"அவனோடு தான் அவளும் வருவாள்".

அதிகாலை நேரம்.. அரைகுறை தூக்கம் .. அவசர அவசரமாய் எழுந்தேன்.. தட்டு தடுமாறி இருட்டில் தேடிப்ப் பிடித்து அலாரத்தை எடுத்து நேரத்தை பார்த்தேன்..இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது வழக்கமாய் நான் தூங்கம் கலைக்கும் நேரத்திற்கு.. தினமும் ஓலமிட்டு அடங்கும் அலார சத்தத்திற்கு பதிலாக துடிக்க ஆரம்பித்துவிட்டது என் இதயம்.. அவன் வருவான்..

"அவனோடு தான் அவளும் வருவாள்".

முதல் பார்வையிலேயே எனக்குள் ஊடுருவி என்னையும் என் எண்ணங்களையும் கலைத்து போட்ட பாதகி அவனுடன் தான் வருவாள்..


கடமைக்காக குளித்தேன். அம்மா ஆசையாய் கொடுத்த இட்லிகளில் ஒன்றை எடுத்து ஓரமாய் கடித்து மீதி வைத்து.. தேடி எடுக்க நேரமில்லாமல் கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்துவிட்டேன்..

தினமெனக்கு தகவல் சொல்லும் பூக்கடை நண்பனிடம் விசாரித்தேன்.. அவன் வந்து விட்டானா..? என்று.. இல்லை என்றான்.. நிம்மதி பெருமூச்சுடன் என்னை நானே நிதானப் படுத்தி சுதந்திரமாய் சுவாசித்தேன்..அவனுக்கு முன் வந்த கர்வத்துடன் காத்து நின்றேன்.. அவனுடன் வரும் அவளுக்காக..

"அவன்".. இப்பொழுதெல்லாம் முன்பு மாதிரியில்லை நேரம் தவறாமல் வருவது கிடையாது.. அவனுக்கு வயது கொஞ்சம் அதிகம், அதனால் தானோ என்னவோ எதற்கும் அவசரப்படுவதில்லை.. நண்பர்களால் அவனுக்கு கிடைத்த பெயர் கட்டபொம்மன், ஆனால் அதற்கேற்ற வீரம் அவனிடம் இல்லை.. முப்பது மைல் வேகம் தாண்டினால் மூச்சு நின்று விடுவது போல சத்தமிடுவான்.. இதயம் நின்று விடக் கூடாதென்பதற்காக இடையிடையே இளைப்பாறிக் கொள்வான்..

யாரோ வருகிறார்கள்.. அது... அவன் தான்.. அவனே தான்..

கரும்புகையை காற்றிக்கு காணிக்கை கொடுத்துவிட்டு.. புழுதிப் படலங்களுக்கு மத்தியில் பூவைப் போல அவன் வந்து நிற்கிறான் என் முன்னால்..அவளும் அவனுடன் தான் வந்திருக்கிறாள்..

நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை காதுக்கு பின்னால் சிறைவைத்துவிட்டு.. ஒரு புன்னகையால் என்னையும் சிறைபிடித்து கிளம்பிவிட்டாள், அவள் அவனுடன்..

நாளையும் "அவள் அவனுடன் தான் வருவாள்"...

84 comments:

செல்வா said...

ஹா ஹா .. நான் தான் முதல் .. வடை எனக்கே ..!!

Anonymous said...

vadai pochu

sari katha padikalaamna busum pochae..

செல்வா said...

அட பாவமே .. பஸ்ல வருவாங்க அப்படின்னு சொல்லுரக்கா இந்த பில்ட்அப்

எல் கே said...

enna solla vara

வினோ said...

நல்ல இருக்கு நண்பா.. நாளைக்கு வந்த சொல்லுங்க சிஸ்டர் எப்படி இருகிறாங்கன்னு பார்ப்போம்..

சௌந்தர் said...

நாளையும் "அவள் அவனுடன் தான் வருவாள்"...///

என்ன சொல்ல வரா நண்பா இந்த பதிவு நாளை தொடருமா இல்லை கதையா இவ்வளவு தானா

Ramesh said...

நல்லா இருக்குங்க...யாருடா அவன்னு பாத்தா..கடைசில..புஸ் சாரி பஸ் ஆக்கிட்டீங்க...ஆர்வத்தைக் கூட்டும் விதமா எழுதி இருக்கீங்க..

Sriakila said...

யார் அவள்?

சைட் அடிப்பதைக் கூட இவ்வளவு அழகாக எழுத முடியுமா? அவளைக் கவனிப்பதில் அவனை விட்டு விடாதீர்கள். அவசரக் காலத்தில் அவன் தான் கைகொடுக்க வேண்டியிருக்கும்.

RAJA RAJA RAJAN said...

"ஒரு புன்னகையால் என்னையும் சிறைபிடித்து கிளம்பிவிட்டாள்..."

என்னப்பா இது...

நீங்களும் அவனோட போய்டிங்களா...?

http://communicatorindia.blogspot.com/

Riyas said...

//நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை காதுக்கு பின்னால் சிறைவைத்துவிட்டு.. ஒரு புன்னகையால் என்னையும் சிறைபிடித்து கிளம்பிவிட்டாள், அவள் அவனுடன்..//

நல்லாயிருக்கு நண்பா.. நல்ல எழுத்து நடை

Riyas said...

//நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை காதுக்கு பின்னால் சிறைவைத்துவிட்டு.. ஒரு புன்னகையால் என்னையும் சிறைபிடித்து கிளம்பிவிட்டாள், அவள் அவனுடன்..//

நல்லாயிருக்கு நண்பா.. நல்ல எழுத்து நடை

Unknown said...

ஆரம்பமே அமர்க்களம்.
அழகான எழுத்துநடை.
அற்புதமான வரிகள்.
ஆவலுடன் நாளை எதிர்பார்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

ஹா ஹா .. நான் தான் முதல் .. வடை எனக்கே ..!!

//


உனக்கே தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Anonymous said...

vadai pochu

sari katha padikalaamna busum pochae..

//

Naalaikku pudichidalaan..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

அட பாவமே .. பஸ்ல வருவாங்க அப்படின்னு சொல்லுரக்கா இந்த பில்ட்அப்

//

அதே தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

LK said...

enna solla vara

//

onnume illannaa..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said...

நல்ல இருக்கு நண்பா.. நாளைக்கு வந்த சொல்லுங்க சிஸ்டர் எப்படி இருகிறாங்கன்னு பார்ப்போம்..

//

கண்டிப்பா நண்பா.. அறிமுகப்படுத்துறேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

என்ன சொல்ல வரா நண்பா இந்த பதிவு நாளை தொடருமா இல்லை கதையா இவ்வளவு தானா..

//

தொடரலாம்... தொடராமலும் போகலாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரியமுடன் ரமேஷ் said...

நல்லா இருக்குங்க...யாருடா அவன்னு பாத்தா..கடைசில..புஸ் சாரி பஸ் ஆக்கிட்டீங்க...ஆர்வத்தைக் கூட்டும் விதமா எழுதி இருக்கீங்க..

//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. தோழரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Sriakila said...

யார் அவள்?

சைட் அடிப்பதைக் கூட இவ்வளவு அழகாக எழுத முடியுமா? அவளைக் கவனிப்பதில் அவனை விட்டு விடாதீர்கள். அவசரக் காலத்தில் அவன் தான் கைகொடுக்க வேண்டியிருக்கும்.

//

என்னவள்..

கல்லூரி காலங்களில் பஸ்சுக்காக காத்திருந்த நினைவுகளை கொண்டு எழுதியது..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ராஜ ராஜ ராஜன் said...

"ஒரு புன்னகையால் என்னையும் சிறைபிடித்து கிளம்பிவிட்டாள்..."

என்னப்பா இது...

நீங்களும் அவனோட போய்டிங்களா...?

//

போய் தானே ஆகணும் .. காலேஜ் போக வேணாமா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Riyas said...

நல்லாயிருக்கு நண்பா.. நல்ல எழுத்து நடை

//

நன்றி நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

abul bazar/அபுல் பசர் said...

ஆரம்பமே அமர்க்களம்.
அழகான எழுத்துநடை.
அற்புதமான வரிகள்.
ஆவலுடன் நாளை எதிர்பார்கிறேன்.

//

நன்றி சகோதரா.. தங்கள் வருகைக்கும்.. கருத்திற்கும்..

அடுத்த பாகம் எழுத வேண்டும் என்று நான் இதை ஆரம்பிக்கவில்லை... ஆனால் இப்போது எழுத ஆசைப்படுகிறேன்..

அன்புடன் நான் said...

வித்தியாசமாத்தான் இருக்கு பாராட்டுக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி. கருணாகரசு said...

வித்தியாசமாத்தான் இருக்கு பாராட்டுக்கள்.

//

நன்றி அண்ணா..

அருண் பிரசாத் said...

பஸ்ல வர்ற உன் ஆளுக்கு இவ்வலோ பில்டப் குடுத்தீங்கலா

போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Unknown said...

நல்லா இருக்கு தல !
அவள் அவனுடன் வருகையில் !
நீ அவளுடன் போனால் என்ன ?

Anonymous said...

நாளைக்குமா?விட மாட்டீங்களா அவள?

அம்பிகா said...

\\தொடரலாம்... தொடராமலும் போகலாம்..\\
அதென்ன? வரும்; ஆனா வராது மாதிரியா?

Katz said...

அது பிகரா ஆண்டியா?

Chitra said...

ஒரு பஸ்க்கு இந்த பில்ட்-அப்! ஆஹா.....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

super... eppadi ippadi ellam yosikkareenga

ஜில்தண்ணி said...

என்ன மாமா "அவள் ஒரு தொடர் கதை" ஆகிவிட்டாளே

அப்பரம் அவன் உன் மூஞ்சில பொகைய தள்ளிட்டு அவள ஆச்சிட்டு போயிட்டானாமே :) ஊர்ல சொல்லிகிட்டாங்க

சரி விடு இன்னும் அறை மணி நேரத்துல அவன் எங்கூறுக்கு வந்துடுவான், நான் பஞ்சராக்கிடுறேன்
அப்பரம் பாத்துக்கலாம் :)

எஸ்.கே said...

சின்ன வயசில நடந்ததா?

எஸ்.கே said...

குழந்தைகள் விளையாட்டு!

DREAMER said...

நல்ல சுவாரஸ்யமான நடை..!

-
DREAMER

தூயவனின் அடிமை said...

நல்லா இருக்கு நண்பரே, தொடருமா?

vasu balaji said...

பஸ்ஸுக்கா இந்த அலப்பறை:))

Anonymous said...

very good.

Anonymous said...

sorry my google not working. Nilaamathy

a said...

Nalla irukku..........

BUSa villnakkiteenka........

முனியாண்டி பெ. said...

ரெம்ப நல்ல இருந்தாது யூகிக்க முடியவில்லை. நிச்சயம் தொடராக்கலாம். இது ஒரு தொடர் காலம்.

சீமான்கனி said...

அருமை....

அதுசரி எல்லாம் ஓகே...

//''நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை காதுக்கு பின்னால் சிறைவைத்துவிட்டு.. ஒரு புன்னகையால் என்னையும் சிறைபிடித்து கிளம்பிவிட்டாள்,//

இதுதான் எங்குனயோ....இடிக்குது ஒருவேளை கூட்டத்தோட வந்த்தாலோ??

Unknown said...

போலாம் ரைட்...

Mohamed Faaique said...

இது உங்க 101'வது கவிதையா...

கவி அழகன் said...

சையாய் கொடுத்த இட்லிகளில் ஒன்றை எடுத்து ஓரமாய் கடித்து மீதி வைத்து

நல்ல எழுத்து நடை

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரைட்...

ஜீவன்பென்னி said...

நல்லாயிருக்கு.... அப்போ பொண்ணுங்க எல்லாம் அவன அவள்னு சொல்லுவாங்களோ...

சுசி said...

:))))

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க..

கருடன் said...

:) (இன்னைக்கு நான் சைவம்.)

Ahamed irshad said...

Super Nanba...

எம் அப்துல் காதர் said...

அருமையா இருக்கு நண்பா!

வேலன். said...

அவன் என்றதும் முதலில் அவளின் கணவன் என நினைத்தேன். அடுத்து அவளின் சகோதரனாக இருப்பான் என நினைத்தேன். பஸ் என்றதும் புஸ் என்று ஆகிவிட்டது. எழுத்து நடை-படைப்பு மிக அருமை..
வாழ்க வளமுடன்.
வேலன்.

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

திரு 'வெறும்பய' அவர்களே..!!
நல்ல எழுத்து நடை..!
நன்றி என் வலைபக்கம் வந்தமைக்கு..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

பஸ்ல வர்ற உன் ஆளுக்கு இவ்வலோ பில்டப் குடுத்தீங்கலா

போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

//

இப்படி பில்டப் பண்ணி தான் வாழ்க்கையே ஓட்ட வேண்டியிருக்கு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

குத்தாலத்தான் said...

நல்லா இருக்கு தல !
அவள் அவனுடன் வருகையில் !
நீ அவளுடன் போனால் என்ன ?

//

போய் தானே ஆகணும்.. அதை தானே பண்ணிகிட்டிருக்கோம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நாளைக்குமா?விட மாட்டீங்களா அவள?

//

மூணு வருஷ துரத்தல் பாஸ்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அம்பிகா said...

\\தொடரலாம்... தொடராமலும் போகலாம்..\\
அதென்ன? வரும்; ஆனா வராது மாதிரியா?

//


அதே தான்... வரும்.. ஆனா வராது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழிப்போக்கன் said...

அது பிகரா ஆண்டியா?

///

ஹேய்.. ஹேய்.. யாருப்பா இது.. பொது இடத்தில இப்படியெல்லாம் பேசிகிட்டு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra said...

ஒரு பஸ்க்கு இந்த பில்ட்-அப்! ஆஹா.....

//

ha ha ha ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்பாவி தங்கமணி said...

super... eppadi ippadi ellam yosikkareenga

//


அதெல்லாம் ரகசியம்.. வெளிய சொல்லகூடாது..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

என்ன மாமா "அவள் ஒரு தொடர் கதை" ஆகிவிட்டாளே

அப்பரம் அவன் உன் மூஞ்சில பொகைய தள்ளிட்டு அவள ஆச்சிட்டு போயிட்டானாமே :) ஊர்ல சொல்லிகிட்டாங்க

சரி விடு இன்னும் அறை மணி நேரத்துல அவன் எங்கூறுக்கு வந்துடுவான், நான் பஞ்சராக்கிடுறேன்
அப்பரம் பாத்துக்கலாம் :)

//


தெரியும் மச்சி.. நீ எப்படியும் அடுத்த ஸ்டாப்ல வெயிட் பண்ணுவேன்னு ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

சின்ன வயசில நடந்ததா?
குழந்தைகள் விளையாட்டு!

//

ஆமா இது நடந்தது விவரம் தெரியாத விடலை பருவத்தில

ஜெயந்த் கிருஷ்ணா said...

DREAMER said...

நல்ல சுவாரஸ்யமான நடை..!

-
DREAMER

//

நன்றி நண்பரே.. அடிக்கடி வருகை தாருங்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Anonymous said...

sorry my google not working. Nilaamathy//


thanks Nilaamathi..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இளம் தூயவன் said...

நல்லா இருக்கு நண்பரே, தொடருமா?

//

நன்றி நண்பரே ..

எப்பூடி.. said...

நல்லாத்தாங்க இருக்கு :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

வானம்பாடிகள் said...

பஸ்ஸுக்கா இந்த அலப்பறை:))

//

வாங்க ஐயா.. முதல் முறையா வந்திருக்கீங்க.. வருகைக்கு நன்றி அடிக்கடி வாங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

Nalla irukku..........

BUSa villnakkiteenka........

//

கதைக்கே பஸ் தான் ஹீரோ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

முனியாண்டி said...

ரெம்ப நல்ல இருந்தாது யூகிக்க முடியவில்லை. நிச்சயம் தொடராக்கலாம். இது ஒரு தொடர் காலம்.

//

ரொம்ப நன்றி அண்ணா... முடிந்த வரைக்கும் முயற்சி செய்கிறேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

கலாநேசன் said...

போலாம் ரைட்...

//

அண்ணா ஏற்க்கனவே போயிரிச்சு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mohamed Faaique said...

இது உங்க 101'வது கவிதையா...

//

கவிதையா எழுத நினச்சது தான்.. இப்படி எழுத வேண்டியதா போச்சு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாதவன் said...

நல்ல எழுத்து நடை

//

நன்றி நண்பரே ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரைட்...

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜீவன்பென்னி said...

நல்லாயிருக்கு....

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே ....

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுசி said...

:))))

வருகைக்கு நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதிவுலகில் பாபு said...

நல்லா எழுதியிருக்கீங்க..

//

நன்றி நண்பரே ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

:) (இன்னைக்கு நான் சைவம்.)

//

என்னாச்சு மக்கா.. இப்படி திடீர்ன்னு ஒரு முடிவு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அஹமது இர்ஷாத் said...

Super Nanba...

//

நன்றி நண்பரே ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வேலன். said...

அவன் என்றதும் முதலில் அவளின் கணவன் என நினைத்தேன். அடுத்து அவளின் சகோதரனாக இருப்பான் என நினைத்தேன். பஸ் என்றதும் புஸ் என்று ஆகிவிட்டது. எழுத்து நடை-படைப்பு மிக அருமை..
வாழ்க வளமுடன்.
வேலன்.

//

மிக்க நன்றி அண்ணா.. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

திரு 'வெறும்பய' அவர்களே..!!
நல்ல எழுத்து நடை..!
நன்றி என் வலைபக்கம் வந்தமைக்கு..!
அன்புடன்,
வெற்றி

//

நன்றி நண்பரே ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எப்பூடி.. said...

நல்லாத்தாங்க இருக்கு :-)

//

நன்றி நண்பரே ..