மனிதம்..

கலைந்த கேசம், பொட்டில்லா நெற்றி, செருப்பில்லா கால்கள், அழுக்கான உடைகள், களையிழந்த முகத்துடன் வந்து கொண்டிருந்த அந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் தள்ளாடிய நடை என் கண்களை விட்டு அகலவில்லை,

அடிவயிற்றில் ஒரு கைவைத்து மறுகையால் ஆதரவிற்காக சுவற்றில் பிடித்துக்கொண்டு மெதுவாய் வந்து கொண்டிருந்தாள்.

கண்கள் உள்வாங்கியிருந்தன, அந்த பெண் சாப்பிட்டு இரண்டு நாட்க்களுக்கு மேலிருக்கும் என்பதை அவள் முகமும், சோர்ந்து போன நடையும் கூறியன.

மெதுவாய் 20 அடி தூரம் தான் நடந்து வந்திருப்பாள் அப்பெண், அதற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை, அங்கேயே அமர்ந்தவள் சிறிது நேரத்தில் அடிவயிற்றில் கைவைத்துக்கொண்டு கீழே படுத்தவள் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்.

அனைவரின் கையிலும் ஆறாம் விரல் போல அலைபேசிகள் இருந்தும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன்..

நாகரீகம் கலாச்சாரம் என அனைத்தும் வளர்ச்சியின் உச்சிக்கு போனாலும் வேடிக்கை பார்க்கும் விசயத்தில் எங்களுக்கு ஆறறிவில் ஓன்று குறைவு தான் என்பதை போல கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் சேர ஆரம்பித்தது. அந்த பெண்ணை சுற்றி அனைவரும் நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர எவரும் முன்வரவில்லை.. அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்..

கடைவீதியில் அத்தனை பெரும் பார்த்துக்கொண்டிருக்க யார் உதவியும் இல்லாமல் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

கண்திறந்து பார்க்கவும், வாய்திறந்து பேசவும் முடியாமல் படுத்துக்கிடந்தவள் செய்கையால் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாள். ஆனால் அருகிலிருந்த ஆண்கள், பெண்கள், இளையவர், முதியவர் என அனைவரும் எதோ விளம்பர படம் பார்ப்பது போன்று வேடிக்கை பர்த்துக்கொண்டிருந்தார்களே தவிர எவரும் உதவ முன்வரவில்லை.

சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டாள் அப்பெண். ரத்த வாடை காற்றில் பரவத்தொடங்கியது. ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆறறிவு கொண்ட சொறிநாய்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாய் நின்று கொண்டிருக்க, ரத்த வாடையை மோப்பம் பிடித்த படி வரத்துவங்கின ஐந்தறிவு கொண்ட தெரு நாய்கள்.

அதற்கு மேல் அங்கு நிற்க திராணியில்லாமல் நடக்க துவங்கினேன் அக்கூட்டத்தை விட்டு..

**************************

இங்கே சொல்லியிருக்கும் நான் என்பது நானல்ல... இது கற்பனைக்காக எழுதியதும் அல்ல. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் ஒரு மக்கள் நெருக்கம் அதிகமுள்ள ஒரு கடைத்தெருவில் நடந்த சம்பவம் இது..

**************************

85 comments:

Arun Prasath said...

vadai

Arun Prasath said...

வென்று விட்டேன்.....

எஸ்.கே said...

வாழ்க்கையில் பல நேரங்களில் மனிதம் இறந்து விடுகிறது!

Arun Prasath said...

இப்டி எல்லாம் கூடவா இருப்பாங்க....

சௌந்தர் said...

Arun Prasath said... 1
vadai///

செல்வா உனக்கு போட்டியா அருண் இருக்கார்

Arun Prasath said...

நம்ப முடில தல

எஸ்.கே said...

நம்ப முடியா சம்பவம்தான்! ஆனால் இதுபோலும் உலகில் நடக்கின்றன என்பதை மறுக்க முடியாது!

Ramesh said...

அதிர்ச்சியாக இருக்கிறது... இரத்த வாடை கண்டால் வரும் நாயைப் போல இன்னும் கொஞ்ச நாளில் நாமே அந்த இரத்தத்தைப் பருக ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை... அதான் கொஞ்ச கொஞ்சமாக மிருகமாகிவருகிறோமே...

மாணவன் said...

மனது வலிக்கிறது நண்பா

எங்கே போனது மனிதநேயம் என்ற கேள்வி நமக்குள்ளே?

சிறப்பான பதிவு தொடருங்கள்.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

வாழ்க்கையில் பல நேரங்களில் மனிதம் இறந்து விடுகிறது!

//

உண்மை தான் நண்பரே மனிதம் என்பது இப்போது மருந்திற்கு கூட இல்லாமல் போய் விட்டது..

karthikkumar said...

இப்படியுமா இருப்பாங்க கேவலமா இருக்கு

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

இப்டி எல்லாம் கூடவா இருப்பாங்க....

//

இருக்கிறார்களே .. அதுவும் நம் நாட்டில்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

நம்ப முடியா சம்பவம்தான்! ஆனால் இதுபோலும் உலகில் நடக்கின்றன என்பதை மறுக்க முடியாது!

.//


நடந்தது நம் நாட்டில் என்பது தான் மேலும் கவலை பட செய்தது..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரியமுடன் ரமேஷ் said...

அதிர்ச்சியாக இருக்கிறது... இரத்த வாடை கண்டால் வரும் நாயைப் போல இன்னும் கொஞ்ச நாளில் நாமே அந்த இரத்தத்தைப் பருக ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை... அதான் கொஞ்ச கொஞ்சமாக மிருகமாகிவருகிறோமே...

//

உண்மை தான் நண்பரே எல்லாம் கற்றறிந்த மனிதன் இன்று மிருகமாகி கொண்டிருக்கிறான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

மனது வலிக்கிறது நண்பா

எங்கே போனது மனிதநேயம் என்ற கேள்வி நமக்குள்ளே?

//

தேடினால் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்..

Madhavan Srinivasagopalan said...

அடப்பாவி மக்கா.. ரொம்ப கொடுமையா இருக்கே ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

இப்படியுமா இருப்பாங்க கேவலமா இருக்கு

//

கேவலமாக தான் இருக்கிறது..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நிசமாவே இப்படி நடந்திருக்கா?..

கணேஷ் said...

என்ன செய்ய..எப்படியெல்லாம் இருக்கிறார்கள்..

அதே இடத்தில் ஒருவர் 100 ரூபாய்க்கு கடவுளின் சொர்க்கம் காட்டுகிறேன் என்று சொன்னால் எல்லாரும் அங்கு துட்டு கொடுத்து இருப்பார்கள்..

ஆனால் மனித நேயத்தோடு சக உயிர்களுக்கு உதவி மட்டும் செய்ய மாட்டார்கள்..

dheva said...

சில கேள்விகள்.....

இது பற்றி செய்தித்தாள்களில் வந்ததா?

ஏன் யாரும் உதவ முன் வரவில்லை?

அதற்கப்புறம் யார் வந்து இந்த சூழலை கைக்கொண்டனர்?

இப்டி பல கேள்விகள் எழுகிறது என் மனதில்....

Unknown said...

மனிதர்கள் ஆகிய நாம் வெட்கப்பட வேண்டியவர்கள்

ஆமினா said...

:(

ஆமினா said...

:(

Anonymous said...

அனைவரின் கையிலும் ஆறாம் விரல் போல அலைபேசிகள் இருந்தும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.//
உண்மைதான்.கைபேசியில்லாவிட்டால் ஒன்றுமே ஓடாது

Anonymous said...

மனிதம் செத்து பல நாள் ஆகிவிட்டது

Anonymous said...

இரக்கமுள்ள நெஞ்சுக்காரர்களும் இந்த கால ஓட்டத்தில் கரைந்து விடுவார்கள்

சௌந்தர் said...

மனிதனுக்கு இங்கு மரியாதையே இல்லாமல் போய் விட்டது

pichaikaaran said...

shocking

எப்பூடி.. said...

நம்ப முடியவில்லை, வேதனையான விடயம்.

தினேஷ்குமார் said...

வேடிக்கைபார்க்கும்
இவ்வுலகில்
எத்தனை நாள்
தவிக்கும் தாகத்துடன்
நான் வாழ்வது
என்ற ஏக்கத்திலே
பிரிந்திருக்கும்
அவள் உயிர்........

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva said...

சில கேள்விகள்.....

இது பற்றி செய்தித்தாள்களில் வந்ததா?

ஏன் யாரும் உதவ முன் வரவில்லை?

அதற்கப்புறம் யார் வந்து இந்த சூழலை கைக்கொண்டனர்?

இப்டி பல கேள்விகள் எழுகிறது என் மனதில்....

//

கடைசி வரை எவரும் உதவ முன் வரவில்லை என்பது தான் உண்மை.. இது செய்தி தாளில் படித்தது தான்..
இந்த விஷயம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டாதகவும் அறிந்தேன்..

பல நாட்க்களுக்கு முன்னால் படித்த செய்தி இது.. ஆனால் இந்த சம்பவம் மட்டும் மனதிலிருந்து மாறாமல் இருக்கிறது..

செல்வா said...

//வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆறறிவு கொண்ட சொறிநாய்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாய் நின்று கொண்டிருக்க, ரத்த வாடையை மோப்பம் பிடித்த படி வரத்துவங்கின ஐந்தறிவு கொண்ட தெரு நாய்கள். ///

உண்மைலேயே ரொம்ப கஷ்டமாக இருக்கு அண்ணா .! இதுக்கு மேல என்னை சொல்லுறது அப்படின்னு எனக்கு தெரியல .!

ADMIN said...

நெஞ்சம் கணக்க வைத்த பதிவு..!

நன்றி! வாழ்த்துக்கள்..!

Unknown said...

எத்தனை படங்களில் பார்த்திருப்போம்...திருந்தினார்களா...??

http://kaviyulagam.blogspot.com/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னய்யா இது, இப்பிடிக் கூடவா நடக்குது சே....!

sathishsangkavi.blogspot.com said...

இப்படி எல்லாம் நடக்குதா...

ராஜி said...

அருமையான பதிவு சகோதரா. நம்மை யோசிக்க வைக்கும் பதிவு

சாலையில்
அடிபட்டு கீழே
இறந்துகிடந்த பிணத்தினை பார்த்துக்கொண்டே செல்கின்றன..,
"நாளைய பிணங்கள்" என்று கதாவிலாசம் புத்தகத்தில் படித்த கவிதைதான் நினைவுக்கு வருகிறது. எங்கே செல்கின்றன நம் பாதைகள் என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை.சுற்றுசூழல் மாசு, உணவுப்பொருட்களில் கலப்படம், குடிநீர் தட்டுபாடு என நம் எதிர்கால சந்ததியினருக்கு கெடுதல்களையே பரிசளிக்கப்போகிறோம். அவற்றின் பாதிப்புகளை எதிர்கொள்ள குறைந்தபட்சம் அண்டைமனிதர்களின் மீது குறைந்தப்பட்ச மனிதநேயத்தையாவது கொடுத்துவிட்டுப் போகலாமே. இனியாவது சிந்திப்போமா?

Praveenkumar said...

கொடுமையான விஷயம். மனிதம் இனி மெல்ல சாகிறது..! என்பதற்கு இதுவே சாட்சி.

என்னத்த சொல்ல..! :(

இம்சைஅரசன் பாபு.. said...

பணம் பணம் என்று அலையும் மனிதனிடம் எங்கே இருக்கும் மனிதம் ........பதிவை படித்தல் மனசுக்கு கஷ்டமாக இருக்கு மக்கா

ஜில்தண்ணி said...

naama vedikka paakathan laayikku :(

nis said...

கனக்க வைத்த பதிவு :(

ராஜவம்சம் said...

இப்படிப்பட்ட மனித கூட்டத்தின் நடுவே நானும் என்று நினைக்கையில் வெட்கி தலைகுணிகிறேன்.

Anonymous said...

ரொம்ப கொடுமைய இருக்குப்பா !!!
மனிதம் ?????
என்னிக்கு விடை கிடைக்குமோ ??
அருமையான தகவல்
ஆனால் மனம் வலிக்கிறது

Prasanna said...

கொடூரத்தின் உச்சம்.. நான் அங்கு இருந்தால்.. என்ன செய்திருப்பேன் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present sir

arasan said...

மனிதநேயம் செத்து பலவருடம் ஆச்சு..
இந்த நிகழ்வை படிக்கவே கண் கலங்கும்போது பார்த்வனுக்கெல்லாம் மனமே இல்லையா...

Chitra said...

I am really shocked..... ஒரு ஆளு கூடவா உதவ முன்வரவில்லை?

Mathi said...

very very sad..

அன்பரசன் said...
This comment has been removed by the author.
ம.தி.சுதா said...

இந்த உதவி கூட செய்ய முடியாத மனிதர்களா... சே .. ஈனப் பிறவிகள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

அன்பரசன் said...

இவ்வளவு கொடூரமாகவா???

பவள சங்கரி said...

சே, என்ன மக்கள் இவர்கள்....இவர்கள் நிச்சயமாக மக்கள் அல்ல மாக்கள்.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மனம் கனக்கின்றது..
சிறப்பான பதிவு தொடருங்கள்.....

Unknown said...

மனிதம் பேச்சளவில் மட்டுமே இருக்கிறது இங்கே..
கலி யுகம்?

Unknown said...

கொடுமைங்க..

venkat said...

நீங்ககூடவா உதவில்லை நண்பரே .
கொடுமையான விஷயம்.

RVS said...

காட்சி கண்முன் விரிந்து கண்கள் கலங்கியது. நல்ல நேரேஷன். ;-)

தமிழ் உதயம் said...

நாகரீகம் முதலில் கொல்வது மனிதத்தை.

Kousalya Raj said...

பிறந்த அந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லையே....அருகில் இருந்த பெண்கள் கூடவா உதவவில்லை...?! ஜீரணிக்க முடியாத கொடுமை...

Harini Resh said...

சரி தான்
உண்மையில் தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா மட்டும் தான் புரியும்
மனிதம் செத்து எவளவோ நாளாச்சு :(

கவி அழகன் said...

எங்கே போனது மனிதநேயம்

ப்ரியமுடன் வசந்த் said...

என்ன சொல்றது ஜெ. ?

எல்லாரைப்போலவே நானும் மனதை நெகிழவைத்த பதிவென்றே சொல்லிவிட்டு செல்கிறேன்...!

ஹேமா said...

மனிதம் செத்துவிட்டதென்று சொல்லிக்கொண்டிருந்தாலும் இவ்வளவு கேவலமாய்ப் போய்விட்டதா !

Anonymous said...

ரொம்ப வேதைனையான விஷயம்.
அட்லீஸ்ட் ஒருத்தர் கூடவா மருத்துவமனைக்கோ காவல் துறைக்கோ தெரிவிக்கவில்லை :(

வைகை said...

நல்ல வேளை, இது தமிழ்நாட்டில் இல்லைன்னு ஒரு சின்ன ஆறுதல், இருந்தாலும் மனசு உறுத்துது, விலங்குகள் உச்சா போகும் உரிமைக்கு கூட போராடும் பெண்கள் அல்லது பெண்கள் அமைப்புகள் ஒன்று கூடவா உதவ முன்வரவில்லை, ஒரு வேளை இதுக்கெல்லாம் வெளம்பரம் கிடைக்காதுன்னு கம்முனு இருந்துட்டான்களோ!!!

Asiya Omar said...

என்ன கொடுமை,மனிதம் முற்றிலும் இறந்து விட்டதா?மனது மிகவும் சங்கடப்படுகிறது.

Unknown said...

மக்கள் கூட்டம் நம் நாட்டில் அதிகரித்து விட்டதால் மக்கள் மாக்கள் ஆகிவிட்டனரோ - மனிதம் எங்கு சென்று விட்டது அந்தோ!?

Unknown said...

//நாகரீகம் கலாச்சாரம் என அனைத்தும் வளர்ச்சியின் உச்சிக்கு போனாலும் வேடிக்கை பார்க்கும் விசயத்தில் எங்களுக்கு ஆறறிவில் ஓன்று குறைவு தான் என்பதை போல கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் சேர ஆரம்பித்தது//
true!! :-)

Sriakila said...

படித்தவுடன் மனதில் பாரம்.

மனிதம் செத்து விட்டது.

சசிகுமார் said...

Nice

Thoduvanam said...

ரொம்ப மனசு வருத்தமாயிடிச்சு.
மனிதனாய் வாழும் தகுதியை இழந்து வருகிறோம் என்று தோன்றுகிறது.
"முப்பத்தியேழு சன்னல்கள் திறந்திருக்க,நட்ட நடு வீதியில்,ஒரு இளம் பெண், பல முறை கத்தியால் குத்தி சிதைக்கப் பட்டாள்.யாரும் உதவிக்கோ,தொலைபேசியில்
உதவியோ நாடவில்லை",என "The Tipping Point "என்ற புத்தகத்தில் படித்தேன்.உண்மை நிகழ்வு.
கூட்டமாய் இருக்கும் மனிதர்கள் மெத்தனமாய் செயல் படுவதாய்.
மேலும் மற்ற யாரேனும் செய்வர் என்ற மனநிலை.இதுவே ஒரு தனி நபர் இந்நிகழ்வை காண நேரிட்டால்
90% உதவி இருப்பார் என படித்ததை நினைவு கூறுகிறேன்.எப்படியாயினும் இரக்கமும்,ஈரமும் இன்றைய இதயங்களில் இறங்குமுகம் தான்

ராமலக்ஷ்மி said...

அதிர்ச்சியாக உள்ளது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

venkat said... 57

நீங்ககூடவா உதவில்லை நண்பரே .
கொடுமையான விஷயம்.

//

நான் அந்த இடத்தில் இல்லை நண்பரே.. மேலே குறிப்பிட்டிருக்கும் நான் என்பது நானல்ல..

இந்த செய்தியை படித்தவுடன் அந்த பாதிப்பில் எழுதியது.. கொஞ்சம் நாட்க்களுக்கு முன்பு..

NaSo said...

காட்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது போல் உள்ளது எழுத்து நடை. அந்த நிகழ்ச்சி காமன்வெல்த் போட்டிக்கு சில நாட்கள் முன்னால் நடந்ததாக எங்கேயோ படித்த ஞாபகம்.

Anonymous said...

மனிதநேயம் என்பது வெறும் வார்த்தைகளிலும் விளம்பரங்களிலும் தான் இருக்கிறது..
தாம் அங்கு இருந்திருந்தால்.. என்று வாய்கிழியப் பேசுபவர்கள் கூட அதே சூழலில் தான் நின்றிருப்பார்கள்.

//எஸ் கே..
வாழ்க்கையில் பல நேரங்களில் மனிதம் இறந்து விடுகிறது!//

உண்மை

சி.பி.செந்தில்குமார் said...

manitha weeyam engkee pooccu?மனித நேயம் எங்கே போச்சு?

சி.பி.செந்தில்குமார் said...

உங்களுக்கு நகைச்சுவை எழுத்தும்,சீரியஸ் ம்,ஏட்டரும் ஒரே வீச்சில் வருவது ஆச்சரியம்தான்

r.v.saravanan said...

மனது வலிக்கிறது

Unknown said...

அந்த சம்பவத்தை நானும் படித்தேன்.. மிகுந்த வருத்தமாக இருக்கிறது ...

சாந்தி மாரியப்பன் said...

இப்படியும்கூட ஆட்கள் இருப்பார்களா??

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

che..enna aniyaayam idhu? oruthar koodavaa mun varala udhavi panna

புலவன் புலிகேசி said...

நிஜம் நண்பா!

மங்குனி அமைச்சர் said...

சார் , என்ன கமன்ட் போடுறதுன்னே எனக்கு தெரியல

"உழவன்" "Uzhavan" said...

அட பாவிகளா...

சுபத்ரா said...

அடக் கடவுளே!!!! என்னண்ணா இது??? :(