எந்திரனும் நொந்திரனும் பின்ன நானும்...

எந்திரனும் நொந்திரனும்...

150 கோடி பணம் போட்டு படம் எடுத்திருக்காங்களாம்...

ரஜினி நடிசிருக்காராம்....

ஒலக அழகி ஐசு நடிச்சிருக்காங்களாம்...

சங்கரு இயக்கியிருக்காராம்...

இங்கிலீஷ் படத்துக்கு இணையா கிராபிக்ஸ் பண்ணியிருக்காங்களாம்....

எங்கே பாத்தாலும்... எந்த பக்கம் திரும்பினாலும்.... ஒரே பேச்சு எந்திரன் தான்...

அந்த 150 கோடியும் எவன் பணம்? எல்லாம் நம்ம வயித்தில அடிச்சு அவங்க சம்பாதிச்சது தான்... இந்த ஐசு பொண்ணு இன்னும் எத்தன வருசத்துக்கு தான் நான் அழகி..!! நான் தான் அழகி..!!! நான் ஒருத்தி தான் ஒலக அழகி அப்படீன்னு சொல்லிட்டு திரியுமோ... சங்கர சொல்லவே வேண்டாம்... எந்த பிரோடியுசர் கிடப்பான் அவன் தலையில மிளகா அரைக்கலாமுன்னு காத்திருக்கிற ஒரு அறிவாளி..!!
ன்னய்யா பெரிய எந்திரன்... வில் ஸ்மித் நடிச்ச ரோபோட்ஸ் மாதிரி வருமா.... 75 வருஷ சினிமாவுல வராததா இந்த படத்தில வரப்போகுது... தேவையில்லாம வெட்டித்தனமா பேசிக்கிட்டு... எதோ ஒரு புதிய கிரகத்த கண்டுபிடிச்ச மாதிரியில்ல பேசிக்கிறாங்க... நாட்டில எவ்வளவோ பிரச்சனை இருக்கு... ஏன் உங்க வீட்டில ஆயிரத்தெட்டு பிரச்சன இருக்கு... அதையெல்லாம் விட்டுட்டு என்னய்யா சும்மா.. எந்திரன்.. சந்திரனுட்டு.. போங்கையா போய் பொழப்ப பாருங்க... காலங்காலமா நடந்துகிட்டிருக்கிற இந்து முஸ்லிம் சமந்தப்பட்ட அயோத்தி பிரச்சனைக்கு தீர்ப்பு சொன்னாங்க... அதுக்கு கூட யாரும் இந்த அளவு ஆர்வம் காட்டினதா தெரியல... வந்திட்டானுங்க வெட்டிப்பயலுவ... எந்திரன்.. நொந்திரனுன்னு...

ஐயா... அம்மா... ராசா... கோவப்படாதீங்க... ஆத்திரப்பட்டு ஆள காலி பண்ணிராதீங்க.... இதெல்லாம் நான் சொன்னதில்ல... நேத்தைக்கு படத்துக்கு போனப்போ தியேட்டர் வாசல்ல நின்னு ஒரு பன்னாட சொன்னது... அந்த நேரம் அந்த இடத்திலையே அவன போட்டு தள்ளியிருக்கணும்...சூழ்நிலை சரியில்ல.. அதனால தான் கம்முன்னு வந்திட்டேன்....

இந்த மாதிரி ஏதாவது வேலையத்தவனுங்க பேசினா. அவன செருப்பால அடிங்க.... அவன் வீட்டுக்கு சைக்கிள்.. பைக்.. ஆட்டோ.. கார் லாரி... இப்படி பாரபட்சம் பாக்காம அனுப்புங்க... கொய்யால சாகட்டும்... தலைவர் படத்த பற்றி இனிமேல் எவனும் பல்லு மேல நாக்கையோ இல்ல மூக்கையோ போட்டு பேசக்கூடாது....

*************************************
எந்திரனும் நானும்..

ஷ்டப்பட்டு வாங்குன டிக்கெட் கையிலிருக்க.. இருந்த வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு போலாமுன்னு முட்டி மோதி செஞ்சா... திரும்பவும் கொஞ்சம் பைல்ஸ் எடுத்து வந்து என் முன்னால போட்ட டேமேஜரை அசிங்க அசிங்கமா மனசுக்குள்ள திட்டிட்டு... வேற வழியில்லாம அந்த வேலையும் முடிச்சு... அவசர அவசரமா வீட்டுக்கு வந்து குளிச்சு கிளம்பும் போது டைம் பாத்தா படம் ஆரம்பிக்க இன்னும் 40 நிமிஷம் தான் இருக்கு.. அலறியடிச்சு டாக்ஸி கூப்பிட்டு, டிரைவர் கிட்ட கெஞ்சி கூத்தாடி வண்டிய வேகமா ஓட்ட சொல்லி ஒரு வழியா வந்து சேர்ந்தோம் தியேட்டருக்கு படம் தொடங்குறதுக்கு 10 நிமிஷம் முன்னாடியே....

செம கெத்தா உள்ள போய் நாங்க ரிசர்வ் பண்ணியிருந்த VIP ஸீட்ல போய் உக்காந்தா.. எதோ சாதிச்சது மாதிரியே ஒரு பீல்... தலைவர் படத்த முன்னாடியே பாக்குறதுன்னா சும்மாவா.... அடுத்த 5 நிமிசத்தில படத்த ஆரம்பிச்சிட்டான்... தலைவர் பெயர போடும் போது வந்த விசிலு சத்தம் இருக்கே... அய்யோ இப்ப நினச்சாலும் சும்மா அதிருது... அப்படி ஒரு சத்தம்...

முதல் சீன்ல தலைவர காமிச்சான் பாருங்க அத்தன பேரும் ஸீட்ட விட்டு எழும்பி நின்னு விசிலடிச்சு கை தட்டினாங்க... அப்படி ஒரு மாஸ் நம்ம தலைவருக்கு... தலைவருக்கும் சரி... நம்ம செல்லம் ஐஷுக்கும் சரி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத அறிமுகம்... தலைவரும் ஐஷும் ஏன்னா ஒரு ஜோடி பொருத்தம்... வர வர தலைவருக்கு வயசு குறைஞ்சுகிட்டே வருது.... காதல் அணுக்கள் பாட்டுல கையில கிற்றார் எடுத்துகிட்டு நடந்து வருவாரு பாருங்க... அந்த அழகா பாக்க இந்த ரெண்டு கண்ணு பத்தாம பக்கத்தில இருந்தவங்களோட கண்ணையும் கடன் கேக்கலாமான்னு தோணிச்சு. பாட்டுக்கு லோகேசன் தேடி உலகத்தோட மூலைக்கே போனாங்களோன்னு நினைக்கிற அளவுக்கு அவ்வளவு அழகு அந்த இடம்.... காதல் அணுக்கள் பாட்டு எடுத்த லோகேசன் எதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு...

டம் தொடக்கி கொஞ்ச நேரத்திலையே ரோபோ ரஜினியையும் காமிச்சிடுறாங்க... படத்தில மொத்தமும் ரோபோ ரஜினியோட அட்டகாசம் தான்... ரோபோ ரஜினி செய்யும் காமெடி.. பைட்...டான்ஸ் எல்லாமே ரொம்ப ரசிக்கும் படியா இருந்திச்சு.... இடைவேளை வரைக்கும் நல்லவனா இருக்கிற ரோபோ ரஜினி... இடைவேளைக்கப்புறம் வில்லனா மாறுறது தான் செம கலக்கல்... மொத்த படத்திலும் வர்ற ப்ரொபசர் ரஜினி... நல்ல ரோபோ ரஜினியையும் விட வில்லன் ரோபோ ரஜினியின் கதாப்பாத்திரம் தான் என்னையும் படம் பார்த்தவர்களையும் ரொம்ப கவர்ந்தது.... வில்லன் ரோபோ பேசும் வசனங்கள்.. முக பாவனை.. நடை.. வில்லத்தனம் என எல்லாமே நல்லாயிருக்கு... வில்லன் ரோபோவின் முகம் மூன்றுமுகம் ரஜினியை ஞாபகப்படுத்தியது...

க்களே.... நீங்க படம் பாருங்க இல்ல பாக்காம போங்க... ஆனா எப்படியாவது கடைசி 45 நிமிஷம் படத்த பாக்க மிஸ் பண்ணாதீங்க... மொத்த படத்துக்கும் செலவு பண்ணின 150 கோடி பணத்தில 100 கோடி இந்த 45 நிமிசத்துக்கு மட்டும் தான் செலவு பண்ணியிருப்பாங்க... அதெயெல்லாம் சும்மா வார்த்தையால சொல்ல முடியாது... கண்ணால பாத்து அனுபபிக்கணும்... அவ்வளவு ஒரு பிரமாண்டம்... என்ன விட்டா தலைவர பற்றியும்... தலைவர் நடிச்ச படத்த பற்றியும் பேசிட்டே இருப்பேன்...

போங்க மக்கா... போங்க.. சும்மா இத படிச்சு நேரத்த வீணடிக்காம தலைவர் படத்துக்கு எங்கையாவது டிக்கெட் கிடைக்குமான்னு போய் தேடுங்க....

**************
அதிமுக்கிய குறிப்பு....

நேத்தைக்கு எந்திரன் படத்துக்கு போன எங்க 9 பேருக்கு ஆனா செலவு இந்தியா காசுக்கு மொத்தம் வெறும் 18,000 /- தான்... இதில டிக்கெட் மட்டும் 9 பேருக்கு வெறும் பத்தாயிரம் தான்... மீதி எட்டாயிரம் டாக்ஸி.. சாப்பாடு... அப்படீன்னு ஆகிப்போச்சு... இதெயெல்லாம் கணக்கு பாத்தா தலைவர் படத்த முதல் நாளு பாக்க முடியுமா.... இல்ல இப்படி பதிவு தான் எழுத முடியுமா....

காசு இன்னைக்கு போனா நாளைக்கு வரும்.. ஆனா தலைவர் படம்..???

115 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அய்யோ... எதோ அவசரத்தில நானே எனக்கு மைனஸ் ஒட்டு போட்டுட்டனே..

எல் கே said...

kadisiya sonna vishyathukaaga unaku ethir pathivu varapothu

Anonymous said...

மாப்பு.. இன்னைக்கு நைட்டு நான் பாத்துருவேன்..

செல்வா said...

அட ச்சே .. முதல்ல வரலாம்னு நினைச்சேன் ..!!

Anonymous said...

படம் பார்த்த அதிர்வு இன்னும் குறையலா?
உனக்கு நீயே மைனஸ் குத்திகிட்ட :)

செல்வா said...

///நேத்தைக்கு படத்துக்கு போனப்போ தியேட்டர் வாசல்ல நின்னு ஒரு பன்னாட சொன்னது.//

ஹி ஹி .. அவரு வேற கிரகத்துல இருந்து வந்திருக்காரு ..!!

செல்வா said...

//காதல் அணுக்கள் பாட்டு எடுத்த லோகேசன் எதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு...//

எந்திரன் படத்துல காதல் அணுக்கள் எடுதாங்கள்ள அந்த இடம் தான் ..!!!

செல்வா said...

///காசு இன்னைக்கு போனா நாளைக்கு வரும்.. ஆனா தலைவர் படம்..???//

வெளங்கிடும் ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

LK said...

kadisiya sonna vishyathukaaga unaku ethir pathivu varapothu

//

அப்படி என்ன இப்ப தப்பா சொல்லிட்டேன்...

வினோ said...

makkale, ennakku eppo vaayakka pogutho padam paarkka.. athuvaraikkum yellorum engirunthaalum paarkka...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

மாப்பு.. இன்னைக்கு நைட்டு நான் பாத்துருவேன்..

//

சீக்கிரம் ஆகட்டும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

அட ச்சே .. முதல்ல வரலாம்னு நினைச்சேன் ..!!

//

ஆமா நெனப்ப வேற எங்கையாவது வச்சிட்டு... நெனச்சேன்னு சொல்லு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

படம் பார்த்த அதிர்வு இன்னும் குறையலா?
உனக்கு நீயே மைனஸ் குத்திகிட்ட :)

//

தலைவர் படம் பார்த்த ஷாக்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...
ஹி ஹி .. அவரு வேற கிரகத்துல இருந்து வந்திருக்காரு ..!!

//

அப்போ உனக்கு பங்காளின்னு சொல்லு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

எந்திரன் படத்துல காதல் அணுக்கள் எடுதாங்கள்ள அந்த இடம் தான் ..!!!

//

நீ புத்திசாலி செல்வா.. இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said...

makkale, ennakku eppo vaayakka pogutho padam paarkka.. athuvaraikkum yellorum engirunthaalum paarkka...

//

கவலைப்படாதே நண்பா... சீக்கரம் வந்திரும்...

செல்வா said...

//அப்போ உனக்கு பங்காளின்னு சொல்லு...//

இப்படி வேற கிளப்பி விடுறீங்களா ..?

என்னது நானு யாரா? said...

கதை நல்லாத்தான் இருக்கு. சரி அப்படி என்ன அவசரம். உங்களுக்கு நீங்களே மைனஸ் ஓட்டுப் போட்டுக்கிற மாதிரி. நானு, ஏதோ வெறும் தலைப்பை மட்டும் பார்த்து, பதிவை முழுசா படிக்காம யாரோ மைனஸ் ஓட்டுப் போட்டாங்களோன்னு நினைச்சிட்டேன்.

சரி! என்ன நீங்க இப்படி சொல்லிப்புட்டீங்க!

//காசு இன்னைக்கு போனா நாளைக்கு வரும்.. ஆனா தலைவர் படம்..???//

தலைவர் படம் கூடத்தான் இன்னைக்குப் போனா நாளைக்கு வரும். அதுக்காக ஏன் டென்ஷன்? சொல்லுங்க பங்காளி!

வினோ said...

yaaraavathu nalla manasu panni oru 15000 anuppineengana naanum innaikke padam paarppen

எப்பூடி.. said...

//தியேட்டர் வாசல்ல நின்னு ஒரு பன்னாட சொன்னது.//

இவனுங்க இப்பிடித்தான் பாஸ் புலம்பிகிட்டு இருப்பாங்க, வாங்க நாம அடுத்தவாட்டி படத்துக்கு போகலாம்.

சுசி said...

:))))

எஸ்.கே said...

அப்படி புலம்புனது டிக்கெட் கிடைக்காத யாராவது இருக்கலாம்! :-)

karthikkumar said...

படம் பட்டய கெளப்புது.. கிளைமாக்ஸ் சான்சே இல்ல ரஜினி சார் ஆடு போல மிமிக்ரி செய்யும் சீன்.... இன்னும் நெறைய இருக்கு.. 1st show & 2nd show பாத்துட்டேன் மறுபடியும் நைட் ஷோ ரிசேர்வ் பண்ணிட்டேன்

r.v.saravanan said...

tomorrow morning ஷோ ரிசேர்வ் பண்ணிட்டேன்

சௌந்தர் said...

வெறும்பய said...
அய்யோ... எதோ அவசரத்தில நானே எனக்கு மைனஸ் ஒட்டு போட்டுட்டனே.///

இதுல இருந்தே தெரிகிறது நீங்க இன்னும் அந்த படம் பார்த்த நினைவில் இருக்கீங்க

Deepa said...

//அய்யோ... எதோ அவசரத்தில நானே எனக்கு மைனஸ் ஒட்டு போட்டுட்டனே..//
:)))

Unknown said...

ஒரு பதிவு எழுத இம்பூட்டு செலவா??நீங்க எங்கயோ போய்டீங்க பாஸ்!!ஹஹா

அருண் பிரசாத் said...

நல்ல வேளை எவனோ பன்னாடை சொல்லவே தப்பிச்சிங்க.... இந்த பதிவை அந்த லைன்னோட நிறுத்தி இருந்தீங்க..... சங்கு தாண்டியோ...

எம் அப்துல் காதர் said...

பரவாயில்லையே செலவ சிம்பிளா முடிச்சிட்டீங்க...!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

தலைவர் படம் கூடத்தான் இன்னைக்குப் போனா நாளைக்கு வரும். அதுக்காக ஏன் டென்ஷன்? சொல்லுங்க பங்காளி!

//

டென்சனா எங்களுக்கா.. நாங்கெல்லாம் விடிய விடிய படத்த பாத்திட்டு மறு நாள் ஆபீஸ்ல தூங்கி விழுந்து திட்டு வாங்கிட்டே வேல பாக்கிறவங்க பங்காளி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said...

yaaraavathu nalla manasu panni oru 15000 anuppineengana naanum innaikke padam paarppen

//

கேளு நண்பா.. கேளு யார் கிட்ட கேக்குற... என் கிட்ட தானே.. கேளு நண்பா கேளு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//வெறும்பய said...

அய்யோ... எதோ அவசரத்தில நானே எனக்கு மைனஸ் ஒட்டு போட்டுட்டனே//

மொத தடவையா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்க பங்காளி!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எப்பூடி.. said...

இவனுங்க இப்பிடித்தான் பாஸ் புலம்பிகிட்டு இருப்பாங்க, வாங்க நாம அடுத்தவாட்டி படத்துக்கு போகலாம்.

//

ரசிகேண்டா...ரசிகேண்டா...ரசிகேண்டா...ரசிகேண்டா...ரசிகேண்டா...

வாங்க பாஸ் வாங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாரு அந்த பன்னாடை கூட்டிட்டு வாங்க இங்கே!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மொத தடவையா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்க பங்காளி!

//

வாங்கப்பு என்ன இம்புட்டு லேட்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பி பன்னாடைங்கற பேருல நீதானே பீலா வுட்டிருக்கே (சும்மா சொல்லுய்யா வெளிய சொல்ல மாட்டேன்)

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாரு அந்த பன்னாடை கூட்டிட்டு வாங்க இங்கே!

\//

அவன் கிடக்கான் லூசுப்பய நீங்க வாங்க அடுத்த ஆட்டத்து போலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பி பன்னாடைங்கற பேருல நீதானே பீலா வுட்டிருக்கே (சும்மா சொல்லுய்யா வெளிய சொல்ல மாட்டேன்)

///

யாருப்பா இது இப்படி உண்மை பேசுறவங்கள உள்ள விட்டது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுசி said...

:))))

//

Thanks Sis..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

அப்படி புலம்புனது டிக்கெட் கிடைக்காத யாராவது இருக்கலாம்! :-)

//

அது தான் உண்மை ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthik said...

படம் பட்டய கெளப்புது.. கிளைமாக்ஸ் சான்சே இல்ல ரஜினி சார் ஆடு போல மிமிக்ரி செய்யும் சீன்.... இன்னும் நெறைய இருக்கு.. 1st show & 2nd show பாத்துட்டேன் மறுபடியும் நைட் ஷோ ரிசேர்வ் பண்ணிட்டேன்

//

நீங்க தான் உண்மையான ரசிகேண்டா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

r.v.saravanan said...

tomorrow morning ஷோ ரிசேர்வ் பண்ணிட்டேன்

//

பாத்திட்டு சொல்லுங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

இதுல இருந்தே தெரிகிறது நீங்க இன்னும் அந்த படம் பார்த்த நினைவில் இருக்கீங//

இப்ப நார்மலயிரிச்சு நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Deepa said...

:)))

//

thanks is..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மைந்தன் சிவா said...

ஒரு பதிவு எழுத இம்பூட்டு செலவா??நீங்க எங்கயோ போய்டீங்க பாஸ்!!ஹஹா

//

ஏதாவது வித்தியாசம் இருந்தா தானே ஒரு திரில்லு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

நல்ல வேளை எவனோ பன்னாடை சொல்லவே தப்பிச்சிங்க.... இந்த பதிவை அந்த லைன்னோட நிறுத்தி இருந்தீங்க..... சங்கு தாண்டியோ...

//

உங்களுக்கு பயந்தே.. நான் காலத்த ஓட்ட வேண்டியிருக்கு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எம் அப்துல் காதர் said...

பரவாயில்லையே செலவ சிம்பிளா முடிச்சிட்டீங்க...!!

//

நமக்கு ஆடம்பரம் பிடிக்காது பாஸ்...

இம்சைஅரசன் பாபு.. said...

இவ்வளவு செலவு செய்து ஒரு படம் பறக்னுமா .நாங்க எல்லாம் இன்னும் ரெண்டு நாள்ல அழகிரி குரூப் ஒரிஜினல் DVD இறக்கிருவங்க நம்பிக்கையில் இருக்கோம் (எங்க அண்ணன் எரக்கிருவாறு நாங்க 25 ரூபாய் ல ஒரு குடும்பமே பார்ப்போமே)

Anonymous said...

18000 ?????

என்ன கம்ம்மியா செலவு பண்ணியிருக்கீங்க??

அது சரி.. அவரோட முகத்தை பார்த்த சந்தோசத்துல
உங்களுக்கெல்லாம் பசிக்காதே.. அப்புறம் எதுக்கு சாப்பாட்டு செலவுன்னு கணக்கு காட்டி இருக்கீங்க?

வெற்றி said...

Black டேள் ஐ'யாயிரம்தான அந்த பண்ணாட?

எப்பூடி...

கண்டுபிடிச்சேனா?

வெற்றி said...

அய் மீன் " கருந்தேள் ஐ'யாயிரம்" ந்தான அந்த பண்ணாடன்னேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

வெற்றி said...

அய் மீன் " கருந்தேள் ஐ'யாயிரம்" ந்தான அந்த பண்ணாடன்னேன்.

//

ஐயா ராசா.. உனக்கு என் மேல அப்படி என்ன கோவம்.. ஏன் இப்படி கொத்து விட்டுட்டு போற...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

இவ்வளவு செலவு செய்து ஒரு படம் பறக்னுமா .நாங்க எல்லாம் இன்னும் ரெண்டு நாள்ல அழகிரி குரூப் ஒரிஜினல் DVD இறக்கிருவங்க நம்பிக்கையில் இருக்கோம் (எங்க அண்ணன் எரக்கிருவாறு நாங்க 25 ரூபாய் ல ஒரு குடும்பமே பார்ப்போமே)

//

பாக்கலாம்.. அனாலும் இந்த சந்தோசம் வருமா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்திரா said...

18000 ?????

என்ன கம்ம்மியா செலவு பண்ணியிருக்கீங்க??

அது சரி.. அவரோட முகத்தை பார்த்த சந்தோசத்துல
உங்களுக்கெல்லாம் பசிக்காதே.. அப்புறம் எதுக்கு சாப்பாட்டு செலவுன்னு கணக்கு காட்டி இருக்கீங்க?

//

இந்த மாதிரி குதர்க்கமா கேள்வி கேக்கக் கூடாது சகோதரி...

மோகன்ஜி said...

என் காதுல இருந்து புகை வருதே,பாத்தீங்களா பிரதர்.. என்ன விட்டிட்டு நீங்க படத்துக்கு போயிட்டீங்களே ..சூப்பரா எழுதிட்டீங்க.ரொம்ப ரசிச்சேன்.

கருடன் said...

@இந்திரா

//அது சரி.. அவரோட முகத்தை பார்த்த சந்தோசத்துல
உங்களுக்கெல்லாம் பசிக்காதே.. அப்புறம் எதுக்கு சாப்பாட்டு செலவுன்னு கணக்கு காட்டி இருக்கீங்க?//

ஹலோ மச்சி!! நான் தான் டெரர் பேசரேன் உன் விமர்சனம் சூப்பர்!! டிக்கட் செலவு ஒ.கே. அது என்ன மச்சி 5 பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து இருக்க... நடந்து போன நாலு பேர டாக்ஸில அனுப்பி இருக்க... சரி சரி உன் பெருமை வெளிய சொன்னா உனக்கு பிடிக்காதே... நான் போன் வச்சிடரேன்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... சும்மா அதிருது போல இருக்கே... நானும் பாக்கணும்... சீக்கரம்... பாத்துட்டு போடுறேன் பதிவு...

அன்பரசன் said...

என்ன நண்பா இப்படி ஒரு பதிவ போட்டு எகிரவச்சிட்டீங்க.
நாளைக்கு நாங்களும் போறோம்ல.

Jeyamaran said...

just 18,000 Rs ah ithu overa illa thala............. Intha padatha innum 10 naalukku apparam 60 rs ticketla paarkalaamnu ninaikiren.........

சீமான்கனி said...

ஒரு படத்த பார்த்துட்டு இவங்கே பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலப்பு...

Riyas said...

சரி படம் பார்ப்போம்.. எப்படியிருக்குன்னு.. பதிவுக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

/////மீதி எட்டாயிரம் டாக்ஸி.. சாப்பாடு... அப்படீன்னு ஆகிப்போச்சு...////

அப்படி அந்த திரையரங்கு எங்குதான் இருக்கு !!!!!!!!!!!!!!!! ????????????????????????????

சின்னப்பயல் said...

எனக்கென்னவோ முதல் பாராக்ராஃப் தான்
உண்மையான விமர்சனம்ணு தோணுது, :-))

சி.பி.செந்தில்குமார் said...

முத பேரா (paragh) படிச்சு பயந்துட்டேனப்புறம்தான் அது ட்ரிக்ச்னு தெரிஞ்சது,நல்ல அனுபவபகிர்வு

தமிழ்போராளி said...

எந்திரன் மொத்தத்தில் எந்திரிக்காதவன் என்று சொல்றீங்க...

Nanthaa said...

காதல் அணுக்கள் பாட்டு எடுத்த லோகேசன் எதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு...
http://video.yahoo.com/watch/8307062/22160623

http://www.youtube.com/watch?v=fKd6GvsB88c&feature=player_embedded

School of Energy Sciences, MKU said...

இந்த படம் கொழந்தைகளுக்கு ரொம்ப புடுச்சுருக்காம். சீக்கிரம் சுட்டி டீவில போடப்போறாங்களாம்.

Anonymous said...

தலைவர் படத்த பற்றி இனிமேல் எவனும் பல்லு மேல நாக்கையோ இல்ல மூக்கையோ போட்டு பேசக்கூடாது..//
எல்லாம் கப்பு சிப்புன்னு இருக்கானுவ...இனிமேல் எந்திரன் வசூல் ரிசல்ட்டை பார்த்து வயிறு எரிவானுவ...

Anonymous said...

படம் செம கலக்கல் ரெண்டு முறை பார்த்துட்டேன்.ரஜினி படம் பார்ப்பதும் துதிப்பதும் அவரவர் தனி சுதந்திரம்...ஊருக்கு உழைக்கிறவன் நாட்டை திருத்துறவன் எல்லாம் இந்த விசயத்தில் ஏன் கவலை படறானுக என த்ரியவே இல்லை..காமென்வெல்த்,2ஜி முறைகேடுகள் பத்தி எழுதுங்கடே

Anonymous said...

18,000 செலவுல கடவுளை பார்த்துட்டு வந்துட்டியா தல..எனக்கு 100 ரூபாய் தான் செலவாச்சி...

Anonymous said...

அய்யோ... எதோ அவசரத்தில நானே எனக்கு மைனஸ் ஒட்டு போட்டுட்டனே//
அதனாலதான் 14 மைனஸ் வோட்டு விழுந்திருக்கா சறுக்கிட்டியே மச்சி

Anonymous said...

அட ச்சே .. முதல்ல வரலாம்னு நினைச்சேன்//
அதான் எங்க தலைவர் வந்துட்டாரே எந்திரன் ல..இன்னும் ஒரு வருசத்துக்கு அவர்தான் முதல்ல...

Anonymous said...

படம் பட்டய கெளப்புது.. கிளைமாக்ஸ் சான்சே இல்ல ரஜினி சார் ஆடு போல மிமிக்ரி செய்யும் சீன்.... இன்னும் நெறைய இருக்கு.. 1st show & 2nd show பாத்துட்டேன் மறுபடியும் நைட் ஷோ ரிசேர்வ் பண்ணிட்டே//அடப்பாவி இதையே பத்து ப்ளாக்குல சொல்லிட்டியே..பரவாயில்ல தலைவர் பத்திதானே சொல்லியிருக்கே நல்லாரு

Anonymous said...

அய்யோ... எதோ அவசரத்தில நானே எனக்கு மைனஸ் ஒட்டு போட்டுட்டனே//
இளையராஜா முதன் முதலா மியூசிக் போடும் போது கரண்ட் ஆஃப் ஆயிடுச்சாம்.அவர் ஹிட் ஆகலையா.முதன் முதல்ல அயன்கரன் தயாரிக்கிறதா சொல்லி அப்புறம் விலகிடுச்சாம்..எந்திரன் ஹிட் ஆகலியா..அது மாதிரி முதல் மைனஸ் குத்துனதால உங்க பதிவு பெரிய ஹிட் ஆயிடுச்சி..எப்பூடி?

Kiruthigan said...

ஆஹா....
முதல் கொஞ்சம் காண்டாயிட்டம்ல..

http://tamilpp.blogspot.com/2010/10/blog-post.html#

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super machchi. naan innikku poren

r.v.saravanan said...

r.v.saravanan said...

tomorrow morning ஷோ ரிசேர்வ் பண்ணிட்டேன்

//

பாத்திட்டு சொல்லுங்க...

பார்த்திட்டேன் நண்பா என் தளத்தில் விமர்சனமும் இட்டிருக்கிறேன்

Athiban said...

நல்லா எழுதியிருக்கீங்க!! முடிஞ்சா நம்ம பதிவுக்கும் வாங்க..

http://senthilathiban.blogspot.com

Athiban said...

இன்றுதான் உங்கள் பதிவுக்கு வந்தேன். என்றைக்காவது ஒரு நாள் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிக்க வேண்டும்.

Anonymous said...

எப்படி இவ்வளவு அழகாக எழுதுறீங்க ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

மோகன்ஜி said...

என் காதுல இருந்து புகை வருதே,பாத்தீங்களா பிரதர்.. என்ன விட்டிட்டு நீங்க படத்துக்கு போயிட்டீங்களே ..சூப்பரா எழுதிட்டீங்க.ரொம்ப ரசிச்சேன்.

//

ஞாபகம் இருந்துது.. ஆனா மறந்திட்டேன்...

வருகைக்கு நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

ஹலோ மச்சி!! நான் தான் டெரர் பேசரேன் உன் விமர்சனம் சூப்பர்!! டிக்கட் செலவு ஒ.கே. அது என்ன மச்சி 5 பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து இருக்க... நடந்து போன நாலு பேர டாக்ஸில அனுப்பி இருக்க... சரி சரி உன் பெருமை வெளிய சொன்னா உனக்கு பிடிக்காதே... நான் போன்

////

ரொம்ப நன்றி மச்சி என்னோட பெருமையா இதோட நிப்பாட்டினதுக்கு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்பாவி தங்கமணி said...

ஆஹா... சும்மா அதிருது போல இருக்கே... நானும் பாக்கணும்... சீக்கரம்... பாத்துட்டு போடுறேன் பதிவு...

//

சீக்கிரம் படம் பாத்திட்டு வந்து உங்க கருத்துக்கள சொல்லுங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்பரசன் said...

என்ன நண்பா இப்படி ஒரு பதிவ போட்டு எகிரவச்சிட்டீங்க.
நாளைக்கு நாங்களும் போறோம்ல.
//

சும்மா ஒரு தமாசுக்கு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jeyamaran said...

just 18,000 Rs ah ithu overa illa thala............. Intha padatha innum 10 naalukku apparam 60 rs ticketla paarkalaamnu ninaikiren.....

///

ஆமா நண்பா DVD வந்து ரெண்டு நாளாகி போச்சு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சீமான்கனி said...

ஒரு படத்த பார்த்துட்டு இவங்கே பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலப்பு..

//

பதிவெழுத வேற சரக்கில்லையே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாதவன் said...

supper
//

தேங்க்ஸ் தலைவா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Riyas said...

சரி படம் பார்ப்போம்.. எப்படியிருக்குன்னு.. பதிவுக்கு நன்றி

///

வருகைக்கு நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அப்படி அந்த திரையரங்கு எங்குதான் இருக்கு !!!!!!!!!!!!!!!!

//

கண்டிப்பா நமூர்ல இல்ல.. இது சிங்கபூர்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சின்னப்பயல் said...

எனக்கென்னவோ முதல் பாராக்ராஃப் தான்
உண்மையான விமர்சனம்ணு தோணுது, :-))

//

மனசுக்குள்ளயே இருக்கட்டும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

முத பேரா (paragh) படிச்சு பயந்துட்டேனப்புறம்தான் அது ட்ரிக்ச்னு தெரிஞ்சது,நல்ல அனுபவபகிர்வு

//

நன்றி சகோதரா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

விடுத‌லைவீரா said...

எந்திரன் மொத்தத்தில் எந்திரிக்காதவன் என்று சொல்றீங்க...

///

இல்ல தல எழும்பி நின்னுட்டானே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Kalananthan கலாநந்தன் said...

காதல் அணுக்கள் பாட்டு எடுத்த லோகேசன் எதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு...
http://video.yahoo.com/watch/8307062/22160623

http://www.youtube.com/watch?v=fKd6GvsB88c&feature=player_embedded

////

மிக்க நன்றி அன்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வில்சன் said...

இந்த படம் கொழந்தைகளுக்கு ரொம்ப புடுச்சுருக்காம். சீக்கிரம் சுட்டி டீவில போடப்போறாங்களாம்.

///

வந்தாலும் வரலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எல்லாம் கப்பு சிப்புன்னு இருக்கானுவ...இனிமேல் எந்திரன் வசூல் ரிசல்ட்டை பார்த்து வயிறு எரிவானுவ...

//
வசூல் பிச்சு ஓதருதாமில்ல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படம் செம கலக்கல் ரெண்டு முறை பார்த்துட்டேன்.ரஜினி படம் பார்ப்பதும் துதிப்பதும் அவரவர் தனி சுதந்திரம்...ஊருக்கு உழைக்கிறவன் நாட்டை திருத்துறவன் எல்லாம் இந்த விசயத்தில் ஏன் கவலை படறானுக என த்ரியவே இல்லை..காமென்வெல்த்,2ஜி முறைகேடுகள் பத்தி எழுதுங்கடே

//

அதுகெல்லாம் ஆளுங்க இருக்காங்க தலைவா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

18,000 செலவுல கடவுளை பார்த்துட்டு வந்துட்டியா தல..எனக்கு 100 ரூபாய் தான் செலவாச்சி...

///

நான் பாத்தது சிங்கபூர்ல.. இப்பா என்ன சொல்றீங்க... ஹா ஹாஹா

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
அதனாலதான் 14 மைனஸ் வோட்டு விழுந்திருக்கா சறுக்கிட்டியே மச்சி

//

முதல் முறையாக என் தளாத்தில் மின்னும் ஓட்டு... பரவாயில்ல... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
அதான் எங்க தலைவர் வந்துட்டாரே எந்திரன் ல..இன்னும் ஒரு வருசத்துக்கு அவர்தான் முதல்ல...

///

கண்டிப்பா ரஜினியோட அடுத்த படம் வரை அவரு தான் முதல்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இளையராஜா முதன் முதலா மியூசிக் போடும் போது கரண்ட் ஆஃப் ஆயிடுச்சாம்.அவர் ஹிட் ஆகலையா.முதன் முதல்ல அயன்கரன் தயாரிக்கிறதா சொல்லி அப்புறம் விலகிடுச்சாம்..எந்திரன் ஹிட் ஆகலியா..அது மாதிரி முதல் மைனஸ் குத்துனதால உங்க பதிவு பெரிய ஹிட் ஆயிடுச்சி..எப்பூடி?

//

ஆஹா இதில இவ்வளவு விஷயம் இருக்கா... இப்போ நானும் கூடிய சீக்கிரம் பிரபலம் ஆகிடுவேன் தானே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Cool Boy கிருத்திகன். said...

ஆஹா....
முதல் கொஞ்சம் காண்டாயிட்டம்ல..

///

கூல்...கூல்ல்... நமக்கு பொறுமை தான் முக்கியம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super machchi. naan innikku poren

///

ம்ம்ம் நடத்துங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

r.v.saravanan said...
பார்த்திட்டேன் நண்பா என் தளத்தில் விமர்சனமும் இட்டிருக்கிறேன்

//

ம்ம் கலக்குங்க தலைவா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

//

கருத்தா..!!!!! இந்த பதிவுலையா....

ஜெயந்த் கிருஷ்ணா said...

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/
//
டாங்க்ஸ் தல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

தமிழ் மகன் said...

நல்லா எழுதியிருக்கீங்க!! முடிஞ்சா நம்ம பதிவுக்கும் வாங்க..
\
//

வந்திட்டா போச்சு.. தாங்க்ஸ் தலைவா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

தமிழ் மகன் said...

இன்றுதான் உங்கள் பதிவுக்கு வந்தேன். என்றைக்காவது ஒரு நாள் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிக்க வேண்டும்.

//

தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொது படியுங்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

mathisree said...

எப்படி இவ்வளவு அழகாக எழுதுறீங்க ?
//]

யாரு நானா.. போங்க சார்.. சும்மா காமெடி பண்ணிக்கிட்டு...

'பரிவை' சே.குமார் said...

Neengaley Ellaam solliachchu... So No COMMENTS.

Sriakila said...

//18000 ?????

என்ன கம்ம்மியா செலவு பண்ணியிருக்கீங்க??

அது சரி.. அவரோட முகத்தை பார்த்த சந்தோசத்துல
உங்களுக்கெல்லாம் பசிக்காதே.. அப்புறம் எதுக்கு சாப்பாட்டு செலவுன்னு கணக்கு காட்டி இருக்கீங்க? //

எவ்வ‌ள‌வு க‌ரெக்டா சொல்லி இருக்காங்க‌..

கமலேஷ் said...

படம் நல்லா இருக்கோ இல்லையோ தெரியாது..
நீங்க எழுதி இருக்கிறதுரொம்ப நல்லா
இருக்கு
அதுக்காகவே பார்த்திடலாம்

pichaikaaran said...

"எல்லாம் நம்ம வயித்தில அடிச்சு அவங்க சம்பாதிச்சது தான்"

திண்ணை பேச்சு அறிவு ஜீவித்தனம் இதுதான்,,இதுக்கெல்லாம் கவலை படாதீங்க,,
பட்த்தை பார்த்தே ஆகணும்னு மிரட்டி அவங்க சம்பாதிக்கலை.. படம் அத்தியாவசிய தேவையும் இல்லை..
அத்தியாவசிய தேவைகளின் விலையை உயர்த்தி சிலர் சம்பாதிக்கிறாங்க.. அதை பத்தி பேசுனா நீங்க பதிவுல இடம் தர மாட்டிங்கனு இப்படி பேசி இருக்கிறார் அந்த நண்பர்.. மன்னிச்சி விட்டுடுங்க

Unknown said...

////எந்திரன் படத்துக்கு போன எங்க 9 பேருக்கு ஆனா செலவு இந்தியா காசுக்கு மொத்தம் வெறும் 18,000 /- தான்... இதில டிக்கெட் மட்டும் 9 பேருக்கு வெறும் பத்தாயிரம் தான்... மீதி எட்டாயிரம் டாக்ஸி.. சாப்பாடு... அப்படீன்னு ஆகிப்போச்சு... இதெயெல்லாம் கணக்கு பாத்தா தலைவர் படத்த முதல் நாளு பாக்க முடியுமா.... இல்ல இப்படி பதிவு தான் எழுத முடியுமா....///

கம்மியா செலவு பண்ணியிருக்கீங்க??

எழுதி இருக்கிறதுரொம்ப நல்லா
இருக்குங்க

Unknown said...

தங்களது பகிர்வை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன்.நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..