தோழியின் கிறுக்கல்கள் - நட்பாக மா(ற்)றிய காதல்..
மெதுவாய் புலரும் பனிக்கால
பொழுதாய் புலர்ந்தது
உனக்கும் எனக்குமான நேசம்!
குளிர் துடைக்கும் சூரியக்கதிர் போல்
விரிகிறது அதன் எல்லைகள்..

ரோஜா இதழ் போல்
முகிழும் உன் வார்த்தைகளும்
கொட்டும் அருவிபோல்
குதிக்கும் என் வார்த்தைகளும்
போஷித்து வளர்க்கின்றன
நம் நேசத்தை..

புன்னகையை
பகிர பலர் இருந்தாலும்
கண்ணீரை உனக்காய் மட்டுமே
சேமிக்கின்றேன்..

துணையா..!!! இணையா..!!!
என என்னிதயம்
கண்ணாமூச்சி ஆடும்போதெல்லாம்
எல்லைகளை சுட்டி
தெளிய வைக்கிறாய்!

மலர்ந்து மணம் பரப்பும்
மலரை விட
வெடித்து பரவும் விதையே
மண்ணிற்கு தேவையென்பதை
உணர வைத்த உனக்கு
காதல் தாண்டிய
என் நட்பை
காணிக்கையாக்குகிறேன்!

நமக்கிடையில் எல்லைகளும்
வேலிகளும் இருந்தாலும்
பகிர்தலும்.. புரிதலுமாய்..
தேடலும்.. தெளிதலுமாய்...
தொடரட்டும் நம்
நட்பாக மா(ற்)றிய காதல்..

59 comments:

முனியாண்டி said...

நான்தான் முதல்

சௌந்தர் said...

யார் நண்பா அது

சௌந்தர் said...

கண்ணீரை உனக்காய் மட்டுமே
சேமிக்கின்றேன்///

இப்போவே கண்ணீர் சிந்தினா எப்படி இன்னும் நிறையா இருக்கு அதற்கா சேமித்து வைக்க படுகிறதா?

ப.செல்வக்குமார் said...

//மலர்ந்து மணம் பரப்பும்
மலரை விட
வெடித்து பரவும் விதையே
மண்ணிற்கு தேவையென்பதை
///
அருமையா எழுதிருக்கீங்க.
நீங்க கவிதஎலாம் எழுதுவீங்க அப்படின்னு எனக்கு தெரியாமலே போய்டுச்சே ..
அட ச்சே. இன்னிக்கு வடையும் போச்சு ..

முனியாண்டி said...

//வெடித்து பரவும் விதை// என்னை என்கிராமத்திர்க்கு அழைத்து சென்றது. எனக்கு பேர் தெரியேல...ஒரு காய தண்ணியில போட்டா வெடிக்கும்...அத வச்சுதான் வெளையாடுவோம்... நன்றி என் பால்ய நினைவை அசைபோட வைத்ததற்கு.

வினோ said...

கவிதை அருமை நண்பரே... பழைய நினைவுகளில் தவிக்க விடுகிறது கவிதை.. மிக்க நன்றி...

வெறும்பய said...

முனியாண்டி said...

நான்தான் முதல்

//

இன்னிக்கு உங்களுக்கு தான் வடை...

வெறும்பய said...

சௌந்தர் said...

யார் நண்பா அது

//

சொல்லமாட்டனே...

ஜீவன்பென்னி said...

அருமையா வெளிப்பட்டிருக்கு உங்கள் உணர்வு.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// புன்னகையை
பகிர பலர் இருந்தாலும்
கண்ணீரை உனக்காய் மட்டுமே
சேமிக்கின்றேன்.. ////

அதுக்குன்னு அந்த பொண்ணுக்கு முன்னாடி கண்ண கசக்கிட்டு நின்னு பாரேன் :) தெரியும் சேதி

Sriakila said...

நமக்கிடையில் எல்லைகளும்
வேலிகளும் இருந்தாலும்

பகிர்தலும்.. புரிதலுமாய்..
தேடலும்.. தெளிதலுமாய்...
தொடரட்டும் நம்

நட்பாக மா(ற்)றிய காதல்..

அருமையான வரிகள்! காதலைத் தாண்டிய நட்பை ஏற்றுக்கொள்வதற்கும் அன்பான மனம் வேண்டும். சமூகத்தின் பார்வையைத் தாண்டி அந்த நட்பைத் தொடர்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.

வாழ்த்துச் சொன்னதாகச் சொல்லுங்கள் அந்தப் பெண்ணுக்கு, இப்படி ஒரு நண்பன் கிடைத்ததற்காக.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மச்சி இந்த கவித படிச்சதுனால எனக்குள் ரொம்ப நாளா இருக்கும் ஒரு கேள்வி நியாபகத்துக்கு வருது

தோழி காதலியாகும் போது சில நேரத்துல அவுங்க தப்பா எடுத்துக்க வாய்ப்பு இருக்குல்ல,இவ்வளவு நாளா பழகுனது இதுக்குத்தானா என்று கேள்வி கேட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்

ஆனால் உனக்கு வந்த வாழ்வை பாரு ??!! நடத்து ராசா நடத்து :)

Chitra said...

துணையா..!!! இணையா..!!!
என என்னிதயம்
கண்ணாமூச்சி ஆடும்போதெல்லாம்
எல்லைகளை சுட்டி
தெளிய வைக்கிறாய்!

..... அருமையான கவிதை. :-)

சௌந்தர் said...

ஹலோ ஜில்லு நீ தானே தோழி வேண்டும் சொன்னே இங்க பாருப்பா இவருக்கு கிடைத்து விட்டது

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// ஹலோ ஜில்லு நீ தானே தோழி வேண்டும் சொன்னே இங்க பாருப்பா இவருக்கு கிடைத்து விட்டது ///

என் நண்பனுக்கு கிடைத்தால் எனக்கு கிடைத்த மாதிரியாச்சே

கேட்டா கொடுத்துட போறான் :)

Balaji saravana said...

//நமக்கிடையில் எல்லைகளும்
வேலிகளும் இருந்தாலும்

பகிர்தலும்.. புரிதலுமாய்..
தேடலும்.. தெளிதலுமாய்... //
நைஸ் நண்பா!
அருமையான கவிதை!

விஜய் said...

ஜெயந்த் கலகீடீங்க போங்க.... நீங்க தேர்ந்தெடுத்த வார்த்தைகள் , உங்களை பாராட்ட வைச்சு இருக்கிறது

Maduraimohan said...

அருமையான வரிகள் :)

வழிப்போக்கன் said...

அருமை நண்பரே!

கே.ஆர்.பி.செந்தில் said...

நட்பாக மா(ற்)றிய காதல்..???????????

Anonymous said...

மெதுவாய் புலரும் பனிக்கால
பொழுதாய் புலர்ந்தது
உனக்கும் எனக்குமான நேசம்!..
படிக்கும்போதே அந்த பனிக்காலம் புலர்வதை ஞாபகப்படுத்துகிறது..ஆண்டாலின் பாடல்களையும் ஞபகப்படுத்த....புரிகிறது உங்களின் காதல்/நேசம்..

பகிர்தலும்.. புரிதலுமாய்..
தேடலும்.. தெளிதலுமாய்...
தொடரட்டும் நம்

நட்பாக மா(ற்)றிய காதல்

ஏற்றுக்கொள்ளாக்காத‌ல் ந‌ட்ப்பாய் ம‌ல‌ர எல்லோர்ம‌ன‌மும் ப‌க்குவ‌ப்ப‌ட்டால் ஏன் ப‌ழிவாங்க‌ளும்...அசிட் வீச‌லும்...ப‌க்குவ‌ம்தேவை இந்த‌ க‌விதையின் நாய‌க‌ன் போல‌....மென்மையான‌ ஒரு காத‌ல் க‌விதை...பொன்...

கண்ணீரை உனக்காய் மட்டுமே
சேமிக்கின்றேன்....................
சிரித்தும‌கிழ‌ ஆயிர‌ம் ந‌ட்ப்பும் உற‌வும் வ‌ரும்..ஆன‌ல் க‌ண்ணீரை ப‌கிர‌ ஒரு ந‌ல்ல‌ ந‌ட்ப்பால்..காத‌லால் ம‌ட்டுமே முடியும் என்ப‌தாக‌வா...?
வெடித்து பரவும் விதையே
மண்ணிற்கு தேவையென்பதை.....காதல் தாண்டிய
என் நட்பை
காணிக்கையாக்குகிறேன்..
நெஞ்சை தொடுகிற‌து......வ‌ரிக‌ள்...அர்த்த‌த்தோடு...பொன்...

beer mohamed said...

இதை படியுங்கள் அப்புறம் சொல்லுங்கள்

3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்
http://athiradenews.blogspot.com/2010/08/3.html

அருண் பிரசாத் said...

//துணையா..!!! இணையா..!!!
என என்னிதயம்
கண்ணாமூச்சி ஆடும்போதெல்லாம்
எல்லைகளை சுட்டி
தெளிய வைக்கிறாய்!//

என்னவோ பண்ணுதுங்க இந்த வரிகள்.

உணர்வு மிகுந்த கவிதை

ஜெரி ஈசானந்தன். said...

cool jayanth.....kavithai sema cool.

Jeyamaran said...

மிகவும் அருமை நண்பரே

வெறும்பய said...

சௌந்தர் said...

இப்போவே கண்ணீர் சிந்தினா எப்படி இன்னும் நிறையா இருக்கு அதற்கா சேமித்து வைக்க படுகிறதா?

//

அம்மா நண்பா..புரிஞ்சுகிட்டா சரி..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

அருமையா எழுதிருக்கீங்க.
நீங்க கவிதஎலாம் எழுதுவீங்க அப்படின்னு எனக்கு தெரியாமலே போய்டுச்சே ..
///

இது மட்டுமில்ல இன்னும் நிறைய இருக்கு உள்ளே போய் பாரு தம்பி..

வெறும்பய said...

முனியாண்டி said...

என்னை என்கிராமத்திர்க்கு அழைத்து சென்றது. எனக்கு பேர் தெரியேல...ஒரு காய தண்ணியில போட்டா வெடிக்கும்...அத வச்சுதான் வெளையாடுவோம்... நன்றி என் பால்ய நினைவை அசைபோட வைத்ததற்கு.

//

நன்றி அண்ணா வந்ததற்கும் .. கருத்திற்கும்..

நானும் கிராமத்தில் வளர்ந்தவன் தான்.. அதன் விளைவே சில வரிகள் கிராமச் சாயலில்

வெறும்பய said...

வினோ said...

கவிதை அருமை நண்பரே... பழைய நினைவுகளில் தவிக்க விடுகிறது கவிதை.. மிக்க நன்றி...
//

உங்கள் அன்பிற்கு நன்றி நண்பா..

வெறும்பய said...

ஜீவன்பென்னி said...

அருமையா வெளிப்பட்டிருக்கு உங்கள் உணர்வு.

//

வருகைக்கு நன்றி நண்பரே...

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அதுக்குன்னு அந்த பொண்ணுக்கு முன்னாடி கண்ண கசக்கிட்டு நின்னு பாரேன் :) தெரியும் சேதி

//

நண்பா விடு... நீ அடி வாங்கினது எனக்கு மட்டும் தான்.. ஊருக்கே தெரிய வச்சிராத..

வெறும்பய said...

அருமையான வரிகள்! காதலைத் தாண்டிய நட்பை ஏற்றுக்கொள்வதற்கும் அன்பான மனம் வேண்டும். சமூகத்தின் பார்வையைத் தாண்டி அந்த நட்பைத் தொடர்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.

வாழ்த்துச் சொன்னதாகச் சொல்லுங்கள் அந்தப் பெண்ணுக்கு, இப்படி ஒரு நண்பன் கிடைத்ததற்காக.

//

நண்பனாக நான் கிடைத்ததை நினைத்து அவள் பெருமை பாட்டு கொள்வதை விட அவளை போன்ற ஒரு தோழி எனக்கு கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... எங்களை காதல் என்னும் ஒரு சிறிய வட்டத்திற்குள் நாங்களே அடைத்து கொள்ள விரும்பவில்லை... ஆகையால் தான் நட்பு என்னும் ஒரு பரந்து விரிந்த ஒரு வான வெளியை நாங்கள் தேர்வு செய்தோம்... இன்று சுதந்திரமாய் பறந்து கொண்டிருக்கிறோம்...

இதை ஏன் தோழியும் படிப்பாள்... இல்லையென்றால் நான் சொல்கிறேன் நீங்கள் வாழ்த்தியதை...

வருகைக்கு நன்றி சகோதரி...

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மச்சி இந்த கவித படிச்சதுனால எனக்குள் ரொம்ப நாளா இருக்கும் ஒரு கேள்வி நியாபகத்துக்கு வருது

தோழி காதலியாகும் போது சில நேரத்துல அவுங்க தப்பா எடுத்துக்க வாய்ப்பு இருக்குல்ல,இவ்வளவு நாளா பழகுனது இதுக்குத்தானா என்று கேள்வி கேட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்

ஆனால் உனக்கு வந்த வாழ்வை பாரு ??!! நடத்து ராசா நடத்து :)

///

விடு மச்சி.. உனக்கு இதெல்லாம் சகஜம் தானே... இது வரைக்கும் எத்தன பேரு உன்கிட்டே கேட்டாங்க... ஆனா உனக்கு இன்னும் ரோசம் வராதது தான் ஆச்சர்யமா இருக்கு...

வெறும்பய said...

Chitra said...

..... அருமையான கவிதை. :-)

//

வருகைக்கு நன்றி சகோதரி..

வெறும்பய said...

சௌந்தர் said...

ஹலோ ஜில்லு நீ தானே தோழி வேண்டும் சொன்னே இங்க பாருப்பா இவருக்கு கிடைத்து விட்டது

//

நண்பா இதுக்கு பேரு தான் எடுத்து குடுக்குறதா...

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

கேட்டா கொடுத்துட போறான் :)

//

மச்சி எனக்கு பிரண்டுன்னா உனக்கும் பிரண்டு தான்

வெறும்பய said...

Balaji saravana said...

நைஸ் நண்பா!
அருமையான கவிதை!

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பரே..

வெறும்பய said...

விஜய் said...

ஜெயந்த் கலகீடீங்க போங்க.... நீங்க தேர்ந்தெடுத்த வார்த்தைகள் , உங்களை பாராட்ட வைச்சு இருக்கிறது

//

நன்றி நண்பா...

வெறும்பய said...

Maduraimohan said...

அருமையான வரிகள் :)

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பரே..

வெறும்பய said...

வழிப்போக்கன் said...

அருமை நண்பரே!

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பரே..

வெறும்பய said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நட்பாக மா(ற்)றிய காதல்..???????????

//

என்னண்ணா வெறும்கேள்வி குறியா இருக்கு... ஏதாவது சொல்லியிருக்கலாமுல

வெறும்பய said...

ஏற்றுக்கொள்ளாக்காத‌ல் ந‌ட்ப்பாய் ம‌ல‌ர எல்லோர்ம‌ன‌மும் ப‌க்குவ‌ப்ப‌ட்டால் ஏன் ப‌ழிவாங்க‌ளும்...அசிட் வீச‌லும்...ப‌க்குவ‌ம்தேவை இந்த‌ க‌விதையின் நாய‌க‌ன் போல‌....மென்மையான‌ ஒரு காத‌ல் க‌விதை...பொன்...

//

நண்பரே இது ஏற்றுக் கொள்ளப் பட்டும் சில சூழ்நிலைகளால் எங்களால் தவிர்க்கப்பட்ட ஓன்று ...

நீங்கள் சொல்வதும் உண்மை தான் தோழரே... பக்குவப் பட்டால் புரிந்துவிடும் அடுத்தவர் மனதும்...

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

என்னவோ பண்ணுதுங்க இந்த வரிகள்.

உணர்வு மிகுந்த கவிதை

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பரே..

வெறும்பய said...

ஜெரி ஈசானந்தன். said...

cool jayanth.....kavithai sema cool.

//

Thanks Brother..

வெறும்பய said...

Jeyamaran said...

மிகவும் அருமை நண்பரே

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பரே..

Ananthi said...

///மலர்ந்து மணம் பரப்பும்
மலரை விட
வெடித்து பரவும் விதையே
மண்ணிற்கு தேவையென்பதை
உணர வைத்த உனக்கு
காதல் தாண்டிய
என் நட்பை
காணிக்கையாக்குகிறேன்!///

ஹ்ம்ம்... ரொம்ப நல்லா இருக்கு..

////நமக்கிடையில் எல்லைகளும்
வேலிகளும் இருந்தாலும்
பகிர்தலும்.. புரிதலுமாய்..
தேடலும்.. தெளிதலுமாய்...
தொடரட்டும் நம்

நட்பாக மா(ற்)றிய காதல்..///

இந்த வரிகள்... அர்த்தமுள்ள வரிகள்.. அழகு.. :-))

அஹமது இர்ஷாத் said...

புரிஞ்சிருச்சு.....

குத்தாலத்தான் said...

நல்லா இருக்கு தல !!!
ஆனா தோழிய காதலியா ஏத்துக்க முடியுமா ?

சீமான்கனி said...

//புன்னகையை
பகிர பலர் இருந்தாலும்
கண்ணீரை உனக்காய் மட்டுமே
சேமிக்கின்றேன்..//

நட்பின் ஆழம் சொல்லும் கவிதை அழகு நண்பா "காதலி" என் கண்ணுக்கு தெரியவில்லை....

Pavi said...

கண்ணீரை உனக்காய் மட்டுமே
சேமிக்கின்றேன்.........
arumaiyaana varikal.

எப்பூடி.. said...

வழமைபோல சூப்பரா இருக்கு.

யாதவன் said...

அருமையான கவிதை

பிரபாகரன் பழனிசாமி said...

ARUMAI! ARUMAI! UNMAI! super na

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////புன்னகையை
பகிர பலர் இருந்தாலும்
கண்ணீரை உனக்காய் மட்டுமே
சேமிக்கின்றேன்..
//////////

உண்மையான நேசிபிற்கு கண்ணீர் துளிகள் கூட பன்னீர் போலதான் என்று நினைக்கிறேன் . நல்ல இருக்கு நண்பரே

மதி said...

she is very lucky

Jennifer said...

ஜீவன்பென்னி said... அருமையா வெளிப்பட்டிருக்கு உங்கள் உணர்வு. // வருகைக்கு நன்றி நண்பரே...

Jay said...

/////புன்னகையை பகிர பலர் இருந்தாலும் கண்ணீரை உனக்காய் மட்டுமே சேமிக்கின்றேன்.. ////////// உண்மையான நேசிபிற்கு கண்ணீர் துளிகள் கூட பன்னீர் போலதான் என்று நினைக்கிறேன் . நல்ல இருக்கு நண்பரே