“வெறும்பய”லாகிய நான்...

ன்பானவர்களுக்கு வணக்கம்,

னது உண்மையான பெயர் “ஜெயந்த்”, பதிவுலகில் “வெறும்பய” என்ற பெயரில் அறியப்படுகிறேன். நான் பிறந்து வளர்ந்தது கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் எனும் ஊர். குமரியை பற்றி சொல்ல வேண்டியதில்லை. தமிழர்கள் யாராவது முக்கடல் சங்கமிக்கும் குமரியை பற்றி தெரியாமல் இருந்தால் ஆச்சர்யம். மார்த்தாண்டம் தேனுக்கு (Honey) பிரபலமான ஊர். பூமித்தாய் பச்சை பட்டாடை உடுத்தியது போன்றே எப்பொதும் காட்சியளிக்கும் ஊர், தாகம் தீர்க்க இனி எப்போதும் வற்றாத தாமிரபரணி தவழ்ந்து செல்லும் பொன்னான பூமி அது. அடிக்கடி நினைப்பதுண்டு ஏண்டா ஊரை விட்டு வந்தோம் என்று. சிறுபிராயத்தில் ஊரை விட்டு எங்கும் செல்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன், ஆனால் வாழ்க்கை ஓட்டத்தில் எல்லாம் மாறிப்போய் இன்று எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

டிப்புக்கும் எனக்குமான தூரம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆசைப்பட்டது ஒன்று நடந்தது ஒன்று என்பது போல Agriculture சம்மந்தமாக படிக்க ஆசைப்பட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக, எனக்கு கொஞமும் விருப்பமில்லாமல் வீட்டார் வற்ப்புறுத்தலுக்காக படித்த Diploma in Mechanical & விரும்பி படித்து பின்னர் விருப்பமில்லாமல் போன Diploma in Catering என நாகர்கோவில் மற்றும் சென்னையிலுமாய் படிப்பு, படித்துக்கொண்டிருக்கும் போதே இளவயது திமிறும், அடங்கிப்போகா குணமும் இருந்ததால் வேலைக்கு போகிறேன் என்று ஆறு மாத காலத்தில் 30 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் வேலை பார்த்த அனுபவம், இவறில் பல இடங்களில் அரை நாளுக்கு மேல் தாக்கு பிடித்ததிலை, பாதி நாள் வேலையும் மீதி நாள் நன்பர்களுடன் கூத்தும் கும்மாளமாய் கனவு வாழ்க்கையை நனவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கையில் இப்படியே சுற்றிக்கொண்டிருந்தால் உருப்பட மாட்டாய் என்று அண்ண்ன் தயவால் படிப்பு முடியும் முன்னரே வேலைக்காக சிங்கை பயணம். ஒரு வருடம் கழித்து ஒரு விடுமுறையில் வந்து தேர்வெழுதி பாதியில் நின்ற படிப்பையும் முடிதேன். இப்போது சிங்கையில் தான் அதே திமிறுடன், கொஞம் அடக்கமாக கப்பல் கட்டுமானத்துறையில் இரும்புகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன். இதுவரை சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக ஒன்றும் சாதித்து விடவில்லை.

வாசிப்பனுபவம் மிகவும் குறைவு. இந்நாள் வரை என்னை மிகவும் கவர்ந்தவை வரலாற்று நூல்கள் தான். பள்ளிக்காலங்களில் பெரும்பாலும் தூக்கம் தொலைத்தது மோகினிகளும், வாதைகளும், பேய்களும், நம்பூதிரிகளும், தம்புராட்டிகளும், அந்தர்ஜனங்களும், பகவதிகளும், கிருஷ்ணன்களும் சகஜமாய் சுற்றித்திருந்த மலையாள நாவல்கள் தான். அவற்றை ஆரம்பத்தில் தாத்தாவின் உதவியால் படித்துக் கொண்டிருந்தேன், அவரின் மறைவுக்கு பின் மொழி பெயர்ப்பு புத்தகங்களை நாடினேன். பேர்டன் போஸ், எற்றுமானூர் சிவகுமார், கொட்டயம் புஸ்பநாத் போன்ற மலையாள எழுத்தாளர்களின் நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்தாலும் நான் அதிகமாக படித்தது கோட்டயம் புஸ்பநாத் அவர்களின் நாவல்களே, முன்பு இவரின் நாவல்கள் கேரளாவின் புகழ் பெற வார பத்திரிக்கையான "மலையாள மனோரமா" வில் தொடராக வந்துள்ளன. கோட்டயம் புஸ்பநாத் அவர்களின் நாவல்களை தமிழில் "சிவன்" என்பவர் மொழி பெயர்த்திருப்பார். (இப்போது இது போன்ற மலையாள நாவல்களை இணயத்தில் தேடிக்கொன்டிருக்கிறேன். (தமிழில் தான்) இது பற்றிய தகவல்கள் எவருக்கேனும் தெரிந்தால் தெரிவியுங்கள்).

ரும்பு மீசை முளைத்த பருவத்தில் கண்களும் கவனமும் தேடிச் சென்றது கவிதை புத்தகங்களை, அவை எம்மாதிரி கவிதை புத்தகங்கள் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை. அப்போதிலிருந்து காதலித்துக் கொண்டிருக்கிறேன் காதல் கவிதைகளை. இந்நாளில் கூட நூலகம் சென்றால் என்னையறியாமல் நான் தேடுவது கவிதை புத்தகங்களை தான். கல்லூரிக்காலங்களில் எனக்கு நூலகம் தான் விடுமுறைத்தோழன், பெரும்பாலான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளின் பகல் பொழுதுகள் கழிந்தது நூலகத்தில் தான்.அப்போதெல்லாம் நெடுங்கவிதைகள் என்றால் நெடுந்தூரம் ஓடிவிடுவென். சிறிய கவிதைகளும், ஹைக்கூ"களும் தான் அதிகமாய் அகப்படும். கவிதைகளின் மீதுள்ள காதல் கலையாமலே மாமன்னர்களின் வாழ்க்கை வரலாறுகளை தேட ஆரம்பித்தேன். ஊரில் இருந்த நூலகத்தில் புத்தகங்கள் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்காது. அதுமட்டுமல்லாமல் அக்காலத்தில் எனக்கு தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் எந்த அபிப்பிராயமும் இருந்ததில்லை. புத்தகங்கள் பற்றி சுட்டி காட்டுவதற்க்கும் எவருமில்லை.

ல்லூரி வேசம் கலைத்து வாழ்க்கை பாதையை தேட ஆரம்பித்தவுடன் புத்தகத் தேடல்களும், வாசிப்புகளும் ஒவ்வொன்ற்றாய் ஒதுங்க ஆரம்பித்தன. ஆனால் கவிதைகள் மட்டும் ஒதுங்கி விடாமல் என் உள்ளுக்குள் ஒரு ஓரமாய் ஒட்டிக்கொன்டது. சில காலங்கள் புத்தகங்களுடன் எந்த தொடர்புமில்லாமல் இருந்தது. இப்பொது பதிவுலகத்தால மீண்டும் புத்தகங்கள் மீதான காதல் தொற்றிக்கொன்டது. நீண்ட காலமாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு முடியாமல் போன பல புத்தகங்கள் இன்று பதிவுலகத்தால் கிடைத்திருக்கிறது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் சரித்திர நாவல்களான "பொன்னியின் செல்வன்", பார்த்திபன் கனவு", "ராஜதிலகம்" இன்னும் பல நூல்களை பற்றி முன்பே கேட்டறிந்திருக்கிறேன், ஆனால் எவ்வளவு முயன்றும் படிக்க இயலாமல் போனது. இன்று இணையத்தின் மற்றும் நண்பர்களின் உதவியால் அத்தனையும் சாத்தியமாயிற்று. இது போன்ற சரித்திர நாவல்களை படிப்பதன் மூலம் பல தமிழ் மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தெரிந்த கொள்ள முடிகிறது, அது மட்டுமல்லாமல் மேலும் பல நல்ல நூல்களை பதிவுலகத்தின் வாயிலாக அடையாளம் காண முடிகிறது. பல பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் ஆரோக்கியமான விமர்சனங்கள் புத்தகங்களை தேடிச்செல்ல தூண்டுகின்றன.

ழுத்தனுபவம் என்று சொல்லிக்கொள்ள இன்று வரை எதுவுமில்லை, சாதரணமாக பள்ளிக்கலூரிகளில் நடந்த போட்டிகளில் கூட கலந்து கொண்டதில்லை, ஒரு முறை ஆனந்த விகடன் நடத்திய மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் கலந்து தேர்வாகியத்தை தவிர வேறொன்றும் இன்று வரை சாதித்ததில்லை, ஆனால் அந்த நல்ல வாய்ப்பும் கல்லூரியில் நடந்த ஒரு சிறிய பிரச்சனையால் கை நழுவிப்போய் விட்டது, இப்போது இங்கே வலைத்தளத்தில் ஏதாவது கிறுக்குவதோடு சரி, வேறொன்றும் என்னைப்பற்றி சொல்லிக் கொள்வதற்கில்லை.

ய்... ஏய்.. யாருப்பா அங்கே கொலைவெறியோட பாக்குறது, கையில எதுக்கு கல்லெல்லாம் எடுத்து வச்சிருக்கீங்க.. ஓவரா மொக்க போடாம நிறுத்துடான்னு மரியாதையா சொன்னா நிறுத்திட்டு அடுத்த பதிவு எழுதுறதுக்கு ஏதாவது வழிய பார்ப்பேன், அதில்லாம சின்ன புள்ளத்தனமா கையில கல்லெல்லாம் எடுத்துகிட்டு.. சரி சரி கோவப்படாதீங்க சொல்ல வந்த விசயத்த சொல்லிடுறேன், அதாங்க இன்னையிலிருந்து ஒரு வாரம் தமிழ் மணம் நட்சத்திர பதிவரா என்னை தேர்வு பண்ணியிருக்காங்க அதுக்காக தான் இந்த அறிமுகமெல்லாம், இப்போ நான் கிளம்பலாமில்லையா..

ஓகே மக்கள்ஸ் நாளைக்கு பார்க்கலாம்..

63 comments:

சௌந்தர் said...

என்ன நல்ல விறு விறுப்பா படித்து கொண்டு வந்தேன் ....பாதியில் நின்றது போல் ஓர் உணர்வு இன்னும் சேர்த்து இருக்கலாம் என்று எனக்கு தோன்று கிறது ஏன் என்றால் படிக்க அவ்வளவு சுவாரஸ்சியமா இருக்கு

வாழ்த்துக்கள் தமிழ்மணம் நட்சத்திரம்

அன்புடன் மலிக்கா said...

ஜெயந்த் அழகான பெயரை வைத்துக்கொண்டு வெறும்பய ந்னு. என்னாதிது.. அப்பட்டா இனி பெயரென்ன அப்படின்னு கேட்கமாட்டோமுல்ல..

சந்தோஷதுல பறக்குறீங்க.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கலக்கோ கலக்குன்னு கலக்குங்க, கட்டுமானத்தோட இதையும்.
மீண்டும் வாழ்த்துக்கள்..

Mohamed Faaique said...

வாழ்த்துக்கள். இன்னும் இன்னும் வளர்ந்து என்னை போல் ஒரு பிரபல பதிவராக....... ( இன்னும் சொல்லி முடிக்கவே இல்ல.. யாருப்பா கல்லை தூக்குரது......)

THOPPITHOPPI said...

வாழ்த்துக்கள் நண்பரே

pichaikaaran said...

கன்யாகுமரி நண்பர்களிடம் என் கல்லூரி காலங்களில் அதிகம் பழகி இருக்கிறேன்..
நீங்களும் அந்த பகுதியா? மகிழ்ச்சி...

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்..

மங்குனி அமைச்சர் said...

ஹா,ஹா,ஹா........... கல்லெடுக்குறது எல்லாம் அந்தக்காலம் ......... இப்போ வைரஸ் தான் ......அனுப்பிட்டேன் .....தக்காளி இனி உன் சிஸ்டம் வேலைசெய்யுன்னு நினைக்கிரே ????????............

நல்லா இருந்தது ...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நேர்த்தியான எழுத்து நடை ஜெயந்த்...... நட்சத்திர வாழ்த்துக்கள்... (இரு இரு தமிழ்மணத்துல போயி உன் பேரை ஒருதடவை பாத்துட்டு வர்ரேன்....)

ராஜகோபால் said...

வாழ்த்துக்கள், எனக்கும் புக்ஸ் படிக்கணும் ஆர்வம் வந்தது நான் வலையுலகம் வந்த பிறகுதான், அதன் ஆர்வமாக எனது சிறு முயர்ச்சி புக்ஸ் படிக்க ஆர்வம் உள்ளர்வர்கள் இங்க வாங்க

http://gundusbooks.blogspot.com/2011/02/blog-post_698.html

நாடோடி said...

த‌மிழ்ம‌ண‌ ந‌ட்ச‌த்திர‌மான‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்...

நீங்க‌ளும் ந‌ம்ம‌ ஊர் தானா?... :-)

வைகை said...

வணக்கத்துக்கும் பெரு மதிப்பிற்கும் உடைய ஜெயந்த என்கிற வெறும்பய சமஸ்தானத்திற்கு...வைகையின் அநேககோடி நமஸ்காரங்கள்! தங்களின் இந்த உயர்வு கண்டு புளங்காகிதம் அடைந்தேன்! தாங்கள் இன்னும் மென்மேலும் உயர்ந்து தமிழ்மண நிலா.. தமிழ்மண சூரியன்... தமிழ்மண வியாழன்.. அளவுக்கு பெரிதாக இந்த அடியேன் அந்த ஆண்டவனை ஷேமம் செய்கிறேன்!

karthikkumar said...

வாழ்த்துகள் அண்ணா கலக்குங்க ...:))

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள்.தொடரட்டும் சேவை.

sulthanonline said...

வாழ்த்துக்கள் ஜெயந்த் தொடர்ந்து கலக்குங்க..

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் ஜெயந்த்

துளசி கோபால் said...

நட்சத்திரமே! இனிய வாழ்த்து(க்)கள்.

ஜோதிஜி said...

நட்சத்திர வாழ்த்துகள் நண்பா. உங்கள் எழுத்து நடை எனக்கு எப்போதும் பிடிக்கும்.

எஸ்.கே said...

வாழ்த்துக்கள் நண்பரே! தங்கள் வாழ்வில் இன்னும் மென்மேலும் சிறக்க வேண்டுகிறேன்!

VELU.G said...

வாழ்த்துக்கள் ஜெயந்த்

உங்கள் விறுவிறுப்பான எழுத்துக்களை இந்த வாரம் முழுக்க எதிர்பார்க்கிறேன்

செ.சரவணக்குமார் said...

நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துகள் மக்கா நல்லா இருடே...

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துகள் மக்கா நல்லா இருடே...

கதிர் said...

Nice intro!

கதிர் said...

தமிழ்ல டைப் பண்ணியே ரொம்ப நாளாச்சு... நல்லா எழுதுங்க

Anonymous said...

பிறந்து வளர்ந்தது கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் எனும் ஊர்/
ஒருமுறை அங்கு வந்திருக்கேன்..கேரளமும் தமிழும் கலந்த அந்த கலாச்சாரம் எனக்கு பிடிச்சிருக்கு

Anonymous said...

அந்த பகுதிகளில் கிடைக்கும் அப்பமும் ஆட்டுக்கால்பாயாவும் பத்தி சொல்லலையே பாஸ்

Anonymous said...

மிகவும் எளிமையான அருமையான சுவையான கட்டுரை

Anonymous said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

வெறும்பயகிட்டதான் நிறைய விஷயமிருக்கு

dheva said...

தமிழ் மணம் ஸ்டாராய் ஜொலிக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள்!

Raheema Faizal said...

All the best mr.verumpaya

Anonymous said...

நட்சத்திரப் பதிவருக்கு என் வாழ்த்துக்கள்

அம்பிகா said...

நட்சத்திர வாழ்த்துக்கள், ஜெயந்த்.

Unknown said...

நட்சத்திர வாழ்த்துகள் தம்பி...

Jey said...

ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்

Harini Resh said...

வாழ்த்துக்கள் தமிழ்மணம் நட்சத்திரம்

சாந்தி மாரியப்பன் said...

நட்சத்திர வாழ்த்துகள்..

Anonymous said...

அட நிங்க நம்ம தொடுவட்டியா வாழ்த்துகள்

மாணவன் said...

வணக்கத்துக்கும் பெரு மதிப்பிற்கும் உடைய ஜெயந்த என்கிற வெறும்பய சமஸ்தானத்திற்கு...மாணவனின் அநேககோடி நமஸ்காரங்கள்! தங்களின் இந்த உயர்வு கண்டு புளங்காகிதம் அடைந்தேன்! தாங்கள் இன்னும் மென்மேலும் உயர்ந்து தமிழ்மண நிலா.. தமிழ்மண சூரியன்... தமிழ்மண வியாழன்.. அளவுக்கு பெரிதாக இந்த அடியேன் அந்த ஆண்டவனை ஷேமம் செய்கிறேன்!

:))

மாணவன் said...

ரொம்பவும் சுவாரசியமா எழுதியிருக்கீங்க அண்ணே, உங்களின் நட்பு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது தொடர்ந்து மென்மேலும் சிறக்க மீண்டும் எனது வாழ்த்துக்கள் :)

தொடரட்டும் உங்கள் மகத்தான பணி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

நன்றி நண்பா

@@@@@

அன்புடன் மலிக்கா said...

நன்றி சகோதரி, அப்போ இனி வெரும்பய அப்படீன்னு கூப்பிட மாட்டீங்களா

@@@@@@@

Mohamed Faaique said...

நன்றி நண்பரே

@@@@@@

THOPPITHOPPI said...

நன்றி நண்பரே

@@@@@@

பார்வையாளன் said...

மிக்க நன்றி,

@@@@@

மங்குனி அமைச்சர் said...

அமைச்சர் அந்த பாச்சாவேல்லாம் இங்கே பலிக்காது..

@@@@@

சமுத்ரா said...

நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி ராம்ஸ், எதுக்கும் கன்பார்ம் பண்ணிக்குங்க

@@@@@@

ராஜகோபால் said...

நன்றி, பதிவுலகம் ஒரு சிலர்க்கு வரப்பிரசாதம் தான்

@@@@@

நாடோடி said...

நன்றி சகோதரா, நானும் அந்த பக்கம் தான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

அடப்பாவி மக்கா உன் வாழ்த்துக்கு ஒரு அளவே இல்லையா, விடா சங்க காலத்துக்கே போயிடுவீங்கன்னு நினைக்கிறேன்

@@@@@@@

karthikkumar said...

நன்றி கார்த்தி

@@@@@@

அமுதா கிருஷ்ணா said...

நன்றி

@@@@@

sulthanonline said...

நன்றி சகோதரா

@@@@

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி அண்ணா

@@@@@

துளசி கோபால் said...

நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜோதிஜி said...

மிக்க நன்றி நண்பரே

@@@@@

எஸ்.கே said...

வாழ்த்திற்கு ரொம்ப நன்றி நண்பா

@@@@

VELU.G said...

கண்டிப்பாக இருக்கும் , வருகைக்கு நன்றி

@@@@@

செ.சரவணக்குமார் said...

நன்றி நண்பரே

@@@@@@

MANO நாஞ்சில் மனோ said...

நன்றிங்கன்னா

@@@@@

கதிர் said...

நன்றி சகோதரா

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நன்றி அண்ணா. ஆப்பமும் பாயாவும் எப்பவும் நம்ம பேவரைட் தான்,

#@@@@@@

dheva said...

நன்றி அண்ணா

@@@@@

Raheema Faizal said...

நன்றி சகோதரி

@@@@

இந்திரா said...

நன்றி சகோதரி

@@@@@

அம்பிகா said...

நன்றி சகோதரி

@@@@@@

கே.ஆர்.பி.செந்தில் said...

நன்றி அண்ணா

@@@@@

Jey said...

நன்றி அண்ணா

@@@@@@@

Harini Nathan said...

நன்றி சகோதரி

@@@@@@@@@

அமைதிச்சாரல் said...

நன்றி சகோதரி

ஜெயந்த் கிருஷ்ணா said...

Anonymous said...

அட நிங்க நம்ம தொடுவட்டியா வாழ்த்துகள்

//

ஆமான்கன்னா நீங்களும் தொடுவட்டியா, உங்க பெயர சொல்லியிருந்தா நல்லாயிருக்கும்

arasan said...

அண்ணே வணக்கம் ...

நல்லாத்தான் வாழ்ந்திருக்கிங்க ...

இன்னும் உங்களின் உள்ளங்களில்

ஒளித்து வைத்திருக்கும்

நினைவுகளை தெரிவித்து இருந்தால்

நல்லா இருந்திருக்கும் ...

arasan said...

வாழ்த்துக்கள் அண்ணே

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள் தமிழ்மணம் நட்சத்திரம் !

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் நட்சத்திரம்..!

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள் தமிழ்மணம் நட்சத்திரம்

பா.ராஜாராம் said...

நட்சத்திர வாழ்த்துகள் ஜெயந்த்! கலக்குங்க..

Mahi_Granny said...

வாழ்த்துக்கள் . ஜெயந்த் ஆகவே இருங்க தம்பி. ஏன் வெறும் பய இன்னும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

த‌மிழ்ம‌ண‌ ந‌ட்ச‌த்திர‌மான‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்...

மாதேவி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

நன்றி மாணவரே

@@@@@

அரசன் said...

நன்றி அரசன்

@@@@@

அன்புடன் அருணா said...

நன்றி சகோதரி

@@@@@

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி நண்பரே

@@@@@

r.v.saravanan said...

நன்றி நண்பரே

@@@@@@

ஆ.ஞானசேகரன் said...

நன்றி அண்ணா

@@@@@@

பா.ராஜாராம் said...

நன்றி அண்ணா

@@@@

Mahi_Granny said...

நன்றி சகொதரம், இனி முயற்ச்சிக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சகோதர

@@@

மாதேவி said...

நன்றி சகோதரி..

ஹுஸைனம்மா said...

நட்சத்திர வாழ்த்துகள்.

Geetha6 said...

வாழ்த்துக்கள்!அப்பாடா இப்பவாது பேரை சொன்நீர்களே ..

mkr said...

அழகான பெயர்(நான் உங்க உண்மையான பெயரை சொன்னேன்).நட்சத்திர பதிவராக தேர்வானதுக்கு வாழ்த்துகள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹுஸைனம்மா said...

நன்றி சகோதரி

@@@

Geetha6 said...

நன்றி சகோதரி

@@@@

mkr said...

நன்றி சகோதரா

யார் இவன் ? said...

வாழ்த்துக்கள் நண்பரே

யார் இவன் ? said...

வாழ்த்துக்கள் நண்பரே

ஆமினா said...

உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_26.html

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா...