ரஜினியின் ரசிகனாக..

ரஜினியை எப்படி பிடிக்கும், எப்போதிலிருந்து பிடிக்கும் எனக்கேட்டால் அதற்கு என்னிடம் பதிலிருக்காது.. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ரஜினியை பிடிக்கும்.. நான் பார்த்த முதல் ரஜினி படம் "நினைத்தாலே இனிக்கும்".. என்னை பொறுத்த வரை நான் பார்த்த முதல் படமும் இதுவாகத் தான் இருக்க வேண்டும்.. இந்த படத்தில் ரஜினியும் கமலும் நடித்திருந்தாலும் என்னை கவர்ந்தது ரஜினியின் ஸ்டைலும், குறும்புகளும் தான்.. குறிப்பாக சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிக்கும் காட்சிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தவை.
ரஜினி படங்களிலேயே என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படம் என்றால் அது பாட்ஷா படமாகத் தான் இருக்கும். காரணம் வேறொன்றுமில்லை ஆறாவது படிக்கும் போது முதல் முதலாக ஸ்கூலுக்கு மட்டம் போட்டு பார்த்த படம், அதற்காக வீட்டில் வீட்டில் வாங்கிய பிரம்படிகளின் அடையாளம் இன்னும் மறைய வில்லை.
1990 களில் எங்கள் ஊரில் ரஜினிக்கு அடுத்த படியாக விஜயகாந்த்துக்கு தான் ரசிகர்கள் அதிகம். (இப்போதைய நிலவரம் எனக்கு தெரியவில்லை). அதிலும் கோவில் திருவிழாக்களில் நாடகங்களல்லாமல் திரைப்படங்கள் போடுவதென்று முடிவு செய்தால் ரஜினி படமா இல்லை விஜயகாந்த் படமா என்று பெரிய பஞ்சாயத்தே நடக்கும். இந்த ரசிகர்கள் ஒரு புறமிருக்க பள்ளிகளில் நாங்கள் தனியாக ரசிகர் மன்றங்கள் வைத்திருப்போம். ரஜினி ரசிகர்களாகிய எங்களுக்கும் விஜயகாந்த் ரசிகர்களாகிய எங்கள் எதிரிகளுக்கும் அடிக்கடி மோதல்கள் வெடிப்பதுண்டு.. சில சமயங்களில் அது கைகலப்பாகவும் மாறிவிடும். இவையெல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை தான். இப்பொழுது அந்த நண்பர்களை பார்த்தால் (பழைய எதிரிகள்) பழைய பள்ளி நினைவுகளைச் சொல்லி சிரிப்பதுண்டு.
ரஜினி நடித்த படங்களில் 95 % படங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த சில படங்கள் இங்கே.


முள்ளும் மலரும் :-
எப்போதாவது எனக்கு நல்ல படம் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் என் கண்கள் தேடி அலைவது முள்ளும் மலரும் படத்தை தான்.. தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படங்களை தேர்வு செய்தால் அதில் முதல் பத்து இடங்களுக்குள் (ஏன் முதலிடமாகவே) இந்த படம் இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை..

ஆறிலிருந்து 60 வரை :-
பல காட்சிகளில் கண்களில் கண்ணீரை எட்டி பார்க்க வைத்த படம். உறவுகளால் ஏமாற்றப்பட்ட ஒரு ஏழை அண்ணனின் கதையை அருமையாக படமாக்கியிருப்பார் எஸ்.பி. முத்துராமன் ... ரஜினியின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஓன்று.
எங்கேயோ கேட்ட குரல் :- இந்த படத்தில் நடித்தது வில்லனாகவும், வெடிக்கும் வசனங்களுடனும், வேகமான கை கால் அசைவுகளையே புது ஸ்டைலாக மாற்றும் ரஜினி தானா என்று பலரையும் கேட்க வைத்த படம். இந்த படத்தில் தலைவர் நடித்தார் என்பதை விடவும் வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்புடன் கூடிய ரஜினியின் மற்றொரு அற்ப்புத படைப்பு.
நினைத்தாலே இனிக்கும் :- நான் பார்த்த முதல் ரஜினி படம்.. என்னை ரஜினியின் ரசிகனாக மாற்றியதும் இந்த படம்.. படத்தில் தலைவரின் குறும்புகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.. இந்த படத்தில் ரஜினி வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் காமெடிக்கு பஞ்சமிருக்காது. சிகரெட் பிடிக்கும் பந்தைய காட்சியை பற்றி நான் சொல்லி தான் தெரிய வேண்டுமென்றில்லை.(சுஜாதா சாரின் கதை)
தில்லு முல்லு :- ஆக்சன் செண்டிமெண்ட், தமிழ் சினிமாவின் மசாலாக் கலவைகள் என எதுவுமில்லாமல் எடுக்கப்பட்ட முழு நீள நகைச்சுவை திரைப்படம்.. மீசையுடனும், மீசை இல்லாமலும் தேங்காய் சீனிவாசனுடன் தலைவர் செய்யும் லூட்டிகள் ஒவ்வொன்றும் செம கலக்கல். இந்த படத்தை பார்த்து சிரிக்காதவர்கள் நரசிம்மராவுக்கு சொந்தக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும்.
தம்பிக்கு எந்த ஊரு :- கிராமத்தை பற்றி எதுவும் தெரியாமல் நகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞனின் கதை. பாம்பை கண்டு பயப்படும் காட்சி, வயலில் கதிரறுக்கும் காட்சி, பால் கறக்கும் காட்சி, துணி துவைக்கும் காட்சி, ஆற்றில் மாடு கழுவும் காட்சி என ஒவ்வொன்றும் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைப்பவை. தம்பிக்கு எந்த ஊரு படத்தின் மற்றொரு சிறப்பு "காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே" பாடல்..

தளபதி :-
ரஜினியும் மம்மூட்டியும் இணைந்து மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடித்த படம்.. நட்புக்கு இலக்கணம் சொல்லும் ஒரு படைப்பு. இந்த படத்தை நான் எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. தளபதி படத்தை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
வீரா :- இரண்டு பொண்டாட்டிக்காரனின் கதை. அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு அறிமுகப் பாடல் இல்லாமல் வந்த படம். பாடகர், பிளேபாய், மற்றும் இரு பெண்களின் கணவன் என்ற எல்லா கதாப்பாத்திரங்களையும் நகைச்சுவையால் நிறைவு செய்திருப்பார்.. படத்தில் ரஜினி செய்யும் காமெடி போதாதென்று இவருடன் ஒரு காமெடி பட்டாளம் வேறு.. கேட்க்கவா வேண்டும் காமெடிக்கு..
குரு சிஷ்யன் :- ரஜினியுடன் பிரபுவும் இணைந்து கலக்கிய படம்.. பிரபுவும் ரஜினியும் சேர்ந்து வீட்டில் ரைடுக்கு செல்லும் காட்சி, மனோரமா வினு சக்கிரவர்த்தியை மிரட்டும் காட்சி, கௌதமியுடனான காதல் காட்சிகள் மற்றும் ராதாரவியிடம் ரவுடியாக வேலைக்கு சேரும் காட்சி என காமெடிக்கு பஞ்சமில்லாத ஒரு படம்.
ஊர்க்காவலன் :- சத்யா மூவீசின், மனோ பாலா இயக்கிய படம். ராதிகாவின் காமெடி, சங்கர் கணேஷின் பாடல்கள், ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதை என அனைத்தும் அருமையான கலவையாக வந்த படம். ( ரஜினி ஹேர் ஸ்டைல் மாத்தினது இந்த படம்தானாம்)
பாட்ஷா :- தலைவரின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் முதலிடம் வகிக்கும் படம் இது. ஆக்சன், காமெடி, பஞ்ச் டயலாக், செண்டிமெண்ட் என எல்லாம் கலந்த ஒரு பக்கா கமெர்சியல் படம்.. என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படமும் கூட..
என்ன தான் தலைவரின் படங்கள் ஆக்சன், அதிரடி வசனங்கள் என நிறைந்திருந்தாலும் தலைவரிடம் என்னை கவர்ந்தது நகைச்சுவை தான்.. தமிழ் நடிகர்களிலேயே தனி ஆளாக காமெடியில் கலக்க முடியுமென்றால் அது ரஜினி மட்டும் தான்..
( கமல் ரசிகர்கள் யாரும் கோவிச்சிகாதிங்கப்பா )

137 comments:

செல்வா said...

வடை எனக்கே ,,!!

செல்வா said...

நான் கமல் ரசிகன் என்றாலும் கூட எனக்கு நினைத்தாலே இனிக்கும் படத்துல பிடிச்சது ரஜினி தான் ..

எல் கே said...

நல்ல தேர்வுகள். நினைத்தாலே இனிக்கும் சுஜாதா கதை இல்லை என்று நினைக்கிறேன். அது ப்ரியா படம்

THOPPITHOPPI said...

தொகுத்து வழங்கிய விதம் அருமை

பெசொவி said...

Nice selection!

செல்வா said...

முள்ளும் மலரும் , ஆறிலிருந்து 60 வரை , எங்கேயோ கெட்ட குரல் ,

தில்லு முல்லு , தம்பிக்கு எந்த ஊரு , தளபதி , ஊர்க்காவலன் இந்தப் படங்கள் எல்லாம் நான் பார்த்ததே இல்லை .. அதனால நோ கமெண்ட்ஸ் ..

செல்வா said...

//தனி ஆளாக காமெடியில் கலக்க முடியுமென்றால் அது ரஜினி மட்டும் தான்..
( கமல் ரசிகர்கள் யாரும் கோவிச்சிகாதிங்கப்பா )//

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ., யாரவது கமல் ரசிகர்கள் இருந்தா வாங்க ., ஓ , சாரி நானே கமல் ரசிகர்தானே .. கமல் தான் காமெடியில் கலக்குவார் ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

வடை எனக்கே ,,!!

//

உனக்கு தான்.. எடுத்துக்கோ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

நான் கமல் ரசிகன் என்றாலும் கூட எனக்கு நினைத்தாலே இனிக்கும் படத்துல பிடிச்சது ரஜினி தான் ..

//

அப்படி வா வழிக்கு.. என்ன இருந்தாலும் ரஜினி ரஜினி தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் பதிவும் உன்னோடதும் ஒன்னு போல இருக்கே. திருடிட்டியா. பாவி. ஓகே நல்ல collection

//ஸ்கூலுக்கு மட்டம் போட்டு பார்த்த படம்//

அது வேற படமாச்சே

ஹரிஸ் Harish said...

கமல் தான் காமெடியில் கலக்குவார் ..//

தல நீங்க சரியா கமல் படம் பாக்கலைனு நினைக்குறேன்..

Arun Prasath said...

//இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ., யாரவது கமல் ரசிகர்கள் இருந்தா வாங்க ., ஓ , சாரி நானே கமல் ரசிகர்தானே .. கமல் தான் காமெடியில் கலக்குவார் .//

நான் இதை வழி மொழிகிறேன்.... ஓ , சாரி நானே ரஜினி ரசிகர்தானே.... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

ஹரிஸ் Harish said...

நன்றாக தொகுத்துள்ளீர்கள்..

Madhavan Srinivasagopalan said...

// ப.செல்வக்குமார் said...

வடை எனக்கே ,,!!//

'காக்காக்கு' டியூஷன் சொல்லித் தரப் போறீங்களாமே ?

சௌந்தர் said...

உனக்கு பிடித்த படங்கள் எல்லாம் சூப்பர்


( கமல் ரசிகர்கள் யாரும் கோவிச்சிகாதிங்கப்பா )////

யாரும் உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

LK said...

நல்ல தேர்வுகள். நினைத்தாலே இனிக்கும் சுஜாதா கதை இல்லை என்று நினைக்கிறேன். அது ப்ரியா படம்

//

நினைத்தாலே இனிக்கும் படத்தில் தான் இயக்குனர் பாலாசந்தரும் சுஜாதாவும் இணைந்தார்கள்...

சௌந்தர் said...

தமிழ் நடிகர்களிலேயே தனி ஆளாக காமெடியில் கலக்க முடியுமென்றால் அது ரஜினி மட்டும் தான்..///

அப்போ விஜய் படம் ஃபுல்லா காமெடி பண்றாரே அது என்ன...?

ஹி ஹி ஹி நான் சொன்னதே காமெடி

இம்சைஅரசன் பாபு.. said...

அடுத்தது யாரயும் அழைகல பதிவு எழுத

suneel krishnan said...

நல்ல தேர்வு :)
நீங்கள் சொன்ன எல்லா படங்களும் எனக்கும் பிடிக்கும் .
நான் அதிகபட்சம் பார்த்த படம் - தில்லு முள்ளு தான் ..
இதில் ஊர்க்காவலனின் நகைச்சுவை நன்றாக இருக்கும் இருந்தும் அதை விட ஜானி அட்டகாசமான படம்

Ramesh said...

அருமையான தொகுப்பு...

//"காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே"

"வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது"

இது ரெண்டும் என்னோட ஃபேவரிட் லிஸ்ட்ல முதல்ல இருக்கற பாட்டுங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

THOPPITHOPPI said...

தொகுத்து வழங்கிய விதம் அருமை

//

நன்றி சகோதரா..

Anonymous said...

நல்ல தேர்வுகள்.

எனக்கு மிகவும் பிடித்த ரஜினி படம் - ஆறிலிருந்து அறுபது வரை.
இதில் சிறப்பு என்னவெனில் ரஜினி எந்த ஸ்டைலும் பண்ணாமல் சாதாரண மனிதனாக இதில் நடித்திருப்பார். அதுவும் அவருக்கு பொருத்தமாகத்தான் இருக்கும்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் பதிவும் உன்னோடதும் ஒன்னு போல இருக்கே. திருடிட்டியா. பாவி. ஓகே நல்ல collection

//ஸ்கூலுக்கு மட்டம் போட்டு பார்த்த படம்//

அது வேற படமாச்சே

//

இங்கே தான் இருக்கீங்களா... நீங்க இல்லன்னு தைரியத்தில தானே இன்னைக்கு போஸ்ட் போட்டதே... ஓகே ஓகே

மாணவன் said...

அருமை நண்பா,

சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

நட்புடன்
மாணவன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Nice selection!

//

thanks boss

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

முள்ளும் மலரும் , ஆறிலிருந்து 60 வரை , எங்கேயோ கெட்ட குரல் ,

தில்லு முல்லு , தம்பிக்கு எந்த ஊரு , தளபதி , ஊர்க்காவலன் இந்தப் படங்கள் எல்லாம் நான் பார்த்ததே இல்லை .. அதனால நோ கமெண்ட்ஸ் ..

//

இந்த படமெல்லாம் பாக்காம உன்ன இன்னுமா தமிழ் நாட்டில வச்சிருக்காங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...
இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ., யாரவது கமல் ரசிகர்கள் இருந்தா வாங்க ., ஓ , சாரி நானே கமல் ரசிகர்தானே .. கமல் தான் காமெடியில் கலக்குவார் ..

//

சின்ன புள்ளைங்க வாதம் சபையில் எடுபடாதுப்பா... யாராவது பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா,... போ போடா செல்லம்..

r.v.saravanan said...

good collection

தொகுத்து வழங்கிய விதம் அருமை

நன்றி

r.v.saravanan said...

good collection

தொகுத்து வழங்கிய விதம் அருமை

நன்றி

Kousalya Raj said...

நல்ல ரசனையான தேர்வுகள். நீங்க சொன்ன மாதிரி காமெடியில் ரஜினி எப்பவும் அசத்துவார்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹரிஸ் said...

கமல் தான் காமெடியில் கலக்குவார் ..//

தல நீங்க சரியா கமல் படம் பாக்கலைனு நினைக்குறேன்..

//

அப்படி போடு ராசா.. ஆனா ரஜினிக்கப்புறம் எனக்கு புடிச்சது கமல தான்...

Arun Prasath said...

போற போக்க பாத்தா கமல், ரஜினி ரசிகர் சண்டை ஆய்டும் போல

ஜெயந்த் கிருஷ்ணா said...

Madhavan said...

// ப.செல்வக்குமார் said...

வடை எனக்கே ,,!!//

'காக்காக்கு' டியூஷன் சொல்லித் தரப் போறீங்களாமே ?

///

டியுசனா அவன் டுடோரியல் காலேஜ் வச்சிருக்கான் தலைவா...

செல்வா said...

//சின்ன புள்ளைங்க வாதம் சபையில் எடுபடாதுப்பா... யாராவது பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா,... போ போடா செல்லம்../

இதோ போய் எல்லோரையும் கூட்டிட்டு வரேன் .. ஆனா நான் பார்த்த வரைக்கும் எல்லோருமே ரஜினி ரசிகராவே இருக்காங்க .. கமல் ரசிகர்கள் ப்ளாக் எழுதறதே இல்லை போல .. அதான் பீலிங் ..

Arun Prasath said...

//சின்ன புள்ளைங்க வாதம் சபையில் எடுபடாதுப்பா... யாராவது பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா,... போ போடா செல்லம்../

இதோ போய் எல்லோரையும் கூட்டிட்டு வரேன் .. ஆனா நான் பார்த்த வரைக்கும் எல்லோருமே ரஜினி ரசிகராவே இருக்காங்க .. கமல் ரசிகர்கள் ப்ளாக் எழுதறதே இல்லை போல .. அதான் பீலிங் ..//

தலைவர் திரு.ப.செல்வக்குமார் அவர்களை ஆதரிக்க, நான் கமல் ரசிகனாக மாறுகிறேன். ஆனா என்ன பண்ண நானும் சின்ன கொழந்த தான.....

karthikkumar said...

எம் இனம்மையா நீர்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

உனக்கு பிடித்த படங்கள் எல்லாம் சூப்பர்


( கமல் ரசிகர்கள் யாரும் கோவிச்சிகாதிங்கப்பா )////

யாரும் உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க

//

தேங்க்ஸ் நண்பா.. துணைக்கு நீ இருந்தாலே ஒரு தைரியம் தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

போற போக்க பாத்தா கமல், ரஜினி ரசிகர் சண்டை ஆய்டும் போல

//

வா தல... நீயே ஏதாவது சொல்லி சண்டைய மூட்டி விட்டிருவ போலிருக்கே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

இதோ போய் எல்லோரையும் கூட்டிட்டு வரேன் .. ஆனா நான் பார்த்த வரைக்கும் எல்லோருமே ரஜினி ரசிகராவே இருக்காங்க .. கமல் ரசிகர்கள் ப்ளாக் எழுதறதே இல்லை போல .. அதான் பீலிங் ..

//

ஹா.. ஹா.. உங்க VAS சங்கத்தில கூடவா ஆள் இல்ல...

செல்வா said...

//தலைவர் திரு.ப.செல்வக்குமார் அவர்களை ஆதரிக்க, நான் கமல் ரசிகனாக மாறுகிறேன். ஆனா என்ன பண்ண நானும் சின்ன கொழந்த தான.....
//

அதனால என்னங்க ., இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு . அடிவாங்க ஒரு ஆள் கிடைச்சா நான் நல்லா சவுண்டு குடுப்பேன் .. பயப்படாம என்கூட இருங்க ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...
நான் இதை வழி மொழிகிறேன்.... ஓ , சாரி நானே ரஜினி ரசிகர்தானே.... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

//

என்ன மக்கா மாத்தி மாத்தி பேசுற.. முதல்ல ஸ்டெடியாகு..

sathishsangkavi.blogspot.com said...

அற்புதமான தேர்வு...

அனைத்து படங்களும் காலத்தால் அழியாதவை....

karthikkumar said...

ப.செல்வக்குமார் said...
//தலைவர் திரு.ப.செல்வக்குமார் அவர்களை ஆதரிக்க, நான் கமல் ரசிகனாக மாறுகிறேன். ஆனா என்ன பண்ண நானும் சின்ன கொழந்த தான.....
//

அதனால என்னங்க ., இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு . அடிவாங்க ஒரு ஆள் கிடைச்சா நான் நல்லா சவுண்டு குடுப்பேன் .. பயப்படாம என்கூட இருங்க////

நீங்கெல்லாம் இத்தன நாளா எங்க இருந்தீங்க? உங்களத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹரிஸ் said...

நன்றாக தொகுத்துள்ளீர்கள்..

//

நன்றி நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

தமிழ் நடிகர்களிலேயே தனி ஆளாக காமெடியில் கலக்க முடியுமென்றால் அது ரஜினி மட்டும் தான்..///

அப்போ விஜய் படம் ஃபுல்லா காமெடி பண்றாரே அது என்ன...?

ஹி ஹி ஹி நான் சொன்னதே காமெடி

//

நல்லா தானே போய் கிட்டிருக்கு.... பாவம் பயபுள்ள பொழச்சு போகட்டும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

அடுத்தது யாரயும் அழைகல பதிவு எழுத

//

வேணாமுன்னு தோணிச்சு.. அதனால தான்/..

Anonymous said...

நல்ல தொகுப்பு நண்பா!
உன் ரசனையும் அழகு! :)

Arun Prasath said...

வா தல... நீயே ஏதாவது சொல்லி சண்டைய மூட்டி விட்டிருவ போலிருக்கே...//

நாராயண!!நாராயண!!

Arun Prasath said...

ப.செல்வக்குமார் said...
//தலைவர் திரு.ப.செல்வக்குமார் அவர்களை ஆதரிக்க, நான் கமல் ரசிகனாக மாறுகிறேன். ஆனா என்ன பண்ண நானும் சின்ன கொழந்த தான.....
//

அதனால என்னங்க ., இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு . அடிவாங்க ஒரு ஆள் கிடைச்சா நான் நல்லா சவுண்டு குடுப்பேன் .. பயப்படாம என்கூட இருங்க////

நீங்கெல்லாம் இத்தன நாளா எங்க இருந்தீங்க? உங்களத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்///

ஐயோ karthikkumar சார், நான் புதுசு, ஏதோ உணர்ச்சி வேகத்ல எழுதீடேன்..... ஆனால் என் ஆதரவு தலைவர் செல்வக்குமார் அவர்களுக்கே.... அடி வாங்கினாலும் வெளில காட்டாம சிரிப்போர் சங்கம்.....

karthikkumar said...

50

karthikkumar said...

ஐயோ karthikkumar சார், நான் புதுசு, ஏதோ உணர்ச்சி வேகத்ல எழுதீடேன்..... ஆனால் என் ஆதரவு தலைவர் செல்வக்குமார் அவர்களுக்கே.... அடி வாங்கினாலும் வெளில காட்டாம சிரிப்போர் சங்கம்...///
அது இப்படிக்கு பச்ச தண்ணிய குடிச்சிட்டு பம்மாத்து பண்ணுவோர் சங்கம்

karthikkumar said...

Arun Prasath said...ஐயோ karthikkumar சார்,///

கால் மீ சுறா

அருண் பிரசாத் said...

நல்லாதான் தேர்ந்து எடுத்து இருக்கறீங்க...

தொடர்பதிவு எழுதியதுக்கு நன்றி...

யாரையும் தொடர அழைக்காதது ஏன்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

dr suneel krishnan said...

நல்ல தேர்வு :)
நீங்கள் சொன்ன எல்லா படங்களும் எனக்கும் பிடிக்கும் .
நான் அதிகபட்சம் பார்த்த படம் - தில்லு முள்ளு தான் ..
இதில் ஊர்க்காவலனின் நகைச்சுவை நன்றாக இருக்கும் இருந்தும் அதை விட ஜானி அட்டகாசமான படம்

//

உண்மை தான் இப்படி நல்ல படங்கள் என்று செல்ல. ஆரம்பித்தால் மொத்த படங்களையும் சொல்லிக் கொண்டே போகலாம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரியமுடன் ரமேஷ் said...

அருமையான தொகுப்பு...

//"காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே"

"வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது"

இது ரெண்டும் என்னோட ஃபேவரிட் லிஸ்ட்ல முதல்ல இருக்கற பாட்டுங்க..

//

பாடல்கள் என்று ஆரம்பித்தால் ஒன்றா ரெண்டா.. எவ்வளவு இருக்கு..

Arun Prasath said...

//Arun Prasath said...ஐயோ karthikkumar சார்,///

கால் மீ சுறா//

இந்த வெளாட்டு தான வேணாங்கறது

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

எம் இனம்மையா நீர்

//

வாருமையா வாரும்...

karthikkumar said...

Arun Prasath said...
//Arun Prasath said...ஐயோ karthikkumar சார்,///

கால் மீ சுறா//

இந்த வெளாட்டு தான வேணாங்கறது///

எப்படி கமென்ட் போட்டாலும் மடக்கீரான்களே. நீங்க என்னோட கொளுந்தியாவா உங்க கூட விளையாட? இப்படிக்கு மச்சினிச்சி கையில் மர்டர் ஆவோர் சங்கம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்திரா said...

நல்ல தேர்வுகள்.

எனக்கு மிகவும் பிடித்த ரஜினி படம் - ஆறிலிருந்து அறுபது வரை.
இதில் சிறப்பு என்னவெனில் ரஜினி எந்த ஸ்டைலும் பண்ணாமல் சாதாரண மனிதனாக இதில் நடித்திருப்பார். அதுவும் அவருக்கு பொருத்தமாகத்தான் இருக்கும்.

//

உண்மை தான் சகோதரி... தங்கள் கருத்திற்கு நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

Arun Prasath said...
//Arun Prasath said...ஐயோ karthikkumar சார்,///

கால் மீ சுறா//

இந்த வெளாட்டு தான வேணாங்கறது///

எப்படி கமென்ட் போட்டாலும் மடக்கீரான்களே. நீங்க என்னோட கொளுந்தியாவா உங்க கூட விளையாட? இப்படிக்கு மச்சினிச்சி கையில் மர்டர் ஆவோர் சங்கம்

//

அடப்பாவிகளா இப்படியெல்லாம் கூடவா சங்கம் இருக்கு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

அருமை நண்பா,

சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

நட்புடன்
மாணவன்

//

மிக்க நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

r.v.saravanan said...

good collection

தொகுத்து வழங்கிய விதம் அருமை

நன்றி

//

தங்கள் வருகைக்கு நன்றி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Kousalya said...

நல்ல ரசனையான தேர்வுகள். நீங்க சொன்ன மாதிரி காமெடியில் ரஜினி எப்பவும் அசத்துவார்

//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

அதனால என்னங்க ., இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு . அடிவாங்க ஒரு ஆள் கிடைச்சா நான் நல்லா சவுண்டு குடுப்பேன் .. பயப்படாம என்கூட இருங்க ..

//

அடி வாங்குறதுக்கு எவ்வளவு ஆர்வமா இருக்கான் பாருங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சங்கவி said...

அற்புதமான தேர்வு...

அனைத்து படங்களும் காலத்தால் அழியாதவை....

//

நன்றி அண்ணா...

Arun Prasath said...

\\இந்த வெளாட்டு தான வேணாங்கறது///

எப்படி கமென்ட் போட்டாலும் மடக்கீரான்களே. நீங்க என்னோட கொளுந்தியாவா உங்க கூட விளையாட? இப்படிக்கு மச்சினிச்சி கையில் மர்டர் ஆவோர் சங்கம்////

கொழுந்தியா வா? அனுபவம் பேசற மாறி இருக்கு???

Arun Prasath said...

//அடப்பாவிகளா இப்படியெல்லாம் கூடவா சங்கம் இருக்கு...//
இல்லனா ஆரம்பிக்கணும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

நல்லாதான் தேர்ந்து எடுத்து இருக்கறீங்க...

தொடர்பதிவு எழுதியதுக்கு நன்றி...

யாரையும் தொடர அழைக்காதது ஏன்?

//

ஏறைக்குறைய எல்லோரையும் இந்த தொடர் எழுதுவதற்கு அழைத்து விட்டார்கள் ... யாரை அழைப்பதென்று தெரியாததால் தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

//அடப்பாவிகளா இப்படியெல்லாம் கூடவா சங்கம் இருக்கு...//
இல்லனா ஆரம்பிக்கணும்

//

ஓகே மக்கா நீ நடத்து...

karthikkumar said...

Arun Prasath said...

கொழுந்தியா வா? அனுபவம் பேசற மாறி இருக்கு???///

அனுபவம் பேசுமா எப்படி பேசும்? என்ன மொழில பேசும்?. சைலண்டா சயனைடு சாப்ட்டாலும் மொக்க போடுவோர் சங்கம்

Arun Prasath said...

//அனுபவம் பேசுமா எப்படி பேசும்? என்ன மொழில பேசும்?. சைலண்டா சயனைடு சாப்ட்டாலும் மொக்க போடுவோர் சங்கம்//
திரு karthikkumar அலைஸ் சுறா எந்த மொழில கொழுந்தியா பத்தி பேசுவாரோ, அதே மொழி தான் அனுபவமும் பேசும்..... நான் இப்போ எந்த சங்கத்தயும் இல்ல பா

Arun Prasath said...

//ஏறைக்குறைய எல்லோரையும் இந்த தொடர் எழுதுவதற்கு அழைத்து விட்டார்கள் ... யாரை அழைப்பதென்று தெரியாததால் தான்..//
அன்பு தம்பி எதுக்கு இருக்கான் ( ஹி ஹி நான் தான்)

karthikkumar said...

Arun Prasath said...
//ஏறைக்குறைய எல்லோரையும் இந்த தொடர் எழுதுவதற்கு அழைத்து விட்டார்கள் ... யாரை அழைப்பதென்று தெரியாததால் தான்..//
அன்பு தம்பி எதுக்கு இருக்கான் ( ஹி ஹி நான் தான்)///

மொதல்ல அன்பு யாரு? அவரோட தம்பி யாரு?

Prasanna said...

//சிகரெட் பிடிக்கும் பந்தைய காட்சியை பற்றி நான் சொல்லி தான் தெரிய வேண்டுமென்றில்லை.(சுஜாதா சாரின் கதை)//

ஓஹோ.. இது புது தகவல்.. சூப்பர்..

முள்ளும் மலரும் பற்றி அப்படியே என் கருத்தை எழுதிட்டீங்க :)

//படத்தை பார்த்து சிரிக்காதவர்கள் நரசிம்மராவுக்கு சொந்தக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும்//

சொந்தம் இல்ல அவங்க தான் நரசிம்ம ராவே :)

Arun Prasath said...

//மொதல்ல அன்பு யாரு? அவரோட தம்பி யாரு?//
தம்பி நானு.. அன்பு என்னோட அண்ணன்

karthikkumar said...

Arun Prasath said...
//மொதல்ல அன்பு யாரு? அவரோட தம்பி யாரு?//
தம்பி நானு.. அன்பு என்னோட அண்ணன்//

பயபுள்ள தெளிவா கமென்ட் போடுறாரு இனி நமக்கு மொக்க போட ஒரு பாயிண்டும் இல்லையே. பேசாம எதாவது கட்சி கிச்சில சேந்துற வேண்டியதுதான்.

Arun Prasath said...

//பயபுள்ள தெளிவா கமென்ட் போடுறாரு இனி நமக்கு மொக்க போட ஒரு பாயிண்டும் இல்லையே. பேசாம எதாவது கட்சி கிச்சில சேந்துற வேண்டியதுதான்.//

கட்சி ஓகே, கிச்சினா?

செல்வா said...

//பயபுள்ள தெளிவா கமென்ட் போடுறாரு இனி நமக்கு மொக்க போட ஒரு பாயிண்டும் இல்லையே. பேசாம எதாவது கட்சி கிச்சில சேந்துற வேண்டியதுதான்.//

அட மொக்க போடுறதுக்கு எதுக்குங்க பாயிண்ட் எல்லாம் .? எந்தப் பாய்ந்ட்டுமே இல்லாம போடுறதுதானே மொக்கை ..

karthikkumar said...

Arun Prasath said...
//பயபுள்ள தெளிவா கமென்ட் போடுறாரு இனி நமக்கு மொக்க போட ஒரு பாயிண்டும் இல்லையே. பேசாம எதாவது கட்சி கிச்சில சேந்துற வேண்டியதுதான்.//

கட்சி ஓகே, கிச்சினா?///

நக்கீரர் பரம்பரை போல. ஒரு ப்ளோல வந்தா விட்ரனும். சரி சரி கட ஓனர் எங்க காணோம் நம்ம மொக்கைய பாத்துட்டு ஓடிட்டாரா.

karthikkumar said...

ப.செல்வக்குமார் said...

அட மொக்க போடுறதுக்கு எதுக்குங்க பாயிண்ட் எல்லாம் .? எந்தப் பாய்ந்ட்டுமே இல்லாம போடுறதுதானே மொக்கை .///

என்ன ஒரு புத்திசாலிதனம்.

karthikkumar said...

செல்வா அண்ணே இதைத்தான் வள்ளுவர் அன்றே சொன்னார்
கக்கக்க காகவென கொக்கோ
கொகொவென

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

நக்கீரர் பரம்பரை போல. ஒரு ப்ளோல வந்தா விட்ரனும். சரி சரி கட ஓனர் எங்க காணோம் நம்ம மொக்கைய பாத்துட்டு ஓடிட்டாரா.

//

என்ன ஓடுறதா... ஹி ஹேய் நாங்கெல்லாம் அடி வாங்கினாலும் அசராம அவசர படாம வாங்குவோமில்ல..

Arun Prasath said...

அட மொக்க போடுறதுக்கு எதுக்குங்க பாயிண்ட் எல்லாம் .? எந்தப் பாய்ந்ட்டுமே இல்லாம போடுறதுதானே மொக்கை .//

"இந்த தத்துவத்தை சொன்ன தலைவர் வாழ்க" இது கூட மொக்கை தான்

karthikkumar said...

வெறும்பய said...

என்ன ஓடுறதா... ஹி ஹேய் நாங்கெல்லாம் அடி வாங்கினாலும் அசராம அவசர படாம வாங்குவோமில்ல..// அசரம அவசர படாம இலக்கணம் நல்ல வருது உங்களுக்கு

Arun Prasath said...

அப்டியே நம்ம கடைக்கும் வந்து வோட் போட்டுட்டு போங்க

செல்வா said...

//செல்வா அண்ணே இதைத்தான் வள்ளுவர் அன்றே சொன்னார்
கக்கக்க காகவென கொக்கோ
கொகொவென///

அவ்ளோதான் , வள்ளுவர் சொன்னார் , TR சொன்னார் அப்படின்னு வாய்க்கு வந்தத சொன்னா மொக்கை ..

Unknown said...

//எங்கேயோ கேட்ட குரல் :- இந்த படத்தில் நடித்தது வில்லனாகவும், வெடிக்கும் வசனங்களுடனும், வேகமான கை கால் அசைவுகளையே புது ஸ்டைலாக மாற்றும் ரஜினி தானா என்று பலரையும் கேட்க வைத்த படம்//
True!
nice selections!! :)

செல்வா said...

// Arun Prasath said...
அப்டியே நம்ம கடைக்கும் வந்து வோட் போட்டுட்டு போங்க//



கண்டிப்பா உங்க வீட்டுக்கு வராமயா ..? இன்னும் பாத்து நிமிசத்துல வரேன் ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

அசரம அவசர படாம இலக்கணம் நல்ல வருது உங்களுக்கு

//

இதில இது வேறையா...ம்ம் நடத்துங்க...

karthikkumar said...

Arun Prasath said...
அப்டியே நம்ம கடைக்கும் வந்து வோட் போட்டுட்டு போங்க///

இன்னைக்கு தேதி 15 மதுரைல மாநாடு நாளைக்கு 16 சேலத்துல செயல்வீரர்கள் கூட்டம் 17 ம் தேதி ஓகேவா பங்காளி?

Arun Prasath said...

இன்னைக்கு தேதி 15 மதுரைல மாநாடு நாளைக்கு 16 சேலத்துல செயல்வீரர்கள் கூட்டம் 17 ம் தேதி ஓகேவா பங்காளி?//

Deligate position.... ஓகே செட்டியார் மதர்

karthikkumar said...

இன்னும் 8

karthikkumar said...

Arun Prasath said...
இன்னைக்கு தேதி 15 மதுரைல மாநாடு நாளைக்கு 16 சேலத்துல செயல்வீரர்கள் கூட்டம் 17 ம் தேதி ஓகேவா பங்காளி?//

Deligate position.... ஓகே செட்டியார் மதர்///
என்கிட்ட மொக்க போட்டுட்டு இருக்கறப்போ செட்டியார் மதர்கிட்ட என்ன வெட்டிபேச்சு

Arun Prasath said...

Arun Prasath said...
இன்னைக்கு தேதி 15 மதுரைல மாநாடு நாளைக்கு 16 சேலத்துல செயல்வீரர்கள் கூட்டம் 17 ம் தேதி ஓகேவா பங்காளி?//

Deligate position.... ஓகே செட்டியார் மதர்///
என்கிட்ட மொக்க போட்டுட்டு இருக்கறப்போ செட்டியார் மதர்கிட்ட என்ன வெட்டிபேச்சு//

நீங்க இன்னும் வளரனும் பங்காளி... பால் சாப்பிடுங்க

செல்வா said...

//நீங்க இன்னும் வளரனும் பங்காளி... பால் சாப்பிடுங்க//

கவின்ஸ் மில்க் , கவ ல இருந்து கப்புக்கு சீக்கிரமா கிடைக்கும் பால் ..

செல்வா said...

96

karthikkumar said...

Arun Prasath said...
Arun Prasath said...
இன்னைக்கு தேதி 15 மதுரைல மாநாடு நாளைக்கு 16 சேலத்துல செயல்வீரர்கள் கூட்டம் 17 ம் தேதி ஓகேவா பங்காளி?//

Deligate position.... ஓகே செட்டியார் மதர்///
என்கிட்ட மொக்க போட்டுட்டு இருக்கறப்போ செட்டியார் மதர்கிட்ட என்ன வெட்டிபேச்சு//

நீங்க இன்னும் வளரனும் பங்காளி... பால் சாப்பிடுங்க///

இன்னும் வளரனுமா இப்பவே எங்க வீட்டு நெலவு தலையில அடிக்குது

செல்வா said...

97

செல்வா said...

99

செல்வா said...

100

karthikkumar said...

101

செல்வா said...

எஸ் .. அடுத்த வடையும் கிடைச்சது ..!!

karthikkumar said...

இவ்வளவு நேரம் பட்ட பாடெல்லாம் வீனா போச்சே

karthikkumar said...

ஒரு மணி நேரமா இந்த ப்ளாகிலேயே மொக்க போட்டு இருந்து வடைய வாங்கலாம்னு நெனச்சா so sad

Arun Prasath said...

//நீங்க இன்னும் வளரனும் பங்காளி... பால் சாப்பிடுங்க///

இன்னும் வளரனுமா இப்பவே எங்க வீட்டு நெலவு தலையில அடிக்குது//

நான் சொன்னது ஒசரத்த இல்லீங்கோ...

karthikkumar said...

Arun Prasath said...
//நீங்க இன்னும் வளரனும் பங்காளி... பால் சாப்பிடுங்க///

இன்னும் வளரனுமா இப்பவே எங்க வீட்டு நெலவு தலையில அடிக்குது//

நான் சொன்னது ஒசரத்த இல்லீங்கோ../// இப்போ நீங்க இன்னும் வளரனும் பங்காளி.

Arun Prasath said...

நடூல 98 காணோம் ?

Arun Prasath said...

சரி அப்போ நானும் பால் சாப்டறேன்

Arun Prasath said...

நடூல 98 போடாம 100 போட்டதால, செல்வாக்கு வடை இல்லை, 101 போட்ட கார்த்திக்குமார்க்கு தான் வடை.. இது தான் தீர்ப்பு

செல்வா said...

//நடூல 98 போடாம 100 போட்டதால, செல்வாக்கு வடை இல்லை, 101 போட்ட கார்த்திக்குமார்க்கு தான் வடை.. இது தான் தீர்ப்பு/

கிடையாதுங்க ., 98 இக்கு பதில்தான் வேற கமெண்ட் வந்திடுட்சே ..?

karthikkumar said...

Arun Prasath said...
நடூல 98 போடாம 100 போட்டதால, செல்வாக்கு வடை இல்லை, 101 போட்ட கார்த்திக்குமார்க்கு தான் வடை.. இது தான் தீர்ப்பு///

இதுக்குதான் வூருக்கு வூரு இந்த மாதிரி ஆளுக வேணும் எனி டைம் பஞ்சாயத்து வரும். இந்த தீர்ப்புக்காகவே அருண் பிரசாத் ஒரு ஜீனியஸ் அப்டிங்கற உண்மைய இந்த பதிவுலகத்துக்கு சொல்லிவிடுகிறேன்.

Arun Prasath said...

//கிடையாதுங்க ., 98 இக்கு பதில்தான் வேற கமெண்ட் வந்திடுட்சே ..?//
அதெலாம் இல்ல, நீங்களே பாருங்க

Arun Prasath said...

//இதுக்குதான் வூருக்கு வூரு இந்த மாதிரி ஆளுக வேணும் எனி டைம் பஞ்சாயத்து வரும். இந்த தீர்ப்புக்காகவே அருண் பிரசாத் ஒரு ஜீனியஸ் அப்டிங்கற உண்மைய இந்த பதிவுலகத்துக்கு சொல்லிவிடுகிறேன்.///

நன்றி நன்றி, அது நான் தானுங்கோ.... செல்வா கூட கூட்டணி முறித்து, நான் தலைவர் கார்த்திக் கூட சேருகிறேன்.....

karthikkumar said...

Arun Prasath said...
//இதுக்குதான் வூருக்கு வூரு இந்த மாதிரி ஆளுக வேணும் எனி டைம் பஞ்சாயத்து வரும். இந்த தீர்ப்புக்காகவே அருண் பிரசாத் ஒரு ஜீனியஸ் அப்டிங்கற உண்மைய இந்த பதிவுலகத்துக்கு சொல்லிவிடுகிறேன்.///

நன்றி நன்றி, அது நான் தானுங்கோ.... செல்வா கூட கூட்டணி முறித்து, நான் தலைவர் கார்த்திக் கூட சேருகிறேன்..../// விரைவில் சுய ஆட்சி கோருவோம் பங்கு. இப்போதைக்கு அப்பிட் இன்னொரு இனிய நாளில் மீண்டும் மொக்க போடுவோம் எல்லோருக்கும் பை பை

ADMIN said...

ரொம்ப நன்னா எழுதியிருக்கீங்க...

nis said...

நல்ல தொகுப்பு.
எனக்கு இவற்றில் மிகவும் பிடித்தது பாட்ஷா.
அப்படியே நான் நடித்த படங்களின் தொகுப்பையும் போட்டு விடுங்கள் ;)))

அழகி said...

சிறுவயதில் படம் பார்க்கும் ​போது படத்தில் ரஜினி அடிவாங்கினால் நான் அழுது​கொண்​டே இருப்​பேனாம்... என் அம்மா இப்​போதும் ​சொல்லிக்​காட்டுவார்கள்.

உங்களின் பதிவின் மூலம் என்னு​டைய ப​ழைய நி​னைவுக​ளை கிளறி விட்டீர்கள் நண்ப​ரே.....

தமிழ் உதயம் said...

நல்ல படங்கள். நல்ல பகிர்வு.

எப்பூடி.. said...

நானெல்லாம் tamil படங்கள் பாக்கிறதில்ல, only ஒலகபடம்தான், ஆமாம் யாரிந்த ரசனிகாந்த்? :-)

உங்கள் எந்த 10 படத்தை தெரிவு செய்திருந்தாலும் சூப்பர் என்றுதான் சொல்லியிருப்பேன், ஏன்னா உங்களுக்கு ரஜினி படம் 95% எனக்கு 100% பிடிக்கும், சூப்ப்பப்ப்ப்பப்பர்......

ஜெயசீலன் said...

பகிர்வுக்கு நன்றி :)

Unknown said...

//( கமல் ரசிகர்கள் யாரும் கோவிச்சிகாதிங்கப்பா ) //

கொவிச்சிக்கலப்பா....நல்ல தொகுப்பு.

சுசி said...

தளபதி :))

Arun said...

ரஜினி comedy யதார்த்தமா இருக்கும் ஆனா கமல் காமெடி புரிஞ்சா மட்டுமே சிரிக்க முடியும். Mostly dialogue oriented comedy ya இருக்கும். இரண்டுமே அருமை.

Arun said...

nalla thoguppu

அன்பரசன் said...

நல்ல தொகுப்பு ஜெயந்த்

கருடன் said...

பதிவு & கமெண்ட்ஸ் படிச்சிடேன் மச்சி. நீ வேணூம்னா கேள்வி கேட்டு பாரேன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தொகுத்து வழங்கிய விதம் அருமை

Shri ப்ரியை said...

ஓஹோ...
அருமை அருமை....

சி.பி.செந்தில்குமார் said...

goood post

Unknown said...

ரசனையான தொகுப்பு..

aavee said...

நல்ல தொகுப்பு!

// தமிழ் நடிகர்களிலேயே தனி ஆளாக காமெடியில் கலக்க முடியுமென்றால் அது ரஜினி மட்டும் தான்..
( கமல் ரசிகர்கள் யாரும் கோவிச்சிகாதிங்கப்பா)//


ரஜினியின் காமெடி ஸ்டைலுடன் இருக்கும்.. எங்க தலைவர் கமலின் காமெடி கருத்துள்ளதா இருக்கும்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல தொகுப்பு... நல்லாயயிருக்கு.

Unknown said...

நல்ல தேர்வு.தொகுத்து வழங்கிய விதம் அருமை.

vinthaimanithan said...

//கமல் ரசிகர்கள் யாரும் கோவிச்சிகாதிங்கப்பா//

அதெப்பிடி? நான் கோச்சுக்கிட்டேன்!

Unknown said...

//ரஜினி நடித்த படங்களில் 95 % படங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படங்கள் தான். அவற்றில் வெறும் 10 படங்கள் மட்டும் பிரித்தெடுப்பது என்பது சற்றே கடினமான காரியம் தான்//
உண்மை தான்..

Unknown said...

//கமல் ரசிகர்கள் யாரும் கோவிச்சிகாதிங்கப்பா//

கமல் பட தொடர் பதிவு போட்டுரவேண்டியது தானே....

Unknown said...

//எனக்கு மிகவும் பிடித்த ரஜினி படம் - ஆறிலிருந்து அறுபது வரை.
இதில் சிறப்பு என்னவெனில் ரஜினி எந்த ஸ்டைலும் பண்ணாமல் சாதாரண மனிதனாக இதில் நடித்திருப்பார். அதுவும் அவருக்கு பொருத்தமாகத்தான் இருக்கும்..//
nice comment.