அனுபவம் இப்போதெல்லாம்
எனக்கு துணையாய்
யாருமில்லா தனிமையும்
என்னறை கும்மிருட்டும்...
விவரமறியா விடலை பருவத்தில்
எனக்கு துணையாய்
யாருமில்லா தனிமையும்
என்னறை கும்மிருட்டும்...
விவரமறியா விடலை பருவத்தில்
என்னையணைத்த தனிமையை விட...
இன்று
அவன்..
அவள்..
அது.. போன்ற மாயைகளாலும், மயக்கத்தாலும்
நான் பெற்ற ஏக்கம், ஏமாற்றம், கோவம், அவமானம்
ஆகியவற்றால் கூனிக் குறுகிப்போன என்னை வாரியணைத்த தனிமையை எனக்கு பிடித்திருந்தது...
அகராதி இல்லாத ஆறுதல்..
பேசப்படாத மொழி..
இசைக்கப்படாத இசை...
உருவமில்லாத உறவு...
தனிமையின் உன்னதம் உணர்கிறேன்...
தனிமைப் பொழுதுகளில் மட்டுமே
நான் நானாக இருக்கிறேன்..
அங்கே நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை..
என் கவலைகளுக்கும் கவலையில்லை..
பாசத்திற்கும் இடமில்லை..
பழகுவதற்கும் எவருமில்லை...
இந்த இருள் பூத்த தனிமையெனும் நந்தவனத்தில்
என் கவலைகளுக்கும் கவலையில்லை..
பாசத்திற்கும் இடமில்லை..
பழகுவதற்கும் எவருமில்லை...
இந்த இருள் பூத்த தனிமையெனும் நந்தவனத்தில்
என்னை சுற்றியும், எனக்கு துணையாகவும் நான் மட்டுமே....
தேட நினைப்பதும் நான் தொலைத்த
என்னை மட்டுமே..தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில்..
80 comments:
/ ஒரு அகராதி இல்லாத ஆறுதல்..
பேசப்படாத மொழி..
இசைக்கப்படாத இசை...
உருவமில்லாத உறவு...
தனிமையின் உன்னதம் உணர்கிறேன்... /
ஆம் நண்பா.. இப்படி தான் பல விசயங்கள் நமக்கு தனிமைக் கற்றுக்கொடுக்கிறது
நான் தான் முதல்ல வரலாம்னு நினைச்சேன் .!!
//குறுகிப்போன என்னை வாரியணைத்த தனிமையை எனக்கு பிடித்திருந்தது...//
ஆனா தனிமை நிறைய நாளுக்கு பிடிசிருக்காதுங்கோ ..!!
தனிமைப் பொழுதுகளில் மட்டுமே
நான் நானாக இருக்கிறேன்..
அங்கே நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை..////
'
இந்த வரிகள் பல உண்மைகள் இருக்கு நண்பா வார்த்தைகள் எல்லாம் அருமையா இருக்கு
//தனிமைப் பொழுதுகளில் மட்டுமே
நான் நானாக இருக்கிறேன்..
//
இது வேணா சரி தான் .. ஏன்னா பக்கத்துல யாரவது இருந்த அவுங்க என்ன நினைப்பாங்களோ அப்படின்னு அவுங்களைப் பதியும் சிந்திக்க வேண்டி இருக்கும் .!!
//தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில்..//
கெடச்சதும் சொல்லி அனுப்புங்க .. எங்களுக்கு ஒரு ஆடு வேணும் .!!
//இந்த வரிகள் பல உண்மைகள் இருக்கு நண்பா வார்த்தைகள் எல்லாம் அருமையா இருக்கு
//
சாப்பிட்டு பார்த்தியா...?
செம!!!! டா தம்பி..
சமீப காலமா உனக்குள்ள நகர்ந்திருக்கும் அந்த விசயமும்....அதனால் கிடைத்திருக்கும் ஒரு வெளிச்சமும் கவனித்தவனாய் நான் இருக்கிறேன்...
இந்த வெளிச்சத்தில் கிளைக்கும் எண்ணங்களை எழுதாமல் மட்டும் இருந்து விடாதே...
தேடலின் தனிமையில் கிடைக்கும் உனக்கான ராஜாங்கம் !
தம்பி வாழ்த்துக்கள்!
மிக மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வரிகள் எல்லாமெ வலியைச் சொல்கின்றன!
//தேட நினைப்பதும் நான் தொலைத்த
என்னை மட்டுமே..//
அழகான வார்த்தைகள்.
நல்லா எழுதியிருக்கீங்க ஜெயந்த்..
ஒற்றைச் சருகு
என்றுமே
ஒற்றைச் சருகுதான்...
ஒற்றைச் சிறகாய்
மாறிப்பார் தோழா...
உனக்கான
இன்னொரு சிறகு
உனக்காய் காத்திருக்கும்...
(ஏனோ எனக்கு உங்க கவிதையைப் படித்தவுடன் கவிதையாவே பதில் சொன்னா என்னன்ன தோணுச்சு அதான்)
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்...
ப.செல்வக்குமார் said..
//தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில்..//
கெடச்சதும் சொல்லி அனுப்புங்க .. எங்களுக்கு ஒரு ஆடு வேணும் .!!///
ஹா ஹா ஹா..
போச்சுடா! நீங்களும் தேட ஆரம்பிச்சாச்சா...
தேவா கூட சேர்ந்துக்கோங்க... அவர்தான் எதையாவது தேடிட்டே இருப்பார்...
வினோ said...
ஆம் நண்பா.. இப்படி தான் பல விசயங்கள் நமக்கு தனிமைக் கற்றுக்கொடுக்கிறது
//
உண்மை தான் நண்பா...
ப.செல்வக்குமார் said...
நான் தான் முதல்ல வரலாம்னு நினைச்சேன் .!!
//
உனக்கு நினைக்கிறதே பொழப்பா போச்சு....
சௌந்தர் said...
இந்த வரிகள் பல உண்மைகள் இருக்கு நண்பா வார்த்தைகள் எல்லாம் அருமையா இருக்கு
//
நன்றி நண்பா...
//இப்போதெல்லாம்
எனக்கு துணையாய்
யாருமில்லா தனிமையும்
என்னறை கும்மிருட்டும்...//
முதல்ல போய் கரண்டு பில்ல கட்டு.
//தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில்..//
நீயுமா. தேவா அண்ணா இவனையும் சேர்த்துக்கோங்க. ரெண்டு பேருமா சேர்ந்து தேடலாம்
ப.செல்வக்குமார் said...
கெடச்சதும் சொல்லி அனுப்புங்க .. எங்களுக்கு ஒரு ஆடு வேணும் .!!
//
எப்ப பாத்தாலும் என்ன வெட்டுரதிலையே குறியா இருங்க... எத்தன தடவை தான் வெட்டுவீங்க...
ப.செல்வக்குமார் said...
//இந்த வரிகள் பல உண்மைகள் இருக்கு நண்பா வார்த்தைகள் எல்லாம் அருமையா இருக்கு
//
சாப்பிட்டு பார்த்தியா...?////
ஆமா சாப்பிட்டு பார்த்து தான் சொல்றேன்
dheva said...
செம!!!! டா தம்பி..
சமீப காலமா உனக்குள்ள நகர்ந்திருக்கும் அந்த விசயமும்....அதனால் கிடைத்திருக்கும் ஒரு வெளிச்சமும் கவனித்தவனாய் நான் இருக்கிறேன்...
இந்த வெளிச்சத்தில் கிளைக்கும் எண்ணங்களை எழுதாமல் மட்டும் இருந்து விடாதே...
தேடலின் தனிமையில் கிடைக்கும் உனக்கான ராஜாங்கம் !
தம்பி வாழ்த்துக்கள்!
//
மிக்க நன்றி அண்ணா...
இந்த இருள் பூத்த தனிமையெனும் நந்தவனத்தில்
என்னை சுற்றியும், எனக்கு துணையாகவும் நான் மட்டுமே....
தேட நினைப்பதும் நான் தொலைத்த
என்னை மட்டுமே..
தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில்..
......இப்போதைக்கு உங்களுக்குள் இருக்கும் ஒரு கவிஞனை தேடி கண்டு பிடித்து விட்டீர்கள் என்று தெரிகிறதே... பாராட்டுக்கள்!
எஸ்.கே said...
மிக மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வரிகள் எல்லாமெ வலியைச் சொல்கின்றன!
//
நன்றி சகோதரா... இப்போது அந்த வலிகளை கடந்து வந்துவிட்டேன்...
இளங்கோ said...
அழகான வார்த்தைகள்.
///
நன்றி நண்பா ...
பதிவுலகில் பாபு said...
நல்லா எழுதியிருக்கீங்க ஜெயந்த்..
//
நன்றி நண்பா ...
பிரியமுடன் ரமேஷ் said...
ஒற்றைச் சருகு
என்றுமே
ஒற்றைச் சருகுதான்...
ஒற்றைச் சிறகாய்
மாறிப்பார் தோழா...
உனக்கான
இன்னொரு சிறகு
உனக்காய் காத்திருக்கும்...
(ஏனோ எனக்கு உங்க கவிதையைப் படித்தவுடன் கவிதையாவே பதில் சொன்னா என்னன்ன தோணுச்சு அதான்)
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்...
//
மிக்க நன்றி நண்பரே.. கவிதையாக பின்னூட்டம் அருமை...
ஒற்றைச் சருகு... புதிய மரமாய் வளர துளிர்விட ஆரம்பித்து விட்டது,,,,
அருண் பிரசாத் said...
போச்சுடா! நீங்களும் தேட ஆரம்பிச்சாச்சா...
தேவா கூட சேர்ந்துக்கோங்க... அவர்தான் எதையாவது தேடிட்டே இருப்பார்...
//
காசா பணமா.. தேடுவோம்.. ஏதாவது கிடைக்காமலா போகும்...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீயுமா. தேவா அண்ணா இவனையும் சேர்த்துக்கோங்க. ரெண்டு பேருமா சேர்ந்து தேடலாம்..
//
அட நீங்க இங்கே தான் இருக்கீங்களா..போன வாரம் புது பைக்கை பாண்டி பசாருலருந்து ஆட்டைய போட்டதுக்கு உங்களை உள்ள வச்சிருக்கிறதா சொன்னாங்க...
Chitra said...
......இப்போதைக்கு உங்களுக்குள் இருக்கும் ஒரு கவிஞனை தேடி கண்டு பிடித்து விட்டீர்கள் என்று தெரிகிறதே... பாராட்டுக்கள்!
//
மிக்க நன்றி சகோதரி... நீங்கள் சொல்வது உண்மை தானோ என்று தான் தோன்றுகிறது... நான் தொலைத்த என்னை தேடும் போது நான் கண்டிராத என்னை காண்கிறேன்...
தனிமை ரொம்ப பிடிக்குமோ?
http://tn-tourguide.blogspot.com
சிலர் சொல்வாங்க தனிமை கொடுமைனு...ஆனா உண்மையில் தனிமையில் தான் நமக்கான பாதை எது என்பது புலப்படும்....நம்மை உணர முடியும்.....தேடுங்கள் நிச்சயம் கண்டடைவீர்கள் உங்களை.......!!
சீக்கிரமா தேடி எடுங்க பாஸ்...
தமிழ் மகன் said...
தனிமை ரொம்ப பிடிக்குமோ?
//
யாருக்கு தான் பிடிக்காது??
அனைவருக்கும் ஏதாவது ஒரு தருணத்தில் தனிமையின் துணை தேவை தான்...
Kousalya said...
சிலர் சொல்வாங்க தனிமை கொடுமைனு...ஆனா உண்மையில் தனிமையில் தான் நமக்கான பாதை எது என்பது புலப்படும்....நம்மை உணர முடியும்.....தேடுங்கள் நிச்சயம் கண்டடைவீர்கள் உங்களை.......!!
//
புரிதலுக்கு நன்றி சகோதரி...
அழகி said...
சீக்கிரமா தேடி எடுங்க பாஸ்...
//
எங்கே போகப்போவுது நம்மள விட்டு.... பாத்துக்கலாம்...
/////இந்த இருள் பூத்த தனிமையெனும் நந்தவனத்தில்
என்னை சுற்றியும், எனக்கு துணையாகவும் நான் மட்டுமே.... ////
அருமையாக இருக்கிறது சகோதரம்...
ஜெயந்த் அருமையாக இருக்கிறது .சூப்பர் ஜெயந்த் ....
எனக்கு பல நல்ல விஷயங்கள் தனிமையாக இருக்கும் போது தான் தோன்றும்
/*தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில்../*
kandippaga kidaikkum.............
மிகவும் அருமை உள்ளது. நண்பரே..! இந்த கவிதையும் ஒரு இனிமையான மற்றும் தனிமையான தருணங்களில் உதிர்க்கப்பட்டிருக்கிறது என்பதை அறியும்படி உள்ளது.
விழித்திரு! தனித்திரு! பசித்திரு!! வள்ளலார் சொன்னது..
விழிப்புடனும்,தனிமையில்,கொண்ட நோக்கத்திற்கான பசியுடனும் இருக்கச் சொன்னார்..
அப்படி இருந்தவர்கள் தான் சாதனைப் படைத்தார்கள்..
நீங்களும் சாதனைகளைப் படைப்பீர்கள் . வாழ்த்துக்கள் தம்பி!
தனிமையின் இனிமை பத்தி எழுதிட்டிங்க. தனிமையின் வெறுமையை பதியும் ஒரு கவிதை எழுதுங்க.
கவிதை அருமை.
தனிமை,
வெறுமை என்பதாக பார்க்காமல் அதிலுமுள்ள சில சுகங்களை கவிதையாக்கிய விதம் அற்புதம்.
//அகராதி இல்லாத ஆறுதல்..//
புதிய உருவகம் நன்றாக உள்ளது நண்பா..
தனிமையில் இருந்தால் எப்படிப்பா உங்களுக்கெல்லாம் கவிதை எழுத வருது?
எனக்கெல்லாம், தனிமையில் இருந்தால் திகில் படங்கள் தான் நினைவுக்கு வருது.
எப்படியோ ஒரு நல்ல கவிஞராயிட்டீங்க.. வாழ்த்துக்கள்!
நன்றாக இருக்கிறது.
அருமை நண்பா...
//தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில்..//
கண்டிப்பா நண்பா!
அருமை,,,
தலைப்பே ஏக்கத்துடன் கரம் பற்றி இழுத்தது.
உள்ளே வலிகள் கவித்துளிகளாய் சிதறுண்டு ,ஒரு ஓவியமாய்த் தெரிந்தது.
அருமை, வாழ்த்துக்கள்.
தனிமைதாங்க எல்லாரோட வாழ்க்கையிலும் கிடைக்கிற அற்புதமான நேரம் ... என்சாய்!
தனிமை நிமிடங்களின் தேடல் மிக அழகு நண்பா!
உருவமில்லாத உறவு..
என் கவலைகளுக்கும் கவலையில்லை..
அற்புதமான வரிகள் நண்பரே...
அழகான கவிதை....
வாழ்க வளமுடன்.
வேலன்.
thanimaiதனைமை பற்றிய உங்கள் கவிதை மிக இனிமை
சீக்கிரமே கிடைக்க வாழ்த்துக்கள். ;-)
ஒற்றை சருகென காற்றில் பறக்கவைக்கும் கவிதை ..
தனிமைத் தேடலின் அழகான தருணத்தை அருமையாக வடித்திருக்கிறீர்கள்...மனதை வருடின வரிகள்.....பாராட்டுக்கள் தோழரே !!
தனிமை எப்போதும் சுகங்களையும், சோகங்களையும் ஒன்றாகவே சேர்த்துத்தரும் வரமல்லவா...
எதையாவது தேடி தொலை.....
(நான் சத்தியம உன் பதிவ படிக்கல....)
ம.தி.சுதா said...
அருமையாக இருக்கிறது சகோதரம்...
//
நன்றி சகோதர..
இம்சைஅரசன் பாபு.. said...
ஜெயந்த் அருமையாக இருக்கிறது .சூப்பர் ஜெயந்த் ....
எனக்கு பல நல்ல விஷயங்கள் தனிமையாக இருக்கும் போது தான் தோன்றும்
//
உண்மை தான் தோழரே... வருகைக்கு நன்றி..
Jeyamaran said...
kandippaga kidaikkum.............
// Thanks frd
மோகன்ஜி said...
விழித்திரு! தனித்திரு! பசித்திரு!! வள்ளலார் சொன்னது..
விழிப்புடனும்,தனிமையில்,கொண்ட நோக்கத்திற்கான பசியுடனும் இருக்கச் சொன்னார்..
அப்படி இருந்தவர்கள் தான் சாதனைப் படைத்தார்கள்..
நீங்களும் சாதனைகளைப் படைப்பீர்கள் . வாழ்த்துக்கள் தம்பி!
//
மிக்க நன்றி அண்ணா.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...
Katz said...
தனிமையின் இனிமை பத்தி எழுதிட்டிங்க. தனிமையின் வெறுமையை பதியும் ஒரு கவிதை எழுதுங்க.
//
முயற்சிக்கிறேன் தோழரே...
வருகைக்கு நன்றி..
தமிழ் உதயம் said...
தனிமை,
வெறுமை என்பதாக பார்க்காமல் அதிலுமுள்ள சில சுகங்களை கவிதையாக்கிய விதம் அற்புதம்.
//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...
//இந்த இருள் பூத்த தனிமையெனும் நந்தவனத்தில்
என்னை சுற்றியும், எனக்கு துணையாகவும் நான் மட்டுமே.... //
ரொம்ப நல்லாருக்கு.. வலியையும் அழகா சொல்லி இருக்கீங்க..
தேடல் எப்போதும் இருக்கும் வாழ்க்கையில.. இதில நம்மள நாமே தேடும் நாட்கள் தான் அதிகம்.
நண்பரே! உங்களுக்கெல்லாம் எப்படி இப்படி கவிதை எழுத முடிகிறது. ம்... என்னால 'காப்பி' தாம்பா பண்ணமுடியுது.
'அருமை' என்ற ஒற்றைச்சொல்லைத்தவிர வேறெதுவும் சொல்லத்தோன்றாதபடிக்கு, அருமையாய் இருக்கிறது கவிதை..
மிக அருமை
"இந்த இருள் பூத்த தனிமையெனும் நந்தவனத்தில்
என்னை சுற்றியும், எனக்கு துணையாகவும் நான் மட்டுமே....
தேட நினைப்பதும் நான் தொலைத்த
என்னை மட்டுமே..
தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில்"...
மனதைத்தொட்ட வரிகள்...
ஒவ்வொரு வரியும் அருமை
என்றும் நட்புடன்
மாணவன்

நாகராஜசோழன் MA said...
புதிய உருவகம் நன்றாக உள்ளது நண்பா..
///
நன்றி சகோதரா..
Sriakila said...
தனிமையில் இருந்தால் எப்படிப்பா உங்களுக்கெல்லாம் கவிதை எழுத வருது?
எனக்கெல்லாம், தனிமையில் இருந்தால் திகில் படங்கள் தான் நினைவுக்கு வருது.
எப்படியோ ஒரு நல்ல கவிஞராயிட்டீங்க.. வாழ்த்துக்கள்!
///
கவிஞரா நானா? ஆனாலும் வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சகோதரி..
எப்பூடி.. said...
அஹமது இர்ஷாத் said...
அன்பரசன் said...
புதிய மனிதா. said...
malgudi said...
ப்ரியமுடன் வசந்த் said...
Balaji saravana said...
வேலன். said...
சி.பி.செந்தில்குமார் said...
RVS said...
கே.ஆர்.பி.செந்தில் said...
சுடர்விழி said...
கவிதை காதலன் said...
TERROR-PANDIYAN(VAS) said...
சுசி said...
எம்.ஞானசேகரன் said...
அமைதிச்சாரல் said...
r.v.saravanan said...
மாணவன் said...
///
நன்றி நன்றி... நண்பர்கள்.. சகோதரர்கள், சகோதரிகள் அனைவரின் கருத்துக்கும், வருகைக்கு நன்றி..
//தனிமைப் பொழுதுகளில் மட்டுமே
நான் நானாக இருக்கிறேன்..
அங்கே நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை..
என் கவலைகளுக்கும் கவலையில்லை..
பாசத்திற்கும் இடமில்லை..
பழகுவதற்கும் எவருமில்லை...//
தனிமை நம்மையும் ஆட்கொண்டுவிட்டது நண்பா ......
தனியே வீற்றிருந்த
ஒற்றை பனையின்
உச்சியிலே ஒரு
நூறு குருவிகளின்
கூடு............
உங்களுக்குள்ள...இவ்ளோ அழகான கவிஞனா??
ரொம்ப நல்லா இருக்குங்க.. உங்கள தேடலில் உங்களை காண வாழ்த்துக்கள்..
தொடர்ந்து இது போல் எழுதுங்க.. :-))
உங்களுக்குள்ள...இவ்ளோ அழகான கவிஞனா??
ரொம்ப நல்லா இருக்குங்க.. உங்கள தேடலில் உங்களை காண வாழ்த்துக்கள்..
தொடர்ந்து இது போல் எழுதுங்க.. :-))
அருமை அருமை
அகராதி இல்லாத ஆறுதல்...நல்ல சொல்லாட்சி..தொடர்து வாசிப்பேன். வாழ்த்துக்கள். உறரணி.
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..
Post a Comment