா ஜோதிக்கு இல்ல..

Madhavan Srinivasagopalan said...

சூப்பரா எழுதி இருக்கீங்க..
படிக்காமலே என்னால சொல்ல முடியும்.. அந்தளவுக்கு நல்லா இருக்கு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Madhavan Srinivasagopalan said...

சூப்பரா எழுதி இருக்கீங்க..
படிக்காமலே என்னால சொல்ல முடியும்.. அந்தளவுக்கு நல்லா இருக்கு

//

ம்ம் எப்பவும் போல தானே.. ஓகே ஓகே ..

Unknown said...

ஓகே ..ஓகே ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கே.ஆர்.பி.செந்தில் said...

ஓகே ..ஓகே ..

//

ஹா ஹா.. வருகைக்கு நன்றி அண்ணா..

Arun Prasath said...

அடடா... லேட் ஆய்டுசோ

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

அடடா... லேட் ஆய்டுசோ

//

எங்கே வீணாவுக்கு வாழ்த்து செல்ல போயிருந்தியா..

Unknown said...

இது கவித தொகுப்பா இல்ல கட்டுற தொகுப்பா நல்லா தான் எழுதி இருக்கீங்க

யாரங்கே ஒரு shivas கொண்டுவா இங்கே ஹி ஹி!

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கி உலகம் said...

இது கவித தொகுப்பா இல்ல கட்டுற தொகுப்பா நல்லா தான் எழுதி இருக்கீங்க

யாரங்கே ஒரு shivas கொண்டுவா இங்கே ஹி ஹி!

//

எதோ ஒண்ணு மனசில தோணுனது..

எதுக்கு ஷிவாஸ்.. வாங்க black label கிடைக்குதான்னு பார்ப்போம்..

சௌந்தர் said...

அடி மக்கு பெண்ணே சொல்கிறேன் கேள்.. ////

இப்படி நீ நினைக்காதே பொண்ணுங்க எல்லாம் மக்கு இல்லை கடைசியில் நம்ம தான் மக்கு ஆகிடுவோம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

அடி மக்கு பெண்ணே சொல்கிறேன் கேள்.. ////

இப்படி நீ நினைக்காதே பொண்ணுங்க எல்லாம் மக்கு இல்லை கடைசியில் நம்ம தான் மக்கு ஆகிடுவோம்

//

என்ன நண்பா, நிறைய அனுபவம் இருக்கும் போலிருக்கே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள் சகோதரா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

தோழி பிரஷா said...

நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள் சகோதரா...

//

நன்றி சகோதரி..

Unknown said...

காலமெல்லாம் காதல்,
வாழ்க வளமுடன் !
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

செல்வா said...

//நான் பிறந்தது வருடத்தில் முதல் வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள், நீ பிறந்தது வருடத்தின் கடைமாதத்தின் இரண்டாவது நாளல்லவா.. !! /

ப்ளீஸ் இது என்ன அப்படின்னு சொல்லுங்க அண்ணா ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

//நான் பிறந்தது வருடத்தில் முதல் வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள், நீ பிறந்தது வருடத்தின் கடைமாதத்தின் இரண்டாவது நாளல்லவா.. !! /

ப்ளீஸ் இது என்ன அப்படின்னு சொல்லுங்க அண்ணா ?

//

அது ஒண்ணுமில்ல செல்வா..

வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள் = ஜனுவரி 14

நீ பிறந்தது வருடத்தின் கடைமாதத்தின் இரண்டாவது நாளல்லவா = டிசம்பர் 2

செல்வா said...

//பார்த்து பார்த்துவிட்டு மீண்டும் என் புகைப்படத்தின் மீது முகம் புதைக்கும் பேதையல்லவா நீ.. //

இது சூப்பர் .. ஆனா ஜோதிக்குத்தான் கல்யாணம் ஆகிப்போச்சே ?

செல்வா said...

//மாறுநாள் உன்னை பார்க்க வேண்டுமென்று அதிகாலை 10 மணி வரை தூங்கும் /

உங்க ஊர்ல 6 மணி நள்ளிரவா ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

//பார்த்து பார்த்துவிட்டு மீண்டும் என் புகைப்படத்தின் மீது முகம் புதைக்கும் பேதையல்லவா நீ.. //

இது சூப்பர் .. ஆனா ஜோதிக்குத்தான் கல்யாணம் ஆகிப்போச்சே ?

//

ஜோதிக்கு தானே கல்யாணம் ஆச்சு...

செல்வா said...

//வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள் = ஜனுவரி ௧௪//

அது சரி .. ஆனா நீங்க எதுக்கு அங்க இரண்டு முதல் போட்டிருக்கீங்க .. அதுதான் குழம்பம் .

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

//மாறுநாள் உன்னை பார்க்க வேண்டுமென்று அதிகாலை 10 மணி வரை தூங்கும் /

உங்க ஊர்ல 6 மணி நள்ளிரவா ?

//

அது எங்க ஊர்ல இல்லைப்ப்பா.. எல்லா ஊர்லயும் இள வயசு பசங்களுக்கு எல்லாம் அது நள்ளிரவு தான்..

செல்வா said...

//உன் கல்லூரி வந்து ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கி கொடுத்து வாட்ச்மேனை தோழனாக்கிய கதையை பற்றி எழுதவா.. //

என்ன brand அப்படிங்கிறதையும் சேர்த்து எழுதுறது ?!!

செல்வா said...

// என் நல்ல மதிப்பெண்ணை பார்த்துவிட்டு உன்னைவிட நல்ல பிகர் என்னை லவ் பண்ணியிருக்கும்.....//

இப்படி எழுதியும அந்த பிகர் உங்களை நம்புது ? கொடுமைடா சாமி ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

// என் நல்ல மதிப்பெண்ணை பார்த்துவிட்டு உன்னைவிட நல்ல பிகர் என்னை லவ் பண்ணியிருக்கும்.....//

இப்படி எழுதியும அந்த பிகர் உங்களை நம்புது ? கொடுமைடா சாமி ..

//

செல்வா.. இதுக்கு பெயர் தான் லவ்வு

செல்வா said...

//உன் கூந்தலை விட்டு வந்துவிட்டால் பூக்கள்கூட குப்பைதான்.....நம் காதலை சொல்லாத என் எழுத்துக்களும் எனக்கு எப்போதும் குப்பைதான்! //

எல்லோருக்குமே அப்படித்தாங்க .. ஆனா நீங்க இப்படி சொல்ல கூடாது ..
கூந்தலில் இருந்து விழுந்த பூக்கள் எல்லாமே குப்பைதான் .
ஆனால் உன்கூன்தலில் இருந்து விழுந்த பூக்கள் பொக்கிசங்கள் அப்படின்னு சொல்லணும் .. அட இது என்ன இப்படி எல்லாம் வருது ?

ஐ கவிதை இதோ இப்பவே இத buzz போடுறேன் ..

aavee said...

ஆஹா.. கவிதை..கவிதை..

சிம்ப்ளா ஒரு காதல் கவிதை..ஹேட்ஸ் ஆப்!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

//உன் கூந்தலை விட்டு வந்துவிட்டால் பூக்கள்கூட குப்பைதான்.....நம் காதலை சொல்லாத என் எழுத்துக்களும் எனக்கு எப்போதும் குப்பைதான்! //

எல்லோருக்குமே அப்படித்தாங்க .. ஆனா நீங்க இப்படி சொல்ல கூடாது ..
கூந்தலில் இருந்து விழுந்த பூக்கள் எல்லாமே குப்பைதான் .
ஆனால் உன்கூன்தலில் இருந்து விழுந்த பூக்கள் பொக்கிசங்கள் அப்படின்னு சொல்லணும் .. அட இது என்ன இப்படி எல்லாம் வருது ?

ஐ கவிதை இதோ இப்பவே இத buzz போடுறேன் ..

//

ம்ம் நீ நடத்து ராசா,...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உனக்கொரு கடிதம் எழுதலாமென களத்தில் இறங்கியிருக்கிறேன். //

ஆடுகளமா மச்சி?

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோவை ஆவி said...

ஆஹா.. கவிதை..கவிதை..

சிம்ப்ளா ஒரு காதல் கவிதை..ஹேட்ஸ் ஆப்!!

//

வாங்க வாங்க ரொம்ப நான் கழிச்சு வந்திருக்கீங்க.. நலமா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புதைத்து வைத்திருக்கிறேன்//

ஓ நீ புதைக்கிற சாதியா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உனக்கொரு கடிதம் எழுதலாமென களத்தில் இறங்கியிருக்கிறேன். //

ஆடுகளமா மச்சி?

//

ம்ம்ம் வந்தாச்சா.. ஓகே ஸ்டார்ட் மியூசிக்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாநகர பேருந்தின் பின்னிருக்கையில் ஜன்னலோரமாய் அமர்ந்து //

செக்கிங் வந்தா ஈசியா ஓடிடலாம் அப்டித்தான?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புதைத்து வைத்திருக்கிறேன்//

ஓ நீ புதைக்கிற சாதியா?

//

ஆகா புதுசா பிரச்சனைய கிளப்புறாங்களே..

ஆமா ஆமா உன்ன புதைக்கிற சாதி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாறுநாள் உன்னை பார்க்க வேண்டுமென்று அதிகாலை //

மாறுநாள் அப்டின்னா என்ன மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பேருந்தின் கடைசி இருக்கையின் ஓரங்களை துலாவி//

எவனாவது எச்சி பீடி போட்டு போயிருபானொன்னு தேடினியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

99

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாநகர பேருந்தின் பின்னிருக்கையில் ஜன்னலோரமாய் அமர்ந்து //

செக்கிங் வந்தா ஈசியா ஓடிடலாம் அப்டித்தான?

//

அந்த மாதிரி காசில்லாத நேரத்தில நாங்கெல்லாம் பஸ்சுக்குல்லையே போறதில்ல.. ஒன்லி படிக்கட்டு தான்..

arasan said...

அண்ணே தாமத்திற்கு மன்னிக்கவும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாறுநாள் உன்னை பார்க்க வேண்டுமென்று அதிகாலை //

மாறுநாள் அப்டின்னா என்ன மச்சி

//

மாறுநாள் = Day after tomorrow

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அரசன் said...

அண்ணே தாமத்திற்கு மன்னிக்கவும்//

சீக்கிரம் வந்தாலும் இங்க ஒரு எழவும் கிடையாது

arasan said...

அடிச்சி கெளப்புங்க...
மாணவர் ஒரு மாதிரி தூள் பண்றார் ...
இங்க வந்தா நீங்க ஒரு மாதிரி ...
என்னவோ நடக்குது சிங்கைல ....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

அண்ணே தாமத்திற்கு மன்னிக்கவும்

//

ஒண்ணும் பிரச்சனையில்ல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாறுநாள் உன்னை பார்க்க வேண்டுமென்று அதிகாலை //

மாறுநாள் அப்டின்னா என்ன மச்சி

//

மாறுநாள் = Day after tomorrow//

மூதேவி அது மறுநாள். எங்க சொல்லு பாப்போம் மறுநாள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அரசன் said...

அண்ணே தாமத்திற்கு மன்னிக்கவும்//

சீக்கிரம் வந்தாலும் இங்க ஒரு எழவும் கிடையாது

//

ஆமா என்னோட எழுத்துக்களை தேடி வர ஒண்ணு ரெண்டு போரையும் அடிச்சு துரத்துங்க..

arasan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அரசன் said...

அண்ணே தாமத்திற்கு மன்னிக்கவும்//

சீக்கிரம் வந்தாலும் இங்க ஒரு எழவும் கிடையாது
//

என்ன அண்ணே இப்படி சொல்றிங்க ...
வெறும்பய அண்ணன் காதல் ரசம் கொடுத்துருக்கார் போல ....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

அடிச்சி கெளப்புங்க...
மாணவர் ஒரு மாதிரி தூள் பண்றார் ...
இங்க வந்தா நீங்க ஒரு மாதிரி ...
என்னவோ நடக்குது சிங்கைல ....

//

லவ் மூட்ல இருக்கோம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அரசன் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அரசன் said...

அண்ணே தாமத்திற்கு மன்னிக்கவும்//

சீக்கிரம் வந்தாலும் இங்க ஒரு எழவும் கிடையாது
//

என்ன அண்ணே இப்படி சொல்றிங்க ...
வெறும்பய அண்ணன் காதல் ரசம் கொடுத்துருக்கார் போல ....//

யோவ் இது ரசம் இல்லை விஷம்

செல்வா said...

vada poche!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாறுநாள் உன்னை பார்க்க வேண்டுமென்று அதிகாலை //

மாறுநாள் அப்டின்னா என்ன மச்சி

//

மாறுநாள் = Day after tomorrow//

மூதேவி அது மறுநாள். எங்க சொல்லு பாப்போம் மறுநாள்

//

வணக்கம் ஆபீசர்.... எதுவா இருந்தாலும் நமக்குள்ள இருக்கட்டும்,.. இப்போ எதுக்கு என்னோட பழைய பிகர் மூதேவிய கூப்பிடுறீங்க..

arasan said...

அடுத்தடுத்த நாட்களில் உன்னை பார்க்க உன் கல்லூரிக்கு வந்ததால் பெண்கள் கல்லூரியில் உனக்கென்ன வேலையென்று உன் எதிரிலேயே வாட்ச்மேன் என் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் போது//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

vada poche!!

//

அடப்பாவி இப்பவுமா..

arasan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அரசன் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அரசன் said...

அண்ணே தாமத்திற்கு மன்னிக்கவும்//

சீக்கிரம் வந்தாலும் இங்க ஒரு எழவும் கிடையாது
//

என்ன அண்ணே இப்படி சொல்றிங்க ...
வெறும்பய அண்ணன் காதல் ரசம் கொடுத்துருக்கார் போல ....//

யோவ் இது ரசம் இல்லை விஷம்
//

அண்ணே உங்களுக்கு வெறும்பய அண்ணன் மேல ஏதோ வெறி இருக்கு அதான் ,....இப்படி ....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

அடுத்தடுத்த நாட்களில் உன்னை பார்க்க உன் கல்லூரிக்கு வந்ததால் பெண்கள் கல்லூரியில் உனக்கென்ன வேலையென்று உன் எதிரிலேயே வாட்ச்மேன் என் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் போது//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே

//

நமெக்கெல்லாம் சிரிப்பு போலீஸ் மாதிரி பொய் சொல்லி பழக்கம் கிடையாதுங்கோ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அரசன் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அரசன் said...

அண்ணே தாமத்திற்கு மன்னிக்கவும்//

சீக்கிரம் வந்தாலும் இங்க ஒரு எழவும் கிடையாது
//

என்ன அண்ணே இப்படி சொல்றிங்க ...
வெறும்பய அண்ணன் காதல் ரசம் கொடுத்துருக்கார் போல ....//

யோவ் இது ரசம் இல்லை விஷம்
//

அண்ணே உங்களுக்கு வெறும்பய அண்ணன் மேல ஏதோ வெறி இருக்கு அதான் ,....இப்படி ....

//

அட விடுங்க பாஸு.. எல்லாம் வயித்தெரிச்சல் தான்

arasan said...

வெறும்பய said...
அரசன் said...

அடிச்சி கெளப்புங்க...
மாணவர் ஒரு மாதிரி தூள் பண்றார் ...
இங்க வந்தா நீங்க ஒரு மாதிரி ...
என்னவோ நடக்குது சிங்கைல ....

//

லவ் மூட்ல இருக்கோம்.//

உங்க பதிவுல லவ் மூட் தெரியுது ...

மாணவர் ரொம்ப அழுதுட்டு இருக்கார் ...

என்ன ஆச்சுனு கேட்டிங்களா?????

ப்ரியமுடன் வசந்த் said...

காதலோடு நகைச்சுவையும் கலந்து எழுதியிருந்த விதம் பிடித்திருந்தது ஜெ.

இது ஜெயஸ்ரீக்கு

தங்காச்சி ஜெயஸ்ரீ இங்க வாங்களேன் மாப்ள என்னவோ சொல்லியிருக்கார் படிச்சுப்பாருங்களேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

அரசன் said...

அடுத்தடுத்த நாட்களில் உன்னை பார்க்க உன் கல்லூரிக்கு வந்ததால் பெண்கள் கல்லூரியில் உனக்கென்ன வேலையென்று உன் எதிரிலேயே வாட்ச்மேன் என் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் போது//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே

//

நமெக்கெல்லாம் சிரிப்பு போலீஸ் மாதிரி பொய் சொல்லி பழக்கம் கிடையாதுங்கோ../

ஆமா இவர் வேற மாதிரி பொய் சொல்லுவார்

arasan said...

உன்னை தேடி அலைந்ததால் நான் தொலைத்த என் கல்லூரி நாட்களுக்கு பரிசாய் கிடைத்த அரியர்களுக்காக அம்மாவும் அப்பாவும் என் முதுகு வீங்கும் வரை பாராட்டு விழா//

உங்களுக்கும் பாராட்டு விழா எடுத்துருக்காங்க ....

நான் நம்ம முதல்வருக்கு மட்டும்தான் எடுப்பாங்களோ நெனச்சேன் ....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

வெறும்பய said...
அரசன் said...

அடிச்சி கெளப்புங்க...
மாணவர் ஒரு மாதிரி தூள் பண்றார் ...
இங்க வந்தா நீங்க ஒரு மாதிரி ...
என்னவோ நடக்குது சிங்கைல ....

//

லவ் மூட்ல இருக்கோம்.//

உங்க பதிவுல லவ் மூட் தெரியுது ...

மாணவர் ரொம்ப அழுதுட்டு இருக்கார் ...

என்ன ஆச்சுனு கேட்டிங்களா?????

//

அவனுக்கு நேத்தைக்கு அடிச்ச சரக்குக்கு சைடிஷ் பத்தலையாம்... அதுக்கு தான் இப்படி உயிரை எடுக்கிறான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

125

arasan said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே

//

நமெக்கெல்லாம் சிரிப்பு போலீஸ் மாதிரி பொய் சொல்லி பழக்கம் கிடையாதுங்கோ../

ஆமா இவர் வேற மாதிரி பொய் சொல்லுவார்//

போலீஸ் அண்ணே எப்படி போனாலும் கேட் போடுவிங்களோ

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப்ரியமுடன் வசந்த் said...

காதலோடு நகைச்சுவையும் கலந்து எழுதியிருந்த விதம் பிடித்திருந்தது ஜெ.

இது ஜெயஸ்ரீக்கு

தங்காச்சி ஜெயஸ்ரீ இங்க வாங்களேன் மாப்ள என்னவோ சொல்லியிருக்கார் படிச்சுப்பாருங்களேன்...

//

நன்றி மாம்ஸ்..

இப்போ கூப்பிட்டு சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை.. ஏற்கனவே பெர்மிசன் வாங்கி தான் எழுதியிருக்கோம்.. முதல் அப்ரூவல் அங்கே தான்..

arasan said...

அவனுக்கு நேத்தைக்கு அடிச்ச சரக்குக்கு சைடிஷ் பத்தலையாம்... அதுக்கு தான் இப்படி உயிரை எடுக்கிறான்..//

இதுக்கு போய் அழலாமா?

போலீஸ் அண்ணே நிறைய வாங்கி தருவார்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே

//

நமெக்கெல்லாம் சிரிப்பு போலீஸ் மாதிரி பொய் சொல்லி பழக்கம் கிடையாதுங்கோ../

ஆமா இவர் வேற மாதிரி பொய் சொல்லுவார்//

போலீஸ் அண்ணே எப்படி போனாலும் கேட் போடுவிங்களோ

//

கேட்டென்ன பலருக்கு ரூட்டே போட்டிருக்காரு.. ஆனா என்ன பண்றது யாருமே திரும்பி கூட பாக்கல..

arasan said...

நன்றி மாம்ஸ்..

இப்போ கூப்பிட்டு சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை.. ஏற்கனவே பெர்மிசன் வாங்கி தான் எழுதியிருக்கோம்.. முதல் அப்ரூவல் அங்கே தான்//

எப்படில்லாம் சமாளிக்கிரிங்க ....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

அவனுக்கு நேத்தைக்கு அடிச்ச சரக்குக்கு சைடிஷ் பத்தலையாம்... அதுக்கு தான் இப்படி உயிரை எடுக்கிறான்..//

இதுக்கு போய் அழலாமா?

போலீஸ் அண்ணே நிறைய வாங்கி தருவார்...

//

அவரு போன் பண்ணி வரும் பொது தேன் பாட்டில் வரேன்னு சொன்னதுக்கப்புறம் தான் கொஞ்சம் சமாதானம் ஆனான்..

arasan said...

போலீஸ் அண்ணே எப்படி போனாலும் கேட் போடுவிங்களோ

//

கேட்டென்ன பலருக்கு ரூட்டே போட்டிருக்காரு.. ஆனா என்ன பண்றது யாருமே திரும்பி கூட பாக்கல.//

போலீஸ் அண்ணே இதெல்லாம் நடக்குதா???

இன்னைக்கு ஏதேனும் சிக்குச்சா????

arasan said...

போலீஸ் அண்ணே எப்படி போனாலும் கேட் போடுவிங்களோ

//

கேட்டென்ன பலருக்கு ரூட்டே போட்டிருக்காரு.. ஆனா என்ன பண்றது யாருமே திரும்பி கூட பாக்கல.//

போலீஸ் அண்ணே இதெல்லாம் நடக்குதா???

இன்னைக்கு ஏதேனும் சிக்குச்சா????

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

நன்றி மாம்ஸ்..

இப்போ கூப்பிட்டு சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை.. ஏற்கனவே பெர்மிசன் வாங்கி தான் எழுதியிருக்கோம்.. முதல் அப்ரூவல் அங்கே தான்//

எப்படில்லாம் சமாளிக்கிரிங்க ....

//

ஹி.. ஹி..

arasan said...

இதுக்கு போய் அழலாமா?

போலீஸ் அண்ணே நிறைய வாங்கி தருவார்...

//

அவரு போன் பண்ணி வரும் பொது தேன் பாட்டில் வரேன்னு சொன்னதுக்கப்புறம் தான் கொஞ்சம் சமாதானம் ஆனான்//

சின்ன புள்ளைங்கள கேடுக்குறதே போலீஸ் அண்ணனுக்கு வேலையா போச்சு ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

போலீஸ் அண்ணே எப்படி போனாலும் கேட் போடுவிங்களோ

//

கேட்டென்ன பலருக்கு ரூட்டே போட்டிருக்காரு.. ஆனா என்ன பண்றது யாருமே திரும்பி கூட பாக்கல.//

போலீஸ் அண்ணே இதெல்லாம் நடக்குதா???

இன்னைக்கு ஏதேனும் சிக்குச்சா????
//

சிக்கியிருந்தா ஆளை இங்கே பார்க்க முடியுமா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////என் நல்ல மதிப்பெண்ணை பார்த்துவிட்டு உன்னைவிட நல்ல பிகர் என்னை லவ் பண்ணியிருக்கும்....../////

நப்பாசை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றா இது ரெண்டும் மைலுக்கு என்னமோ எழுதி வெச்சிருக்கே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////என் நல்ல மதிப்பெண்ணை பார்த்துவிட்டு உன்னைவிட நல்ல பிகர் என்னை லவ் பண்ணியிருக்கும்....../////

நப்பாசை?

//

இருக்க தான் செய்யும்.. .. ம்ம் இப்ப பீல் பண்ணி என்னவாக போகுது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உனக்காக கவிதை எழுதுகிறேன் என்று இதுவரை புரிந்தும் புரியாமலும் பலவற்றை கிறுக்கிவிட்டேன் , அத்தனையும் நீ மட்டுமே படிக்க வேண்டுமென என் மனமெனும் நிலவறையில் எவருமறியாமல் புதைத்து வைத்திருக்கிறேன்.//////

அப்போ ப்ளாக்ல எழுதுனதுலாம்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றா இது ரெண்டும் மைலுக்கு என்னமோ எழுதி வெச்சிருக்கே?

//

இதுக்கு தான்.. நான் அப்பவே சொன்னேன்.. ஒரு கவிதை எழுதுறேன்னு.. யாராச்சும் கேட்டா தானே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உனக்காக கவிதை எழுதுகிறேன் என்று இதுவரை புரிந்தும் புரியாமலும் பலவற்றை கிறுக்கிவிட்டேன் , அத்தனையும் நீ மட்டுமே படிக்க வேண்டுமென என் மனமெனும் நிலவறையில் எவருமறியாமல் புதைத்து வைத்திருக்கிறேன்.//////

அப்போ ப்ளாக்ல எழுதுனதுலாம்?

//

இப்படியெல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்க்க கூடாது... பதில் செல்ல தெரியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நான் பிறந்தது வருடத்தில் முதல் வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள், நீ பிறந்தது வருடத்தின் கடைமாதத்தின் இரண்டாவது நாளல்லவா../////

இதென்றா ராவா அடிச்சுப்போட்டு எழுதுனியாக்கும்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இன்று தான் பிறந்த நாள், அதானால் தான் உனக்கும் எனக்குமில்லாத இந்த நமக்கான நாளில் உனக்கான எனது முதல் கடிதத்தை எழுதிகிறேன்.////

அப்போ இம்புட்டு நாளும் சும்மா பாத்துக்கிட்டே இருந்தியா? வெளங்கிரும்...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நான் பிறந்தது வருடத்தில் முதல் வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள், நீ பிறந்தது வருடத்தின் கடைமாதத்தின் இரண்டாவது நாளல்லவா../////

இதென்றா ராவா அடிச்சுப்போட்டு எழுதுனியாக்கும்.....?

//

என்ன புரியலையா.. நானகளும் கொரியா மொழியில எழுதுவோமில்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////உன்னையும் என்னையும், நம்மையும் பற்றி எழுத ஆயிரம் இருக்கிறது, ஆனால் எதை பற்றி எழுதுவது என்பது தான் குழப்பமாயிருக்கிறது..//////

அடங்கொன்னியா இத எழுதறதுக்கு எவன்றா ஆயிரம் ரூவா கொடுக்கறான்...?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////உன்னையும் என்னையும், நம்மையும் பற்றி எழுத ஆயிரம் இருக்கிறது, ஆனால் எதை பற்றி எழுதுவது என்பது தான் குழப்பமாயிருக்கிறது..//////

அடங்கொன்னியா இத எழுதறதுக்கு எவன்றா ஆயிரம் ரூவா கொடுக்கறான்...?

//

வேற யாரு.. நம்ம போலீசு தான்.. ஆனா எழுதினதுக்கில்ல.. இனி மேல் நான் இந்த மாதிரி எழுத கூடாதுன்னு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///"என்ன எதுக்குமா பெத்த" என்று கேட்ப்பது உன்னை பார்த்த அக்கணம் நினைவில் வர, இதோ இந்த தேவதைக்காக தான் நீ பிறந்தாய் என்று நீ பேசிக்கொண்டிருந்த தென்றல் வந்து காதோரமாய் சொல்லிப்போன அந்த நிமிடங்களை பற்றி எழுதவா... ////

பார்ரா.... வீட்ல பெத்து, இத்தன வருசம் வளர்த்துவிட்டா இது என்ன பேச்சு பேசுதுன்னு?

ஸ்ஸ்ஸ் இதெல்லாம் ஒரு ரைமிங்ல வறது.. இப்படி ஊடால புகுந்து குட்டைய குழப்பி விடக்கூடாது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாறுநாள் உன்னை பார்க்க வேண்டுமென்று அதிகாலை 10 மணி வரை தூங்கும் பழக்கமுள்ள நான் நள்ளிரவு 6 மணிக்கே எழுந்து பேருந்து நிலையம் வந்து நீ எந்த பேருந்தில் வருவாயென்று தெரியாமல் ஒவ்வொரு பேருந்தின் கடைசி இருக்கையின் ஓரங்களை துலாவி உன்னைக் காணாமல் ஏமாந்து போய் திரும்பி வந்தததை பற்றி எழுதவா../////

என்ன ஏதாவது கனவு கண்டு எந்திரிச்சி போனியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தேடல்களுக்கென கரைந்து போன நாட்களில் ஒவ்வொரு நாளும் இன்றாவது உன்னை என் கண்ணில் காட்டு என்று பெயர் தெரியாத தெய்வங்களிடம் கூட வேண்டிக்கொண்டதையும், உன்னை காணாமல் ஏமாற்றங்களுடன் திரும்புகையில் அந்த தெய்வங்களை திட்டியதை பற்றி எழுதவா.. //////

ஓசிச் சோறு கெடைக்கலேன்னு பொலம்புனத அப்பிடியே உல்டா பண்ணிட்டாம்பாரு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பிறிதொரு நாளில் தோழி ஒருத்தியை பார்க்க கல்லூரிக்கு வந்த போது தோழிகளின் நடுவில் தேவதையென தாவணியில் உன்னை கண்ட அந்த நிமிடங்களை பற்றி எழுதவா.. /////

ஒரே எடத்துலேயே ரெண்டா? கண்ணா அப்போ மூணாவ்து லட்டு எங்கே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தேடல்களுக்கென கரைந்து போன நாட்களில் ஒவ்வொரு நாளும் இன்றாவது உன்னை என் கண்ணில் காட்டு என்று பெயர் தெரியாத தெய்வங்களிடம் கூட வேண்டிக்கொண்டதையும், உன்னை காணாமல் ஏமாற்றங்களுடன் திரும்புகையில் அந்த தெய்வங்களை திட்டியதை பற்றி எழுதவா.. //////

ஓசிச் சோறு கெடைக்கலேன்னு பொலம்புனத அப்பிடியே உல்டா பண்ணிட்டாம்பாரு......!

//

உக்காந்து யோசிப்பீங்களோ.. ஐயோ என்ன எழுதினாலும் கட்டவுட்டு வைக்கிறாங்களே..

சுசி said...

//நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்.. //

செம..

நல்லா இருக்கு ஜெயந்த்.

Riyas said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க நண்பா,,

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எவரேனும் சூரியன் மேற்கில் உதிக்கிறது என்றாலும், வானவில்லின் வர்ணமிழந்து போய் விட்டது என்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க்காமல் அப்படியா..! என்று ஆச்சர்யமாய்//
வெள்ள காக்காவை விட்டுட்டீங்களே ...:) ஜஸ்ட் கிட்டிங்... சூப்பரா எழுதி இருக்கீங்க...அப்போ டிசம்பர் ரெண்டாம் தேடி பர்த்டே போஸ்ட் எதிர்பாக்கலாம்...ஒகே ஒகே... :)

//என் நல்ல மதிப்பெண்ணை பார்த்துவிட்டு உன்னைவிட நல்ல பிகர் என்னை லவ் பண்ணியிருக்கும்.//
ஒகே...இன்னொரு வாட்டி முதுகு வீங்க நீங்களே சொந்த செலவுல சூனியம் வெச்சுகிட்டாச்சு போல... ஹா ஹா...

//உன் கண்களில் நீ சொல்லாத காதலையா நான் என் கடிதத்தில் காண்பிக்க போகிறேன்?//
சூப்பர்...

//இப்படிக்கு,
நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்//
Multiple Personality Disorder... ஐயோ பாவம் இந்த சின்ன வயசுல... :)
(ஜஸ்ட் கிட்டிங்... ரெம்ப அழகான phrase நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்...:)

வருணன் said...
This comment has been removed by the author.
வருணன் said...

சொல்றதுக்கு ஒன்னுமில்ல...
நண்பா ஜமாய் ! :)

vinu said...

annaaaathey kalikikunea poooo

அன்பரசன் said...

//நான் நள்ளிரவு 6 மணிக்கே எழுந்து//

இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா...

Unknown said...

அருமை.ரசித்தேன்...

பொன் மாலை பொழுது said...

ஐயோ....இந்த காதலர் தினம் ஏன் தான் வருதோ?! நல்ல புத்திசாலி பிள்ளைகள் எல்லாம் அன்று மட்டும் "மொக்கைகளாகி " விடுகின்றனவே! :))

பொன் மாலை பொழுது said...

இதுவும் கும்பி அடி கூட்டமா ? தெரியாம உள்ள வந்துட்டேன் சாமிகளா.

Mathi said...

very very nice letter.ovvoru varium anupavithu eluthirukeenga..

Anonymous said...

அருமையான காதல் கடிதம்.. சொல்லவேண்டியவங்களுக்கு தெளிவா சொல்லிட்டீங்க போலயே..

அது சரி..
//நள்ளிரவு 6 மணிக்கே எழுந்து பேருந்து நிலையம் வந்து //

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரிலயா???

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லா இருக்கு.

Anonymous said...

உன் கண்களில் நீ சொல்லாத காதலையா நான் என் கடிதத்தில் காண்பிக்க போகிறேன்? //
செம டச்சிங்

சசிகுமார் said...

அருமை

மாணவன் said...

169

மாணவன் said...

170

அன்புடன் மலிக்கா said...

ம்ம் ம்ம் ம்ம். என்ன ம்.ம்.
நடக்கட்டும் நடக்கட்டும்.

கடுதாசி போய் சேர்ந்திருக்கும்...

vinu said...

நான் பிறந்தது வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள், நீ பிறந்தது வருடத்தின் கடைமாதத்தின் இரண்டாவது நாளல்லவா..

enna mater ithu mattum bold letterla; solla vendiyavangalukku message correctttaa paass panniyaachaaaaaa

AN.SHARAPUDEEN said...

இதை யாரும் குறைசொல்ல முடியாது..அசத்திட்டீங்க.. நாலு வார்த்த எழுதினாலும் நச்சினு இருக்கு
எழுதியதெல்லாம் கவிதயா பொறந்திருக்கு...நன்றி.

vinu said...

me 175thuuuuuuuuuu