தமிழ்மணமும் தொடர்பதிவுகளும்..தமிழ் மனம் விருதுகள் அனைவரும் அறிந்ததே. அந்த போட்டியில் கலந்து கொள்ளாத பதிவர்களே இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனது பதிவுகள் எனைத்தும் மொக்கையாக இருந்தாலும் அதிலிருந்து சில சுமாரான பதிவுகளை தேர்ந்தெடுத்து ஒரு ஆர்வக்கோளாறில் மூன்று பதிவுகளை நானும் போட்டிக்கான பகுதியில் இணைத்திருந்தேன். இது நடந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. ஏறக்குறைய இந்த விஷயத்தை மறந்து விட்டேன் எனலாம். சொல்லப் போனால் எந்த பகுதியில் எந்த இடுகையை இணைத்தேன் என்பதையே மறந்து விட்டேன்.

இன்று எதேச்சையாக தமிழ்மணத்தில் ஏதாவது விசேஷம் இருக்கிறதா என்று நோட்டம் விடுகையில் கண்ணில் பட்டது தமிழ்மணம் விருதுகள் 2010 முதல் சுற்று முடிவுகள் . அப்போது தான் நானும் இந்த போட்டியில் பங்கேற்றதும் எனது சில இடுகைகளை இணைத்ததும் நினைவுக்கு வந்தது. நமது இடுகை எப்படியும் இங்கு இருக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையில் யார் யாரது இடுகைகள் எல்லாம் முதல் சுற்றில் தேர்வாகியிருக்கிறது என்று ஒவ்வொரு பகுதியாக பார்த்துக்கொண்டிருக்கையில் அங்கே ஒரு பிரிவில் பார்த்த ஒரு பதிவை என்னால் நம்பவே முடியவில்லை. என்னுடைய ஒரு பதிவும் இரண்டாவது சுற்றிற்கு தேர்வாகியிருக்கிறது.


வாக்களித்து முதல் சுற்றில் வெற்றி பெற செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி, மற்றும் மக்களே யார் யார் இன்னும் இந்த இடுகைக்கு வாக்களிக்கவில்லையோ அவர்கள் கோழி பிரியாணிக்கும், 2000 / - ரூபாய் பணத்திற்கும் (ஒரு ஓட்டுக்கு இப்போ 2000/- ரூபாய் தானே தறாங்க) ஆசைப்படாமல் சென்று வாக்களியுங்கள்.

..நன்றி..

*****************************************************************************

சீரான எழுத்துக்களால் கவிதைகள், கதைகள் என எழுதி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அலைவரிசை நண்பர் அஹமத் இர்ஷாத் அவர்கள் கடந்த ஜூலை மாதம் என்னை தொடர் பதிவெழுத அழைத்திருந்தார். என்ன காரணமோ தெரியவில்லை இன்று வரை அந்த பதிவை என்னால் எழுத முடியவில்லை. ரொம்ப கஷ்டமான விசயமாக இருக்குமோ என்று நீங்கள் யோசிக்கலாம், உண்மை தான்.. நீங்களே ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து எழுதுங்கள் என்று முழு சுதந்திரமும் தந்திருந்தார்.

ஒரு தலைப்பை தந்து இந்த தலைப்பில் தான் எழுத வேண்டும் என்றாலே நமக்கு கண் விழி பிதுங்கி போய் விடும். நானும் நண்பர் அன்பாக அழைத்தாரே எப்படியாவது ஏதாவது ஒரு தலைப்பை வைத்து எழுதி விட வேண்டுமென்று எழுத முடிவு செய்து மாதங்கள் ஐந்து ஆகி விட்டது. ஆனால் இன்னும் என்னால் எந்த தலைப்பையும் தேர்வு செய்து எழுத முடியவில்லை. எப்படியோ அதையும் காரணமா வச்சு ஒரு பதிவு ரெடி பண்ணியாச்சு..


*****************************************************************************

நீ நான் அவன் என்ற தளத்தில் எழுதும் நண்பர் வெற்றி அவர்கள் என்னை கமலின் சிறந்த பத்து படங்கள் என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார். அவருக்காக எனக்கு பிடித்த சில படங்களை இங்கே பகிர்கிறேன்.

  • அன்பே சிவம்
  • வேட்டையாடு விளையாடு
  • வசூல் ராஜா M B B S
  • பம்மல் K சமந்தம்
  • பஞ்ச தந்திரம்
  • அவ்வை சண்முகி
  • அபூர்வ சகோதரர்கள்
  • சத்யா
  • தெனாலி
  • மைக்கேல் மதன காமராஜன்.
*****************************************************************************

அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு.. ஒரு வழியா நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சதிலிருந்து போன வாரம் வரைக்கும் என்னையும் மதிச்சு கூப்பிட்ட அத்தனை தொடர்பதிவுகள் எல்லாம் எழுதி முடிச்சாச்சு.. இது தான் என்னோட கடைசி பதிவும், யாருல அங்கே விசிலடிச்சு கை தட்டி சிரிக்கிறது... படுவா கொன்னேபுடுவேன்.. ஓவரா சந்தோஷ படாதீங்கல.. நான் சொன்னது இந்த வருசத்துக்கு.. ஓகே மக்கள்ஸ் எல்லாருக்கும் என்னோட புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இப்பவே சொல்லிக்கிறேன்.. சந்தோசமா அடுத்தவங்களுக்கு சங்கடமில்லாம கொண்டாடுங்க..

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

85 comments:

மாணவன் said...

vadai

மாணவன் said...

இருங்க படிச்சுட்டு வரேன்........

மாணவன் said...

தமிழ்மணத்தில் எப்படியாவது வெற்றிப்பெற ஆண்டவனை வேண்டிக்கிறேன்...
எல்லாரும் ஓட்டு போட்டுவிடுங்கள்.....
அப்பதான் அஞ்சப்பர் ஹோட்டல பார்ட்டி வைக்க சொல்ல முடியும்....

ஹிஹிஹி

Speed Master said...

வடை போச்சே

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
(புத்தாண்டு உறுதி மொழி பற்றி ஒரு தொடர்பதிவு எழுதுங்களேன்:-))

karthikkumar said...

கோழி பிரியாணிக்கும், 2000 / -ரூபாய் பணத்திற்கும் (ஒரு ஓட்டுக்கு இப்போ 2000/- ரூபாய் தானே தறாங்க) ஆசைப்படாமல்சென்று வாக்களியுங்கள்.//
போற்றுவோம்.. ஹி ஹி அப்டியே பார்ட்டி எப்போ வெப்பீங்க... எந்த இடம் அதெல்லாம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்...

மாணவன் said...

ஏண்ணே font சைஸ் சின்னதா போட்டுட்டீங்க........

எப்படியோ தொடர்பதிவு எல்லாத்தையும் இந்த வருசத்துக்குள்ள முடிச்சுட்டீங்க போல...

பிரமாதம் பிரமாதம்.........

karthikkumar said...

உங்க நல்ல மனசுக்கு ஆத்தா எந்த கொறையும் வெக்கமாட்டா.... நீங்க கண்டிப்பா ஜெயப்பீங்க.... ( சொல்ல சொன்னதெல்லாம் சொல்லிட்டேன். ஏதும் மிஸ் பண்ணியிருந்தா சாட்ல சொல்லவும்)

வெறும்பய said...

மாணவன் said...

vadai

//

உனக்கு தான்,,,

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சரி சரி புத்தாண்டு கொண்டாத்துக்கு எங்கபோறதா பிளான்?

வெறும்பய said...

karthikkumar said...

உங்க நல்ல மனசுக்கு ஆத்தா எந்த கொறையும் வெக்கமாட்டா.... நீங்க கண்டிப்பா ஜெயப்பீங்க.... ( சொல்ல சொன்னதெல்லாம் சொல்லிட்டேன். ஏதும் மிஸ் பண்ணியிருந்தா சாட்ல சொல்லவும்

//


மச்சி இப்ப என் அக்கவுன்ட்ல ஒரு குவாட்டர் வாங்கிக்கோ... மத்தத அப்புறம் பேசிப்போம்..

வெறும்பய said...

மாணவன் said...

தமிழ்மணத்தில் எப்படியாவது வெற்றிப்பெற ஆண்டவனை வேண்டிக்கிறேன்...
எல்லாரும் ஓட்டு போட்டுவிடுங்கள்.....
அப்பதான் அஞ்சப்பர் ஹோட்டல பார்ட்டி வைக்க சொல்ல முடியும்....

ஹிஹிஹி

//

கண்டிப்பா .. பார்ட்டி இல்லாமலா.. அஞ்சப்பர் என்ன ஆரப்பர்லையே வைப்போம்...

சௌந்தர் said...

நண்பா நானும் தொடர் பதிவு தான் நாளைக்கு போட போறேன் அந்த பக்கம் வந்துராதே நான் கூப்பிட்டு விட்டேன்

வெறும்பய said...

Speed Master said...

வடை போச்சே

//

வாங்கப்பு... கொஞ்சம் தாமதமா வந்துட்டீங்களே...

dineshkumar said...

நான் காலைலே போட்டுட்டேன் நண்பரே உங்களுக்கும் சேர்த்து ஒட்டு

அருண் பிரசாத் said...

அடுத்து இந்த தமிழ் மணத்துல ஓட்டு கேட்டு போஸ்ட் போடுறவன வெட்டனும்

வெறும்பய said...

dineshkumar said...

நான் காலைலே போட்டுட்டேன் நண்பரே உங்களுக்கும் சேர்த்து ஒட்டு

//

நன்றிங்கண்ணா...

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

அடுத்து இந்த தமிழ் மணத்துல ஓட்டு கேட்டு போஸ்ட் போடுறவன வெட்டனும்

//

அது எப்படியா நான் ஏதாவது பதிவு போட்டா மட்டும் சண்டைக்கு வறீங்க..

வெறும்பய said...

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
(புத்தாண்டு உறுதி மொழி பற்றி ஒரு தொடர்பதிவு எழுதுங்களேன்:-))

//

ஐயோ அடுத்த தொடர்பதிவா வேணாம் சாமி...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே...

சி.பி.செந்தில்குமார் said...

congrats jei

வெறும்பய said...

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சரி சரி புத்தாண்டு கொண்டாத்துக்கு எங்கபோறதா பிளான்?

//

உனக்கும் வாழ்த்துக்கள் தம்பி..

சி.பி.செந்தில்குமார் said...

>>>அருண் பிரசாத் said...

அடுத்து இந்த தமிழ் மணத்துல ஓட்டு கேட்டு போஸ்ட் போடுறவன வெட்டனும்

ha ha ha

வெறும்பய said...

சௌந்தர் said...

நண்பா நானும் தொடர் பதிவு தான் நாளைக்கு போட போறேன் அந்த பக்கம் வந்துராதே நான் கூப்பிட்டு விட்டேன்

//

ஐயா ராசா உன் கால்ல வேணுமின்னாலும் விழுறேன்.. ஆள விடுடா சாமி...

வெறும்பய said...

Blogger சி.பி.செந்தில்குமார் said...

congrats jei

//

நன்றி அண்ணா..

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

அடுத்து இந்த தமிழ் மணத்துல ஓட்டு கேட்டு போஸ்ட் போடுறவன வெட்டனும்

//

அது எப்படியா நான் ஏதாவது பதிவு போட்டா மட்டும் சண்டைக்கு வறீங்க..

i think u look like senthil in the view of gavundamani. ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

>>வெறும்பய said...

Blogger சி.பி.செந்தில்குமார் said...

congrats jei

//

நன்றி அண்ணா..

pallai paeetththuduvaen .yaar yarukku annaa. iam 4 years younger than u. call me thambi. ha ha ha

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

அடுத்து இந்த தமிழ் மணத்துல ஓட்டு கேட்டு போஸ்ட் போடுறவன வெட்டனும்

//

அது எப்படியா நான் ஏதாவது பதிவு போட்டா மட்டும் சண்டைக்கு வறீங்க..

i think u look like senthil in the view of gavundamani. ha ha ha


//

அண்ணே நீங்களுமா.. ம்ம் நடக்கட்டும்... அடுத்த வருஷம் பாருங்க..

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

>>வெறும்பய said...

Blogger சி.பி.செந்தில்குமார் said...

congrats jei

//

நன்றி அண்ணா..

pallai paeetththuduvaen .yaar yarukku annaa. iam 4 years younger than u. call me thambi. ha ha ha

//

எது தம்பியா. நல்லா கிளப்புறாங்கையா பீதிய... அண்ணே போங்கண்ணே நமக்கு இப்ப தான் 18 வயசு ஆகுது..

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி

வெறும்பய said...

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி
//

சார் பட்டா சார்.. கொஞ்சம் நில்லுங்க.,.. இதுக்கு என்ன அர்த்தமுன்னு சொல்லிட்டு போங்க.. இல்ல வீணா டெரர் அடி பட்டு சாவான்...

பிரியமுடன் ரமேஷ் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெயந்த்..

வெறும்பய said...

பிரியமுடன் ரமேஷ் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெயந்த்..

//

நன்றி நண்பரே,,

வைகை said...

இந்திரா ஏதோ காதல் கடிதம் தொடர் பதிவுக்கு கூப்ட்டதா ஞாபகம்!!

வைகை said...

தமிழ்மணத்துல வோட்டு போட்டா பிரியாணி உண்டா?!!

பதிவுலகில் பாபு said...

தமிழ்மணத்தில் இரண்டாவது சுற்றில் முன்னேறியதற்கும் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் நண்பா..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

தங்கம்பழனி said...

வாழ்த்துக்கள் நண்பரே..!

வெறும்பய said...

வைகை said...

இந்திரா ஏதோ காதல் கடிதம் தொடர் பதிவுக்கு கூப்ட்டதா ஞாபகம்!!

//

அது இந்த வாராம்.. நான் சொன்னது போன வாரம் வரைக்கும்.. ஹா ஹா நாங்கெல்லாம் விவரமாக்கும்

சங்கவி said...

வாழ்த்துக்கள்...

வெறும்பய said...

வைகை said...

தமிழ்மணத்துல வோட்டு போட்டா பிரியாணி உண்டா?!!

//

அது மட்டுமா.. இன்னும் நிறைய இருக்கு...

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

தமிழ்மணத்தில் இரண்டாவது சுற்றில் முன்னேறியதற்கும் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் நண்பா..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

//

நன்றி நண்பரே...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே..

வெறும்பய said...

தங்கம்பழனி said...

வாழ்த்துக்கள் நண்பரே..!

//

நன்றி நண்பரே...

வெறும்பய said...

சங்கவி said...

வாழ்த்துக்கள்...

//

நன்றி அண்ணா...

Mathi said...

எவ்ளோ வோட்டு போடணும் ?
kamal films super ...anbe sivam my fav also...

டிலீப் said...

அடுத்த சுற்றுக்கு செல்ல வாழ்த்துக்கள் நண்பரே....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வினோ said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பா...

ஜீ... said...

Best wishes!
Happy new year!! :-)

Anonymous said...

வாழ்த்துக்கள் anna
happy new year

r.v.saravanan said...

தமிழ்மணத்தில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் நண்பா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது இதான் இந்த வ்ருசத்தோட கடைசி பதிவா..... அப்பாடா ரெண்டு மூனு நாளாவது கெடச்சுதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா தமிழ்மணத்துக்கும் தொடர்பதிவுக்கும் என்ன சம்பந்தம்?

மாணவன் said...

வந்தேன் 51 ஆவது வடையை வென்றேன்....

ஹிஹிஹி

குட்நைட் அண்ணா காலையில வரேன்.......

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள் பாஸ். இன்ட்லியில் பதிவின் இணைப்பு தரவில்லையோ!?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு ஒரு பதிவா. உன்னை வெட்டுனா என்ன? சரி சிங்கபூற்கு டிக்கெட் எடுத்து அனுப்பு. அங்க varen,. treet kodu

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் சகோதரம்...

Rathi said...

//தமிழ் மனம் விருதுகள் அனைவரும் அறிந்ததே. அந்த போட்டியில் கலந்து கொள்ளாத பதிவர்களேஇருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.//

ஹி..ஹி... நாங்க இருக்கம்ல. எப்பிடி நீங்க இப்பிடி சொல்லலாம். அப்புறமா, நாஸ்தாவும், துட்டும் தராதவங்களுக்கு வாக்கா? நோ, நோ, நெவர் யுவர் ஆணர். :))

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

இதில் உள்ள இரண்டு தலைப்புகளும் நான் படித்ததே. வெற்றி பெற வாழ்த்துகள்.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

வாழ்த்துக்கள்

Balaji saravana said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மச்சி :)

எப்பூடி.. said...

வெற்றி பெற வாழ்த்துகள்.

சுசி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

விக்கி உலகம் said...

வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

வாழ்த்த்துக்கள், வாழ்த்துக்க்கள்.

Anonymous said...

புது வருட வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

நமக்கு அந்த பிரச்சினையே கிடையாது நம்பள தான் யாருமே கூப்பிடுவதில்லையே ஹா ஹா ஹா . தமிழ் மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஆமினா said...

அடுத்த வாக்கெடுப்பிலும் வெற்றி பெற வாழ்த்துகள்!!!

மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கவிதை காதலன் said...

முதல்சுற்றில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி.. இன்னமும் வெல்ல என் வாழ்த்துக்கள்..

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா....

கோமாளி செல்வா said...

//பிரியாணிக்கும், 2000 / - ரூபாய் பணத்திற்கும் (ஒரு ஓட்டுக்கு இப்போ 2000/- ரூபாய்தானே தறாங்க) ஆசைப்படாமல் சென்று வாக்களியுங்கள்.//

நீங்க அது வாங்கி தரமாட்டீங்களா ...?

கோமாளி செல்வா said...

ரஜினி படத்துக்கு மட்டும் பெருசா எழுதுனீங்க , எங்க கமல் படங்களை மட்டும் கம்மிய எழுதினதுக்கு வன்மையாக கண்டிக்கிறேன் .!

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இன்னமும் முன்னேற வெற்றிபெற வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Sriakila said...

வாழ்த்துக்கள் ஜெயந்த்!

THOPPITHOPPI said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

மாணவன் said...

புது டெம்ப்ளேட் வடிவமைப்பு நல்லாருக்கு அண்ணே, இப்ப தளமும் விரைவாக ஓபன் ஆகிறது சூப்பர் இந்த வேலையாலதான் இன்னைக்கு ஆன்லைன்ல பார்க்க முடியலயா?


உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..

மாணவன் said...

புத்தாண்டு கொண்டாத்துக்கு(கவுண்ட் டவுன்) எங்க போறதா பிளான்?

சிவகுமார் said...

>>> வெற்றிதரும் ஆண்டாக 2011 அமைய வாழ்த்துகள்!!

பிரஷா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரா..
அடுத்த வாக்கெடுப்பிலும் வெற்றி பெற வாழ்த்துகள்!

அப்பாவி தங்கமணி said...

Tamilmanam viruthu second inningskku vaalthukkal... Happy New year

Harini Nathan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரா..

இளம் தூயவன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராஜவம்சம் said...

தமிழின் முன்னணி வலைப்பதிவுகளின் பட்டியலில் உங்கள் பெயரும் வாழ்த்துக்கள்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழ்மணம் விருது நிட்சயம்...புத்தாண்டு வாழ்த்துக்கள்....5 நாளாச்சு புது பதிவு காணோம்

Kousalya said...

தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்

தொடர் பதிவு தொடருகிறது என்று வருத்தபடாம இந்த தொடரையும் தொடர்ந்து விடுங்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

http://kousalya2010.blogspot.com/2011/01/2010.html

வெறும்பய said...

வாழ்த்துக்கள் கூறிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்...