பள்ளிச் சீருடை அணிந்த காலத்தில் மனதில் பதிந்தவை இந்த வாள் வீச்சு வீரர்களும் அவர்களின் வரலாறுகளும். புத்தகத்தில் படித்த மன்னர்களையும் வீரர்களையும் மனதில் உருவகப்படுத்தி அட்டையால் வாள் செய்து சிறு வயதில் விளையாடிய நினைவுகள் இன்னும் நீங்கவில்லை.
இலக்கணங்களும், இலக்கியங்களும், வரலாறுகளும் கற்றுக் கொடுத்த புத்தகங்களோடு பிணைந்திருந்த பள்ளிக்காலத்திலிருந்து விடு பட்டு கல்லூரியில் கால் வைத்த நாள் முதல் இலக்கியங்களும், இலக்கணங்களும் உருமாறி இயற்பியலும், இயந்திரவியலுமாயின. வரலாறு புத்தகங்கள் உருமாறி என் கையில் வாகனங்களின் உதிரிபாகங்கள் ஆனது. இப்படி ஏறக்குறைய மறந்தே போன வாசிப்புகளும் வரலாறுகளும் இந்த பதிவுலகத்தினால் திரும்ப கிடைத்த மகிழ்ச்சியோடு.. மன்னாதி மன்னன் என்ற தலைப்பில் என்னை தொடர் பதிவு அழைத்த நண்பன் ஜில்ல்தண்ணி யோகேஷுக்கு நன்றியுடன் தொடர்கிறேன்..
******************************
மன்னாதி மன்னன் - பாபர்
நாகரீகமும், கல்வியறிவும் ராஜதந்திரமும் கொண்ட துருக்கிய ரத்தமும், எதற்கும் அஞ்சாத போர் வீரம் கொண்ட மங்கோலிய ரத்தமும் சேர்ந்தால் எப்படி இருக்கும்.. அதற்கு உதாரணம் தான் பாபர். ஆகையால் தான் சாதாரண மனிதர்களால் எண்ணிப் பார்க்க முடியாத சோதனைகளை கடந்து, இந்தியாவில் ஒரு புகழ் பெற்ற சாம்ராஜ்யத்தை துவங்கி புகழ் பெற முடிந்தது. (ஒரு வேலை பாபர் இந்தியாவிற்கு வராவிட்டால் இன்றளவும் உலகம் முழுவதும் காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் நமக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே..)
துருக்கிய மன்னன் தைமூரின் பரம்பரையில் வந்த உமர் ஷேக் மிர்சா என்ற சிற்றரசனுக்கும், மங்கோலிய மாவீரன் செங்கிஸ்தான் பரம்பரையில் வந்த குத்லூக் நிகார் என்பவருக்கும் பிறந்தவர் தான் பாபர்.
1494 ல் பாபரின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விடவே பர்கானா என்ற சிற்றரசின் பொறுப்பை பாபர் ஏற்றுக் கொண்டார். அப்போது பாபருக்கு வயது பதினொன்று மட்டுமே. இத்தனை கேள்விப் பட்ட அண்டை நாட்டு சிற்றரசர்கள் ஒரு சிறுவன் தானே என்று படையெடுத்து வந்தவர்களை வென்று சின்னஞ்சிறு வயதிலையே தான் வீரத்தை நிலை நாட்டினார் பாபர். அதோடு நின்று விடாமல் தான் பதிமூன்றாம் வயதில் சாமர்கண்ட் நகரையும் கைப்பற்றினார்.
சாமர்கண்ட் நகரில் திடீரென தோன்றிய பஞ்சத்தால் பாபர் மக்களின் செல்வாக்கை இழந்ததோடு மட்டுமல்லாமல் சாமர்கண்ட் நகரையும் இழந்தார். அதே சமயம் அண்டை நட்டு அரசர்களின் சூழ்ச்சியால் தனது சொந்த நாடான பெர்கனாவையும் இழந்தார் பாபர். பின்னர் சில நாட்களிலையே ஒரு சிறு படையை திரட்டி பெர்கானாவை கைப்பற்றினார். இது போன்று பலமுறை இழப்பதும் பெறுவதுமாக வதியின் காலடியில் மிதிபடும் பந்தாக பலமுறை சிக்கிக் கொண்டு அங்குமிங்குமாக அலைகழிக்கப்பட்டார் பாபர்.
இப்படி விதியின் விளையாட்டினால் அலைகழிக்கப் பட்ட பாபர் எப்படி மீண்டும் மன்னரானார் என்றும், இந்தியாவில் எவ்வாறு சாம்ராஜ்யம் அமைத்தார் என்பதையும் கூடிய விரைவில் மீண்டுமொரு பதிவில் தொடருகிறேன்....
என்னடா இவன் தொடர்பதிவுக்கே தொடரும் போட்டு எழுதுறானே அப்படீன்னு பாக்குறீங்களா.. வேற என்னங்க பண்றது.. எல்லாம் நம்மாளுங்க பண்றது தான்.. ஆமாங்க பதிவ கொஞ்சம் நீளமா பெருசா எழுதினா அதை படிக்காமலையே ஆஹா.. அருமை.. பின்னிட்டீங்க.. கலக்குறீங்க.. இப்படி பின்னூட்டம் போட்டுட்டு போயிடுறாங்க.. அதனால தான் நீங்க கஷ்டப் படக்கூடாது என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இந்த தொடரும்..
மன்னாதி மன்னனுக்கு உதவிய மதனின் வந்தார்கள் வென்றார்களுக்கு நன்றி..
54 comments:
ஜெயந்த் என்ன ஒரு முன்னெச்சரிக்கை. தொடருங்கள்...
நண்பா இதை காபி செய்தாய் சொன்ன வசதியா இருக்கும்
nice pictures machchan
என்னடா இவன் தொடர்பதிவுக்கே தொடரும் போட்டு எழுதுறானே அப்படீன்னு பாக்குறீங்களா.. வேற என்னங்க பண்றது.. எல்லாம் நம்மாளுங்க பண்றது தான்.. ஆமாங்க பதிவ கொஞ்சம் நீளமா பெருசா பதிவு எழுதினா அதை படிக்காமலையே ஆஹா.. அருமை.. பின்னிட்டீங்க.. கலக்குறீங்க.. இப்படி பின்னூட்டம் போட்டுட்டு போயிடுறாங்க.. அதனால தான் நீங்க கஷ்டப் படக்கூடாது என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இந்த தொடரும்..////
அருண் பிரசாத்தை சொல்லணும் என்றால் நேரடியா சொல்லு நண்பா அவர் ஏதும் சொல்ல மாட்டார்
ஓகே. ஓகே ..
சின்ன பதிவா இருப்பதல் தான் நல்லா இருக்கு தொடரு நண்பா
ம்ம்ம் தெளிவா இருக்கு மச்சி :)
பள்ளிகாலங்களில் படித்த வரலாறு மீண்டும்.... ம் தொடருங்கள்.
anna paadi inga irkku... meethi enga na
வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் மதன் விறுவிறுப்பாக கொண்டு செல்வார். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
தொடருங்கள் வெறும்பய
//அருண் பிரசாத்தை சொல்லணும் என்றால் நேரடியா சொல்லு நண்பா அவர் ஏதும் சொல்ல மாட்டார்//
@ செளந்தர்
என்னை வம்புக்கு இழுக்கலைன்னா தூக்கம் வரதாப்பா உனக்கு!
//அருண் பிரசாத்தை சொல்லணும் என்றால் நேரடியா சொல்லு நண்பா அவர் ஏதும் சொல்ல மாட்டார்//
உன் கதையை ரொம்ப பொருமையா படிச்சி கமெண்ட் போட்டா, இப்படியா சொல்லுறது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இது எம்புட்டு நாளா நடக்குது...? சொல்லவேயில்ல ?
தொடர்ந்ததுக்கு நன்றி...
நன்றாக இருக்கிறது. தொடருங்கள். காத்திருக்கிறேன்.
அழகு தல.., நாடோடி, மன்னன் ஆன கதை.,
ஆஹா.. அருமை.. பின்னிட்டீங்க.. கலக்குறீங்க..
இல்லைங்க, வாசிச்சதுக்கப்புறந்தான் சொல்லுறன், தொடருங்கள் :-)
வரலாற்றை திரும்ப நினைவு படுத்தி ....... தொடர்ந்து சொல்லுங்க.... :-)
தொடருங்கள்......
ம்.. நைஸ்!
காத்திருக்கிறேன்.
//ஆமாங்க பதிவ கொஞ்சம் நீளமா பெருசா எழுதினா அதை படிக்காமலையே ஆஹா.. அருமை.. பின்னிட்டீங்க.. கலக்குறீங்க.. இப்படி பின்னூட்டம் போட்டுட்டு போயிடுறாங்க.. அதனால தான் நீங்க கஷ்டப் படக்கூடாது என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இந்த தொடரும்.. ///
ஹா ஹா ஹா.. இவ்ளோ தெளிவா இருக்கீங்க.. :-)))
பாபர் பற்றி..இதுவரை சொன்ன தகவலுக்கு நன்றி..
புதிய(பழய) தகவல்கள்..................... அடுத்த பதிவும் கண்டிப்பா படிக்கிரேன்......
இந்த காலத்தில் யாரு வரலாற பற்றி எழுதுறாங்க, நீங்கள் எழுதிய்தும் இல்லாம அழகா அதற்கு தோதுவான படமும் போட்டு அசத்தி இருக்கிங்க.
ஆஹா.. அருமை.. பின்னிட்டீங்க.. கலக்குறீங்க
///அப்போது பாபருக்கு வயது பதினொன்று மட்டுமே. ///
நம்பவே முடியல ..!!
///அதனால தான் நீங்க கஷ்டப் படக்கூடாது என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இந்த தொடரும்.. ///
என்ன ஒரு நல்ல எண்ணம். ரொம்ப நல்லவர் neenka ...
விரைவில் தொடருங்க ..
அப்புறம் பாபர் இந்த பேர கேள்விப் பட்டிருக்கேன் .. ஆனா பள்ளிக்கூடத்துல படிச்சேனா அப்படின்னு எனக்கு நியாபகம் இல்லை .. சீக்கிரம் எழுதுங்க தெரிஜிக்கிறேன் ..
வினோ said...
ஜெயந்த் என்ன ஒரு முன்னெச்சரிக்கை. தொடருங்கள்...
//
என்ன பண்றது நண்பரே... வேற வழி...
சௌந்தர் said...
நண்பா இதை காபி செய்தாய் சொன்ன வசதியா இருக்கும்
//
ரகசியங்கள் பாதுகாக்கப் படவேண்டியவை..
Anonymous said...
nice pictures machchan
//
Thanks mAmA
சௌந்தர் said...
அருண் பிரசாத்தை சொல்லணும் என்றால் நேரடியா சொல்லு நண்பா அவர் ஏதும் சொல்ல மாட்டார்
//
நீயாவது புரிஞ்சுகிட்டியே..
கே.ஆர்.பி.செந்தில் said...
ஓகே. ஓகே ..
//
அண்ணா நீங்க சொன்னா சரி தான்..
சௌந்தர் said...
சின்ன பதிவா இருப்பதல் தான் நல்லா இருக்கு தொடரு நண்பா
//
நன்றி நண்பா... நிச்சயமாக தொடருவோம்..
ஜில்தண்ணி - யோகேஷ் said...
ம்ம்ம் தெளிவா இருக்கு மச்சி :)
//
Thanks Machi...
அம்பிகா said...
பள்ளிகாலங்களில் படித்த வரலாறு மீண்டும்.... ம் தொடருங்கள்.
//
வருகைக்கு நன்றி சகோதரி..
MD Mahin said...
anna paadi inga irkku... meethi enga na
//
கூடிய சீக்கிரம் வந்திரும்... Mahin
அருண் பிரசாத் said...
வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் மதன் விறுவிறுப்பாக கொண்டு செல்வார். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
தொடருங்கள் வெறும்பய
//
படித்தால் முடிக்காமல் வைக்க முடியாது "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தை.. அவ்வளவு சுவாரசியமான புத்தகம் ..
வருகைக்கு நன்றி நண்பரே..
ஜெரி ஈசானந்தன். said...
இது எம்புட்டு நாளா நடக்குது...? சொல்லவேயில்ல ?
//
இப்ப சொல்லிட்டமுல்ல ..
மகேஷ் : ரசிகன் said...
தொடர்ந்ததுக்கு நன்றி...
நன்றாக இருக்கிறது. தொடருங்கள். காத்திருக்கிறேன்.
//
வருகைக்கு நன்றி நண்பரே.. கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்..
SUREஷ் (பழனியிலிருந்து) said...
அழகு தல.., நாடோடி, மன்னன் ஆன கதை.,
//
வருகைக்கு நன்றி அண்ணா..
இது கதையல்ல நிஜம்..
எப்பூடி.. said...
ஆஹா.. அருமை.. பின்னிட்டீங்க.. கலக்குறீங்க..
இல்லைங்க, வாசிச்சதுக்கப்புறந்தான் சொல்லுறன், தொடருங்கள் :-)
//
எனக்கு தெரியும் தோழரே.. நீங்க வாசிக்காம போகமாட்டீங்க...
Chitra said...
வரலாற்றை திரும்ப நினைவு படுத்தி ....... தொடர்ந்து சொல்லுங்க.... :-)
//
வருகைக்கு நன்றி சகோதரி..
கலாநேசன் said...
தொடருங்கள்......
//
வருகைக்கு நன்றி சகோதரா...
Balaji saravana said...
ம்.. நைஸ்!
காத்திருக்கிறேன்.
//
வருகைக்கு நன்றி சகோதரா...
Ananthi said...
ஹா ஹா ஹா.. இவ்ளோ தெளிவா இருக்கீங்க.. :-)))
பாபர் பற்றி..இதுவரை சொன்ன தகவலுக்கு நன்றி..
//
இனியெல்லாம் இப்படி இருந்தா பொழைக்க முடியும்..
வருகைக்கு நன்றி சகோதரி..
வழிப்போக்கன் - யோகேஷ் said...
புதிய(பழய) தகவல்கள்..................... அடுத்த பதிவும் கண்டிப்பா படிக்கிரேன்......
//
வருகைக்கு நன்றி சகோதரா.... கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்..
Jaleela Kamal said...
இந்த காலத்தில் யாரு வரலாற பற்றி எழுதுறாங்க, நீங்கள் எழுதிய்தும் இல்லாம அழகா அதற்கு தோதுவான படமும் போட்டு அசத்தி இருக்கிங்க.
//
மிக்க நன்றி சகோதரி.. முதல் முறையாக வந்திருக்கிறீர்கள்.. அடிக்கடி வாசிக்க வாருங்கள்..
யாதவன் said...
ஆஹா.. அருமை.. பின்னிட்டீங்க.. கலக்குறீங்க
//
நெசமாத் தான் சொல்றீகளா...
ப.செல்வக்குமார் said...
அப்புறம் பாபர் இந்த பேர கேள்விப் பட்டிருக்கேன் .. ஆனா பள்ளிக்கூடத்துல படிச்சேனா அப்படின்னு எனக்கு நியாபகம் இல்லை .. சீக்கிரம் எழுதுங்க தெரிஜிக்கிறேன்
//
கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்
nice post continue!
nice jay....proceed...
always its nice thing to read the past history...for a change
pon
nice jay....proceed...
always its nice thing to read the past history...for a change
pon
ஆகா பின்னொ பின்னுன்னு பின்னிட்டேள்.
//என்னடா இவன் தொடர்பதிவுக்கே தொடரும் போட்டு எழுதுறானே அப்படீன்னு பாக்குறீங்களா.. வேற என்னங்க பண்றது.. எல்லாம் நம்மாளுங்க பண்றது தான்.. ஆமாங்க பதிவ கொஞ்சம் நீளமா பெருசா எழுதினா அதை படிக்காமலையே ஆஹா.. அருமை.. பின்னிட்டீங்க.. கலக்குறீங்க.. இப்படி பின்னூட்டம் போட்டுட்டு போயிடுறாங்க.. அதனால தான் நீங்க கஷ்டப் படக்கூடாது என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இந்த தொடரும்//
இதத்தான் சொன்னேன்.
ஆனாலும் தொடர் சூப்பர் தொடருங்க.
அதுசரி நலமா இருக்கிகளா..
ரொம்ப நாளாச்சில்ல அதேன் கேட்டேன்..
//பதிவ கொஞ்சம் நீளமா பெருசா எழுதினா அதை படிக்காமலையே ஆஹா.. அருமை.. பின்னிட்டீங்க.. கலக்குறீங்க.. இப்படி பின்னூட்டம் போட்டுட்டு போயிடுறாங்க..//
நல்ல கணிப்புங்க
பள்ளிக்காலத்திலேயே நமக்கு ஹிஸ்ட்ரின்னா அலர்ஜி, இங்கேயுமா?
நல்லாத்தானே இருந்தீங்க. ஏன் இப்படி? வெறும்பயன்னு பேரை வச்சிக்கிட்டு இப்படிப்பட்ட விஷயமெல்லாம் எழுதினா என்னப் பண்றது?
ரொம்ப ஆர்வமா படிக்க வந்தா... இப்படி பட்டுன்னு முடிச்சிட்ட... முக்கியமான விசங்கள் மட்டுமே நிறைய எழுதுங்க... வரலாறு எனக்கு ரொம்ப ஆர்வம்
Post a Comment