நண்பர்களும் நினைவுகளும்...



வேண்டா வெறுப்பாக
நுழைந்த கல்லூரியின்
முதல் நாள்..

(முதல் நாளே
நேரம் தவறி சென்றதாய்
ஞாபகம்..)

உள் நுழைந்தால்
அறியாத முகங்கள் அத்தனையும்
புன்னகையோடு..

இருக்கை தேடியபோது
இல்லவசமாய் கிடைத்தது
கடைசி பெஞ்ச்..

அறிமுகப்படுத்திக் கொண்டோம்
அன்பாய் கை குலுக்கினோம்..

இடைவெளிகள் இருந்ததில்லை
இருக்கைகளிலும் - எங்கள்
இதயங்களிலும்...

பகிர்ந்து கொண்டோம்
பல வீட்டு சுவைகளை
ஒற்றை இலையில்...

சின்ன சின்ன
சண்டைகள் - சில
நொடிகளில் சாமதானம்..

சிறுக சிறுக
சிகரத்தை எட்டிய
எங்கள் நட்புடன் கூடவே வந்த

மூன்றாம் மாடி முதல்
வகுப்பறை..

காலேஜ் கேண்டீன்
கடைசி டேபிள்..

பஸ் ஸ்டாப்
டீக்கடை பெஞ்ச்...

தினம் காலை மாலை
ஆட்டம் பாட்டத்துடன் கொண்டு
சேர்க்கும் நகரப் பேருந்து..

கல்லூரி நாளில்
கடைசியாய் பார்த்த
ஆட்டோகிராப் படம்...

எங்கள் சேட்டைகளையும்
சில்மிசங்களையும்
பொறுத்துக்கொண்டு வாழ்க்கையின்
வெற்றிப்படியில் கை பிடித்து ஏற்றி விட்ட
குருக்கள்..

என

இனி என் வாழ்வில் கிடைக்காத
நொடிகள்,
நிமிடங்கள்,
நாள்கள்
ஆண்டுகள்..

என் கல்லூரி வாழ்க்கைக்கும்,
நான் எழுதிக்கொண்டிருக்கும்
இந்த வார்த்தைகளுக்கும்
முற்றுப்புள்ளி வைத்து விடலாம்...

ஆனால்

என் நினைவுகளுக்கும்...

வாழ்கையின் தேவைகளுக்காக
இவ்வையகத்தின் நான்கு புறமும்
சிதறி கிடந்தும்
வார விடுமுறை நாளில்

"என்னடா மச்சான் எப்படியிருக்க"

என்று கேட்கும் அந்த உயர்ந்த நட்புகளுக்கும்...

இனிய நண்பர்கள் தின நாள் வாழ்த்துக்கள்...


என்ன இவன் கூட படிச்ச பசங்களுக்கு மட்டும் தான் வாழ்த்து சொல்றான்.. அப்போ நாங்கெல்லாம் யாரு உனக்கு நண்பர்கள் இல்லையான்னு நீங்க நினைக்கிறது எனக்கு கேக்குது... எப்படிங்க நான் உங்களை மறப்பேன்...

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை ..
(இது வாடகை சரக்கு)

மெதுவாய் புலரும்
பனிக்கால பொழுது போல
நமக்கிடையே விரிந்தது
நட்பு..



குளிர் துடைக்கும் சூரியனின்

கதிர்
போல நீளட்டும் - நம்
நட்பின் எல்லைகள்..

என் இனிய பதிவுலக நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்களோடு..
வெறும்பய
நட்பின் நினைவாக இந்த ரோசாப் பூ
..

யாரும் சண்ட போடாம, கையில முள்ளு குத்தாம எடுத்துக்குங்க...

32 comments:

Unknown said...

நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்.

சௌந்தர் said...

நன்றி நண்பா உனக்கும் என் வாழ்த்துக்கள்.. ரோஜாவை எடுத்து கொண்டேன்

எல் கே said...

/காலேஜ் கேண்டீன்
கடைசி டேபிள்../

அங்கயும் கடைசி பெஞ்சா ???

ரோஜாவுக்கு நன்றி.. உங்களுக்கு என் நபர்கள் தின வாழ்த்துக்கள்

ஜில்தண்ணி said...

/காலேஜ் கேண்டீன்
கடைசி டேபிள்..///

மச்சி நானும் மாப்ள பெஞ்ச் தான்

என்ன முக்கியமான பாயிண்ட விட்டுட்ட

" நாம் வகுப்பரையில் ஒன்றாய் தூங்கிய நேரங்கள்"

நண்பர்கள் தினத்துக்கு ட்ரீட் கொடுப்பன்னு பாத்தா ஒரு ரோசாப்பூவ கொடுத்து முடிச்சிட்ட

மச்சி ட்ரீஈஈஈஈஈஈஈஈட்

கவித கவித

முனியாண்டி பெ. said...

மிகவும் அருமை. சின்னச் சின்ன விசயங்கள் அருமையாக வரிசை படுத்தியுள்ளிகள்

மங்குனி அமைச்சர் said...

அனைவருக்கு ஒரு நல்ல நண்பர் நீங்கள் , நானும் வாழ்த்துகிறேன்

ஜிஎஸ்ஆர் said...

நண்பர் தின வாழ்த்துகள்

வினோ said...

நண்பா உங்களுக்கும் என் நண்பர் தின வாழ்த்துக்கள்...

அம்பிகா said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

கோவை குமரன் said...

நன்றி நண்பா உனக்கும் என் வாழ்த்துக்கள்..

எப்பூடி.. said...

நண்றி, தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

a said...

நண்பர் தின வாழ்த்துக்கள்.

Riyas said...

நன்றி நண்பா உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.. ரோஜாவுக்கும் நன்றி

சீமான்கனி said...

அழகான வரிகள் கொண்ட அற்புத கவிதை!
இனிய நண்பர்கள் தின நாள் வாழ்த்துக்கள்...ரோஜாவுக்கு நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் கூறிய அத்தனை நட்புகளுக்கும் என் நன்றிகள்...

Unknown said...

இனிய நண்பர்கள் தின நாள் வாழ்த்துக்கள்...

Anonymous said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

குடந்தை அன்புமணி said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

செல்வா said...

////சிறுக சிறுக
சிகரத்தை எட்டிய
எங்கள் நட்புடன் கூடவே வந்த////

கவிதை பட்டைய கிளப்புது அண்ணா ..
ஆனா பிகர் பத்தி ஒண்ணுமே எழுதலையா ..?? :-(

Jeyamaran said...

தோழரே உங்களுக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துகள்........
கல்லூரி வாழ்கையை பற்றிய கவிதை மிகவும் அருமை நெஞ்சம் நெகிகிறது தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

பனித்துளி சங்கர் said...

//////இருக்கை தேடியபோது
இல்லவசமாய் கிடைத்தது
கடைசி பெஞ்ச்..
.....///////////

பலரின் சாதனைகளுக்கு
பாதைகள் அமைத்ததே இந்த இறுதி இருக்கைகள்தான் . வாழ்த்துக்கள் நண்பரே நல்ல இருக்கிறது நட்பு பற்றிய உங்களின் உணர்வுகள்

santhanakrishnan said...

எல்லோர் மனசுக்குள்ளும்
கடசி பெஞ்ச்சுக்கு ஒரு
நிரந்தர இடமுண்டு.
வாழ்த்துக்கள் நண்பரே.

aavee said...

யப்பா.. பேரு தான் வெறும்பய.. எழுதரதெல்லாம் வெயிட்டா இருக்கு!

Raghu said...

ப்ரொஃபைல்ல‌ உங்க‌ ஃபேவ‌ரைட் புக்ஸ் அச‌த்த‌ல் :))

Unknown said...

நல்ல இருக்கு... கண்ணில் கண்ணீர் வருது... இப்படிக்கு JJ.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பனை வாழ்த்த ஆண்டிற்கு ஒரு நாள் தான் என்று வரையறை வகுக்காமல் வந்து வாழ்த்திய நல்ல நட்புகளுக்கு நன்றிகள்..

Shri ப்ரியை said...

துரத்திய மான்குட்டிகள்... களவாடிய மாங்காய்கள்... குதித்து விளையாடிய குட்டிச்சுவர்கள்.... எங்கணம் மறப்பது....

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....
கவிதை ரொம்ப அருமை...ஞாபக மையங்கள் நனைகின்றன நினைவலைகளால்... நன்றி...

Jey said...

கல்லூரி நாட்களின், நினைவுகளை, கிளரிவிடது உங்கலின் இந்த கவிதை.
எளிமயான, எல்லோருக்கும் புரியிரா மாதிரியான கவிதை...

MATHI said...

very nice ...jeyanth

Unknown said...

காலம் கடந்து படிச்சாலும்.. உங்க கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அந்த இனிய நாட்களை நினைவுக்கு கொண்டு வருதுங்க..

இப்போ நம்ம வாழ்க்கையில எவ்வளவு சந்தோசங்கள் வந்து போனாலும்.. கல்லூரி வாழ்க்கைக்கு ஈடு இணையில்லை..

உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

Unknown said...

சூப்பர்

Unknown said...

சூப்பர்