இது ஒரு மென்பொருள் காதல்!

சில  வருடங்களுக்கு முன் MP4 பிளேயர் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு  அதில் MP3  பாட்டுக்களை மட்டுமே கேட்டு வந்தேன், காரணம் அதற்கு ஏற்ற வீடியோக்கள் கிடைக்க வில்லைநமக்கு தேவையான அனைத்து வீடியோ க்களும் youtube ல் இருந்தாலும் அதை  தரவிறக்கி  MP4 ல் play ஆகும் ஃபார்மெட்டா  மாற்ற முடியவில்லைமேலும் பெரிய வீடியோக்களிலிருந்து தேவையான பகுதியை வெட்டியெடுக்கும்படியாகவும் எந்த  மென்பொருளும் கிடைக்கவில்லை. அப்போது வரப்பிரசாதமாக கிடைத்த இரண்டு மென்பொருட்களை பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.




இந்த மென்பொருள் மூலம் Youtube, google, Yahoo, Metacafe, Dailymotion & Megavideo போன்ற தளங்களிலுள்ள  வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்யலாம். அதோடு மட்டுமல்லாமல் டவுன்லோட் செய்யும் போதே அந்த வீடியோக்களை நமக்கு தேவையான ஃபார்மெட்டில் மாற்றிக்கொள்ளலாம்.

முதலில்
Search Video என்ற பகுதியை select செய்து விட்டு search என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான வீடியோ சம்மந்தப்பட்ட சுட்டியை கொடுங்கள்,

Sites என்ற பகுதியில் கிளிக் செய்து உங்களுக்கு எந்த தளத்திலிருந்து வீடியோ வேண்டுமோ அதை தேர்வு செய்யலாம். இல்லையென்றால் All  தேர்வு செய்து Search செய்யலாம்.  மேலும் maxresult என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான எண்ணிக்கை தேர்வு செய்யலாம்.



நீங்கள்
search செய்தவுடன் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் வலது புறத்தில் வரும், அதில்  தேவையான வீடியோவை தேர்வு செய்யும் போது இடது பக்கத்தில் preview  வரும்வீடியோவை சரிபார்க்க வேண்டுமானால் Play செய்தும் பார்க்கலாம்.


வீடியோவை டவுன்லோட் செய்யும் முன்னர் மேலே உள்ள
Tube Downloader என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள், அப்போது கீழே  படத்தில் உள்ள படத்தில் உள்ள பக்கம் திறக்கும்.



இந்த பகுதியில் உங்களுக்கு தேவையான Video Format, Video Size, Bit Rate, Video Codac, Frame rate, Audio மற்றும் Output path போன்றவற்றை இங்கு தேர்வு செய்து டவுன்லோடை ஆரம்பிக்கலாம்.

PSP, 3G2, 3GP, WMV. MP4. AVI. MPEG2, போன்ற FORMET களில் வீடியோக்களை கன்வெர்ட் செய்யலாம்.  மேலும் ஆடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்கும் வசதியும் இதில் உள்ளது.



இந்த
FLV Converter ல் ஏற்க்கனவே நாம்மிடம் இருக்கும் வீடியோக்களை FLV போர்மெட்ல் மாற்றலாம். அது போன்றே  நம்மிடம் இருக்கும் FLV வீடியோக்களை நமக்கு தேவையான ஃபார்மெட்டில் மாற்றலாம். இதற்கான வசதி Conversion from FLV & Conversion to FLV என்றும் காட்டப்பட்டுள்ளது.



 வீடியோக்களை நமக்கு தேவையான  பார்மெட்டில்  எளிதில் கன்வெர்ட் செய்ய  இந்த மென்பொருள் மிகவும்  உபயோகமாக இருக்கிறது. 



இந்த மென்பொருள் மூலம் 3g2, 3gp, Asf, Avi, DVD (NTSC), DVD (PAL), Flv, ipad, iphone, Mp4, Mpeg-1, Mpeg-2, P3, PSP, WMV, Zune
      போன்ற பார்மெட்களில் வீடியோக்களை  கன்வெர்ட் செய்து கொள்ளலாம்.



வீடியோக்களில் ஒவ்வொரு பார்மெட்டிலும் வேறு வேறு codec உள்ளது. உதாரணமாக Avi  ல்  DIVX, DIVX5, H 263, MPEG-4, இது போன்று இன்னும் பல codec உள்ளன.  MP4 , DVD player , PSP , போன்றவற்றில் உபயோகமாவது AVI format ல் உள்ள வீடியோவாக இருந்தாலும் அவை இந்த codec-களை பொறுத்து  வேறுபடுகின்றன.  இது போன்று Audio codec களும் வேறுபடுகின்றன. 



இதில் கன்வெர்ட்டர்ல் வீடியோக்களை add செய்து, அது என்ன ஃபார்மட் என்றும் அதன் video codec , audio codec, bitrate  போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம் மேலும் வீடியோவிலிருந்து நமக்கு தேவையான பகுதியை மட்டும் தனியாக வெட்டியெடுக்கும் வசதியும் உள்ளது.

இந்த இரண்டு மென்பொருளையும் நீங்கள் KoyoteSoft.com ஒரே தளத்திலிருந்து இலவசமாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம், இவை மட்டுமல்லாமல் இந்த தளத்தில்Audio Converter, HD Converter, FLV Player, Free Easy CD DVD Burner, Videos To DVD மற்றும் பல மென்பொருட்கள் உள்ளன, இதில் பெரும்பாலானவை இலவசமே. சிலவற்றில் சில Advance option களுக்கு மட்டுமே நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஆப்சன்கள் பெரும்பாலும் நமக்கு தேவைப்படாது. மொத்தத்தில் இந்த சாஃப்ட்வேர் சாதாரண நபர்களுக்கு பெரும் பயன் அளிக்க கூடியவைகளாகும்.
 


15 comments:

Unknown said...

useful info. thanks.

Pranavam Ravikumar said...

A new Info..!

வைகை said...

நன்றிங்கோ...!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

useful information. thanks brother

எஸ்.கே said...

தமிழ்மண நட்சத்திர வாரத்தில் வித்தியாசமான பதிவு!

Anonymous said...

உபயோகமான தகவல்..
குறிப்பாக படங்களுடன் விளக்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
வெறும்பயலுக்கு வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெரிகுட் மச்சி, நானும் இதை ரொம்ப நாளாத்தேட்டிட்டு இருந்தேன்....!

'பரிவை' சே.குமார் said...

Very Useful post. Thanks...

செல்வா said...

அட இப்படி ஒரு சாப்டுவேர் இருக்கா ? எனக்கு பயன்படும் அண்ணா ..

சுசி said...

நல்ல பகிர்வு ஜயந்த்.

Mohamed Faaique said...

FREE என்றால் முதலிடம்.. அறியத்தந்தமைக்கு நன்றி...

= YoYo = said...
This comment has been removed by the author.
Sriakila said...

இதத்தான் தேடிக்கிட்டு இருந்தேன் ஜெயந்த். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

Anonymous said...

முதல்ல வாழ்த்துக்கள் மச்சி ..,யோவ் ஜோதி பதிவு மாதிரியே ஒன்னு போடுயா ..,டச்சிங்கா இருக்கும் ..,

மதுரை சரவணன் said...

பயனுள்ள இடுகை...வாழ்த்துக்கள்