இனிதாய் இயல்பாய் இழப்பில்லாமல்..

அதிகாலை எழுந்து
எண்ணை தேய்த்துக்குளித்து
புத்தாடை அணிந்து
கோவிலுக்கு போய் சாமி தரிசனம் முடித்து
வித விதமாய் பலகாரங்கள் சுவைத்து
விடிய விடிய பட்டாசுகள் வெடித்து
என இதுவரை கொண்டாடாத
தீபாவளியை போன்றே
இனிதாய்
இயல்பாய்
இவ்வருடமும்
என்னை கடந்து சென்றது

*********

எல்லா வருடங்களை போன்றே எந்த ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த வருட தீபாவளியும் வந்து சென்றாலும் ஒரு சில சம்பவங்களால் மறக்க முடியாத ஒரு நாளாகவே மாறி விட்டது. அன்று நடந்தவற்றை எளிதில் மறந்து விடவும் முடியாது.

* அதிகாலை 10 மணிக்கே என் தூக்கம் கலைத்த மொபைல் போன்.

* ஏன் இன்று வேலைக்கு வரவில்லை என்று போனில் ருத்திர தாண்டவம் ஆடிய என் மேலதிகாரி..

* பஸ் பயணத்தின் போது ஒரு வேளை நான் அருகில் அமர்ந்து விடுவேனோ என்று இருவர் அமரும் இருக்கையில் ஒரே ஆளாய் ஆக்கிரமித்த தோலின் நிறம் பார்த்துப் பழகும் இன வெறி பிடித்த 80 வயது மதிக்கத்தக்க ஒரு சீன வயோதிகர்.. (விடாபிடியாக நானும் அந்த இருக்கையிலையே அமர்ந்து விட்டேன்)

* முந்தைய நாளிரவு தீபாவளி கொண்டாட்டத்தின் மயக்கம் தெளியாததால் நேரம் தவறிச் சென்று விமானத்தை தவற விட்ட நண்பர் ஒருவர்..

* மாலை நேரம் டிவி யில் ஏதாவது நல்ல நிகழ்சிகள் இருக்கிறதா என்று ஒவ்வொரு சேனல்களாக துரத்தியடித்துக் கொண்டிருக்கையில் எதோ ஒரு சேனலில் கரையேற முடியாமல் நீந்திக் கொண்டிருந்த "சுறா" படம்..(அடுத்த சேனலில் "சிங்கம்" சீறிக்கொண்டிருந்தது)

இவ்வாறு அன்று நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் மறக்க முடியாதவைகளாகவே அமைந்தாலும் எந்த இழப்புமின்றி கடந்து சென்றது இவ்வருட தீபாவளி..

106 comments:

Unknown said...

எப்படியோ.. ஓடி ஆடி தீபாவளி நல்லபடியாக முடிந்ததே ;-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ஏன் இன்று வேலைக்கு வரவில்லை என்று போனில் ருத்திர தாண்டவம் ஆடிய என் மேலதிகாரி..///

லீவுனனு முன்னாடயே டேமேஜருக்கு சொல்லலியா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிநேகிதி said...

எப்படியோ.. ஓடி ஆடி தீபாவளி நல்லபடியாக முடிந்ததே ;-))

//

எப்படியோ முடிந்தது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பஸ் பயணத்தின் போது ஒரு வேளை நான் அருகில் அமர்ந்து விடுவேனோ என்று இருவர் அமரும் இருக்கையில் ஒரே ஆளாய் ஆக்கிரமித்த தோலின் நிறம் பார்த்துப் பழகும் இன வெறி பிடித்த 80 வயது மதிக்கத்தக்க ஒரு சீன வயோதிகர்.. (விடாபிடியாக நானும் அந்த இருக்கையிலையே அமர்ந்து விட்டேன்)////

சீனாக்காரியா இருந்தா அவளே நம்ம பக்கத்துல வந்து உக்காந்திருப்பா!

சௌந்தர் said...

மாலை நேரம் டிவி யில் ஏதாவது நல்ல நிகழ்சிகள் இருக்கிறதா என்று ஒவ்வொரு சேனல்களாக துரத்தியடித்துக் கொண்டிருக்கையில் எதோ ஒரு சேனலில் கரையேற முடியாமல் நீந்திக் கொண்டிருந்த "சுறா" படம்..///

சுறா படம் பார்த்து ஒருத்தன் இன்னும் சுயநினைவில் இருக்கான் அதை பற்றி ஒரு பதிவும் போட்டு இருக்கான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

லீவுனனு முன்னாடயே டேமேஜருக்கு சொல்லலியா?

//

சொனாலும் லீவு குடுக்க மாட்டாங்களே...

dheva said...

தம்பி.. நல்லா தொதுத்து சொல்லியிருக்க...! இந்த நிற வெறி இன்னும் இருக்கத்தான் செய்யுது. துபாய்ல கூட பிலிப்பினொஸ்க்க்கு அந்த ஒரு அட்டிடியூட் இருக்கு....

மற்ற நிகழ்வுகள் எல்லாம் எதார்த்தமா ரொம்ப கேசுவலா சொல்லியிருக்க.. !

ஒரு வித நிலையாமையின் டச் இருக்கு...ஆனா வாசிக்க அலாதியா இருக்கு. இத ஏன் கம்மியா எழுதுன.. .கவிதைத்துவமா இது போன்ற எழுத்துக்கள் இன்னும் கொஞ்சம் விரிவா வெவ்வேறு தளங்கள்ல எழுதுப்பா...!

வாழ்த்துக்கள் தம்பி....!

இளங்கோ said...

//எந்த இழப்புமின்றி கடந்து சென்றது இவ்வருட தீபாவளி.//
:(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எதோ ஒரு சேனலில் கரையேற முடியாமல் நீந்திக் கொண்டிருந்த "சுறா" படம்.///

எப்படியோ சுறா படம் பாத்துப்புட்டீங்க? அப்புறமுமம் டேமமேஜ் எதுவும் இல்லியா? ஆச்சர்யமா இருக்கே? நீங்க என்ன சோப்பு யூஸ் பண்றீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dheva said...
தம்பி.. நல்லா தொதுத்து சொல்லியிருக்க...! இந்த நிற வெறி இன்னும் இருக்கத்தான் செய்யுது. துபாய்ல கூட பிலிப்பினொஸ்க்க்கு அந்த ஒரு அட்டிடியூட் இருக்கு....///

என்ன ஊர்ஸ் பிலிப்பினோஸ் கூட அப்பிடி பண்றாளுங்களா? இங்க அப்பிடி தெரியயலியே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சீனாக்காரியா இருந்தா அவளே நம்ம பக்கத்துல வந்து உக்காந்திருப்பா!

//

ம்ம்ம் என்ன பண்றது பய புள்ளைங்க அன்னைக்கு பாத்து பஸ்ல யாருமே வரலையே..

சௌந்தர் said...

ஏன் இன்று வேலைக்கு வரவில்லை என்று போனில் ருத்திர தாண்டவம் ஆடிய என் மேலதிகாரி.////

அப்போ அன்னைக்கு சிவராத்திரி அதான் வரலை சொல்லவேண்டியது தானே

Chitra said...

தீபாவளி ..... வித்தியாசமான பதிவு!

சௌந்தர் said...

பஸ் பயணத்தின் போது ஒரு வேளை நான் அருகில் அமர்ந்து விடுவேனோ என்று இருவர் அமரும் இருக்கையில் ஒரே ஆளாய் ஆக்கிரமித்த தோலின் நிறம் பார்த்துப் பழகும் இன வெறி பிடித்த 80 வயது மதிக்கத்தக்க ஒரு சீன வயோதிகர்.. (விடாபிடியாக நானும் அந்த இருக்கையிலையே அமர்ந்து விட்டேன்)////

அப்படி தான் இருக்கணும் இந்த மாதிரி ஆளுங்க சும்மா விட கூடாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அடுத்த சேனலில் "சிங்கம்" சீறிக்கொண்டிருந்தது)///

சீறுனது சிங்கமா? அனுஷ்காவா?தங்கத்லைவியை இருடடடிப்புச் செய்த வெறும்பயலுக்குக் கடும் கண்டனம்!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...
சுறா படம் பார்த்து ஒருத்தன் இன்னும் சுயநினைவில் இருக்கான் அதை பற்றி ஒரு பதிவும் போட்டு இருக்கான்

//

சுறா படத்த 53 தடவை பார்த்த நம்ம பண்ணிகுட்டிக்கே எதுவும் ஆகதப்போ.. ஒரு தடவை பார்த்த எனக்கு கொஞ்சம் டேமேஜ் கம்மி தான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva said...

தம்பி.. நல்லா தொதுத்து சொல்லியிருக்க...! இந்த நிற வெறி இன்னும் இருக்கத்தான் செய்யுது. துபாய்ல கூட பிலிப்பினொஸ்க்க்கு அந்த ஒரு அட்டிடியூட் இருக்கு....

மற்ற நிகழ்வுகள் எல்லாம் எதார்த்தமா ரொம்ப கேசுவலா சொல்லியிருக்க.. !

ஒரு வித நிலையாமையின் டச் இருக்கு...ஆனா வாசிக்க அலாதியா இருக்கு. இத ஏன் கம்மியா எழுதுன.. .கவிதைத்துவமா இது போன்ற எழுத்துக்கள் இன்னும் கொஞ்சம் விரிவா வெவ்வேறு தளங்கள்ல எழுதுப்பா...!

வாழ்த்துக்கள் தம்பி....!

//

நன்றி அண்ணா... தங்கள் கருத்திற்கும்.. வாழ்த்திற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ சுறா படம் பாத்துப்புட்டீங்க? அப்புறமுமம் டேமமேஜ் எதுவும் இல்லியா? ஆச்சர்யமா இருக்கே? நீங்க என்ன சோப்பு யூஸ் பண்றீங்க?

//

தலைவா நீங்க யூஸ் பண்ற அதே கம்பெனி சோப்பு தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஊர்ஸ் பிலிப்பினோஸ் கூட அப்பிடி பண்றாளுங்களா? இங்க அப்பிடி தெரியயலியே?

//

முதல்ல அந்த கருப்பு கண்ணாடிய கழட்டு....

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல இருக்கு ...ஆமா இந்த ரமேஷ் பய வேற தீபாவளிக்கு உன்னை பர்ஹ்டேன்னு போன் செய்து சொன்னனே ........ஓகோ அதன் தூங்க வில்லையா...........
அப்புறம் இந்த சீட்டுல இருந்த விஷயம் அருமை .......விட கூடாது இந்த மாதிரி ஆட்களை .....சரி நல்ல இருக்கு மக்க உங்களோட வரிகள் .....எதார்த்தமாக இருக்கிறது உங்களோட வரிகள் மக்கா ...........

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...
அப்போ அன்னைக்கு சிவராத்திரி அதான் வரலை சொல்லவேண்டியது தானே

//

அவன லூஸ்ல விடு நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra said...

தீபாவளி ..... வித்தியாசமான பதிவு!

//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இளங்கோ said...

//எந்த இழப்புமின்றி கடந்து சென்றது இவ்வருட தீபாவளி.//
:(

//

வருக்கைக்கு நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அடுத்த சேனலில் "சிங்கம்" சீறிக்கொண்டிருந்தது)///

சீறுனது சிங்கமா? அனுஷ்காவா?தங்கத்லைவியை இருடடடிப்புச் செய்த வெறும்பயலுக்குக் கடும் கண்டனம்!!!

//

ஆஹா.. இது வேறையா.. இதில இப்படி கூட பிரச்சனைய கிளப்பலாமா...

சீமான்கனி said...

இயந்திர வாழ்க்கையில்
இனிய தீபாவளி
இயல்பாய் முடிந்ததில்
மகிழ்ச்சியே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல இருக்கு ...ஆமா இந்த ரமேஷ் பய வேற தீபாவளிக்கு உன்னை பர்ஹ்டேன்னு போன் செய்து சொன்னனே ........ஓகோ அதன் தூங்க வில்லையா...........
அப்புறம் இந்த சீட்டுல இருந்த விஷயம் அருமை .......விட கூடாது இந்த மாதிரி ஆட்களை .....சரி நல்ல இருக்கு மக்க உங்களோட வரிகள் .....எதார்த்தமாக இருக்கிறது உங்களோட வரிகள் மக்கா ...........

//

அமா ஆமா அதே தான்.. என்ன லக்கி பிளாசா கூட்டிட்டு போக சொல்லி ஒரே அடம் ... அதனால தான் தலைவா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

பஸ் பயணத்தின் போது ஒரு வேளை நான் அருகில் அமர்ந்து விடுவேனோ என்று இருவர் அமரும் இருக்கையில் ஒரே ஆளாய் ஆக்கிரமித்த தோலின் நிறம் பார்த்துப் பழகும் இன வெறி பிடித்த 80 வயது மதிக்கத்தக்க ஒரு சீன வயோதிகர்.. (விடாபிடியாக நானும் அந்த இருக்கையிலையே அமர்ந்து விட்டேன்)////

அப்படி தான் இருக்கணும் இந்த மாதிரி ஆளுங்க சும்மா விட கூடாது

//

அமா நண்பா.. என்ன பண்றது வயசானவரா போயிட்டாரு... அதனால தான் பொறுத்து போக வேண்டியதா போச்சு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சீமான்கனி said...

இயந்திர வாழ்க்கையில்
இனிய தீபாவளி
இயல்பாய் முடிந்ததில்
மகிழ்ச்சியே...

//

வாங்க வாங்க.. ரொம்ப நாள் கழிச்சு நம்ம ஏரியா பக்கம் வந்திருக்கீங்க...

வருகைக்கு நன்றி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இனிதாய்
இயல்பாய்
இவ்வருடமும்
என்னை கடந்து சென்றது
//

இயல்பா கடப்பது எவ்வளவு பெரிய விசயம் பாஸ்..

பொங்கல் வாழ்த்துக்கள். ( ஹி..ஹி அதுவும் இயல்பாக கடக்க..)

பதிவுலகிலேயே, எல்லொருக்கும் முன், பொங்கல் வாழ்த்து சொல்லியவன் நானாகத்தான் இருக்கும் என்பதில் பெருமை கொள்கிறேன்..ஹி..ஹி

மோகன்ஜி said...

அன்பு வெ.ப,தீபாவளி அன்னைக்கு சுறாவை பத்தி தப்பா சொல்லலாமா? நரகா"சுறா'வால் தானே தீபாவளியே நமக்கு வந்தது?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெறும்பய

மேதைகளின் உலகில் நான் மட்டும் முட்டாளாக...
//

நானும்..ஆட்டத்துக்கு வரேன்.. ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பழகும் இன வெறி பிடித்த 80 வயது மதிக்கத்தக்க ஒரு சீன வயோதிகர்.. (விடாபிடியாக நானும் அந்த இருக்கையிலையே அமர்ந்து விட்டேன்)
//

தப்பு பன்ணீட்டியே மக்கா...

முந்தாநாளே, ஊற வெச்ச, கொண்ட கடலைய சாப்பிட்டிருக்கனும்...

nis said...

அசத்தல் தீபாவளி சிறப்பு பதிவு.

மானங் கெட்ட அந்த சீன மனிதனை நினைக்கையில் ரத்தம் கொதிக்கிறது.
80 வயது ஆனாலும் அவரின் ( என்ன செய்வது வயதில் முதியவராக இருப்பதால் மரியாதையாக எழுத வேண்டி உள்ளது) நிற வெறி அடங்கவில்லை. :((

அழகி said...

//அதிகாலை 10 மணிக்கே என் தூக்கம் கலைத்த.....///

சூப்பரப்பு.....

எஸ்.கே said...

இயல்பாக இருப்பது இனிமைதான்!

(ஆமா விமானத்தை தவற விட்ட அந்த நண்பர் யார்?)

பெசொவி said...

சூப்பரப்பு.............!

ஜீவன்பென்னி said...

இங்க லீவு விட்டுட்டாங்க சகா..........

Unknown said...

வித்தியாசமாகவும்,அதே நேரத்தில் அழகாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.நல்ல பகிர்வு.

என்னது நானு யாரா? said...

ரொம்ப எதார்த்தமா இருக்கு உங்க பதிவு! என்ன என்னமோ இடைஞ்சல் வந்தாலும் அசராம நின்னுங்க இல்ல! அது தான் க்ரேட்!

எப்பூடி.. said...

தல ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு அந்த சீனக்கார கிழவியை போட்டு தள்ளீரலாம் :-)

எப்பூடி.. said...

தல ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு அந்த சீனக்கார கிழவியை போட்டு தள்ளீரலாம் :-)

Madhavan Srinivasagopalan said...

சொல்லுறதப் பாத்தா, நீங்க இப்ப இந்தியால இல்லைன்னு மட்டும் புரியுது..
எங்க இருந்தாலும் எந்த மதமானாலும் தீபாவளி கொண்டாடினதப் பத்தி சித்ரா மேடம் சொன்னதப் படிக்கலையா நீங்க ?

r.v.saravanan said...

வித்தியாசமான பதிவு!

சுசி said...

//இனிதாய் இயல்பாய்// இருந்ததில சந்தோஷம்..

எல் கே said...

வித்யாசமான பகிர்வு ஜெயந்த். தேவா சொன்ன மாதிரி கவித்துவமான வார்த்தைகள். இதே போன்று எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்

movithan said...

அழகான கோர்வையில் வசனங்கள்.

அன்பரசன் said...

//அதிகாலை எழுந்து
எண்ணை தேய்த்துக்குளித்து
புத்தாடை அணிந்து
கோவிலுக்கு போய் சாமி தரிசனம் முடித்து
வித விதமாய் பலகாரங்கள் சுவைத்து
விடிய விடிய பட்டாசுகள் வெடித்து
என இதுவரை கொண்டாடாத
தீபாவளியை போன்றே
இனிதாய்
இயல்பாய்
இவ்வருடமும்
என்னை கடந்து சென்றது//

ஃபீலிங் புரியுது.

அன்பரசன் said...

//இவ்வாறு அன்று நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் மறக்க முடியாதவைகளாகவே அமைந்தாலும் எந்த இழப்புமின்றி கடந்து சென்றது இவ்வருட தீபாவளி..//

:)

சிவராம்குமார் said...

கவிதையில மட்டும் இனிதா இயல்பா கடந்ததா தீபாவளி!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் லக்கி பிளாசா ல பொண்ணுகிட்ட அடிவாங்கினது, தீபாவளி அன்னிக்கு பக்கத்துக்கு வீட்டுல வடை திருடி தின்னது இதெல்லாம் சொல்லலை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//முந்தைய நாளிரவு தீபாவளி கொண்டாட்டத்தின் மயக்கம் தெளியாததால் நேரம் தவறிச் சென்று விமானத்தை தவற விட்ட நண்பர் ஒருவர்..//

இதுல உள்குத்து எதுவும் இல்லியே?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வித்தியாசமான பதிவு!
"இனிதாய்
இயல்பாய்
இவ்வருடமும்
என்னை கடந்து சென்றது"
நன்று நண்பா.....

ஹேமா said...

நல்லவேளை நல்லதாவே கடந்துபோச்சு இந்த வருடத் தீபாவளி.சந்தோஷம் !

Anonymous said...

//எந்த இழப்புமின்றி கடந்து சென்றது இவ்வருட தீபாவளி.//
அடுத்த வருட தீபாவளி இனிமையாய் அமையட்டும் நண்பா!

Unknown said...

என்னை கடந்து சென்றது"
நன்று நண்பா----nalla varigal
repeatu...

Unknown said...

நல்ல பதிவு.

அதெல்லாம் சரி. குவாட்டர் கட்டிங்கு என்னாச்சி ...................

நான் படத்த சொல்லல....

Unknown said...

//அதிகாலை 10 மணிக்கே என் தூக்கம் கலைத்த மொபைல் போன்//

nice! :))

கருடன் said...

ஹ்ம்..அப்புறம் மச்சி!! அப்படியா நடந்தது?? சொல்லவே இல்லை... முதல் நாள் ராத்திரி நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டு, பத்து மணிவரை தூங்கி ஆபிஸ்கூட போகாம எஞ்சாய் பண்ணிட்டு.. ஒன்னுமே நடக்காத மாதிரி இங்க வந்து “ கொண்டாடாத
தீபாவளியை போன்றே “ அப்படினு ஒரு பிட்டு...

கருடன் said...

@ஜீவன்பென்னி

//இங்க லீவு விட்டுட்டாங்க சகா..........//

வெள்ளிகிழமை லீவ் விட்டத எதோ தீபாவளிக்கு விட்ட மாதிரி என்னா ஒரு பில்டப்பு.... :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

ஹ்ம்..அப்புறம் மச்சி!! அப்படியா நடந்தது??

//

ஆமா .. அமா..

@@@@@
அப்படியா நடந்தது?? சொல்லவே இல்லை...

//

அது தான் இப்போ சொல்லிட்டமில்ல.

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

தல் நாள் ராத்திரி நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டு, பத்து மணிவரை தூங்கி ஆபிஸ்கூட போகாம எஞ்சாய் பண்ணிட்டு.. ஒன்னுமே நடக்காத மாதிரி இங்க வந்து “ கொண்டாடாத
தீபாவளியை போன்றே “ அப்படினு ஒரு பிட்டு.

//

எல்லாம் நம்ம சிரிப்பு போலீசு பண்ணின வேலை விடியக்காலையில மூணு மணிக்கே சொன்னேன் நிப்பாட்டலமுன்னு.. கேக்கணுமே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மோகன்ஜி said...

அன்பு வெ.ப,தீபாவளி அன்னைக்கு சுறாவை பத்தி தப்பா சொல்லலாமா? நரகா"சுறா'வால் தானே தீபாவளியே நமக்கு வந்தது?

//

அண்ணே இதில இப்படி வேற இருக்கா.... அது தெரியாம வேற சேனல் மாத்திட்டனே...

சசிகுமார் said...

நல்ல பகிர்வு

செல்வா said...

அடடா சந்தோசமா எதுவுமே நடக்கலையே .,
இங்க கூட எல்லா சானல்களிலும் புது படம் போட்டிருந்தாங்க ..

aavee said...

அதெப்படிப்பா சிம்பிளா எழுதி சிக்ஸர் அடிக்கற? ரசிக்கும்படிய இருந்தது!!

சி.பி.செந்தில்குமார் said...

குட் போஸ்ட்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.. said...

இயல்பா கடப்பது எவ்வளவு பெரிய விசயம் பாஸ்..

பொங்கல் வாழ்த்துக்கள். ( ஹி..ஹி அதுவும் இயல்பாக கடக்க..)

பதிவுலகிலேயே, எல்லொருக்கும் முன், பொங்கல் வாழ்த்து சொல்லியவன் நானாகத்தான் இருக்கும் என்பதில் பெருமை கொள்கிறேன்..ஹி..ஹி

//

வாழ்த்துக்கு நன்றி பட்டா..

பொங்கல் வாழ்த்தென்ன நான் அடுத்த வருஷ தீபாவளி வாழ்த்தே இந்த பதிவுல சொல்லலாமுன்னு தான் இருந்தேன்.. ஆனா மறந்துட்டேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.. said...

வெறும்பய

மேதைகளின் உலகில் நான் மட்டும் முட்டாளாக...
//

நானும்..ஆட்டத்துக்கு வரேன்.. ஹி..ஹி

///

வா பட்டா.. எனக்கும் துணைக்கு ஒரு ஆள் வேணும்... ஆனா புத்திசாலி தான் வேணும் .. நீ எப்படி ????

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.. said...

பழகும் இன வெறி பிடித்த 80 வயது மதிக்கத்தக்க ஒரு சீன வயோதிகர்.. (விடாபிடியாக நானும் அந்த இருக்கையிலையே அமர்ந்து விட்டேன்)
//

தப்பு பன்ணீட்டியே மக்கா...

முந்தாநாளே, ஊற வெச்ச, கொண்ட கடலைய சாப்பிட்டிருக்கனும்...

//

சொல்லிட்டீங்கல்ல அடுத்த தடவை பண்ணிருவோம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

nis said...

அசத்தல் தீபாவளி சிறப்பு பதிவு.

மானங் கெட்ட அந்த சீன மனிதனை நினைக்கையில் ரத்தம் கொதிக்கிறது.
80 வயது ஆனாலும் அவரின் ( என்ன செய்வது வயதில் முதியவராக இருப்பதால் மரியாதையாக எழுத வேண்டி உள்ளது) நிற வெறி அடங்கவில்லை. :((

//

தங்கள் கருத்திற்கு நன்றி..

உங்களுடைய உணர்வு புரிகிறது... என்ன செய்வது வயதானவராகி விட்டாரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அழகி said...

//அதிகாலை 10 மணிக்கே என் தூக்கம் கலைத்த.....///

சூப்பரப்பு.....

//

என்னைக்காவது இப்படி லீவ் கிடச்சா தானே.. சோ தப்பில்ல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

இயல்பாக இருப்பது இனிமைதான்!

(ஆமா விமானத்தை தவற விட்ட அந்த நண்பர் யார்?)

//

விமானத்தை தவற விட்டது... சிரிப்பு போலீசுன்னு சொல்ல மாட்டேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சூப்பரப்பு.............!

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜீவன்பென்னி said...

இங்க லீவு விட்டுட்டாங்க சகா..........

//

நல்லா கொண்டாடியிருப்பீங்க போல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

abul bazar/அபுல் பசர் said...

வித்தியாசமாகவும்,அதே நேரத்தில் அழகாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.நல்ல பகிர்வு.

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னது நானு யாரா? said...

ரொம்ப எதார்த்தமா இருக்கு உங்க பதிவு! என்ன என்னமோ இடைஞ்சல் வந்தாலும் அசராம நின்னுங்க இல்ல! அது தான் க்ரேட்!

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எப்பூடி.. said...

தல ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு அந்த சீனக்கார கிழவியை போட்டு தள்ளீரலாம் :-

//

விடு தலைவா.. அந்த வயசு இன்னைக்கோ நாளைக்கோ தானா போய் சேந்திரும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

r.v.saravanan said...

வித்தியாசமான பதிவு!

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Madhavan said...

சொல்லுறதப் பாத்தா, நீங்க இப்ப இந்தியால இல்லைன்னு மட்டும் புரியுது..
எங்க இருந்தாலும் எந்த மதமானாலும் தீபாவளி கொண்டாடினதப் பத்தி சித்ரா மேடம் சொன்னதப் படிக்கலையா நீங்க ?

//

படித்தேன் சகோதரா..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுசி said...

//இனிதாய் இயல்பாய்// இருந்ததில சந்தோஷம்..

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

LK said...

வித்யாசமான பகிர்வு ஜெயந்த். தேவா சொன்ன மாதிரி கவித்துவமான வார்த்தைகள். இதே போன்று எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்

//

நன்றி அண்ணா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

malgudi said...

அழகான கோர்வையில் வசனங்கள்.

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்பரசன் said...

//

வருகைக்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிவா said...

கவிதையில மட்டும் இனிதா இயல்பா கடந்ததா தீபாவளி!!!

//

அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் லக்கி பிளாசா ல பொண்ணுகிட்ட அடிவாங்கினது, தீபாவளி அன்னிக்கு பக்கத்துக்கு வீட்டுல வடை திருடி தின்னது இதெல்லாம் சொல்லலை...

//

எப்படியும் உங்க அடுத்த பதிவுல இதைப்பற்றி வரும்.. அப்புறம் எதுக்கு நானும் அதை சொல்லிக்கிட்டு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹேமா said...

நல்லவேளை நல்லதாவே கடந்துபோச்சு இந்த வருடத் தீபாவளி.சந்தோஷம் !

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரஷா said...

வித்தியாசமான பதிவு!
"இனிதாய்
இயல்பாய்
இவ்வருடமும்
என்னை கடந்து சென்றது"
நன்று நண்பா.....

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

//எந்த இழப்புமின்றி கடந்து சென்றது இவ்வருட தீபாவளி.//
அடுத்த வருட தீபாவளி இனிமையாய் அமையட்டும் நண்பா!

//

. நன்றி நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

siva said...

என்னை கடந்து சென்றது"
நன்று நண்பா----nalla varigal
repeatu...

//

நன்றி நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கி உலகம் said...

நல்ல பதிவு.

அதெல்லாம் சரி. குவாட்டர் கட்டிங்கு என்னாச்சி ...................

நான் படத்த சொல்லல....

//

கட்டிங் கிடையாது தலைவா.. இப்பெல்லாம் புல்லா தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜீ... said...

//அதிகாலை 10 மணிக்கே என் தூக்கம் கலைத்த மொபைல் போன்//

nice! :))

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சசிகுமார் said...

நல்ல பகிர்வு

//

நன்றி நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

அடடா சந்தோசமா எதுவுமே நடக்கலையே .,
இங்க கூட எல்லா சானல்களிலும் புது படம் போட்டிருந்தாங்க ..

//

அது அங்கே செல்வா.. ஆனா இங்கே..!!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோவை ஆவி said...

அதெப்படிப்பா சிம்பிளா எழுதி சிக்ஸர் அடிக்கற? ரசிக்கும்படிய இருந்தது!!

//

எல்லாம் உங்க ஆசி தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

குட் போஸ்ட்

//

நன்றி

Mathi said...

நல்ல பதிவு .உங்க மனதில் உள்ள home sick நல்லா தெரியுது .

அருண் பிரசாத் said...

தீபாவளிய சூப்பரா கொண்டாடி இருக்கீங்க....

அருண் பிரசாத் said...

சரி உங்க குறைய தீர்க்கதான் நம்ம சிரிப்பு போலிஸ் வந்தாரில்ல.... அவர் வீட்டுக்கு கூப்பிடலயா?

அருண் பிரசாத் said...

100 வது வடை எனக்கு

Anonymous said...

//எந்த இழப்புமின்றி கடந்து சென்றது இவ்வருட தீபாவளி..//

அது போதுமே.. ரொம்ப சந்தோசம்ங்க..

மாணவன் said...

//இனிதாய்
இயல்பாய்
இவ்வருடமும்
என்னை கடந்து சென்றது//

நடந்த யதார்த்தங்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mathi said...

நல்ல பதிவு .உங்க மனதில் உள்ள home sick நல்லா தெரியுது .

///

புரிதலுக்கு நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

சரி உங்க குறைய தீர்க்கதான் நம்ம சிரிப்பு போலிஸ் வந்தாரில்ல.... அவர் வீட்டுக்கு கூப்பிடலயா?

//

கூப்பிட்டேன் வரமாட்டேன்னு சொல்லிட்டாரு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்திரா said...