வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் இறுக்கமாய் நம்மை அணைத்துப் பிடித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கின்றன. எப்போதும் ஏதோ ஒரு எண்ணத்தில் சுருண்டு கிடக்கும் மனது எங்கேனும் ஒரு நகைச்சுவையையோ அல்லது ரசிக்கத்தகுந்த நிகழ்வையோ கண்டு விட்டால.. கட்டவிழ்ந்த முத்தாய், கை கொட்டி சிரிக்கும் குழந்தையாய் கன்னக்குழிகள் விழ திறந்து கொள்கிறது மனது. செல்வாவின் கோமாளி வலைத்தளமே நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வயிற்று வலியை வரவைப்பதற்காக கோர்ட்டில் கேஸ் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது....
நாதஸ்வரத்தின் சப்தத்தை தாண்டும் தவில் ஓசையைப் போல இன்னுமொரு குட்டி சிரிப்பு அரக்கனை களமிறக்கி இருக்கும் செல்வா அந்த தளத்திற்கு வைத்த பெயர்
முல்ல நஸ்ருதீன் கதைகளை வாசிக்கும் போது வந்து குதிக்கும் ஒரு உற்சாகத்துக்கு சற்றும் சளைத்தது இல்லை செல்வாவின் கதைகள்...! இதில் நாயகன் தம்பி செல்வா... ! செல்வாவின் அறிவுப்பூர்வமான அபத்தமான சிந்தனைகள் தரையில் உருண்டு சிரிக்கவைப்பதில் இருந்து நான் தப்பவில்லை.. வாசித்தால் நீங்களும் தப்ப மாட்டீர்கள் என்பது உறுதி.....!
வேடிக்கை செய்வதே வாடிக்கையாய் கொண்டிருக்கும் செல்வாவின் கதைகள். நமக்கு உற்சாக சிறகுகளை பூட்டி சந்தோச வானில் சிறகடித்து பறக்கச் செய்யும். நீங்களும் நுகர்ந்து பாருங்கள் சந்தோச வலைப்பூவின் வாசத்தை... நைட்ரஸ் ஆக்சைடாய் உங்கள் நாசிக்குள் புகுந்து குலுங்கி குலுங்கி சிரிக்க்க வைக்கும்...! இதோ உங்க பார்வைக்கு இரண்டு கதைகள்..
மாம்பலத்தில் பிறந்த குழந்தை
செல்வாவும் அவரது நண்பரும் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவரது நண்பர்,
" நம்ம ரவிக்கு மாம்பலத்தில குழந்தை பிறந்திருக்கு , பார்க்க வரியா ? என்றார்.
" அப்படியா , கண்டிப்பா வரணும். இரு வீட்டுக்குப் போனதும் வரேன் " என்று செல்வா அவசர அவசரமாகக் கிளம்பினார்.
சிறிது நேரத்தில் செல்வாவும் சில பத்திரிக்கை நிருபர்களும் வருவதைப் பார்த்தார் அவரது நண்பர்.
" போலாமா ? " என்றார் செல்வா.
" போலாம் , இவுங்க எல்லாம் யாரு , எதுக்கு வந்திருக்காங்க ? "
" இவுங்களும் , நம்ம கூட வராங்க , நம்ம ரவி குழந்தை அதிசயக் குழந்தைல , அத பத்தி எழுத வந்திருக்காங்க!!"
" அதிசயக் குழந்தையா ? என்ன சொல்லுற ? "
" ஆமா எல்லாக் குழந்தையும் வயித்துக்குள்ள இருந்து தானே பிறக்கும், இந்தக் குழந்தை மட்டும் மாம்பழத்துக்குள்ள இருந்து பிறந்திருக்குல, அப்படின்னா அதிசயக் குழந்தைதானே!! "
" மாம்பழத்துக்குள்ள இருந்து பொறந்திச்சா ? என்ன ஒளர்ற ? "
" நீதான சொன்ன , நம்ம ரவிக்கு மாம்பலத்துல குழந்தை பிறந்திருக்குன்னு?! "
" பன்னாட , அது மாம்பழம் இல்ல , மாம்பலம். சென்னைக்குப் பக்கத்துல இருக்குற ஒரு ஊரோட பேரு !! ஏன் மானத்த வாங்குற ? " என்று கடிந்தவர் அங்கு வந்திருந்த பத்திரிக்கை நண்பர்களைச் சமாதனப்படுத்தி திருப்பி அனுப்பினார்.
எலி மருந்து
இது செல்வாவின் சிறுவயதில் நடந்த சம்பவம்.
ஒரு முறை செல்வாவின் தந்தை அவரிடம் அருகில் உள்ள கடைக்குச் சென்று எலிமருந்து வாங்கிவரும்படிக் கூறினார்.
செல்வாவும் சரி என்று கூறிவிட்டு எலிமருந்து வாங்குவதற்காக அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் செல்வா கடையில் இருந்து திரும்பி வராததால் அவரது தந்தையும் கடைக்குச் சென்று பார்த்துவரலாம் என்று கிளம்பினர். கடையில் ஒரே கூச்சலாக இருப்பதைக் கண்டார்.
செல்வாவின் தந்தை கடைக்குள் நுழைந்ததும் கடைக்காரர் அவரிடம் சற்று கோபமான குரலில் "உங்க பையன தயவு செஞ்சு கூட்டிட்டுப் போய்டுங்க!" என்றார்.
" ஏன் , என்ன பண்ணினான் ? "
" உங்க பையன் கிட்டவே கேளுங்க !! "
" என்னடா பண்ணின ? "
" அப்பா நீங்கதானே எது வாங்கினாலும் டெஸ்ட் பண்ணி வாங்கனும்னு சொல்லிருக்கீங்க ? அதான் எலி மருந்து வாங்குறதுக்கு முன்னாடி ஒரு எலியப் பிடிச்சு அதுக்கு இந்த மருந்த வச்சு அது சாகுதான்னு பார்த்துட்டுதான் வாங்குவேன் அப்படின்னு கேட்டேன் , இது தப்பா ? "
செல்வாவின் அப்பாவிற்கு இப்பொழுது விசயம் புரிந்தது. முன்பு ஒருமுறை செல்வாவிடம் பேனா ஒன்று வாங்கி வரச்சொல்லி அது எழுதாமல் போகவே , எத வாங்கினாலும் டெஸ்ட் பண்ணி வாங்கணும் என்று சொன்னது நியாபகம் வந்தது.
" எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணி வாங்க முடியாதுப்பா , வா போலாம் " என்று செல்வாவை அழைத்துக்கொண்டு சென்றார்.
இது போன்ற ஏராளமான கதைகளை நீங்கள் செல்வா கதைகள் என்ற தளத்தில் படிக்கலாம். இந்த கதைகளை படிக்கும் அந்த தருணங்களிலாவது நீங்கள் உங்களையும் உலகத்தையும் மறந்து சிரித்து செல்லலாம் என்பது உறுதி. செல்வாவின் கதைகளுக்காக நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நம்பிக்கையுடன் சென்று தினம் ஒரு கதை படிக்கலாம். இன்னும் எதுக்கு வெயிட் பண்றீங்க சீக்கிரம் போய் படிங்க செல்வா கதைகளை.
தேங்க்ஸ் டு தேவா அண்ணா
36 comments:
டேய் என்னடா இது ...?..இலவசம் கொடுக்குற மாதிரி ..அங்க அங்க செல்வா கதிகள் வருது ..பிச்சு பிச்சு
டிஸ்கி : செல்வா கதைகள் படித்து அதனால் ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்ற உடல் உபாதைகளுக்கு அண்ணன் வெறும்பயலை அணுகி தக்க சன்மானம் கொடுக்கவும்... ஹி ஹி .......:))
முதல்ல நன்றி சொல்லிக்கிறேன். அப்புறம் முடிவுரை எழுதின தேவா அண்ணனுக்கும் மிகப்பெரிய நன்றி. ஆனா அவர் சொன்ன அளவுக்கு அவ்ளோ நல்லா இருக்கானு தான் யோசிக்கிறேன்.! இருந்தாலும் இனி வரும் கதைகளில் கவனமாக எழுதணும்னு ஒரு ஆசை இந்தப் பதிவப் படிச்சதும் ..
மீண்டும் ஒரு முறை என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன் !
இந்த விளம்பரத்துக்கு செல்வாகிட்ட எவ்ளோ காசு வாங்கின?
நானும் படித்திருக்கிறேன் செல்வாவின் கதைகளை அனைத்திலும் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது.
...ம் படிச்சிப்பார்த்திடலாம்!
இப்படிக் கூட பதிவு போடலாமா.. ?
எனக்குத் தெரியாம போயிட்டுதே..!!
பிளாக் ரைட்டர்ஸில் செல்வா முக்கியமான நகைச்சுவை எழுத்தாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. அதே போல் சினிமாவுக்கு காமெடி ஸ்கிரிப்ட் எழுத தகுதி படைத்த மிகச்சில பிளாக்கர்ஸில் அவரும் ஒருவர். இன்னும் 5 வருடங்களில் நான் சொன்னது நடக்கும்
உண்மை தான்
நல்ல நகைச்சுவையான எழுத்துக்கள்
தம்பி செல்வாவின் தளங்கள் ரெண்டுமே வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை மட்டுமல்லாது பேஸ்புக்'கிலும் தினம் தினம் கலக்கி வருகிறான். அவனை உரிமையோடு திட்டி கலாயிப்பேன் நான். அதை அன்பாக எதிர் கொள்ளும் அவன் லாவகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
வாழ்த்துகள் மொக்கை தம்பி....
//சி.பி.செந்தில்குமார் said...
பிளாக் ரைட்டர்ஸில் செல்வா முக்கியமான நகைச்சுவை எழுத்தாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. அதே போல் சினிமாவுக்கு காமெடி ஸ்கிரிப்ட் எழுத தகுதி படைத்த மிகச்சில பிளாக்கர்ஸில் அவரும் ஒருவர். இன்னும் 5 வருடங்களில் நான் சொன்னது நடக்கும்//
எதோ குண்டாந்தடி அடி வாங்கி குடுத்தீர்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் ஹே ஹே ஹே ஹே...
//சி.பி.செந்தில்குமார் said...
பிளாக் ரைட்டர்ஸில் செல்வா முக்கியமான நகைச்சுவை எழுத்தாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. அதே போல் சினிமாவுக்கு காமெடி ஸ்கிரிப்ட் எழுத தகுதி படைத்த மிகச்சில பிளாக்கர்ஸில் அவரும் ஒருவர். இன்னும் 5 வருடங்களில் நான் சொன்னது நடக்கும்//
யோவ் மக்கா "தமிழ் காதலனையும்" இப்பிடித்தான் சொல்லி வச்சி புலம்ப விட்டுட்டீர் ஹி ஹி ஹி ஹி...
செல்வாவின் புகழை பரப்ப ஒருத்தர் கிளம்பிட்டாரு..
கட்டவிழ்ந்த முத்தாய், கை கொட்டி சிரிக்கும் குழந்தையாய் கன்னக்குழிகள் விழ திறந்து கொள்கிறது மனது
//
இதைப்பற்றி இன்னும் விரிவாக விளக்கினால் , தனயனாவேன் மொதலாளி!!...
:-)
மச்சி ..., நீ வேணா பாரேன் ..,கோமாளி செல்வா ..,எங்க போக போறான் பாரு ..,அவன் கதைய படிச்சி நிறைய தடவை சிரிச்சிட்டு போய்டே இருப்பேன் ..,
@ செல்வா
யோவ் ..,பெரிய ஆள் ஆயிட்டேன கண்டுக்கமா போய்டாதேயா ..,தக்காளி போன ..,இழுத்து போட்டு அறுப்போம் :))))))))
"நாளைக்கு என்ன கிழமை"யையும் கொடுத்திருக்கலாம். செல்வாவுக்கு வாழ்த்துக்கள்
my wishes to him......
இப்பிடியும் விளம்பரமா நடத்துங்க....
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த விளம்பரத்துக்கு செல்வாகிட்ட எவ்ளோ காசு வாங்கின? //////
ஏன் உனக்கு கெடைக்கலியா? அப்போ சாப்புட்டே கழிச்சிடு.....
////// பட்டாபட்டி.... said...
கட்டவிழ்ந்த முத்தாய், கை கொட்டி சிரிக்கும் குழந்தையாய் கன்னக்குழிகள் விழ திறந்து கொள்கிறது மனது
//
இதைப்பற்றி இன்னும் விரிவாக விளக்கினால் , தனயனாவேன் மொதலாளி!!...
:-)////////
வெளக்குறதுக்கு அது என்ன பல்லா....?
செல்வா கதைகள் படிக்கும் போது எனக்கு அவன் எப்படி இதையெல்லாம் யோசிக்குறான் என்று தோன்றும் ஆச்சரியமாக இருக்கும் செல்வா தொடர்ந்து எழுது செல்வா.....
செல்வா பற்றி கூறியதற்கு நன்றி நண்பா
செல்வாவிற்கு வாழ்த்துக்கள்...!!
சாம்பிள் கதை ரெண்டுமே சூப்பர் தான்.. :)
...அவர் கதைகள் பற்றிய கூறிய, உங்களுக்கும் தேங்க்ஸ் :)
வாழ்த்துகள் செல்வா..!
சக மனிதரை நட்புபாராட்டுவது எல்லாராலயும் முடியாது ஜெ. உன் மனசு சூப்பர்டா மச்சி !!
@@@ப்ரியமுடன் வசந்த் said...
வாழ்த்துகள் செல்வா..!
சக மனிதரை நட்புபாராட்டுவது எல்லாராலயும் முடியாது ஜெ. உன் மனசு சூப்பர்டா மச்சி !!//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
நண்பரே வாழ்த்துக்கள்
செல்வாக்கு நல்ல உற்சாக டானிக் கொடுத்திருக்கிறீர்கள்.
இம்சைஅரசன் பாபு.. said...
டேய் என்னடா இது ...?..இலவசம் கொடுக்குற மாதிரி ..அங்க அங்க செல்வா கதிகள் வருது ..பிச்சு பிச்சு//
என்ன மக்கா செல்வா நம்ம தம்பியில்லையா... அதானல தான்.. பிற்காலத்தில பெரியாளானா நம்மளையும் கண்டுப்பான் இல்லையா..
arthikkumar said...
டிஸ்கி : செல்வா கதைகள் படித்து அதனால் ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்ற உடல் உபாதைகளுக்கு அண்ணன் வெறும்பயலை அணுகி தக்க சன்மானம் கொடுக்கவும்... ஹி ஹி .......:))//
கண்டிப்பா எத்துக்குறேன் கார்த்தி.. ஆனா கும்மி குருப் மக்களுக்கு மட்டும் அது விதி விலக்கு
கோமாளி செல்வா said...
முதல்ல நன்றி சொல்லிக்கிறேன். அப்புறம் முடிவுரை எழுதின தேவா அண்ணனுக்கும் மிகப்பெரிய நன்றி. ஆனா அவர் சொன்ன அளவுக்கு அவ்ளோ நல்லா இருக்கானு தான் யோசிக்கிறேன்.! இருந்தாலும் இனி வரும் கதைகளில் கவனமாக எழுதணும்னு ஒரு ஆசை இந்தப் பதிவப் படிச்சதும் ..
மீண்டும் ஒரு முறை என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன் !
//
எலேய் இனிமேல் நீ இன்னும் நல்லா எழுதணும் அதுக்காக் அதான் இப்படியெல்லாம்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த விளம்பரத்துக்கு செல்வாகிட்ட எவ்ளோ காசு வாங்கின?
//
கொஞ்சம் அதிகம் தான் .. ஆனா அமௌன்ட் சொல்ல மாட்டேன்.. சொன்னா நீங்க உங்க ப்ளாக்ல போடுவீன்களே
சசிகுமார் said...
உண்மைதான் நண்பரே..
@@#!@@
யோவ் said...
கண்டிப்பா படிங்க
@@@@@##
Madhavan Srinivasagopalan said...
போடலாமே
@@@@@
சி.பி.செந்தில்குமார் said...
நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை தான் தான் அண்ணா.. செல்வா நிச்சயமாக ஒரு பெரிய ஆளாக வருவான்.
@@@@@@@
VELU.G said...
நன்றி
MANO நாஞ்சில் மனோ said...
உங்கள் வாழ்த்துக்கு நன்றி மக்கா..
@@@@
பாட்டு ரசிகன் said...
நல்ல கலைஞனை சுட்டிக்காட்டுவதில் தப்பேதும் இல்லையே
@@@@@
பட்டாபட்டி.... said...
சில விசயங்களை நொண்டி கேட்க்க கூடாது வாத்தியாரே... (நமக்கும் தெரியாதில்ல)
பனங்காட்டு நரி said...
உண்மை தான் மச்சி.... நே சொல்றது மாதிரி கண்டுக்காம போனான்னா இழுத்து போட்டு அடிக்கலாம்.
@@@@@
கலாநேசன் said...
இந்த பதிவு ரெடி பண்ணினதுக்கப்புரம் தான் அந்த கதை வந்திச்சு.. அதனால் அதான் போடா முடியல.
@@@@
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நன்றி
@@@@
மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
அண்ணே இது விளம்பரமில்ல
@@@@
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தேங்க்ஸ் மாம்ஸ்
@@@@
சௌந்தர் said...
உண்மை தான் நண்பரே
@@@@
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
நன்றி சகோதரி
ப்ரியமுடன் வசந்த் said...
ரொம்ப புகழாத மச்சி.. கூச்சமா இருக்கு
@@@@
ஜெய்லானி said...
நன்றிங்கன்னா
@@@@
mraja said...
நன்றி நண்பரே
@@@@
malgudi said...
ஆமாம் நண்பரே வருகைக்கு நன்றி
செல்வாவின் முதலாவது கதை, இன்றைய தமிழ் மொழி உச்சரிப்பின் நிலையினை அழகாக வெளிப்படுத்தி நிற்கிறது.(மாம்பலத்தில்)
எலி மருந்தில் நகைச்சுவை குறைவாக இருப்பினும் அதில் உள்ள தத்துவத்தை ரசித்தேன்.
செல்வாவின் கதைகளை எங்களோடு பகிர்ந்து கொண்டதோடு, அவ் வலைப்பூ பற்றிய அறிமுகத்தையும் தந்த உங்களுக்கு என் நன்றிகள் சகோ.
Post a Comment