காத(லா)ல் தொல்லை..

மகா ஜனங்களே 
நான் தான் ஜெயந்த். வர வர இந்த வெறும்பய தொல்லை தாங்க முடியல.. போன ஒரு வருச காலமா ஏதொ பிளாக் எழுதுறென்னு சொல்லிட்டு கதை கவிதை அப்ப்டீன்னு எதை எதையொ கிறுக்கிட்டு வந்து தினமும் என் உயிர எடுக்கிறான். இப்படி தான் நேற்று ராத்திரி
நேரம் நள்ளிரவு 3.10 am (விடியக்காலைன்னு கூட வச்சுக்கலாம்)

ஜெயந்த்.. டேய் ஜெயந்த் எந்திரிடா செல்லம்..
ம்ம்..... ம்ம்....
டேய் என்னடா இப்படி தூங்குற....  எழுந்திரிடா உன் கிட்டே கொஞ்சம் பேசணும்,...
ஏன்டா அதுக்குள்ளே விடிஞ்சுபோச்சா.. இப்ப தானே படுத்தேன்... சரி என்ன விஷயம் சீக்கிரம்  சொல்லு தூக்கம் வருதுடா..
"காதல் என்பது ஆழ்மனத்தின் ரகசியங்கள் சொல்லும் ஒரு மென்மையான உணர்வு"

இருந்திட்டு போகட்டும்.. அதுக்கு என்னடா இப்போ..
காதல் வாழ வைக்கும் தெய்வமாகவும் இருக்கிறது., காவு வாங்கும் சாத்தானாவும் இருக்கிறது.

டேய் டேய் என்னாச்சுடா உனக்கு.. Blog எழுத ஆரம்பிச்சதிலிருந்து ஒரு மார்க்கமாதாண்டா இருக்க... இப்போ நான் தான் உன்ன காவு குடுக்க  போறேன்...  சனியனே உயிரை எடுக்காம போய் படுத்து தூங்குடா..
காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியலன்னா என்ன எளவுக்குடா இந்த காதலெல்லாம்.. அதுக்கு பேசாம வீட்டுல பாக்குற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாமே..

ஐயோ.. ஐயோ..  சம்மந்தம் இல்லாம பேசி சாவடிக்கிறானே.. டேய் மரியாதையா இப்ப விசயத்த சொல்லப்போறியா இல்ல இப்பவே நான் ரூம் வெக்கேட் பண்ணவா..

பறக்காதடா சொல்றேன்...  சின்ன வயசிலேருந்தே ஒரு பொண்ணை காதலிப்பாங்களாம். அந்த பொண்ணும் இவர உயிருக்குயிரா காதலிக்குமாம். ஒரு நாள் இவரு வீட்டில இந்த லவ்வ சொல்லுவாராம். அதுக்கு அவங்க வீட்டில சம்மதிக்க மாட்டாங்களாம். புள்ள கிட்டே அம்மாவும் அப்பாவும் "என்றா மவனே இப்படி  பண்ணிபுட்டேன்னு" கண்ணீர் விட்டு கதறி அழுவாங்கலாம். உடனே இவரோட கல்மனசு பழைய லைபாய் சோப்பு போல கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு போய் அந்த பொண்ணுக்கு டாட்டா காட்டிட்டு அப்பா அம்மா யாரை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்களோ அவங்களை கல்யாணம் பண்ணிப்பாராம்.
நீ இப்பொ யாரை பற்றி சொல்ல வர..  அதுக்கு நான் என்னடா பண்ண முடியும்.. அவனை தூக்கி போட்டு மிதிக்கனுமா.. இல்ல அந்த பொண்ணுக்கு நான் வாழ்க்கை குடுக்கணுமா...  சத்தியமா மாப்பிள இந்த ரெண்டு விசயமும் என்னால பண்ண முடியாதுடா..  எவனோ ஒருத்தன் தப்பு பண்ணினதுக்கு எதுக்குடா என் தாலியருக்குற..
அடிங்க.. உன்ன கல்யாணம் பண்றதுக்கு அந்த பொண்ணு பாளுங்கிணத்தில  விழுந்து தற்கொலை பண்ணிக்கலாம்.. நான் கேட்க வரது என்னன்னா, இந்த மாதிரி ஒதுங்குறவன்  எதுக்கு உருகி உருகி  காதலிக்கணும், எதுக்கு அந்த பொண்ணு மனசில வீணா ஆசைய உண்டாக்கணும்
அது அவனவன் விருப்பம்.. அவன் திறமைக்கு அவன் விளையாடுறான். உனக்கு ஏண்டா இவ்வளவு காண்டு..
என்னோட கோவம் அதில்ல.. அம்மா அப்பா மேல அவ்வளவு பாசமும் அக்கறையும் உள்ளவன் எதுக்கு லவ் பண்ணனும்.  அப்பவே அதை யோசிச்சிருக்கலாமே..

எல்லா அம்மா அப்பாக்களும் புள்ளைங்க  மேல பாசமா தாண்டா இருப்பாங்க.. அதே மாதிரி தான் புள்ளைங்களும்...   ஒவ்வொரு அம்மா அப்பாவுக்கும் அவங்க புள்ளைங்கள ஆயிரம் கனவு இருக்கும்.. என் புள்ள இப்படி இருக்கணும்.. இந்த வேலை பாக்கணும்.. இந்த மாதிரி இடத்திலிருந்து தான் பொண்ணு எடுக்கணும் அப்படின்னு ஆயிரம் ஆசைகளை கோட்டையா கட்டி வச்சிருப்பாங்க...  இப்படி திடீர்ன்னு ஒரு நாள் நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன் அப்படீன்னு சொல்லும் போது பெத்தவங்களோட அத்தன கனவு கோட்டையும் உடஞ்சிரும்.. அதை அவங்களால தாங்கிக்கவும் முடியிறதில்ல.. அந்த காலகட்டத்தில காட்டுற கொஞ்சம் பிடிவாதங்கள் மற்றும் அடக்குமுறைகள் தான் பெரும்பாலும்   பிள்ளைகளுக்கும்  பெற்றவங்களுக்கும்  இடையில பெரிய பிரச்சனையாவே  மாறுது..  இதே விஷயத்தை பெற்றவங்க கொஞ்சம் பொறுமையா யோசிச்சு சாமாதனமா பேசி புரிய வச்சா எந்த பிரச்சனையும் வராது... 
அப்போ பெத்தவங்க பக்கம் தான் எல்லா தப்பும் இருக்கா... அவங்க தெளிவா இருந்தா எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்றியா...
பெத்தவங்களையும் இந்த விசயத்தில  குற்றம் சொல்ல முடியாது.. ஒரு பையனோட எல்லா நல்லது கெட்டதிலையும் பெத்தவங்களுக்கு  ஒரு பெரும்பங்கு இருக்கு..  பையனும் சில விசயங்களை யோசிக்கணும்.. பெத்து இத்தன வருஷம் வளத்து, படிக்க வச்சு ஆளாக்கி விட்டவங்களை நேற்று வந்த எதோ ஒரு பொண்ணுக்காக உதறிட்டு போறாங்க... வீட்டில சண்டை போடுறாங்க.. பெத்தவங்களை மன ரீதியா ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க..  25 வருஷம் கூடவே இருந்து நமக்கு நல்லது எது , கெட்டது எது, நமக்கு எது பிடிக்கும் எதுபிடிக்காதுன்னு பார்த்து பார்த்து செஞ்சவங்களோட  மனச புரிஞ்சிக்காத ஒருத்தன்  எப்படிடா வேற ஒரு வீட்டில வேற சூழ்நிலையில வளந்த ஒரு பொண்ணை புரிஞ்சுக்க முடியும் அதுவும் கொஞ்சம் நாளில.. என்ன கேட்டா இது கண்டிப்பா சாத்தியமில்லாத விஷயம்..
அப்படீன்னா காதலிச்சு வீட்டு சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழுறவங்க எல்லாரும்.....  எல்லாம் நடிப்புன்னு சொல்றியா..
கண்டிப்பா அப்படி சொல்லமாட்டேன்...  நல்லாயிருக்காங்க.. சந்தோசமா இருக்காங்க... அப்படி இருக்கிறவங்க எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சத விட கல்யாணத்துக்கப்புறம்  பல மடங்கு  அவங்க காதல் கூடியிருக்கும்.. வாழ்க்கையோட ஒவ்வொரு நிமிஷத்தோட சுவாரஸ்யத்தையும் ரசிச்சு வாழுறவங்க... புரிதல் அதிகமா இருக்கும்.. ஒரு சின்ன சண்டை அல்லது மனஸ்தாபம் வந்தாலும் சோகமா போய் ஒரு மூலையில உக்காந்து அழாம அதுக்கு என்ன காரணம் அப்படீன்னு நல்லா யோசிச்சு அதுக்கு என்ன தீர்வுன்னு  தேடி உடனே சமாதானமாகி அடுத்த தடவை அந்த சண்டை வராம பாத்துக்கிரவங்க, புருசனுக்கு என்ன பிடிக்கும் இல்ல பொண்டாட்டிக்கு என்ன பிடிக்குமின்னு ஒவ்வொன்னா தேடி பார்த்து  பார்த்து செஞ்சு காதலுக்கே  காதலிக்க கத்து குடுத்து அவங்க எல்லாரும் நல்லா சந்தோசமா தான் இருக்காங்க...

ஓகே.. நீ சொல்றதெல்லாம் சரி தான்... பிள்ளைங்க மேலயும் தப்பிருக்கு பெத்தவங்க மேலயும் தப்பிருக்கு.. ஆனா பிள்ளைங்க பெத்தவங்களுக்காக எல்லாத்தையும் விட்டு குடுக்கனும்ன்றியா.....
நீ ஏண்டா அப்படி நினைக்கிற பிள்ளைங்களுக்காக தாண்டா பெத்தவங்க.. பெத்தவங்களுக்காக தான் பிள்ளைங்க... அவங்களுக்கு நாம தான் உலகம்.. ஆனா நம்ம உலகத்தில அவங்க முக்கியமானவங்க.. ஏன்னா அவங்களுக்கப்புரம் உன்னையே நம்பி வரப்போற பொண்ணு ஒருத்தி இருக்கா.. அவளுக்கு நீ மட்டும் தான் உலகம். அதே சமயம்  பெற்று வளர்த்து  உன்னையே உலகமின்னு நினச்சிட்டிருக்கிற உன்னோட அம்மா அப்பாவ கண்கலங்காம பாத்துக்கிறதும் உன்னோட பொறுப்பு தான்.. 

நீ சொல்றதை பார்த்தா  பசங்க பெத்தவங்களை தாண்டி எதையும் யோசிக்க கூடாது .. ஆசைப்படக்கூடாதுன்ற மாதிரியில்ல இருக்கு...
ஆசைகளும் கனவுகளும் யார் வேணுமினாலும் படலாம் அது அவரவர் சுதந்திரம், ஆனா நம்ம ஆசைகளையும் கனவுகளையும் யார் மேலயும் வலுக்கட்டாயமா  திணிக்க கூடாது அவ்வளவு தான். உலகத்தில பேசி தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் இல்ல.. ஆனா அதையும் எப்போ எப்படி பண்ணனுமின்னு ஒரு வரைமுறை இருக்கு, இப்போ  நீ சொன்னியே ஒரு கதை யாரோ லவ் பண்ணினாங்க அப்படீன்னு, அவன் வீட்டில சொல்லி அவங்க ஒத்துக்கல அப்படின்னு அது கூட நேரம் காலம் தெரியாம வீட்டில சொன்னது தான் காரணமா இருக்கும். இதே விசயத்த அவன் யோசிச்சு தகுந்த சமயம் பார்த்து அவன் கிட்டே யார் அதிகமா பாசம் வச்சிருக்காங்களோ அவங்க கிட்டே பக்குவமா சொல்லி அவங்க மூலமா அப்பாவுக்கோ இல்ல அம்மாவுக்கோ  சொல்லும் போது அவங்க கொஞ்சமா யோசிக்க வாய்ப்புண்டு. அதுக்கப்புறம் நீயும் அவங்களுக்கு நம்பிக்கை வறது மாதிரி நடந்துக்கணும்.  அனா  நீ முதல்ல இந்த விசயத்த சொல்ற ஆளு வீட்டில கொஞ்சம் மதிப்புள்ளவங்களா இருக்கணும்.. இல்லன்னா அம்புட்டு தான்.

ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே.. காதலிக்கனுமின்னா இவ்வளவு விஷயம் யோசிக்கணுமா... நமக்கு காதலும் வேணாம் கல்யாணமும் வேணாம் பேசாம சாமியாரா போயிடலாம்..
உனக்கு அதுதாண்டா சரி.. உன்ன எந்த பொண்ணும் லவ் பண்ண போறதுமில்ல, எவனும் உனக்கு பொண்ணு தரப்போறதுமில்ல... தயவு செஞ்சு என்ன கொஞ்ச நேரமாவது தூங்க விடுறியா..
சரி சரி.. தூங்கித்தொலை.. மீதிய நாளைக்கு பேசிக்கலாம்
இன்னாது நாளைக்குமா.. என்னால முடியாதுடா சாமி.. ஒழுங்கு மரியாதையா அட்வான்சை திருப்பி குடு.. நான் இன்னைக்கே இப்பவே ரூம் காலி பண்றேன்..
டேய் படுத்து தூங்குடா அதெல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம்... Good Night  சாரிபா   Good Morning
  
மகா ஜனங்களே
இப்படிதாங்க இந்த வெறும்பய தினமும் நடுராத்திரியில எழுப்பி என் உயிர எடுக்கிறான் நீங்களாச்சும் என்ன எதுன்னு கேளுங்க.. இப்போ நன் தூங்க போறென்..
இனி நாளைக்கு பார்க்கலாம்..

30 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் ,மழை

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம் ஸ்டார் பதிவர்கள் பெரும்பாலும் விழிப்புணர்வு அல்லது சீரியஸ் மேட்டர்களை கையில் எடுப்பார்கள்.. நீங்கள் காமெடியில் கலக்கறீங்க.. அழகு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காமடிலும் இந்த நட்சத்திரம் ஜொலிக்க என் வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மணமகள் தேவை உதவ முடியுமா..

விவரம் அறிய கவிதை வீதி வாங்க...

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_22.html

sathishsangkavi.blogspot.com said...

கலக்குங்க.... கலக்குங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பட்டைய கெளப்பிட்டே மச்சி.....

வைகை said...

ஹி...ஹி..ஹி..ஹி...
ஹி...ஹி..ஹி..ஹி...
ஹி...ஹி..ஹி..ஹி...
ஹி...ஹி..ஹி..ஹி...
ஹி...ஹி..ஹி..ஹி...
ஹி...ஹி..ஹி..ஹி...
ஹி...ஹி..ஹி..ஹி...
ஹி...ஹி..ஹி..ஹி...
ஹி...ஹி..ஹி..ஹி...
ஹி...ஹி..ஹி..ஹி...

'பரிவை' சே.குமார் said...

கலக்குங்க.... கலக்குங்க...
காமெடியில் கலக்கறீங்க.

Mohamed Faaique said...

உங்களுக்கு வெறும் பய மட்டும்தான் தொல்ல குடுக்குரானுங்க... நம்மளுக்கு வெறும் பய, ஜெயந்த் 2 பேரும் வந்து (பதிவுல) தூக்கத்தை கெடுக்குராங்கப்பா....

நல்ல பதிவு.. நல்ல கற்பனை..

எஸ்.கே said...

செம சூப்பர் நண்பா!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

i am coming . . .

Unknown said...

கலக்கிட்டீங்க பாஸ்!! :-)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

he he he
who is your lucky room mate? ...

சசிகுமார் said...

திரும்ப வந்தாச்சா

தமிழ்க்காதலன் said...

தாங்க முடியல... நீங்க எப்ப மறதி வியாதியால பாதிக்கப் பட்டீங்கன்னு தெரியல..

நீங்களே இரண்டு தரப்பு வாதியாவும் சொல்ல வந்ததை நல்லா சொல்லிட்டீங்க.. பாராட்டுகள்.

ஆனா நடைமுறை சிக்கல் இன்னும் நிறைய இருக்குனு நினைக்கிறேன்.

vinu said...

ITHULA ETHAAVATHU ULLLKUTHTHUUU IRRUKAAA[ENAKKUTHAAAN]

அப்பாதுரை said...

சிரித்துத் தொடங்கினாலும் சிரித்து அடங்கவில்லை. வாழ்த்துக்கள்.

Anonymous said...

கலக்கிட்ட.. நட்சத்திர வாழ்த்துக்கள் மச்சி.. :)

மாணவன் said...

நல்லாருக்குண்ணே.... இது உண்மை சம்பவம்தானே :))

மாணவன் said...

தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் :)

மாணவன் said...

ஜொலிக்கட்டும் உங்கள் நட்சத்திர பணி....

:))

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி அண்ணா, சீரியஸ் பதிவுகளில் அவ்வளவாக உடன்பாடு இல்லை அண்ணா, தேவைப்படும் பட்சத்தில் கண்டிப்பாக இருக்கும்

@@@@@

# கவிதை வீதி # சௌந்தர் said...

நன்றி நண்பரே

@@@@

சங்கவி said...

நன்றி அண்ணா

@@@@

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தேங்க்ஸ் மாம்ஸ்..

@@@@@

வைகை said...

நீ சிரிச்சுகிட்டே இரு மாம்ஸ்..

@@@@

சே.குமார் said...

நன்றி அண்ணா எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்.

@@@@

Mohamed Faaique said...

சமயத்தில் எனக்கும் ரெண்டு பேர் தொந்தரவும் இருக்கு நண்பரே..

பதிவு கற்பனை அல்ல நண்பரே..

@@@@

எஸ்.கே said...

நன்றி நண்பரே

@@@@@

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நான் தான் , நம்மள ஆள வேற யாரால முடியும்..

@@@

Thirumalai Kandasami said...

வருகைக்கு நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

சசிகுமார் said...

வந்தாச்சு நண்பரே, ஆனால் இதுவும் தற்காலிகம் தான், வேலைப்பளுவும் வேறு சில காரணங்களால் தான் இனைய பக்கம் அதிகமாக வர முடியவில்லை.

@@@@@

தமிழ்க் காதலன். said...

நன்றி நண்பரே, சில விசயங்களை கையாள வேண்டிய முறையில் கையாண்டால் முடிவு நல்லதாகவே இருக்கும். இங்கே நான் கூறியிருப்பது பெரும்பாலும் வாழ்வில் நடந்தது தான் .

@@@@

vinu said...

ஒரு உள்குத்தும் இல்ல மச்சி..

@@@@

அப்பாதுரை said...

நன்றி

@@@@@@

Balaji saravana said...

தேங்க்ஸ் மச்சி

@@@@

மாணவன் said...

ஏறக்குறைய ஒரு உண்மை சம்பவம் தான், ஆனால் ஒருவர் வாழ்வில் மட்டுமே நடந்தவை அல்ல..

நன்றி மாணவரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலாநேசன் said...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

வைகை said...

தோழி பிரஷா said...

எஸ்.கே said...

இந்திரா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சே.குமார் said...

கோமாளி செல்வா said...

சுசி said...

Mohamed Faaique said...

+யோகி+ said...

Sriakila said...

பனங்காட்டு நரி said...

மதுரை சரவணன் said...

///

அனைவரின் வருகைக்கும் எனது நன்றிகள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி அண்ணா..

@#@@

தோழி பிரஷா said...

நன்றி சகோதரி

@@@@

வைகை said...

தேங்க்ஸ் மாம்ஸ்

#####

தம்பி கூர்மதியன் said...

தங்கள் வலைப்பூவின் பெயரை தலைப்பாக்கியதர்க்கு மன்னிக்கவும் சகோதரா,... வருகைக்கு நன்றி

######

Madhavan Srinivasagopalan said...

சும்மா ஒரு கிக்குக்கு தான் அந்த தலைப்பு

@@##@###

இம்சைஅரசன் பாபு.. said...


உண்மைய ஒத்துக்கிறதில என்ன தப்பு மக்கா

#####

Chitra said...

நன்றி சகோதரி

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...


அதிலென்ன சந்தேகம் நண்பா நான் தான் சமசாகனும்.. அதுக்காக தானே நான் கேட்டரிங் படிச்சேன்

###

karthikkumar said...

பயப்படாதே கார்த்தி இனி ஜோதி வர மாட்டா

####

கோமாளி செல்வா said...

நன்றி செல்வா

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

காதல் மணம் பற்றி சொன்னால் தெரியாது நண்பரே

@@@@@

எஸ்.கே said...
நன்றி நண்பரே

@@$%@$

ஜெயந்த் கிருஷ்ணா said...

நிரூபன் said...

அன்பு சகோதரருக்கு தங்கள் வருகைக்கு நன்றி

நான் கிறுக்கியவற்றை விட அந்த கிறுக்கல்களை ரசித்து நீங்க கூறிய விமர்சனங்களே என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன..

மிக்க நன்றி சகோதரா

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நன்றி அண்ணா//

@@@@@@

சுசி said...

நன்றி சகோதரி

@@@#@#@##

அரசன் said...

நன்றி அரசன்

@@##@#@@##

மாதேவி said...

நன்றி சகோதரி

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி வசந்த்.. இது போன்று எழுத காரணம் ஒரு வகையில் நீங்கள் தான்..

#@#@#@#

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...


மிக்க நன்றி நண்பரே


@#@##$@##@#

பிறைத்தமிழன் said...

நன்றி சகோதரா

@#@#@#@@#

தோழி பிரஷா said...

நன்றி சகோதரி