பதிவுலகில் வெறும்பய எப்படிப்பட்டவன்..



தொடர்பதிவு எழுத அழைத்த நண்பர் கனவு பட்டறை சீமான்கனி மற்றும் ரசிகன் சௌந்தர் அவர்களுக்கு நன்றி.. (காத்திருக்கேன்..எப்பவாவது மாட்டுவீங்க)



1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

வெறும்பய


2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை, எனது உண்மையான பெயர் ஜெயந்த்..

பதிவு எழுத ஆரம்பிக்கும் போது இந்த பதிவுலகத்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.. ஏன், எதற்கு, எப்படி என்று எதுவுமே தெரியாது..(இப்ப தான் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன்) நம்ம மேல் மாடி (அது தாங்க மூளை) எப்பவுமே காலி தான்... யோசிச்சு பார்த்தேன்.. இது தான் நமக்கு பொருத்தமா இருக்குமுன்னு தோணிச்சு.. அதனால தான் இந்த வெறும்பய...

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..


பதிவுலகத்தை பற்றி எனக்கு தெரியாமல் இருந்த காலத்தில் இப்படி ஓன்று இருக்கிறது.. இதில் உன் எண்ணங்கள், கருத்துக்கள், கற்பனை, காதல் என்று எதை பற்றி வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த மேடையை எனக்கு சுட்டிக்காட்டியவர் என் அறைத்தோழர் சரவணன் என்பவர் தான்..( இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்). பதிவுலகில் நான் படித்த முதல் இடுகை வெளியூர்காரனின் .ஐ லவ் யு பை சைந்தவி மற்றும் மீ டூ சைந்தவி...! - சைந்தவி புருஷன். என்ற இடுகையும் என்னை மிகவும் கவர்ந்தது. ( படிச்சு பாருங்க.. உங்களுக்கும் பிடிக்கும்). இது போன்ற நான் படித்து ரசித்த பல இடுகைகள் தான் காரணம்...



4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா.. நானா... அட போங்க சார்.. காமெடி பண்ணிக்கிட்டு..

தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில இணைத்ததால் கொஞ்சம் பேருக்கு தெரியும், பின்னர் தீராத பக்கங்கள் மாதவராஜ் அண்ணன் மற்றும் வலைச்சரத்தில் சகோதரர் தேவா மற்றும் KRP செந்தில் ஆகியோர் புதிய பதிவர் என்று அறிமுகப்படுத்தினார்கள்.. இதனால் இன்னும் கொஞ்சம் பேருக்கு தெரியும்.. யூத்புல் விகடன் பரிந்துரைத்த இன்றைய இயக்குனர் - அடூர் கோபாலகிருஷ்ணன் சிலரை அழைத்து வந்தது.. மத்தபடி நான் வெறும்பய தான்..

பிரபலம்ன்னா என்ன.. பிரபலம் ஆக என்ன பண்ணனும் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு..உங்களுக்கு புண்ணியமா போகும்..


5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சில இடங்களில் மட்டும் சொந்த விசயங்கள் இலைமறை காயாக வந்து போனதுண்டு.. காரணம் சொல்லத் தெரியவில்லை..அதோட விளைவு படிச்ச உங்களுக்கு தான் தெரியும்..


6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சொன்னா நம்ப மாட்டீங்க.. ரெண்டு BMW கார், OMR ல ஒரு பங்களா வாங்கியிருக்கேன்.. (சும்மா கடுப்புகள கிளப்பிகிட்டு)

பொழுது போக்கிற்காக எழுத ஆரம்பித்தது தான் ஆனால் இப்போது மொத்த பொழுதும் இதில் தான் போய் கொண்டிருக்கிறது..
சம்பாத்தித்து என்றால் நல்ல நட்புகள், சகோதரர்கள், சகோதரிகள் என ஏராளமான நல்ல இதயங்களை தான்...


7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணே ஒண்ணு தான்.. அதுவும் தமிழில் தான் இருக்கு.. இத கட்டி மேய்க்கிறதுக்கே படாத பாடு படவேண்டியிருக்கு..


8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கண்டமேனிக்கு கோபம் வந்திருக்கிறது.. சாதி மாதம் என்ற பெயரில் சாடுபவர்கள் மீதும், சண்டையிடுபவர்கள் மீது கோபம் .. குறையவில்லை இன்னும் இருக்கிறது..

பொறாமை.. நான் படிக்கும் அத்தனை பதிவர்கள் மீதும் வந்ததுண்டு..எல்லோருமே அருமையா எழுதுறாங்க..(என்ன பாக்கிறீங்க.. உங்களை பற்றி தான் சொல்லிகிட்டிருக்கேன்)


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பட்டாபட்டி.. said...
வாங்கய்யா வெறும்பயலே.. வந்தாச்சு.. இருந்தாச்சு.. போயாச்சுனு இல்லாம, நீங்களாவது நல்லா எழுதுங்க..
இது தான் எனக்கு வந்த முதல் பின்னூட்டம்.. இதில் மேற்கூறிய வார்த்தைகள் தான் என்னை இன்றும் எழுத வைத்து கொண்டிருக்கிறது..

முதலில் தொடர்பு கொண்டு பாராட்டியவர் ! பனித்துளி சங்கர் ! அவர்கள் தான்.. அடுத்தது அலைவரிசை அஹமது இர்ஷாத், தேவா அண்ணன், நண்பன் ஜில்ல்தண்ணி என எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது...


10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

என்னை பற்றி சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்லங்க.. அந்த அளவு நான் இன்னும் வளரவும் இல்ல..




52 comments:

Unknown said...

//பிரபலம்ன்னா என்ன.. பிரபலம் ஆக என்ன பண்ணனும் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு..உங்களுக்கு புண்ணியமா போகும்..//

நம்மால நாமே சொல்லிகிட்டாதான்.. பத்து நாள் எழுதலேன்னா மறந்துடுவாங்கன்னு தம்பி சௌந்தர் சொன்னார், அது எல்லோருக்கும் பொருந்தும்...

ஜீவன்பென்னி said...

சூப்பரா சொல்லியிருக்கீங்க.

இந்த பிரபலம்ணா என்னங்குறதுக்கு சவுந்தர நானும் வழிமொழிகின்றேன்.

எல் கே said...

//சம்பாத்தித்து என்றால் நல்ல நட்புகள், சகோதரர்கள், சகோதரிகள் என ஏராளமான நல்ல இதயங்களை தான்...///

unmaithan

விஜய் said...

கொஞ்சம் கூட பந்தா இல்லாம, அழகா யதார்த்தமா எழுதி இருக்கீங்க ஜெயந்த்.....அருமை, வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நம்மால நாமே சொல்லிகிட்டாதான்.. பத்து நாள் எழுதலேன்னா மறந்துடுவாங்கன்னு தம்பி சௌந்தர் சொன்னார், அது எல்லோருக்கும் பொருந்தும்...

///

ஜீவன்பென்னி said...

சூப்பரா சொல்லியிருக்கீங்க.

இந்த பிரபலம்ணா என்னங்குறதுக்கு சவுந்தர நானும் வழிமொழிகின்றேன்.

//


பத்து நாளெல்லாம் கொஞ்சம் அதிகம் தான் .. மூணு நாளு ஆனாலே ஒரு ஈ கூட வரமாட்டேங்குது...

என்ன பண்றது.. யாரவது சொல்லுங்களேன்...

Jey said...

நீரு வெறும்பய இல்லைய்யா, விஷயமுள்ளவன்.
பதிகளில் யதார்த்தம்.:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

LK said...

//சம்பாத்தித்து என்றால் நல்ல நட்புகள், சகோதரர்கள், சகோதரிகள் என ஏராளமான நல்ல இதயங்களை தான்...///

unmaithan

///

Brother thanks for comming..

Jey said...

மொய் எழுதுனா மாதிரி 101 வது follower நான்:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

விஜய் said...

கொஞ்சம் கூட பந்தா இல்லாம, அழகா யதார்த்தமா எழுதி இருக்கீங்க ஜெயந்த்.....அருமை, வாழ்த்துக்கள்

///

நன்றி விஜய்... உண்மையா சொல்றதுக்கு எதுக்கு பந்தா பண்ணனும் ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jey said...

நீரு வெறும்பய இல்லைய்யா, விஷயமுள்ளவன்.
பதிகளில் யதார்த்தம்.:)

//

நன்றிங்கண்ணா...

ஓவரா புகழாதிங்க வெக்கமா இருக்கு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jey said...

மொய் எழுதுனா மாதிரி 101 வது follower நான்:)

///

நூறாவதா வந்த நண்பர் சீமான்கனிக்கும்,101 வந்த அண்ணன் ஜெய் அவர்களுக்கம் நன்றிகள்..

இருவருக்கும் வேரும்பயலின் சார்பாக மொக்கை முதலாளி கோமாளி செல்வா 1000 பொற்காசுகள் வழங்குவார்..

சௌந்தர் said...

நன்றி நண்பா உன் மனதில் இருக்கும் பதில்கள் அழகா வந்து உள்ளது...

Unknown said...

/பத்து நாளெல்லாம் கொஞ்சம் அதிகம் தான் .. மூணு நாளு ஆனாலே ஒரு ஈ கூட வரமாட்டேங்குது...

என்ன பண்றது.. யாரவது சொல்லுங்களேன்.//

அப்பட்டமான உண்மை நண்பரே...ஒரு மூணு நாள் பதிவு போடாம விட்டு பாருங்களேன்..ஒரு ஈ காக்கா தேடாது!!

செல்வா said...

///பிரபலம்ன்னா என்ன.. பிரபலம் ஆக என்ன பண்ணனும் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு..உங்களுக்கு புண்ணியமா போகும்..////

அண்ணா அது சப்ப மேட்டர்..பிரபலம் ஆகணும்னா ......... புரிஞ்சுதுல்ல. நான் ஏன் இங்க புள்ளி வச்சேன்னா மத்தவங்களுக்கு தெரிஞ்சிடக்கூடாதுள்ள..!!

செல்வா said...

//ரெண்டு BMW கார், OMR ல ஒரு பங்களா வாங்கியிருக்கேன்.. ///
அப்புறம் உங்களோட 50 வது பதிவு போட்டதுக்கு எங்களுக்கு பைவ் ஸ்டார் ஓட்டல் கட்டி கொடுதீங்கள்ள ..அத மறந்துட்டீங்க ..!!

செல்வா said...

.ஐ லவ் யு பை சைந்தவி படிச்சேன் அண்ணா ..!
ஹய்யோ .. இவ்ளோ நல்ல கதை எழுத முடியுமா ..? நான் எழுதுற சிரிப்பு கதையெல்லாம் இதுல பாதி கூட வராது போலேயே ..!!

அம்பிகா said...

வெளிப்படையான பதில்கள்.
நல்லபகிர்வு.

வினோ said...

இது கொஞ்சம் over தன்னடக்கம் மாதிரி இல்ல தெரியுது.. :) (kidding)

நல்ல பகிர்வு நண்பா.. நன்றி..

Sriakila said...

ஜெயந்த்,

அனைத்து பதில்களும் அருமை. நீங்க நிச்சயமாக வெறும்பய இல்லை, விஷயம் உள்ளவர்தான். உங்கள் பதிவில் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளது.

ஜெய்லானி said...

உங்க ஸ்டைலில சொல்லிருக்கீங்க ..சூப்பர்...!!!

Prathap Kumar S. said...

//பிரபலம்ன்னா என்ன.. பிரபலம் ஆக என்ன பண்ணனும் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு..உங்களுக்கு புண்ணியமா போகும்..//

ஒரு புனைவு போட்டு வுடுப்பா..அப்புறம் பாரு எங்கேயோ போய்டுவ...:))

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

நன்றி நண்பா உன் மனதில் இருக்கும் பதில்கள் அழகா வந்து உள்ளது...

///

நண்பா முதல் பாராவ படிச்சியா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

mynthan said...

அப்பட்டமான உண்மை நண்பரே...ஒரு மூணு நாள் பதிவு போடாம விட்டு பாருங்களேன்..ஒரு ஈ காக்கா தேடாது!!

//

நண்பரே.. நீங்களும் என்னை போலவே பாதிக்கப்பட்டிருக்கீங்க போல..

கவலைப்படாதிங்க.. இதுக்காகவே ஒரு சங்கம் ஆரம்பிச்சிருவோம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

அண்ணா அது சப்ப மேட்டர்..பிரபலம் ஆகணும்னா ......... புரிஞ்சுதுல்ல. நான் ஏன் இங்க புள்ளி வச்சேன்னா மத்தவங்களுக்கு தெரிஞ்சிடக்கூடாதுள்ள..!!

///

தம்பி..... நான் புரிஞ்சுகிட்டேன்... அப்படியே பண்ணிருவோம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

//ரெண்டு BMW கார், OMR ல ஒரு பங்களா வாங்கியிருக்கேன்.. ///
அப்புறம் உங்களோட 50 வது பதிவு போட்டதுக்கு எங்களுக்கு பைவ் ஸ்டார் ஓட்டல் கட்டி கொடுதீங்கள்ள ..அத மறந்துட்டீங்க ..!!

//

தம்பி.. சத்தம் போட்டு சொல்லாதப்பா... இன்கம்டேக்ஸ் பிரச்சன வந்திரப்போகுது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

.ஐ லவ் யு பை சைந்தவி படிச்சேன் அண்ணா ..!
ஹய்யோ .. இவ்ளோ நல்ல கதை எழுத முடியுமா ..? நான் எழுதுற சிரிப்பு கதையெல்லாம் இதுல பாதி கூட வராது போலேயே ..!!

//


ப்ரீயா விடு.. முன்றால் முடியாதது எதுவும் இல்லை.. நாமளும் முயற்சி செய்வோம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said...

இது கொஞ்சம் over தன்னடக்கம் மாதிரி இல்ல தெரியுது.. :) (kidding)

நல்ல பகிர்வு நண்பா.. நன்றி..

//

நீங்கெல்லாம் இருக்கிறப்போ எப்படி சார்... அதனால தான் இந்த அடக்கம்..

வருகைக்கு நன்றி நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Sriakila said...

ஜெயந்த்,

அனைத்து பதில்களும் அருமை. நீங்க நிச்சயமாக வெறும்பய இல்லை, விஷயம் உள்ளவர்தான். உங்கள் பதிவில் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளது.

///


வருகைக்கு நன்றி சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அம்பிகா said...

வெளிப்படையான பதில்கள்.
நல்லபகிர்வு.

///

வருகைக்கு நன்றி சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜெய்லானி said...

உங்க ஸ்டைலில சொல்லிருக்கீங்க ..சூப்பர்...!!!

//

எல்லாம் உங்க ஆசி தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாஞ்சில் பிரதாப் said...

//பிரபலம்ன்னா என்ன.. பிரபலம் ஆக என்ன பண்ணனும் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு..உங்களுக்கு புண்ணியமா போகும்..//

ஒரு புனைவு போட்டு வுடுப்பா..அப்புறம் பாரு எங்கேயோ போய்டுவ...:))

//

நான் இந்த உலகிற்கு வந்த புதிதில் இது போன்ற புனைவு பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருந்தது...

ஆனாலும் பிரபலம் ஆகணுமே..

அதுக்காகவே ஒரு புனைவு போட வேண்டியிருக்கும் போல இருக்கே..

Gayathri said...

அருமையா எதார்த்தமா எழுதிருக்கிங்க..அனைத்து பதில்களுமே மிகவும் ரசிக்க வைத்தது...வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

நல்ல பதில்கள்

பா.ராஜாராம் said...

அருமையான பதில்கள் ஜெயந்த்! :-)

கடிதத்திற்கு நன்றி.

சீமான்கனி said...

சுவையான பதில்கள் ஜெயந்த் பகிர்வுக்கு நன்றி...ஆமாம் அந்த ஆயிரம் பொற்காசு எப்போ வரும்...??

எப்பூடி.. said...

சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

;) good

ஆ.ஞானசேகரன் said...

உங்களைப்பற்றி தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி

மங்குனி அமைச்சர் said...

very good , romba nermaiyaa ayeluthi irukkinga

a said...

நல்லா சொல்லீஇருக்கீங்க...........

ஜெயந்த் கிருஷ்ணா said...

Gayathri

தமிழ் உதயம்

பா.ராஜாராம்

சீமான்கனி

எப்பூடி..

ப்ரியமுடன் வசந்த்

ஆ.ஞானசேகரன்

மங்குனி அமைசர்

வழிப்போக்கன் - யோகேஷ்

///

அனைவருக்கும் நன்றிகள் பல...

வந்தமைக்கும்..

வாழ்த்தியமைக்கும்...

கவி அழகன் said...

நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

Veliyoorkaran said...

Machi all the best..!

Kalakku vaathyaare kalakku...! :)

Praveenkumar said...

ரொம்ப இயல்பாகவும், சுசவயாகவும் உங்களைபத்தி சொல்லியிருக்கீங்க.. வாழத்துகள் மற்றும் பாராட்டுகள் நண்பா... தொடர்ந்து கலக்குங்க...

dheva said...

தம்பி.. நீ பிரபல பதிவர்தானப்பா.....அதில் என்ன சந்தேகம்...உனக்க்கு...

வெறும்பயலா இருக்க நீ எப்பவோ பெறும்பயலா ஆயச்சுப்பா...


Simple and straight answers pa! cool............!

Unknown said...

ULLEN IYYA.

SUPER...ANSWERS...

Unknown said...

48,,

Unknown said...

49...

Unknown said...

50 hey am the ...comments..

enakuthan vadai...

Unknown said...

51 & not out..சம்பாத்தித்து என்றால் நல்ல நட்புகள், சகோதரர்கள், சகோதரிகள் என ஏராளமான நல்ல இதயங்களை தான்---konjam nalla ethirigalai vittuvitengal......

உதவாக்கரை said...

பெயரில் மட்டும் தான் உன்னிடம் வெறுமை,
உன் படைப்புகளைப் பார்த்தால் அருமை,
உன்னிடம் நட்பு பாராட்டினால் பெருமை,

சிவகுமாரன் said...

நீங்கள் வெறும்பய இல்லீங்க. "பெரும்"பய. எனக்கு என் வலைப்பக்கத்தை எப்படி பராமரிக்கிரதுன்னு கூட தெரியலங்க. ரொம்ப காலமா கவிதை எழுதி எழுதி மறைச்சு வச்சுக்குவேன். நெறைய கத்துக்கனுங்க உங்ககிட்ட இருந்து. அடிக்கடி வர்றேன்