வைரங்களில் முதன்மையானது, விலை உயர்ந்ததும், புகழ் பெற்றதுமான வைரம் கோஹினூர் வைரம் ஆகும். இதை பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதன் வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வழியில்லை.
கோஹினூர் - என்றால் மலையளவு ஒளிவீச்சு என்று பொருள். இந்த விலைமதிப்பில்லா வைரத்திற்கு கோஹினூர் என்று பெயரிட்டவர் நாதிர்ஷா எனும் ஒரு பாரசீக மன்னன். 15 ம் நூற்றாண்டுகளிலையே இந்த வைரத்தின் மதிப்பு கேட்டால் பிரமிப்பூட்டுவதாக இருந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவளிக்க முடியும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
இந்தியாவின் ஆந்திராவிலிருந்து அலாவுதீன் கில்ஜி எனும் மன்னனின் தளபதி மாலிக் கபூரால் கைப்பற்றப் பட்டது. இங்கிருந்து தான் கொஹினூரின் நாடோடி வாழ்க்கை ஆரம்பமானது. பின்னர் இந்த வைரம் குவாலியர் மன்னர் விக்ரம் ஜித்தின் கைகளுக்கு சென்றது. மாமன்னர் பாபருடன் நடந்த போரில் டெல்லியை ஆண்ட இப்ரஹாம் லோடி என்ற மன்னனுடன் விக்ரம்ஜித்தும் இறந்து விட, உயிருக்கு பயந்த உறவினர்கள் வைரத்தை பாபரின் மகனான ஹீமானிடம் அன்பளிப்பாக கொடுத்தனர்.(ஹீமான் பேரரசர் அக்பரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது)
பின்னர் பாரசீக மன்னரான தாமஸ்ப் கைகளுக்கு சென்றடைந்தது. பிற்பாடு தட்சன பீட பூமியை ஆண்ட நிஜாம் ஷாவை அடைந்தது. புகழ் பெற்ற இந்த வைரமானது மீண்டும் பாபர், அக்பர் பரம்பரையில் வந்து இன்றளவும் காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹானின் கைகளில் தஞ்சம் புகுந்தது.
1739 ல் டெல்லியை சூறையாடி நாதிர்ஷா எனும் பாரசீக மன்னன் கைப்பற்றினான்.(கோஹினூர் என்ற பெயரும் நாதிர்ஷாவால் தான் வந்தது) பின்னர் இவன் பரம்பரைகளை அலங்கரித்த கோஹினூர் வைரத்தை இந்தியாவிலுள்ள பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும் ரஞ்சித்சிங் கைவசம் வந்தது. மெல்ல மெல்ல நுழைந்து மொத்த இந்தியாவையும் தங்கள் கைவசம் கொண்டுவந்த ஆங்கிலேயர்களின் கீழ் பஞ்சாப் போன பின் கோஹினூர் வைரம் சர்.ஜான்.லாரன்ஸ் கைகளை சென்றடைந்த பின் பிரிடீஷ் மகாராணி விக்டோரியாவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது..
கோஹினூர் வைரம் மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு, அது அதற்கு நிலையான இடமாகவும் மாறி இன்று வரை கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
நம் தாய்நாட்டு சொத்தை இன்று யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள்..

58 comments:
ஹா ஹா .. இன்னிக்கும் நான்தான் முதல்.. படிச்சிட்டு வரேன்
வா செல்வா வட நமக்குதான்...
/ நம் தாய்நாட்டு சொத்தை இன்று யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். /
இது மட்டும் இல்ல நண்பா.. இன்னும் பல இப்படித்தான் இருக்கு :(
நம் தாய்நாட்டு சொத்தை இன்று யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள்.///
ஆமா நண்பா இப்படி பல பொருட்கள் நம்மிடம் இருந்து சென்று இருக்கிறது நல்ல தகவல் நண்பா
கோஹினூர் வைரம்னா ஒன்ணே ஒன்னுதானா :)
நல்ல தகவல் நண்பா !
//கோஹினூர் வைரத்தை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவளிக்க முடியும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.//
சுவிஸ் பேங்கிலுள்ள நம்ம அரசியல்வாதிகளோட கறுப்புப் பணத்தில் இது மாதிரி பல வைரங்கள் வாங்க முடியும்ல நண்பா?! :(
ப.செல்வக்குமார் said...
ஹா ஹா .. இன்னிக்கும் நான்தான் முதல்.. படிச்சிட்டு வரேன்
ஜில்தண்ணி - யோகேஷ் said...
வா செல்வா வட நமக்குதான்...
//
இன்னைக்கு வடை இல்ல மச்சி... போண்டா...
வினோ said...
/ நம் தாய்நாட்டு சொத்தை இன்று யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். /
இது மட்டும் இல்ல நண்பா.. இன்னும் பல இப்படித்தான் இருக்கு :(
//
உண்மை நண்பா...
சௌந்தர் said...
ஆமா நண்பா இப்படி பல பொருட்கள் நம்மிடம் இருந்து சென்று இருக்கிறது நல்ல தகவல் நண்பா
//
உண்மை நண்பா.. வருகைக்கு நன்றி நண்பா..
ஜில்தண்ணி - யோகேஷ் said...
கோஹினூர் வைரம்னா ஒன்ணே ஒன்னுதானா :)
//
ஒண்ணு தான் நண்பா... அதை தான் ஆட்டைய போட்டுட்டாங்களே...
Balaji saravana said...
சுவிஸ் பேங்கிலுள்ள நம்ம அரசியல்வாதிகளோட கறுப்புப் பணத்தில் இது மாதிரி பல வைரங்கள் வாங்க முடியும்ல நண்பா?! :(
//
கண்டிப்பா... நம்மாளுங்க பதுக்கி வச்சிருக்கிற பணத்த வச்சு உலக மக்கள் அனைவருக்கும் ஒரு மாதம் விருந்து சாப்பாடே போடலாம்...
//கோஹினூர் வைரம் மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு, அது அதற்கு நிலையான இடமாகவும் மாறி இன்று வரை கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது///
என்னதான் இருந்தாலும் அது திருடிட்டுப் போன வைரம் தானே .. ஹா ஹா ஹா .. நமக்கு அந்த சந்தோசம் போதும் .. விடுங்க ..!!
ப.செல்வக்குமார் said...
என்னதான் இருந்தாலும் அது திருடிட்டுப் போன வைரம் தானே .. ஹா ஹா ஹா .. நமக்கு அந்த சந்தோசம் போதும் .. விடுங்க ..!!
//
இது வெட்க பட வேண்டிய விஷயம் செல்வா....
நம்ம தாய் நாட்டோட நெற்றி பொட்ட பறி கொடுத்திருக்கோம்...
சில நாட்களுக்கு முன்பு அவங்க நாட்டு பிரதமரா இல்ல வேற யாரான்னு தெரியல அவரு சொல்றாரு,
"எங்க நாட்லா இருக்குறத எல்லாம் திருப்பிக்கொட்டுக்க ஆரம்பிச்சோம்னா எங்க ஊரு அருங்காட்சியகமெல்லாம் காலியாத்தான்ன் கிடக்கும்ன்னு".
தகவலுக்கு நன்றி நண்பா.
நல்ல பகிர்வு .. பாராட்டுக்கள் தம்பி
அறிந்திராதத் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி!
உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம் தான் அண்ணா ..
ஆனா என்ன செய்வது .. அது நமது வைரம் என்பது வரலாறு சொல்லுமல்லவா..?
ஜீவன்பென்னி said...
சில நாட்களுக்கு முன்பு அவங்க நாட்டு பிரதமரா இல்ல வேற யாரான்னு தெரியல அவரு சொல்றாரு,
"எங்க நாட்லா இருக்குறத எல்லாம் திருப்பிக்கொட்டுக்க ஆரம்பிச்சோம்னா எங்க ஊரு அருங்காட்சியகமெல்லாம் காலியாத்தான்ன் கிடக்கும்ன்னு".
///
உண்மை தான் நண்பரே...
பெரும்பாலான நாடுகளின் அருங்காட்சியங்களை அழகு சேர்க்கும் அறிய பொருட்கள் நம் நாட்டின் சொத்தாகத் தான் இருக்கும்..
கே.ஆர்.பி.செந்தில் said...
நல்ல பகிர்வு .. பாராட்டுக்கள் தம்பி
//
நன்றி அண்ணா...
Sriakila said...
அறிந்திராதத் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி!
//
தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி..
ப.செல்வக்குமார் said...
ஆனா என்ன செய்வது .. அது நமது வைரம் என்பது வரலாறு சொல்லுமல்லவா..?
//
அப்படி நினைத்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்...
நம் தாய்நாட்டு சொத்தை இன்று யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள்....உங்களின் ஆதங்கம் புரிகிறது.
என்னப்பன்ன... இதன் பிறப்பிடம் ..இந்தியா என்று அனைவருக்கும் தெரியும் என்று வேண்டும்மென்றால் பெருமை பட்டுக்கொள்வதைதவிர வேறு ஒன்றும் செய்ய இயலா...கொடுமை...pon
Anonymous said...
என்னப்பன்ன... இதன் பிறப்பிடம் ..இந்தியா என்று அனைவருக்கும் தெரியும் என்று வேண்டும்மென்றால் பெருமை பட்டுக்கொள்வதைதவிர வேறு ஒன்றும் செய்ய இயலா...கொடுமை...பொன்
//
உண்மைதான் பெயர் தெரியாத சகோதரா...
நல்ல பகிர்வு நண்பரே...
நல்ல பகிர்வு!!
உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம்
இதுவரை அறிந்திராத தகவல், பகிர்வுக்கு நன்றி
இதுவரை அறிந்திராத தகவல், பகிர்வுக்கு நன்றி
Pudiya thagaval (enaku) thanks.
Jannal vazhiya ennatha pakaringa?
\\நம் தாய்நாட்டு சொத்தை இன்று யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள்.///
நிறைய இழந்திருக்கிறோம், இன்னும் இழந்து கொண்டிருக்கிறோம்.
நல்ல புதிய தகவல்
They got the best! :-(
ஹிஸ்டரில படிச்சா ஞாபகம் இருக்குங்க ஸ்கூல்ல... You refreshed my memory... நல்ல பதிவு
சிறப்பான தகவல் ஜெய் ஒரு பழமொழி நியாபகத்துக்கு வருது //வெல்லம் தின்கிறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருதான்...//
நல்ல தகவல் நண்பா..இன்னும் கொஞ்ச நாளில் நம் தாய்நாடே இன்னொருவனால் சொந்தம் கொண்டாடப்படும்.
நல்ல அருமையான பகிர்வு. வாழ்த்துகள்.
நல்ல பதிவு , தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு ...என்ன பண்ணலாம் அவுங்க கிட்ட இருந்து திருப்பி வாங்க, யோசிப்போம் ...
வெவரமான பயலாத்தாம்ல இருக்க,[வலைப்பூ வைரம் போல ஜொலிக்கிறது,இனி நாங்களும் இங்க அடிக்கடி வந்து மிரட்டுவோம்ல..]
அட, அது அங்க இருப்பதால் அது பாதுகாப்பாக இருக்கிறது. அதை இங்கே கொண்டுவந்தால் என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்களேன். ஏதோவொரு அரசியல்வாதி வீட்டில் சென்று மறைந்து விடாதா? பேசாம விடுங்கப்பா! கோஹினூர் வைரத்த வச்சிக்கிற அளவிற்கு நாம் இன்னும் பக்குவப்படவில்லை.
அஹமது இர்ஷாத் said...
நல்ல பகிர்வு நண்பரே...
//
ஊரில் இருந்தாலும் உற்சாகமாய் ஓடி வந்த உங்களுக்கு நன்றி நண்பரே..
Mrs.Menagasathia said...
நல்ல பகிர்வு!!
//
வருகைக்கு நன்றி சகோதரி...
யாதவன் said...
உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம்
//
இப்படியே வெட்க்கப்பட்டு வெட்க்கப்பட்டு நாம் இழந்தவை பல நண்பரே...
எப்பூடி.. said...
இதுவரை அறிந்திராத தகவல், பகிர்வுக்கு நன்றி
//
வருகைக்கு நன்றி நண்பரே..
kicha said...
Pudiya thagaval (enaku) thanks.
Jannal vazhiya ennatha pakaringa?
//
வருகைக்கு நன்றி...
நான் தொலைத்து விட்ட பழைய நினைவுகளை பார்க்கிறேன் நண்பரே...
அம்பிகா said...
நிறைய இழந்திருக்கிறோம், இன்னும் இழந்து கொண்டிருக்கிறோம்.
//
நம் நாட்டு நிலையை நினைத்து நொந்து கொள்ள வேண்டியது தான்...
அருண் பிரசாத் said...
நல்ல புதிய தகவல்
//
வருகைக்கு நன்றி நண்பரே..
Chitra said...
They got the best! :-(
//
வருகைக்கு நன்றி சகோதரி...
அப்பாவி தங்கமணி said...
ஹிஸ்டரில படிச்சா ஞாபகம் இருக்குங்க ஸ்கூல்ல... You refreshed my memory... நல்ல பதிவு
//
வருகைக்கு நன்றி சகோதரி...
சீமான்கனி said...
சிறப்பான தகவல் ஜெய் ஒரு பழமொழி நியாபகத்துக்கு வருது //வெல்லம் தின்கிறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருதான்...//
//
அதே தான் ... இதில மட்டுமில்ல இன்னும் பல விசயங்களில் இப்படி தான் நடக்குது..
புலவன் புலிகேசி said...
நல்ல தகவல் நண்பா..இன்னும் கொஞ்ச நாளில் நம் தாய்நாடே இன்னொருவனால் சொந்தம் கொண்டாடப்படும்.
//
அப்படி நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை நண்பரே..
எம் அப்துல் காதர் said...
நல்ல அருமையான பகிர்வு. வாழ்த்துகள்.
//
வருகைக்கு நன்றி Bro.
விஜய் said...
நல்ல பதிவு , தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு ...என்ன பண்ணலாம் அவுங்க கிட்ட இருந்து திருப்பி வாங்க, யோசிப்போம் ...
//
ஒண்ணும் பண்ண முடியாது நண்பா.. நம்ம நாடு இப்படி இருக்கிற வரைக்கும்..
ஜெரி ஈசானந்தன். said...
வெவரமான பயலாத்தாம்ல இருக்க,[வலைப்பூ வைரம் போல ஜொலிக்கிறது,இனி நாங்களும் இங்க அடிக்கடி வந்து மிரட்டுவோம்ல..]
//
வாங்கன்னே நமக்கு கொஞ்சம் விவரம் கம்மிங்க.. அதனால தான் பெயரே வெறும்பயன்னு வச்சிருக்கோம்...
அடிக்கடி வாங்க... ஆனா அன்பால மிரட்டினா தான் நாங்க பயப்படுவோம்...
Palani velu said...
அட, அது அங்க இருப்பதால் அது பாதுகாப்பாக இருக்கிறது. அதை இங்கே கொண்டுவந்தால் என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்களேன். ஏதோவொரு அரசியல்வாதி வீட்டில் சென்று மறைந்து விடாதா? பேசாம விடுங்கப்பா! கோஹினூர் வைரத்த வச்சிக்கிற அளவிற்கு நாம் இன்னும் பக்குவப்படவில்லை
///
ஆனாலும் நம்ம நாட்ட பற்றி ரொம்ப தெரிஞ்சு வச்சிருக்கீங்கையா...
வருகைக்கு நன்றி ..
தெரியாத தகவல் சொல்லிருக்கீங்க.. பகிர்வுக்கு நன்றி..
அறியாத சில தகவல்களை அறிந்தேன் . நன்றி. இதே போல தொடர்ந்து எழுதினால் நல்லதொரு டிரண்ட் உருவாகும் .வாழ்த்துக்கள்
எனக்கும் இந்த வருத்தம் உண்டு
விந்தையான தகவல்.
முடிவுதான் உறுத்தலாய் இருக்கிறது.
Post a Comment